ஒரு மாணவரின் ஒவ்வொரு கருத்திற்கான புரிதலை கண்டறியும் மிக கடினமான சிக்கலை முறியடிப்பது
மாணவர்கள், கருத்தியல் புரிதலை பெற Embibe எவ்வாறு தரவுகளை மேம்படுத்துகிறது என்பதை தெரிந்துகொள்ளுங்கள்!
மாணவர்கள், கருத்தியல் புரிதலை பெற Embibe எவ்வாறு தரவுகளை மேம்படுத்துகிறது என்பதை தெரிந்துகொள்ளுங்கள்!
ஒருவருக்கு கூட்டல் தெரியவில்லை என்பதற்காக பெருக்கல் செய்ய முடியாது. கணிதம் மற்றும் அறிவியலில் உள்ள கருத்துக்கள் ஒன்றுக்கொன்று இணைக்கப்பட்டுள்ளன.ஒரு கருத்தைப் புரிந்துகொள்பவர் அதற்கான தீர்வை எளிதாகவும் விரைவாகவும் கண்டுபிடிப்பார். Embibe-யின் முதன்மையான இலக்கு, மாணவர்களின் அறிவு திறனுக்கு ஏற்ற தனிப்பயனாக்கப்பட்ட கற்றலை வழங்குவது தான். மாணவர்கள் இந்த தளத்தில் கருத்தியல் ரீதியாக பரிமாறிக்கொள்ளும் கருத்துக்களை கண்காணிப்பதன் மூலமாக அவர்களின் அறிவு திறன் கணிக்கப்படுகிறது. இந்த கருத்துக்கள் பரிமாற்றம் என்பது வீடியோக்களைப் பார்ப்பது, கேள்விகளைப் பயிற்சி செய்தல், டெஸ்ட்கள் எடுப்பது மற்றும் டெஸ்ட் Feedback-களை பார்ப்பது போன்றவற்றில் இருந்து கிடைக்கப்படுகிறது.
கருத்தியல் புரிதல் என்பது இயல்பாகவே சிக்கலானது, ஏனெனில் அதற்கு மனித புரிதலை மாதிரியாக்குவது மற்றும் ஒரு மனிதன் எவ்வாறு அறிவைப் பெறுகிறான் என்பது தேவை. ஒரு நபர் எவ்வாறு அறிவைப் பெறுகிறார் என்பது பொதுவாக கருத்து பரிமாற்றங்கள் மூலம் பதிவு செய்யப்படுகிறது. ஆனால், பல்வேறு கருத்துக்களில் மாணவர்களின் கருத்து பரிமாற்ற வரலாறு போதுமானதாக இல்லை. இந்த பற்றாக்குறையினால், மாணவரின் பலம் மற்றும் பலவீனங்களை கணிக்கையில், அது துல்லியம் இல்லாமல் போய்விடுகிறது. மேலும், ஒரு நபர் எவ்வளவு வெற்றி பெறுவார் என்பதை தீர்மானிக்க 1 மற்றும் 0-க்கள் போதுமானதாக இருந்தால், எந்த வெற்றியாளரும் பள்ளியில் தோல்வியடைந்திருக்க மாட்டார். எனவே, அமைப்பானது பல பரிமாணங்களில் அறிவை பகுப்பாய்வு செய்ய வேண்டும்.
லேர்ன்: எந்தவொரு கருத்தையும் புரிந்துகொள்வதற்கான முதற்படி அதைப் புரிந்துகொள்வதாகும். கொடுக்கப்பட்ட கருத்துக்களை, மனதில் நன்கு பதிய வைக்க காட்சி கற்றலை மிஞ்ச வேறு எதுவுமில்லை. Embibe-யின் ‘லேர்ன்’, உலகின் சிறந்த 3D அதிவேக உள்ளடக்கத்தைக் கொண்டுள்ளது, சிக்கலான கருத்துக்களைக் காட்சிப்படுத்துவதன் மூலம் இது கற்றலை எளிதாக்குகிறது. இந்த கற்றல் அனுபவம், 74,000-திற்கும் மேற்பட்ட கருத்துகள் மற்றும் 2,03,000-திற்கும் மேற்பட்ட திறன்களைக் கொண்ட தொழில்துறையின் மிகப்பெரிய அறிவு வரைபடத்தின் வலுவான அடித்தளத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது. 74,000-திற்கும் மேற்பட்ட கருத்துகளை கொண்ட அறிவு வரைபடத்தின் உள்ளடக்கங்களுடன் அதன் கற்றல் உள்ளடக்கங்களை Embibe ஒன்றிணைத்துள்ளது. இது அனைத்து வகுப்புகள், தேர்வுகள் மற்றும் இலக்குகளுக்கும் தனிப்பயனை உறுதியளிக்கிறது.
