தமிழ்நாடு வாரியம் சமச்சீர் வகுப்பு 11

Embibe உடன் தேர்வுகளுக்கு தயாராகுங்கள், உங்கள் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று வெற்றி அடையுங்கள்!
  • Embibe வகுப்புகளை வரையறை இல்லாமல் பயன்படுத்துங்கள்
  • புதிய பாடத்திட்டத்தின் மாதிரி டெஸ்ட்களை முயற்சி செய்யுங்கள்
  • பாட வல்லுநர்களுடன் 24/7 சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளுங்கள்

6,000உங்கள் இருப்பிடத்திற்கு அருகில் ஆன்லைனில் இருக்கும் மாணவர்கள்

  • எழுதியவர் Vignesh
  • கடைசியாக மாற்றப்பட்டது 9-11-2022
  • எழுதியவர் Vignesh
  • கடைசியாக மாற்றப்பட்டது 9-11-2022

இந்த தேர்வை பற்றி

About Exam

தேர்வு சுருக்கம்

தமிழ்நாட்டின் சமச்சீர் மாநில வாரியப் பள்ளித் தேர்வுகள் (உயர்நிலை) & மேல்நிலைத் தேர்வுகள் வாரியம் என்பது பெரும்பாலும், தமிழ்நாடு மாநில பள்ளி தேர்வு வாரியம் என்று அழைக்கப்படுகிறது. இந்த வாரியத்தின் பயணம் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. மாநில வாரிய பள்ளித் தேர்வுகள் (உயர்நிலை) & மேல்நிலைத் தேர்வுகள் வாரியம், தமிழ்நாடு அதன் பட்டியலில் சுமார் 1 மில்லியன் மாணவர்களைக் கொண்டுள்ளது. TN  பள்ளி தேர்வு வாரியம் உலகின் மிகப்பெரிய பள்ளி வாரியமாக கருதப்படுகிறது, காமன்வெல்த் நாடுகள் மற்றும் பிற வளரும் மற்றும் வளர்ந்த நாடுகளில் கணிசமான எண்ணிக்கையை கொண்டுள்ளது. தமிழ்நாடு சமச்சீர் மாநில வாரியப் பள்ளித் தேர்வுகள் (உயர்நிலை) மற்றும் தமிழ்நாடு மேல்நிலை பள்ளித் தேர்வு வாரியம் அதன் கல்வி மையங்கள் மற்றும் அங்கீகாரம் பெற்ற நிறுவனங்கள் மூலம் உயர்நிலை மற்றும் மேல்நிலை கல்வி, அத்துடன் தொழிற்கல்வி மற்றும் பயிற்சி (VET) திட்டங்களை வழங்கி வருகிறது. SSLC மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிப்பெண் சான்றிதழ்கள், உயர்கல்வி மற்றும் தொழில் வாய்ப்புகளைத் தொடர முக்கியமான மற்றும் மதிப்புமிக்க ஆவணமாகக் கருதப்படுகிறது.

மேற்கூறிய வாரிய விவரங்களைத் தவிர, இந்த வாரியம் தொடக்கக் கல்வியில் டிப்ளமோ, அரசு தொழில்நுட்பத் தேர்வுகள் மற்றும் ESLC (எட்டாம் வகுப்பு- தனியார் படிப்பு) ஆகியவற்றிற்கான தேர்வுகளை நிர்வகித்து சான்றிதழ்களை வழங்குகிறது. இது NMMS, TRUSTS மற்றும் தேசிய திறமை தேடல் தேர்வுகள் போன்ற உதவித்தொகை தேர்வுகளையும் நடத்துகிறது.

கையேடு

தமிழ்நாடு 11ம் வகுப்பு தேர்வுகள் தொடர்பான அனைத்து தகவல்களையும் பெற கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை கிளிக் செய்யவும்;

http://www.dge.tn.gov.in/docs/examina/hse.pdf

தேர்வு விளக்கம்

முதலில் மாநில கல்வியியல் நிறுவனம் (SIE) என்ற பெயரில் 1965 இல் நிறுவப்பட்டது. பள்ளிக் கல்வியின்  வழிகாட்டுதலின் கீழ், இது பள்ளிக் கல்வியில் ஏற்படும் சிரமங்களைத் தீர்க்க முயற்சி செய்கிறது.

1970 களில், SIE என்பது கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான மாநில சபை என மாற்றம் பெற்றது. இது படிப்புகளை உருவாக்கியது மற்றும் மாநிலம் முழுவதும் பல பயிற்சி திட்டங்களை நடத்தியது. இந்த அமைப்பு மாநிலத்தின் கல்வி உரிமைச் சட்டத்தை அமல்படுத்தும் பொறுப்பிலும் இருந்தது. TNSCERT ஆசிரியர்களுக்குப் பயிற்றுவிக்கிறது மற்றும் அவர்கள் தேவையான தொழில்முறை திறன்களை கொண்டுள்ளனரா என்பதை சோதிக்கிறது.

தமிழ்நாடு மாநில வாரிய பள்ளி தேர்வுகளின் பொறுப்புகள்

  • நிறுவனம், பயிற்சியின் மூலம் பயிற்றுவிப்பாளர்களின் திறன்களை மேம்படுத்துகிறது.
  • தொடக்க கல்வி ஆசிரியர்களுக்கான கல்வி திட்டங்களை வழங்குகிறது.
  • ஆராய்ச்சி கட்டுரைகளை திட்டமிட்டு செயல்படுத்துகிறது.
  • பணியில் இருக்கும் ஆசிரியர்களை மேலும் பயிற்றுவிப்பது 
  • பயிற்றுவிப்பாளர்களுக்கு அவர்களின் நிபுணத்துவத்தை மேம்படுத்த உதவும் பொருட்களை வழங்குகிறது.
  • பயிற்றுவிப்பாளர்களின் கல்வித் தரத்திற்கான அளவுகோலை நிறுவுகிறது.
  • 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கான உயர்தர பாடப்புத்தகங்களைத் தேர்ந்தெடுக்கிறது.
  • மென்பொருளின் அடிப்படையில் தொலைக்காட்சி கற்பித்தல் நிகழ்ச்சிகளை உருவாக்குகிறது.
  • பல நிறுவனங்களின் கல்வித் தரத்தை மேம்படுத்துகிறது.

தேர்வின் கண்ணோட்டத்தை பார்ப்போம்.

நிறுவனத்தின் பெயர் 

அரசுத் தேர்வுகள் இயக்ககம் 

வகுப்பின் பெயர் 

TN பிளஸ் ஒன் ( 11ஆம் வகுப்பு)

நிலை 

விரைவில் கிடைக்கப்பெறும்

தேர்வு தேதி 

மார்ச் 2023

தேர்வு முடிவுகள் தேதி 

மார்ச்/ ஏப்ரல் 2023

அதிகாரபூர்வ இணையதளம் 

www.dge.tn.gov.in

அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பு

http://www.dge.tn.gov.in/

தேர்விற்கான மதிப்பெண் பங்கீடு

Exam Pattern

தேர்வு காலண்டர்

தமிழ்நாடு வாரியம் 2023ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு சமச்சீர் வகுப்பு 11 தேர்வு அட்டவணையை வெளியிடும், மேலும் தேர்வுகள் மார்ச் மாதத்தில் நடைபெறலாம் (எதிர்பார்க்கப்படுகிறது). தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் மாதம் முழு ஆண்டுத் தேர்வுகளை நிர்ணயித்துள்ளது. ஏப்ரல் மாதம், இந்த தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும். தேர்வு நடைமுறை தொடங்குவதற்கு சில வாரங்களுக்கு முன்பு தமிழ்நாடு கல்வி வாரியம் தேர்வு கால அட்டவணையை வெளியிடும்.

