ஆழ்ந்த அறிவின் தடமறிந்து மாணவர்கள் சாதிப்பதற்கு உதவுவது

ஒரு மாணவரின் அறிவு திறனை புரிந்துகொள்வது என்பது ஒரு பயணம். அவர்களின் தனிப்பட்ட சாதனைப் பயணத்தை பட்டியலிட இந்த அறிவுத் திறன் புரிதலை நாங்கள் பயன்படுத்துகிறோம்.

லேர்ன், பிராக்ட்டிஸ் மற்றும் டெஸ்ட் பிரிவுகளில் மாணவர் எட்டிய இலக்குகளின் தரவுகளை வரிசைப்படுத்த தனிப்பட்ட சாதனைப் பயணங்கள் என்னும் பிரிவை அச்சீவ் எனும் அம்சம் உருவாக்குகிறது. கருத்தியல் தேர்ச்சிக்கான Embibe-யின் ஆழமான அறிவுத் தடமறிதல் நெறிமுறைகளில் தான் அச்சீவ்  அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. அச்சீவ் என்பதன் முக்கிய அம்சங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

  1. Embibe-யின் AI- தானியங்கி சோதனை மூலம் இயங்கும் மாறும் வகையிலான கண்டறியும் மதிப்பீடுகள் வழியாக ஒரு மாணவரின் பலம் மற்றும் பலவீனங்களை அச்சீவ் கண்டறிகின்றது.
  2. தேர்ச்சிக்கான முன்தேவைகள், தற்போதைய டெஸ்ட்/அத்தியாயம் /பாடத்தில் தேர்ச்சி, எதிர்கால வாழ்க்கை இலக்குகள் மற்றும் திறன்களுக்கான அடித்தளத்தை வலுப்படுத்துதல் உள்ளிட்ட ஒன்று அல்லது பல சாதனை நோக்கங்களை இது தேர்வு செய்கிறது.
  3. இது சாதனை இலக்கை பல படிகளாக உடைத்து, Embibe-யின் தனியுரிம சாதனை பகுதியின் அடிப்படையில் ஒவ்வொரு படிக்கும் ஒரு பயணத்தை உருவாக்குகிறது.
  4. ஒவ்வொரு படியும் வீடியோக்கள் போன்ற கற்றல் உள்ளடக்கங்கள் அல்லது கேள்விகள் போன்ற பயிற்சி உள்ளடக்கங்களின் தொகுப்பாகும்.
  5. இந்த தொகுப்புகள் ஒவ்வொன்றும் தனிப்பயனாக்கப்பட்ட மற்றும் மாறும் வகையில் மாணவர்களது கருத்துகளின் பலம் மற்றும் பலவீனங்களின் அடிப்படையில் உருவாக்கப்படுகின்றன. படிகளின் மாறக்கூடிய மறு-சீரமைப்பு என்பது   கற்றலின் முந்தைய படியின் செயல்பாட்டின் அடிப்படையில் மாற்றப்படுகிறது.
  6. கற்றல் பயணத்தின் முடிவில் மாணவரின் பலம் மற்றும் பலவீனங்களை இது  மறுமதிப்பீடு செய்கிறது.

பொதுவாக, இயந்திர கற்றல் என்பது அறிவுறுத்தல் அடிப்படையிலேயே பயன்படுத்தப்படுகின்றன. இது மாணவரின் கிரேடு டெஸ்ட் மூலம் அவரது  திறன்கள் மற்றும்  திறமைகளை கணிக்கவும் அவர்களுக்கு சரியான பரிந்துரைகளை வழங்கவும், கிடைக்கும் பதில்களை அணுகவும், அவர்களுக்கு சமமான கற்றல் திறன் மற்றும் விருப்பம் உள்ள மாணவர்களுடன்  அவர்களை ஒன்றிணைக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

