மனிதர்களாகிய நாம் நம்மை சுற்றியுள்ள அனைத்துடனும் தொடர்புகொள்கிறோம். தனிநபர்கள், பிற தனிநபர்களுடன் அல்லது தனிநபர்களின் குழுக்களுடன், கருவிகளுடன், இயந்திரங்களுடன் அல்லது செயற்கை நுண்ணறிவுடன் கருத்துக்களை பரிமாறிக்கொள்கின்றனர். அறிவை வளர்த்துக்கொள்வதில் கருத்து பரிமாற்றம் மற்றும் உரையாடலின் பங்கு எல்லோரும் அறிந்த ஒன்றே. இதை தொடர்நது செயல்படுத்தி கொண்டிருந்ததில், அறிவுறுத்தல் வடிவமைப்பு மற்றும் கற்றல் முறைகள் தொடர்பான பல கோட்பாடுகள் மற்றும் மாதிரிகள் உருவாக்கப்பட்டு பிரபலமடைந்தன. உரையாடல் கோட்பாடு என்பது அத்தகைய ஒரு கோட்பாடு தான். இந்த கோட்பாடு, தனிநபர்கள் தங்கள் அறிவை மற்றும் பல்வேறு கருத்துகளின் புரிதலை வளர்த்துக் கொள்ள செய்யும் கருத்து பரிமாற்றம் அல்லது உரையாடல்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.
இந்த கோட்பாடு 1975 இல் கோர்டன் பாஸ்க் என்பவரால் தொடங்கப்பட்டது. பாஸ்க், ஒப்புத்தொடர்பியல் மீது கொண்ட ஆர்வம் தான் உரையாடல் கோட்பாடு வளர்ச்சியடைய காரணமாக அமைந்தது. ஒப்புத்தொடர்பியல் என்பது மூளை, நரம்பு மண்டலம், மின் மற்றும் இயந்திர தொடர்பு அமைப்புகள் போன்ற தானியங்கி கட்டுப்பாட்டு அமைப்புகளை ஒப்பிடும் உரையாடல்கள் மற்றும் கட்டுப்பாட்டுக் கோட்பாட்டின் அறிவியல் ஆகும். உரையாடல் மூலம் கற்றல் ஒரு இயல்பான தேவையாகக் கருதப்படுகிறது – “அது அப்படித்தான் இருக்க வேண்டும்”. எனவே, பாஸ்கின் உரையாடல் கோட்பாட்டை தொழில்நுட்பத்தால் இயங்கும் மனித கற்றல் திட்டங்களை வடிவமைத்து மதிப்பிடுவதற்கு சாதாரணமாக பயன்படுத்தப்படலாம். உரையாடல் கோட்பாடு, அரை-அறிவார்ந்த பயிற்சி முறையை உருவாக்குவதுடன் தொடர்புடையது, இது சுற்றுச்சூழல் அமைப்பின் சிக்கலான உண்மையை புரிந்துகொள்ள மாணவர்களுக்கு உதவுகிறது.
உரையாடல் கோட்பாடு, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அறிவாற்றல் அமைப்புகளுக்கு இடையே நிகழும் தொடர்புகளை விவரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த கோட்பாட்டின் பின்னணியில் உள்ள அடிப்படை கருத்து என்னவென்றால், ஒரு கருத்தின் நிபுணர் இருக்கும்போது நடத்தப்படும் உரையாடல்கள் கற்றலை எளிதாக்குவது மட்டுமல்லாமல் அதன் கருத்தை வெளிப்படையாக்குகிறது. இது மேலும், ஒரு கணினி அமைப்பு எவ்வாறு ஒரு கருத்தை பற்றி உரையாடுகிறது மற்றும் இதைப்பற்றிய அவர்களது புரிதலை எவ்வாறு கண்டறிகிறது என்பதை விளக்குகிறது. உரையாடல் கோட்பாடு இயங்கியல் அணுகுமுறையில் செயல்படுகிறது. இயங்கியல் அணுகுமுறை என்பது இரண்டு எதிரெதிர் கொள்கைகள், சிந்தனைகள் அல்லது அமைப்புகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு அமைப்பாகும். இந்த வகையில், உரையாடலில் ஈடுபட்டுள்ள தரப்பினர் இயங்கியல் எதிர்நிலைகளை உருவாக்குகின்றன. ஒரு பொதுவான இயங்கியல் செயல்முறையில், ஆரம்பத்தில் எதிரெதிராக இருக்கும் இரண்டு பிரிவுகளும் கருத்து பரிமாற்றங்கள் மூலம் ஒன்றிணைந்துவிடுகின்றனர். பங்கேற்பாளர்களுக்கிடையேயான ஒப்பந்தங்களை நோக்கமாகக் கொண்ட பல-நிலை உரையாடல் மூலம் அறிவின் வெளிப்பாட்டை இது விளக்குகிறது. மேலும், இது மாதிரியமைத்தல் வசதிகள், சரியான தொடர்பு மற்றும் செயல் இடைமுகங்களால் இயக்கப்படுகிறது; எனவே, இது மிகவும் நடைமுறைக்கு ஏற்ற ஒன்றாகும்.