TN 11ஆம் வகுப்பு கால அட்டவணையை பதிவிறக்குவதற்கான வழிமுறைகள்

ஸ்டெப் 1: தமிழ்நாடு கல்வித் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.

ஸ்டெப் 2: இப்போது முகப்புப் பக்கத்தில் TN பிளஸ் ஒன் கால அட்டவணையைத் தேடுங்கள்.

ஸ்டெப் 3: கால அட்டவணையை பெற, அதற்கான இணைப்பை கிளிக் செய்யவும்.

ஸ்டெப் 4: கால அட்டவணையில் உள்ள தகவலுடன் ஒரு புதிய பக்கம் இப்போது தோன்றும்.

ஸ்டெப் 5: அதன் நகலை அச்சிட்டு, தேர்வில் வெற்றி பெற பயன்படுத்தவும்.

தேர்வு பாடத்திட்டம்

Exam Syllabus

தேர்வு பாடத்திட்டம்

சமச்சீர் கல்வி, தமிழ்நாடு மாநில வாரிய 11ஆம் வகுப்பு பாடத்திட்டம் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு ஒரு முக்கியமான கருவியாகும். ஏனெனில் அது அந்த பாடத்தில் அவர்களிடமிருந்து என்ன எதிர்பார்க்கப்படுகிறது என்பதை கோடிட்டுக் காட்டுகிறது. தமிழ்நாடு வாரியம் 11 ஆம் வகுப்பு பாடத்திட்டம் ஒரு பாடத்தில் எவ்வளவு பாடத்திட்டத்தை உள்ளடக்கியது என்பதை தீர்மானிக்க உதவும். தமிழ்நாடு வாரியம் 11 ஆம் வகுப்பு பாடத்திட்டத்தினை மாணவர்களை நன்கு தெரிந்துகொள்வது அவர்களின் படிப்பைத் திட்டமிடுதல் மற்றும் இறுதித் தேர்வுகளுக்குத் தயாராகுதல் போன்றவற்றிற்கு உதவுகிறது.

ஏனெனில், பெரும்பாலான போட்டித் தேர்வுகள், குறிப்பாக JEE மற்றும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET) போன்றவை 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் இருந்து கணிதம் மற்றும் அறிவியல் பாடத்திட்டத்தைப் பின்பற்றுகின்றன.

தமிழ்நாடு மாநில வாரியத்தின் 11 ஆம் வகுப்பு பாடத்திட்டத்திற்குச் சென்று கல்வியாண்டு முழுவதும் என்னென்ன உள்ளடக்கம் இருக்கும் என்பதை தெரிந்துகொள்ளலாம்.

கணித பாடத்திட்டம்

அத்தியாய எண்

அத்தியாயத்தின் பெயர்

தலைப்புக்கள்

 

1

 

கணங்கள், தொடர்புகள் மற்றும் சார்புகள் 

  • அறிமுகம் 
  • கணங்கள் 
  • கார்டீசியன் பெருக்கல் 
  • மாறிலிகள்,மாறிகள்,இடைவெளிகள் மற்றும் அண்மைப்பகுதிகள் 
  • தொடர்புகள் 
  • சார்புகள் 
  • உருமாற்றத்தை பயன்படுத்தி சார்புகளை வரைபடமாக்குதல் 

2

அடிப்படை இயற்கணிதம் 

  • அறிமுகம்
  • மெய் எண்களின் அமைப்பு 
  • மட்டு மதிப்பு 
  • நேரிய அசமன்பாடுகள் 
  • இருபடி சார்புகள் 
  • பல்லுறுப்பு சார்புகள் 
  • விகிதமுறு சார்புகள் 
  • அடுக்குகளும் படி மூலங்களும் 
  • மடக்கை 
  • வாழ்க்கை சூழலில் இயற்கணிதத்தின் பயன்பாடுகள் 

3

முக்கோணவியல் 

  • அறிமுகம்
  • அடிப்படை முடிவுகளின் மீள் பார்வை
  • ஆரையன் அளவு
  • முக்கோணவியல் சார்புகளும் அதன் பண்புகளும்
  • முக்கோணங்களின் முற்றொருமைகள்
  • முக்கோணவியல் சமன்பாடுகள்
  • முக்கோணத்தின் பண்புகள்
  • முக்கோணத்தின் பயன்பாடுகள்
  • நேர்மாறு முக்கோணவியல் சார்புகள்

4

சேர்ப்பியல் மற்றும் கணித தொகுத்தறிதல் 

  • அறிமுகம்
  • எண்ணுதலின் அடிப்படை கொள்கைகள்
  • காரணீயப் பெருக்கம்
  • வரிசை மாற்றங்கள்
  • சேர்வுகள்
  • கணித தொகுத்தறிதல் 

5

ஈருறுப்பு தேற்றம், தொடர்முறைகள் மற்றும் தொடர்கள் 

  • அறிமுகம்
  • ஈருறுப்புத் தேற்றம்
  • ஈருறுப்புத் தேற்றத்தின் குறிப்பிட்ட வகைகள்
  • முடிவுறு தொடர்முறைகள்
  • முடிவுறு தொடர்கள்
  • முடிவுறாத் தொடர் முறைகள் மற்றும் தொடர்கள்

6

இருபரிமாண பகுமுறை வடிவியல் 

  • அறிமுகம்
  • ஒரு புள்ளியின் நியமப்பாதை
  • நேர்க்கோடுகள்
  • இரு நேர்க்கோடுகளுக்கு இடைப்பட்ட கோணம்
  • இரட்டை நேர்க்கோடுகள்

7

அணிகளும் அணிக்கோவைகளும்

  • அறிமுகம்
  • அணிகள்
  • அணிக்கோவைகள்

8

வெக்டர் இயற்கணிதம்

  • அறிமுகம்
  • திசையிலிகள் மற்றும் வெக்டர்கள்
  • வெக்டரைக் குறிப்பிடும் முறை மற்றும் வெக்டர்களின் வகைகள்
  • வெக்டர்களின் மீதான இயற்கணிதம்
  • நிலை வெக்டர்கள்
  • வெக்டரை கூறுகளாகப் பிரித்தல்
  • திசை கொசைன்கள் மற்றும் திசை விகிதங்கள்
  • வெக்டர்களின் பெருக்கம்