பிராக்டிஸ்: எதையும் தெளிவாக புரிந்துகொள்ள பயிற்சித் தேவை. கருத்தியல் புரிதலுக்கும் அப்படித்தான். Embibe-யின் ‘பிராக்டிஸ்’ அம்சமானது, 10 லட்சத்திற்கும் அதிகமான கருத்து பரிமாறும் கேள்வி அலகுகளை அத்தியாயங்களாகவும், முதல் தரவரிசையில் உள்ள 1,400-க்கும் மேற்பட்ட புத்தகங்களின் தலைப்புகளாக தொகுக்கப்பட்டுள்ளது. ஒரு பிராக்டிஸ் கட்டமைப்பானது, ஆழ்ந்த அறிவுத் தடமறிதல் வழிமுறைகள் மூலம் ஒவ்வொரு மாணவரின் அறிவு திறனையும் கணக்கிடுவதன் மூலம் பயிற்சியை தனிப்பயனாக்குகிறது. இதனால், பயிற்சி அம்சம் மேலும் வலுப்படுத்தப்படுகிறது. தீர்வுகள் மற்றும் டெம்ப்ளேட்டுகள் பயன்படுத்தி, இயக்க நேரத்தில் தனிப்பயனாக்கப்பட்ட கேள்விகளை மாறும் வகையில் உருவாக்குகிறது. கற்றல் தலையீட்டிற்கு பரிந்துரை இயந்திரங்களைப் பயன்படுத்துவதன் மூலம், ஒரு மாணவர் ஒரு கேள்வியை தீர்க்க போராடும்போது வீடியோக்கள் மற்றும் குறிப்புகள் மூலம் தானியங்கி அதன் உதவியை வழங்குகிறது. ஒவ்வொரு கேள்வியை முயற்சித்த பிறகும் அதற்கான முயற்சியின் தரம், மிக வேகமாக சரியானது, சரியான முயற்சி, மிகைநேர சரி, வீணான முயற்சி தவறான முயற்சி, மிகைநேர தவறான முயற்சி என்று வகைப்படுத்தப்பட்டு காட்டப்படுகிறது. இதனால் மாணவர்களால் அவர்களின் ஒவ்வொரு முயற்சியை பற்றியும் தெளிவாக புரிந்துகொள்ள முடியும்.
டெஸ்ட்: Embibe, ஒரு மாணவர் தேர்வுக்கு தயாராகும் ஒவ்வொரு நிலைக்கும் ஏற்றவாறு டெஸ்ட்களை வழங்குகிறது. கூடுதலாக, மாணவர்கள் தங்கள் கல்வி மற்றும் ஒழுக்கநெறி இடைவெளிகளை அடையாளம் காணும் விரிவான டெஸ்ட் Feedback-களைப் பெறுகின்றனர். எடுத்துக்காட்டாக, Embibe-யின் AI, ஒருவர் எடுத்த டெஸ்டில் இருந்த டாபிக்குகளை ‘நீங்கள் சரியாகப் செய்த அத்தியாயங்கள்’, ‘நீங்கள் தவறாகப் செய்த அத்தியாயங்கள்’ மற்றும் ‘நீங்கள் முயற்சிக்காத அத்தியாயங்கள்’ என வகைப்படுத்துகிறது. மாணவர்கள் தங்கள் நேர்மையான மதிப்பெண்ணைச் சரிபார்த்து, அதை மேம்படுத்துவதற்கு அவர்கள் செய்ய வேண்டிய கருத்தியல், ஒழுக்கநெறி மற்றும் நேர மேலாண்மை சிக்கல்களைப் புரிந்து கொள்ளலாம்.
Embibe-யில், ‘கருத்தியல் புரிதல்’ என்பது கற்றல் வெளிப்பாடுகளின் இயந்திரத்தின் மையத்தில் இருக்கிறது. ஒரு மாணவரின் ‘கருத்தியல் புரிதலை’ தீர்மானிக்க, 74,000 க்கும் மேற்பட்ட இணைக்கப்பட்ட கருத்துகளுடன் கூடிய Embibe-யின் அறிவு வரைபடத்தை, அமைப்பானது பயன்படுத்துகிறது. ஒரு மாணவர் அவரது இலக்கை எட்டவும் ‘கருத்தியல் புரிதலை’ அடையவும் எந்த மாதிரியான விஷயங்களை மேம்படுத்தி கொள்ள வேண்டும் என்பதை அறிந்துகொள்ள அறிவு வரைபடம் உதவுகிறது. மேலும், கற்றலில் இருந்து அறிவை பெறவும், அந்த அறிவை புரிந்துகொண்டு பயன்படுத்தவும் ப்ளூமின் வகைபிரித்தல் பயன்படுத்தப்படுகிறது. மேலும், மாணவர்களின் அறிவு நிலைக்கு ஏற்ப கேள்விகள் சிரம நிலையுடன் குறியிடப்பட்டுள்ளன. இவ்வாறு, கடந்த எட்டு ஆண்டுகளில் சேகரிக்கப்பட்ட பில்லியன் கணக்கான கருத்து பரிமாற்றங்கள், அறிவு வரைபடம், ப்ளூமின் வகைபிரித்தல், சிரம நிலை மற்றும் மறைந்த மாறிகள் போன்றவற்றை பயன்படுத்தி ‘கருத்தியல் புரிதல்’ செயல்படுத்துவதில் உள்ள சிக்கலை நாங்கள் தீர்க்கிறோம்.