உரையாடல்களை பல்வேறு நிலைகளில் நடத்தலாம்:
- பொது விவாதத்திற்கான இயல் மொழி
- பாடம் குறித்த கருத்துகள் பற்றி விவாதிக்க இலக்கு மொழிகள்
- கற்றல்/மொழி பற்றி பேசுவதற்கான மெட்டா மொழிகள்
கற்றல் செயல்முறையை எளிதாக்கும் வகையில், பாடம் கற்றுக் கொள்ள வேண்டியவைகள் அமைப்புகளில் குறிப்பிடப்பட வேண்டும். உரையாடல் கோட்பாட்டைப் புரிந்துகொள்ள உதவும் மூன்று கொள்கைகள் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன. அவை:
- கருத்துக்களுக்கு இடையே உள்ள தொடர்பைப் புரிந்து கொள்ள வேண்டும்.
- ஒரு பாடத்தின் தெளிவான விளக்கம் அல்லது செயல்முறை வழங்குவதால் அது புரிந்து கொள்ள உதவியாக இருக்கும்
- தனிநபர்கள் தங்கள் விருப்பமான கற்றல் தொடர்புகளில் வேறுபடுகிறார்கள்.
‘மீண்டும் கற்றுக்கொடுங்கள்’ என்பது உரையாடல் கோட்பாட்டின் மூலம் கற்கும் மிக முக்கியமான முறையாகும், இதில் ஒருவர் கற்றதை இன்னொருவருக்குக் கற்றுக்கொடுக்கிறார்.
Embibe பிராடக்ட்/அம்சங்கள்: நேரடி சந்தேகத் தீர்வு, Parent App, ஜியோமீட் உடன் Teacher App
Embibe-யின் ‘நேரடி சந்தேகத் தீர்வு’ அம்சம் உரையாடல் கோட்பாட்டின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியது. இது இருவழிச் செயல்முறையாகும், மேலும் மாணவர்கள் எதையாவது கற்கும் போது எதிர்கொள்ளும் சந்தேகங்களைத் தீர்க்க எந்த நேரத்திலும் இதை அணுகலாம். மாணவர்கள் நிபுணர்களிடமிருந்து தங்கள் செயல்பாட்டிற்கு பாராட்டையும் மதிப்பாய்வையும் எதிர்பார்கின்றனர். மேலும், நிபுணர்களின் அனுபவங்களிலிருந்து ஊக்கத்தையும் பெருகின்றனர் என்கிறது இதுவரை நடந்த உரையாடல்களின் மதிப்பாய்வு. இதேபோல், Embibe, parent App எனும் பெற்றோர் App-யையும் வழங்குகிறது, குறிப்பாக பெற்றோருக்கு இதன் மூலம் மாணவர்களின் கற்றல் செயல்முறையை போதுமான அளவு மதிப்பீடு செய்து வெகுமதி அளிக்க முடியும். ஜியோமீட்டுடனான ‘Teacher App’ ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையிலான உரையாடலை ஊக்குவிக்கிறது.