9

வகை நுண்கணிதம்

எல்லைகள் மற்றும் தொடர்ச்சித் தன்மை

  • அறிமுகம்
  • எல்லைகள்
  • தொடர்ச்சித் தன்மை

10

வகை நுண்கணிதம்

வகைமை மற்றும் வகையிடல் முறைகள்

  • அறிமுகம்
  • வகையிடுதலின் கருத்தாக்கம்
  • வகைமை மற்றும் தொடர்ச்சி
  • வகையிடல் விதிகள்

11

தொகை நுண்கணிதம்

  • அறிமுகம்
  • நியூட்டன்-லிபினிட்ஸ் தொகையிடல்
  • தொகையிடலின் அடிப்படை விதிகள்
  • f(ax + b) (நேரிய வடிவிலுள்ள தொகைச் சார்பு) வடிவம்
  • தொகையிடலின் பண்புகள்
  • எளிய பயன்பாடுகள்
  • தொகை காண வழிமுறைகள்

12

நிகழ்தகவு கோட்பாடு-ஓர் அறிமுகம்

  • அறிமுகம்
  • அடிப்படை வரையறைகள்
  • முடிவுறு கூறுவெளி
  • நிகழ்தகவு
  • நிகழ்தகவின் சில அடிப்படைத் தேற்றங்கள்
  • சார்புநிலை நிகழ்தகவு
  • ஒரு நிகழ்ச்சியின் கூட்டு நிகழ்தகவு
  • பேயீஸ்-ன் தேற்றம்

இயற்பியல் பாடத்திட்டம்

TN வாரியத்தின் 11 ஆம் வகுப்பு முழு இயற்பியல் பாடத்திட்டத்தின் சுருக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

அலகு 

அத்தியாய பெயர்

முக்கிய தலைப்புகள்

1

இயல் உலகத்தின் தன்மை யும்

அளவீட்டியலும்

  • அறிமுகம் 
  • சமூகம் மற்றும் தொழில்நுட்பத்துடன் இயற்பியலின் தொடர்பு 
  • அளவீட்டியல் 
  • அடிப்படை அளவுகளை அளவிடுதல் 
  • பிழைகளின் தேற்றம் 
  • முக்கிய எண்ணுருக்கள் 
  • பரிமாணங்களின் பகுப்பாய்வு 

2

இயக்கவியல்

  • அறிமுகம்
  • நிலைமம் மற்றும் இயக்கத்தின் கருத்து 
  • வெக்டார் இயற்கணிதத்தின் அடிப்படை கருத்து 
  • வெக்டாரின் கூறுகள் 
  • ஸ்கேலார் மதிப்புடன் வெக்டாரை பெருக்குதல்  
  • நிலை வெக்டார் 
  • தொலைவு மற்றும் இடப்பெயர்ச்சி 
  • வகைக்கெழு நுண்கணிதம் 
  • தொகையிடல் நுண்கணிதம் 
  • ஒரு திசையில் இயக்கம் 
  • எறிபொருளின் இயக்கம் 

3

இயக்க விதிகள்

  • அறிமுகம்
  • நியூட்டன் விதிகள் 
  • நியூட்டன் விதிகளின் பயன்பாடுகள் 
  • லாமியின் தேற்றம் 
  • மொத்த நேர்கோட்டு உந்த மாறா விதி 
  • உராய்வு 
  • வட்ட இயக்கத்தின் இயக்க விசையியல் 

4

வேலை , ஆற்றல் மற்றும் திறன்

  • அறிமுகம்
  • ஆற்றல்
  • திறன்
  • மோதல்கள் 

5

துகள்களாலான அமைப்பு மற்றும்

திண்மப் பொருட்களின் இயக்கம்

  • அறிமுகம்
  • திருப்பு விசை மற்றும் கோண உந்தம்
  • திண்மப்பொருட்களின் சமநிலை 
  • நிலைமத் திருப்புத்திறன்
  • சுழல் இயக்கவியல்
  • உருளும் இயக்கம்

6

ஈர்ப்பியல்

  • அறிமுகம்
  • ஈர்ப்பு புலமும், ஈர்ப்பு தன்னிலை ஆற்றலும்
  • புவியின் ஈர்ப்பு முடுக்கம்
  • விடுபடு வேகம் மற்றும் சுற்றியக்க வேகம்
  • வானியல் பற்றிய அடிப்படைக் கருத்துகள்

7

பருப் பொருளின் பண்புகள்

  • அறிமுகம்
  • பருப்பொருளின் பல்வேறு

நிலைகளின் நுண்ணிய புரிதல்

  • பாய்மங்கள்
  • பாகுநிலை
  • பரப்பு இழுவிசை
  • பெர்னௌலியின் தேற்றம்

8

வெப்பமும் வெப்ப இயக்கவியலும்

  • வெப்பம் மற்றும் வெப்பநிலை
  • பருப்பொருளின் வெப்பப்பண்புகள்
  • வெப்ப மாற்றத்தின் விதிகள்
  • வெப்ப இயக்கவியல்
  • வெப்ப இயக்கவியலின் சுழி விதி
  • அக ஆற்றல் 
  • வாயுவின் தன்வெப்ப ஏற்புத்திறன்
  • வெப்ப இயக்கவியல் செயல்பாடுகள் 
  • வெப்ப இயந்திரம்
  • குளிர்சாதனப்பெட்டி

9

வாயுக்களின் இயக்கவியற் கொள்கை

  • இயக்கவியற் கொள்கை 
  • வாயு ஒன்றினால் ஏற்படும் அழுத்தம்
  • சுதந்திர இயக்கக் கூறுகள்
  • ஆற்றல் சமபங்கீட்டு விதி
  • சராசரி மோதலிடைத் தூரம்
  • பிரெளனியன் இயக்கம்

10

அலைவுகள்

  • அறிமுகம்
  • தனிச்சீரிசை இயக்கம்
  • கோண சீரிசை இயக்கம்
  • நேர்போக்கு சீரிசை அலையியற்றி
  • தனிச்சீரிசை இயக்கத்தின் ஆற்றல்
  • அலைவுகளின் வகைகள்

11

அலைகள்

  • அறிமுகம்
  • அலை இயக்கத்தில் பயன்படும் பதங்கள் மற்றும் வரையறைகள்
  • வெவ்வேறு ஊடகங்களில் அலையின்

திசை வேகம்

  • ஒலி அலையின் பரவல்
  • ஒலி அலைகளின் எதிரொலிப்பு
  • முன்னேறும் அல்லது பயணிக்கும் அலைகள் 
  • மேற்பொருந்துதல் தத்துவம் 
  • நிலையான அலைகள்
  • செறிவு மற்றும் உரப்பு
  • காற்று தம்பத்தின் அதிர்வு
  • டாப்ளர் விளைவு

வேதியியல் பாடத்திட்டம்

TN வாரியம் 11 ஆம் வகுப்பு வேதியியல் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள அத்தியாயங்களின் பெயர்கள் மற்றும் தலைப்புகளுடன் அட்டவணையைக் கீழே பார்க்கலாம்.