‘அச்சீவ்’ என்பது ஆழ்ந்த அறிவினை தடமறியும் நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது. AI-அடிப்படையிலான கல்வியானது உலகத்தரம் வாய்ந்த கல்வியை அனைவரும் பெரும் வகையில் கிடைக்க செய்வது மட்டுமல்லாமல் அதிகரித்துவரும் கல்வி கட்டணத்தையும் குறைக்கிறது. அறிவுத் தடமறிதல் என்பது மாணவர்கள் எதிர்காலங்களில் எவ்வாறு துல்லியமாக செயல்படுவார்கள் என்பதைக் கணிக்க உதவுகிறது. இந்த செயல்பாட்டின் மேம்பாடு என்பது மாணவர்களின் தனிப்பட்ட தேவைக்கேற்ப கருத்துக்களை பரிந்துரைப்பது மட்டுமல்லாமல்  மிக எளிதான அல்லது மிக கடினமான உள்ளடக்கங்களை தவிர்க்க அல்லது தாமதப்படுத்த வல்லது.

ஒரு தனிநபர் ஒரு சராசரி மாணவருக்கு பயிற்றுவித்தால் அந்த மாணவரால் மிக சுலபமாக ஒரு பாடத்தை கற்றுக்கொள்ள முடியும்.  எனினும், இது நிஜ வாழ்க்கையில் அனைவருக்கும் சாத்தியம் இல்லாத ஒன்று. ஆனால், இயந்திர கற்றல் இதற்கு ஒரு தீர்வளிக்கிறது. இயந்திர கற்றலால்  தனிப்பயனாக்கப்பட்ட உயர்தர கல்வியை இலவசமாக அனைவருக்கும் வழங்க முடியும்.

Embibe-யில் ‘அச்சீவ்’ எனும் அம்சம் மாணவர்களுக்கு அவர்களின் பலம் மற்றும் பலவீனங்களை ஆராய உதவுகிறது. இந்த கருத்துக்களில் அதிக ஆற்றலை முதலீடு செய்வதன் மூலமும், அவர்கள் மேம்படுத்திய அளவை அறிய அதிக தேர்வுகளை வழங்குவதன் மூலமும் மாணவர்கள் தங்கள் பலவீனமான பாடங்களை மேம்படுத்த இது உதவுகிறது. Embibe மாணவர்களின் பலவீனங்களை அறிந்துகொண்டு அவர்களின் குறைபாடுகளை களைய குறிப்பேடுகளையும் அதற்கான வழியையும் வழங்குகிறது. அதேபோல், மாணவர்கள் தங்கள் குறைபாடுகளைத் தோற்கடிக்க எவ்வளவு முயற்சிக்கிறார்கள் என்பதை உணர, நேர்மைக்கான மதிப்பெண் என்னும் அம்சமும் உள்ளது.

மாணவர்கள் எழுதும் தேர்வுகளில் Embibe பல்வேறு வகையான பகுப்பாய்வுகளை வழங்குகிறது:

ஒட்டுமொத்த பகுப்பாய்வு:  ஒரு மாணவர் தேர்வை எவ்வாறு முயற்சி செய்கிறார் என்பதன் அடிப்படையில், அவர்களின் ஒழுக்கநெறி கவனக்குறைவு, கவன சிதறல், இலக்கை நெருங்குகிறீர்கள், போன்று மாறுபடும்.

கேள்வி வாரியான பகுப்பாய்வு: மிக வேக தவறு, சரியான முயற்சி, மிகை நேர தவறு, மிகைநேர சரி, வீணடிக்கப்பட்ட முயற்சி, தவறான முயற்சி மற்றும் முயற்சிக்காதவை என ஆறு வகைகளின் கீழ் ஒரு மாணவர் முயற்சித்த ஒவ்வொரு கேள்வியையும் இது பகுப்பாய்வு செய்கிறது.

திறன் வாரியான பகுப்பாய்வு:  பயன்பாடு, புரிதல், புரிதல் அற்ற கற்றல் மற்றும் பகுப்பாய்வு போன்ற பல்வேறு நிலைகளின் கீழ் கேள்விகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. மாணவர்களின் முயற்சியின் செயல்திறன் அடிப்படையில், அவர்களின் திறன் வாரியான பகுப்பாய்வு வழங்கப்படுகிறது.