அத்தியாய எண் 

அத்தியாய பெயர் 

தலைப்புகள் 

1

வேதியியலின் அடிப்படைக் கருத்துக்கள் மற்றும்

வேதிக் கணக்கீடுகள்

  • வேதியியல்-வாழ்வின் மையம் 
  • பருப்பொருட்களின் வகைகள் 
  • ஆக்சிஜனேற்ற – ஒடுக்க வினை

2

அணுவின் குவாண்டம் இயக்கவியல் மாதிரி

  • அணு மாதிரி – அறிமுகம் 
  • ஹெய்சன்பர்க்கின் நிச்சயமற்றத் தன்மை கோட்பாடு
  • ஷ்ரோடிங்கர் சமன்பாடு
  • குவாண்டம் எண்கள் 
  • ஆஃபா தத்துவம்

3

தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு

  • தனிமங்களின் வகைகள் 
  • ஆவர்த்தன பண்புகளில் காணப்படும் ஆவர்த்தனத் தொடர்பு
  • செயலுறு அணுக்கரு மின்சுமை 
  • இணைதிறன் அல்லது ஆக்சிஜனேற்ற நிலை

4

ஹைட்ரஜன் 

  • அறிமுகம் 
  • ஹைட்ரஜன் தயாரித்தல் 
  • ஹைட்ரஜனின் பண்புகள் 
  • கடின நீர் 

5

கார மற்றும் காரமண் உலோகங்கள்

  • S-தொகுதி தனிமங்கள் 
  • கார உலோகங்கள் 
  • எலக்ட்ரான் அமைப்பு
  • அணு மற்றும் அயனி ஆரம் 
  • டிஜிட்டல் தொடர்பு 
  • ஹாலைடுகள் 
  • சோடியம் ஹைடிராக்சைடு 
  • காரமண் உலோகங்கள்

6

வாயு நிலைமை 

  • அறிமுகம்
  • வாயு விதிகள் 
  • நல்லியல்பு வாயு சமன்பாடு 
  • டால்டன் விதியின் பயன்பாடுகள் 
  • வாயுக்களை திரவமாக்கல் 

7

வெப்ப இயக்கவியல்

  • அறிமுகம்
  • அமைப்பு மற்றும் சூழல் 
  • வெப்பம்மாறாச் செயல்முறை
  • வேலை 
  • வெப்ப வேதிச்சமன்பாடுகள்
  • மோலார் வெப்ப ஏற்புத் திறன்கள்

8

இயற் மற்றும் வேதிச்சமநிலை

  • அறிமுகம்
  • இயற் மற்றும் வேதிச்சமநிலை 
  • ஒருபடித்தான மற்றும் பலபடித்தான சமநிலைகள்
  • நிறைதாக்க விதி
  • லே-சாட்டெய்லர் தத்துவம்    
  • வாண்ட்-ஹாப் சமன்பாடு 

9

கரைசல்கள் 

  • அறிமுகம்
  • கரைசல்களின் வகைகள் 
  • கரைபொருட்களின் கரைத்திறன் 
  • நீர்மத்தின் நீராவி அழுத்தம் 
  • நீர்ம கரைசல்களின் நீராவி அழுத்தம் 
  • நல்லியல்பு மற்றும் இயல்புக் கரைசல்கள்
  • தொகை சார் பண்புகள்
  • சவ்வூடு பரவல் மற்றும் சவ்வூடுபரவல் அழுத்தம்

10

வேதிப்பிணைப்புகள் 

  • சவ்வூடு பரவல் மற்றும் சவ்வூடுபரவல் அழுத்தம்
  • வேதிப்பிணைப்புகளின் வகைகள் 
  • அயனி பிணைப்பு 
  • ஈதல் சகப்பிணைப்பு
  • பிணைப்பு அளவீட்டுக் காரணிகள்
  • இணைதிற பிணைப்புக் கொள்கை 
  • ஆர்பிட்டால் இனக்கலப்பு
  • இனக்கலப்பாதல் 

11

கரிம வேதியியலின் அடிப்படைகள் 

  • அறிமுகம்
  • கரிம சேர்மங்களை வகைப்படுத்துதல்
  • அரோமேட் டிக் சேர்மங்களுக்குப் பெயரிடுதல்
  • புறவெளி மாற்றியம்
  • கரிம சேர்மங்களிலுள்ள தனிமங்களை கண்டறிதல்
  • கரிம சேர்மங்களை தூய்மைப்படுத்துதல்

12

கரிம வேதி வினைகளின் அடிப்படை கருத்துக்கள் 

  • அறிமுகம்
  • தூண்டல் விளைவு
  • அதி
  • உள்ளடங்கா தன்மை 
  • வினைச்செயல் தொகுதிகளை மாற்றியமைத்தல்

13

ஹைட்ரோகார்பன்கள் 

  • அறிமுகம்
  • ஆல்கேன்கள் 
  • வேதியியல் பண்புகள் 
  • ஆல்கைன் 
  • அரோமேட்டிக் ஹைட்ரோகார்பன் 

14

ஹேலோ ஆல்கேன்கள் மற்றும் ஹேலோ அரீன்கள்  

  • அறிமுகம்
  • கரிம ஹாலஜன் சேர்மங்களை வகைப்படுத்துதல்
  • ஹேலோ ஆல்கேன்கள்
  • கரிம உலோகச் சேர்மம் 

15

சுற்றுசூழல் வேதியியல் 

  • அறிமுகம்
  • சுற்றுச்சூழல் மாசுபாடு
  • நீர் மாசுபாட்டின் காரணிகள் 

உயிரியல்-விலங்கியல் பாடத்திட்டம்

அத்தியாய எண் 

அத்தியாய பெயர் 

தலைப்புகள் 

1

உயிருலகம்

  • உயிரின உலகின் பல்வகை தன்மை 
  • வகைப்பாட்டின் தேவை 
  • வகைப்பாட்டியல் மற்றும் தொகுப்பமைவியல் 
  • வகைப்பாட்டு படிநிலைகள் 
  • சிற்றின கோட்பாடு 
  • வகைப்பாட்டு கல்விக்கான கருவிகள் 

2

விலங்குலகம்

  • வகைப்பாட்டின் அடிப்படைகள்
  • விலங்குலக வகைப்பாடு
  • முதுகுநாணற்றவை
  • முதுகுநாணுடையவை

3

திசு அளவிலான கட்டமைப்பு

  • விலங்கு திசுக்கள்
  • எபிதீலியத் திசு
  • இணைப்புத்திசு
  • தசைத்திசு
  • நரம்புத்திசு

4

விலங்குகளின் உறுப்பு மற்றும் உறுப்பு

மண்டலங்கள்

  • மண்புழு -லாம்பிட்டோ மாரிட்டீ
  • கரப்பான் பூச்சி – பெரிப்பிளனெட்டா அமெரிக்கானா
  • தவளை – ரானா ஹெக்ஸாடேக்டைலா

5

செரித்தல் மற்றும் உட்கிரகித்தல்

  • செரிமான மண்டலம்
  • உணவு செரித்தல் மற்றும் செரிமான
  • நொதிகளின் பங்கு
  • புரதம், கார்போஹைட்ரேட் மற்றும்

கொழுப்புகள் ஆகியவை உட்கிரகித்தல் மற்றும் தன்மயமாதல்

  • கழிவு வெளியேற்றம்
  • கார்போஹைட்ரேட்கள், புரதங்கள் மற்றும் கொழுப்புகளின் கலோரி மதிப்பு
  • உணவூட்ட மற்றும் செரிமானக் குறைபாடுகள்

6

சுவாசம்

  • சுவாசத்தின் பணிகள்
  • பல்வேறு உயிரிகளில் காணப்படும் சுவாச உறுப்புகள்
  • சுவாசம் நடைபெறும் முறை
  • வாயு பரிமாற்றம்
  • வாயுக்கள் கடத்தப்படுதல்
  • சுவாசத்தை நெறிப்படுத்துதல்
  • ஆக்ஸிஜன் கடத்துதலில் உள்ள சிக்கல்கள்
  • புகை பிடித்தலின் தீய விளைவுகள்

7

உடல் திரவங்கள் மற்றும் சுற்றோட்டம்

  • உடல் திரவங்கள்
  • இரத்தக்குழாய்கள் – தமனிகள், சிரைகள் மற்றும் இரத்த நுண்நாளங்கள்
  • சுற்றோட்டப் பாதைகள்
  • மனிதச் சுற்றோட்ட மண்டலம்
  • இரட்டை சுற்றோட்டம்
  • இதயச்செயல்களை நெ றிப்படுத்துதல்
  • சுற்றோட்ட மண்டலக் கோளாறுகள்
  • இதய நுரையீரல் உயிர்ப்பித்தல்

8

கழிவு நீக்கம்

  • கழிவு நீக்க முறைகள்
  • மனிதனின் கழிவு நீக்க மண்டலம்
  • மனிதனில் சிறுநீர் உருவாகும் முறை
  • சிறுநீரகத்தின் பணிகளை நெறிப்படுத்துதல்
  • சிறுநீர் வெளியேற்றம்
  • கழிவு நீக்கத்தில் பிற உறுப்புகளின் பங்கு
  • கழிவு நீக்க மண்டலக் குறைபாடுகள்
  • இரத்த ஊடுபகுப்பு

9

இடப்பெயர்ச்சி மற்றும் இயக்கம்

  • இயக்கங்களின் வகைகள்
  • தசைகளின் வகைகள்
  • எலும்புத்தசை 
  • தசை சுருக்கப் புரதங்களின் அமைப்பு
  • தசை சுருங்கும் விதம்
  • எலும்புத் தசை சுருக்க வகைகள்
  • சட்டக ம ண்டலம் ம ற்றும் அதன் பணிகள்
  • அச்சுச்சட்டகம்
  • இணையுறுப்புச் ச ட்டகம்
  • மூட்டுகளின் வகைகள்
  • தசை மண்டல ம ற்றும் எலும்பு மண்டலக்குறைபாடுகள்
  • தொடர் உடற்பயிற்சியின் நன்மைகள்

10

நரம்பு கட்டுப்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு

  • நரம்பு மண்டலம்
  • மனித நரம்பு மண்டலம்
  • நியூரான் – நரம்பு மண்டலத்தின் அமைப்பு மற்றும் செயல் அலகு
  • மைய நரம்பு மண்டலம்
  • அனிச்சை செயல் மற்றும் அனிச்சை வில்
  • உணர்வைப் பெறுதல் மற்றும் செயல் முறையாக்கம்

11

வேதிய ஒருங்கிணைப்பு

  • நாளமில்லாச் சுரப்பிகள் மற்றும் ஹார்மோன்கள் 
  • மனித நாளமில்லாச்சுரப்பி மண்டலம்
  • நாளமில்லாச் சுரப்பிகளின் மிகை மற்றும் குறை செயல்பாடுகள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய கோளாறுகள்
  • ஹார்மோன்கள் செயல்படும் விதம்

12

வணிக விலங்கியலின் போக்குகள்

  • விலங்கியலின் எதிர்கால வாய்ப்புகள்
  • மண்புழு வளர்ப்பு
  • பட்டுப்புழு வளர்ப்பு
  • தேனீ வளர்ப்பு
  • அரக்குப் பூச்சி வளர்ப்பு
  • நீர்உயிரி – பயிர் வளர்ப்பு
  • நீர் வாழ்உயிரி வளர்ப்பு
  • விலங்கு வளர்ப்பு மற்றும் மேலாண்மை

உயிரியல்-தாவரவியல் பாடத்திட்டம்

அத்தியாய எண்

அத்தியாய தலைப்பு

அத்தியாய பெயர்

தலைப்புகள்

 

1

 

உயிரி உலகின் பன்முகத்தன்மை

 

          உயிரி உலகம்

  • உயிரினங்களின் பொதுப் பண்புகள்
  • வைரஸ்கள் 
  • உயிரி உலகத்தின் வகைப்பாடு
  • பாக்டீரியாக்கள் 
  • பூஞ்சைகள் 

2

      தாவர உலகம்

  • தாவரங்களின் வகைப்பா டு
  • தாவரங்களின் வாழ்க்கைச் சுழற்சி வகைகள்
  • பாசிகள்
  • பிரையோஃபைட்கள்
  • டெரிடோஃபைட்கள்
  • ஜிம்னோஸ்பெர்ம்கள்
  • ஆஞ்சியோஸ்பெர்ம்கள்

3

 

தாவரப் புற அமைப்பியல் மற்றும்

மூடுவிதைத்தாவரங்களின் வகைப்பா டு

 

உடலப் புறஅமைப்பியல்

  • வளரியல்பு
  • வாழிடம்
  • பூக்கும் தாவரத்தின் பாகங்க ள்
  • வாழ் காலம் 
  • வேரமைவு
  • தண்டமைவு
  • இலை 

4

இனப்பெருக்கப் புறஅமைப்பியல்

  • மஞ்சரி
  • மலர் 
  • துணை பாகங்கள் 
  • சூலகவட்டம்
  • பூச்சூத்திரம், மலர் வரைபடம் உருவாக்குதல்
  • கனி 
  • விதை 

5

வகைப்பா ட்டியல் மற்றும் குழுமப் பரிணாம

வகைப்பா ட்டியல்

  • வகைப்பாட்டியலும் குழுமப்பரிணாம வகைப்பாட்டியலும்
  • வகைப்பாட்டுப் படிநிலைகள்
  • சிற்றினக் கோட்பாடுகள் – புறத்தோற்றவழி, உயிரியவழி, இனப்பரிணாமவழி
  • பன்னாட்டுத் தாவரவியல் பெயர் சூட்டுச்சட்டம் (ICBN)
  • வகைப்பாட்டுத் துணைக்கருவிகள்
  • தாவரவியல் பூங்காக்கள் 
  • உலர்தாவர வகை மாதிரி – தயாரிப்பும், பயன்களும்
  • தாவரங்களின் வகைப்பாடு
  • வகைப்பாட்டின் அவசியம்
  • வகைப்பாட்டின் வகைகள்
  • வகைப்பாட்டின் நவீன அணுகுமுறை கள்
  • கிளையியல் வகைப்பாடு
  • தேர்ந்தெடுத்த மூடுவிதைத்தாவரக் குடும்பங்கள்

6

செல் உயிரியல் மற்றும் உயிரி மூலக்கூறுகள்

செல்: ஒரு வாழ்வியல் அலகு

  • நுண்ணோக்கியல்
  • செல் கொள்கை
  • செல் வகைகள்
  • தாவரச் செல் மற்றும் விலங்கு செல்
  • செல் நுண்ணுறுப்புகள்
  • உட்கரு
  • கசையிழைகள்

7

 

செல் சுழற்சி

  • உட்கருவின் பகுப்பு
  • செல் சுழற்சி
  • செல் பகுப்பு

8

 

உயிரி மூலக்கூறுகள்

  • நீர் 
  • முதன்மை மற்றும் இரண்டாம் நிலை வளர்சிதை மாற்றப்பொருட்கள் 
  • கார்போஹைட்ரேட்டுகள் 
  • லிப்பிடுகள் 
  • புரதங்கள், வகைப்பாடு மற்றும் அமைப்பு 
  •  நொதிகள் 
  • நியூக்ளிக் அமிலங்கள் 

9

தாவர உள்ளமை ப்பியல்

திசு மற்றும் திசுத்தொகுப்பு

  • ஆக்குத்திசுக்கள்
  • நிலைத்திசுக்கள்
  • திசுத் தொகுப்பின் அறிமுகம்.
  • திசுத் தொகுப்பின் அறிமுகம்.
  • அடிப்படை திசுத் தொகுப்பு
  • வாஸ்குலத் திசுத் தொகுப்பு
  • முதன் நிலை அமைப்பு ஒப்பீடு

10

 

இரண்டாம் நிலை வளர்ச்சி

  • இருவிதையிலை தாவரத் தண்டில் இரண்டாம் நிலை வளர்ச்சி
  • இருவிதை யிலை தாவர வேரில் இரண்டாம் நிலை வளர்ச்சி

11

தாவர செயலியல்

தாவரங்களில் கடத்து முறை கள்

  • கடத்து முறைகளின் வகைகள்
  • செல்களுக்கு இடையே நடைபெறும் கடத்துமுறைகள்
  • தாவர – நீர் தொடர்புகள்
  • நீரின் உள்ளெடுப்பு
  • சாறேற்றம் 
  • நீராவிப்போக்கு 
  • கரிம கரைபொருட்களின் இடப்பெயர்ச்சி
  • கனிமங்களின் உள்ளெடுப்பு

12

 

கனிம ஊட்ட ம்

  • கனிமங்களின் வகைப்பாடு.
  • பெருமூலங்களின் செயல்பாடுகள், உள்ளெடுக்கப்பபடும் முறைகள் மற்றும் பற்றாக்குறை அறிகுறிகள்
  • நுண் ஊட்டமூலங்களின் செயல்பாடுகள்,உள்ளெடுக்கப்படும் முறைகள், பற்றாக்குறை அறிகுறிகள்
  • பற்றாக்குறை நோய்கள் மற்றும் அறிகுறிகள் 
  • தனிமங்களின் தீர்வுக்கட்ட செறிவு மற்றும் நச்சுத்தன்மை .
  • நீர்ஊடக வளர்ப்பு மற்றும் காற்றூடக வ ளர்ப்பு
  • நைட்ரஜன் நிலைநிறுத்தம்.
  • நைட்ரஜன் சுழற்சி மற்றும் நைட்ரஜன் வளர்சிதை மாற்றம்
  • சிறப்பு வகை உணவூட்டம்

13

 

ஒளிச்சேர்க்கை

  • வரையறை , முக் கியத்துவம் மற்றும் ஒளிச்சேர்க்கை நடைபெறும் இடம்
  • ஒளிச்சேர்க்கை நிறமிகள்
  • மின் காந்த கதிர் வீச்சு நிறமாலை
  • ஒளிச்சேர்க்கை அலகு
  • ஒளி ஈர்ப்பு நிறமாலை மற்றும் ஒளிசெயல் திறன் நிறமாலை
  • எமர்சன் ஆய்வுகள் மற்றும் ஹில்வினை
  • ஒளிச்சேர்க்கையின் நவீன கோட்பாடுகள்
  • ஒளிவினையின் ஆக்ஸிஜனேற்ற நிலை
  • ஒளிவினையின் ஒளிவேதி நிலை
  • ஒளி பாஸ்பரிகரணம்
  • இருள் வினை (அ) C3 சுழற்சி
  • ஹாட்ச் மற்றும் ஸ்லாக் (அ) C4 சுழற்சி
  • CAM சுழற்சி (அ) கிராசுலேசியன் அமில வளர் சிதை மாற்றம்
  • ஒளிச் சுவாசம் (அ) C2 சுழற்சி
  • ஒளிச்சேர்க்கையைப் பாதிக்கும் காரணிகள்
  • பாக்டீரியங்களின் ஒளிச்சேர்க்கை

14

 

சுவாசித்தல்

  • வாயு பரிமாற்றம்
  • ATP அமைப்பு
  • ஒடுக்க ஆக்ஸிஜனேற்ற வினைகள்
  • சுவாசித்தலின் வகைகள்
  • சுவாசித்தலின் படிநிலைகள்
  • சுவாச ஈவு
  • காற்றில்லா சுவாசித்தல்
  • பென்டோஸ் ஃபாஸ்பேட் வழித்தடம்.

15

 

தாவர வளர்ச்சியும் படிம வளர்ச்சியும்

  • தாவர வளர்ச்சியின் பண்புகள்
  • தாவர வளர்ச்சி ஒழுங்குபடுத்திகள்
  • ஒளிக்காலத்துவம்
  • தட்பப்பதனம்
  • விதை முளைத்தல் மற்றும் விதை உறக்கம்
  • மூப்படைதல்

ஆம் வகுப்பு ஆங்கில பாடத்திட்டம்

Chapter Number

Name of the Chapter

1.1

The Portrait of a Lady

1.2

Once Upon a Time

1.3

After Twenty Years

2.1

The Queen of Boxing

2.2

Confessions of a Born Spectator

2.3

A Shot in the Dark

3.1

Forgetting

3.2

Lines Written in the Early Spring 

3.3

The First Patient (Play)

4.1

Tight Corners 

4.2

Macavity – The Mystery Cat

4.3

With the Photographer

5.1

The Convocation Address

5.2

Everest is Not the Only Peak 

5.3

The Singing Lesson

6.1

The Accidental Tourist

6.2

The Hollow Crown

6.3

Never Never Nest (Play)

மதிப்பெண் பங்கீடு

மார்ச் மாதம், 11ஆம் வகுப்பு தேர்வுகளை தமிழக கல்வித்துறை நடத்துகிறது. உங்கள் TN பிளஸ் ஒன் ஆண்டுத் தேர்வுகளில் உங்களுக்கு உதவ, TN பிளஸ் ஒன் ப்ளூபிரிண்ட் உள்ளது, தேர்வு முறைகள் மற்றும் தற்போதைய கேள்விப் போக்குகள் ஆகியவற்றைப் பற்றி நன்கு தெரிந்துகொள்ள இது பெரிதும் உதவும்.

தமிழ்நாடு 11ஆம் வகுப்பு ப்ளூபிரிண்ட்டை பதிவிறக்குவதற்கான வழிமுறைகள்

ஸ்டெப் 1: தமிழ்நாடு கல்வித் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.

ஸ்டெப் 2: இப்போது அதிகாரப்பூர்வ பக்கத்தில் TN 11ஆம் வகுப்பு ப்ளூ பிரிண்ட்டைத் தேடுங்கள்.

ஸ்டெப் 3: ப்ளூ பிரிண்ட்டை பெற, கொடுக்கப்பட்டுள்ள இணைப்பைக் கிளிக் செய்யவும்.

ஸ்டெப் 4: ப்ளூபிரிண்ட் தகவலுடன் ஒரு புதிய பக்கம் இப்போது தோன்றும்.

ஸ்டெப் 5: அதை நகலெடுத்து தேர்வுகளில் சிறப்பாகச் செயல்படுங்கள்.

செய்முறை/ஆய்வுகள் பட்டியல் & மாதிரி எழுதுதல்

இயற்பியல் செய்முறை பாடத்திட்டம்

வ.எண்.

செய்முறையின் பெயர்

1

தெரிந்த நிறை கொண்ட ஒரு திண்ம கோளத்தின் நிலைமத் திருப்பு திறனை வெர்னியர் அளவியை பயன்படுத்தி காணல்.

2

சீரற்ற வளைவு –ஊசி மற்றும் நுண்ணோக்கியை பயன்படுத்தி பளுவிற்கும் இறக்கத்திற்கும் இடையேயான தொடர்பை சரிபார்த்தல் 

3

சுருள் வில்லின் சுருள் மாறிலியை காணல் 

4

தனிஊசலை பயன்படுத்தி புவிஈர்ப்பு முடுக்கம் காணல் 

5

ஒத்ததிர்வு காற்று தம்பத்தை பயன்படுத்தி காற்றில் ஒலியின் திசைவேகம் காணல் 

6

திரவத்தின் பாகுநிலையை காணல்(ஸ்டோக்ஸ் முறை)

7

நுண்புழை ஏற்ற முறையில் பரப்பு இழுவிசை காணல் 

8

கலோரிமானியை கொண்டு நியூட்டனின் குளிர்வு விதியை சரிபார்த்தல் 

9

மாறா இழுவிசையில் அதிர்வெண்ணிற்கும் கொடுக்கப்பட்ட கம்பியின் அதிர்வடையும் நீளத்திற்கும் இடையேயான தொடர்பை அறிதல்-சுரமானி 

10

சுரமானியை பயன்படுத்தி மாறா அதிர்வெண்ணிற்கு கொடுக்கப்பட்ட கம்பியின் அதிர்வடையும் பிரிவின் நீளத்திற்கும் இழுவிசைக்கும் இடையேயான தொடர்பை அறிதல் 

11

விசைகளின் இணைகர விதியை சரிபார்த்தல்(செய்து காட்டல் மட்டுமே தேர்விற்கு உரியதன்று) 

12

திருகு அளவி மற்றும் இயற்பியல் தராசினைக் கொண்டு கம்பி பொருளின் அடர்த்தியை காணல்(செய்து காட்டல் மட்டுமே தேர்விற்கு உரியதன்று)

வேதியியல் செய்முறை பாடத்திட்டம்

வ.எண்.

உப்புகளின் பட்டியல் 

1

லெட் நைட்ரேட் 

2

காப்பர் சல்பேட் 

3

காப்பர் கார்பனேட் 

4

பெர்ரிக் குளோரைடு  

5

ஜிங்க் சல்பேட் 

6

ஜிங்க் சல்பைடு  

7

அலுமினியம் சல்பேட் 

8

அலுமினியம் நைட்ரேட் 

9

கால்சியம் கார்பனேட் 

10

பேரியம் குளோரைடு 

11

அம்மோனியம் குளோரைடு 

12

அம்மோனியம் புரோமைடு 

13

மெக்னீசியம் சல்பேட் 

14

மெக்னீசியம் கார்பனேட் 

15

மெக்னீசியம் பாஸ்பேட் 

உயிரியல் செய்முறை  பாடத்திட்டம்

எண்.

செய்முறையின் வகைகள் 

செய்முறை பட்டியல் 

1

கண்ணாடி தகடு தயாரித்து விளக்குதல் 

  • பாக்டீரியம் – லாக்டோ பேசிலஸ்  
  • பூஞ்சை – ஈஸ்ட், ரைஸோபஸ்  
  • ஆல்கா-கிளமிடோமோனாஸ், வால்வோக்ஸ், ஸ்பைரோகிரா மற்றும் ஓடோகோனியம்
  • மைட்டாஸிஸ் செல் பிரிதல் நிலைகள்-மெட்டாபேஸ், அனாபேஸ்
  • தாவர அமைப்பு-இருவித்திலை-வேர், தண்டு மற்றும் இலை, ஒருவித்திலை-வேர், தண்டு மற்றும் இலை
  • பிளாஸ்மோலிசிஸ் மற்றும் டிப்ளாஸ்மோலிசிஸ்
  • இலைத்துளை பரவல் 

2

மாதிரிகள் 

  • கேரா 
  • அகாரிகஸ் – பசிடிய கனியுறுப்பு 
  • ஃபோலியோஸ் லைக்கண்  
  • ஃப்யூனேரியா –  வளரியல்பு
  • அடியாண்டம் – வளரியல்பு 
  • இலைத்தொழில் தண்டு – ஒபன்சியா 
  • சிறப்பு வகை மஞ்சரி – சயாத்தியம் 
  • திரள் கனி – பாலியால்தியா 

3

கொடுக்கப்பட்ட மாதிரி/புகைப்படம்/படத்தில் குறிக்கப்பட்டுள்ள பகுதியை இனங்காணுதல் 

  • பாக்டீரியா செல்லின் நுண்ணமைப்பு – மரபணு தாங்கி, பிளாஸ்மிட், பாலிசோம், மெட்டோசோம் ஃபிம்ப்ரியே/நுண் சிலும்பு
  • ஸ்டீலின் வகைகள் – ஆக்டினோஸ்ஸ்டீல், ப்ளெக்டோஸ்டீல், டிக்டியோஸ்ஸ்டீல், யூஸ்ஸ்டீல்
  • இலை நரம்பமைவின் வகைகள் – சிறகு வடிவ வலைப்பின்னல் நரம்பமைவு, அங்கை வடிவ வலைப்பின்னல் குவி நரம்பமைவு,  அங்கை வடிவ வலைப்பின்னல் விரி நரம்பமைவு, அங்கை வடிவ இணைப்போக்கு குவி நரம்பமைவு, அங்கை வடிவ இணைப்போக்கு விரி நரம்பமைவு
  • மஞ்சரியின் வகைகள்-கூட்டு ரஸீம், காரிம்ப், தனி டைக்கேசியம், பல்கை கிளைக்கும் மஞ்சரி
  • செல் சுழற்சி நிலைகள்-G1, S, G2 மற்றும் M நிலை
  • நைட்ரஜன் காரங்கள் – அடினைன், குவானைன், சைட்டோசின், தைமின் மற்றும் யுரேசில்
  • திசு வகைகள்-காற்று பாரங்கைமா, குளோரங்கைமா, கோண கோலரங்கைமா, பிரேக்கி ஸ்கிளிரைடுகள், சைலம் டிரக்கீடுகள், சைலம் குழாய்கள் மற்றும் சல்லடை குழாய்

4

தாவர வகைப்பாட்டில் – மலரின் பாகங்களை தனிமைப்படுத்துதல் 

  • ஃபேபேசி – கிளைட்டோரியா டெர்னேஷியா  
  • அப்போசினேசி – கேதரான்தஸ் ரோசியஸ் 
  • சொலனேசி-டாட்டூரா மெட்டல் 
  • யூபோர்பியேசி – ரிசினஸ் கம்யூனிஸ்  
  • மியூசேஸி-மியூஸா பாரடிஸியாகா    

5

உயிரி மூலக்கூறுகள்-ஊட்டப்பொருள் சோதனை 

  • ஒடுக்கும் சர்க்கரைக்கான பெனிடிக்ட் சோதனை  
  • தரசத்திற்கான அயோடின் சோதனை 
  • புரத்திற்கான பையூரெட் சோதனை   
  • லிப்பிடுக்கான சோப்பாதல் வினை 

6

தாவர செயலியல் சோதனை 

  • உருளைக்கிழங்கு ஆஸ்மாஸ்கோப் சோதனை  
  • நிற பகுப்பாய்வு தாள் சோதனை 
  • வில்மாட்ஸ் குமிழி சோதனை   
  • கோணங்கின் சுவாசமானி சோதனை 
  • வில் ஆக்ஸனோமீட்டர்    

மதிப்பெண்ணை அதிகரிப்பதற்கான கற்றல் திட்டம்

Study Plan to Maximise Score

தேர்வுக்கு தயாராவதற்கான குறிப்புகள்

தமிழ்நாடு வாரியம் சமச்சீர் வகுப்பு 11 தேர்வுக்கான சில சிறந்த குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது:

1. முழுமையாகவும் திறமையுடனும் படிக்கவும்

  • தேர்வில் வெற்றி பெற,  நன்கு திட்டமிடப்பட்ட  படித்தல்  அணுகுமுறை வைத்திருப்பது மட்டுமல்லாமல் உன்னிப்பாக கவனித்து படிப்பதும் அவசியம் 
  • ஒவ்வொரு பாடத்திற்கும் ஒரே அளவு நேரத்தை ஒதுக்கி ஒரே அளவு முயற்சி செய்யுங்கள்.
  • நீங்கள் ஒரு அறிவியல் மாணவராக இருந்தால், இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் கணிதம் போன்ற அனைத்து முக்கியமான அறிவியல் பாடங்களிலும் நீங்கள் கவனம் செலுத்துகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
  • கடினமானதாகத் தோன்றும் ஒரு தலைப்பு வந்தால் விட்டுவிடாதீர்கள்; தொடர்ந்து ஆராய்ந்து படியுங்கள்.
  • கணிதம் மற்றும் சமன்பாடுகளைப் புரிந்துகொள்வதற்கு நிலையான மற்றும் நேர்மையான பயிற்சி தேவைப்படுகிறது.
  • கணிதக் கேள்விகளைத் தீர்ப்பதை உங்களது தினசரி வழக்கமாக்குங்கள், மேலும் செயல்முறைகள் மற்றும் எளியவழிகளை பயன்படுத்தி கணக்கை எவ்வாறு விரைவாக தீர்ப்பது என்பதை அறிந்துகொள்ளுங்கள்.

2. நேர்மையான மற்றும் நிலையான படித்தல்

  • சமச்சீர் வாரியத் தேர்வுகள் மாணவர்களின் அறிவையும், பல்வேறு பாடப்பிரிவுகளின் அனைத்துக் கருத்துகளின் புரிதலையும் அளவிடுகின்றன. இதற்கு மாணவர்களின் தொடர்ச்சியான மற்றும் நேர்மையான முயற்சிகள் தேவை. இதன் விளைவாக, அனைத்து மாணவர்களும் தங்களுக்கு முற்றிலும் நேர்மையாக இருக்க வேண்டும். TN 11ஆம் வகுப்பு தேர்வுகளில் தேர்ச்சி பெறுவது கடினமானது அல்ல; தினமும் தேர்வுக்கு படித்தால் சிரமமின்றி தேர்ச்சி பெறலாம். உங்கள் படிப்பில் நேர்மறையான அணுகுமுறையையும் தன்னம்பிக்கையையும் பின்பற்றுங்கள். குறிப்பாக நீங்கள் 90 அல்லது அதற்கு மேல் தேர்வு மதிப்பெண்ணைப் பெற விரும்பினால், கவனமாக படித்தல் மிகவும் அவசியம். எந்தவொரு படிப்பு அமர்வையும் தவிர்க்க வேண்டாம். கற்றலை ஒரு வழக்கமான பழக்கமாக மாற்றுங்கள்.

3. நம்பிக்கையுடன் இருக்கவும்

  • முடியாதது எதுவும் இல்லை, நேர்மையாகவும், தைரியமாகவும் படித்தால், சந்தேகத்திற்கு இடமின்றி வெற்றி பெறுவீர்கள். TN சமச்சீர் வாரிய 11ஆம் வகுப்பு தேர்வு 2023 ஏப்ரலில் TN வாரிய இணைப்பு பள்ளிகளில் நடைபெறும், மொத்தம் 7 மாதங்கள் நீங்கள் தயார் செய்ய வேண்டும். அனைத்துப் பாடங்களையும் முழுமையாக ஆராய்ந்து படிக்க ஏராளமான வாய்ப்புகள் இருக்கிறது. எதிர்மறை எண்ணங்களைத் தவிர்த்து, தேர்வை நம்பிக்கையுடன் அணுகுங்கள்.

4. ஒவ்வொரு பாடத்திற்கும் சரியான குறிப்புகளை உருவாக்கவும்

  • தேர்வு நெருங்கும் போது, அத்தியாயங்கள் மற்றும் பகுதிகள் அனைத்தையும் முழுமையாகப் படிப்பது கடினம் மற்றும் அது நடைமுறைக்கு ஏற்ற ஒன்றல்ல. ரிவிசன் குறிப்புகள் மற்றும் விளக்கப்படங்கள் உதவும் நேரம் இது. படிக்கும் போது குறிப்புகள் எடுப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். ஒவ்வொரு பாடத்திற்கும் மூன்று முதல் நான்கு பக்க குறிப்பினை தயாரிக்கவும், அதில் அனைத்து தொடர்புடைய உள்ளடக்கமும் அடங்க வேண்டும். வினாத்தாளை விரைவாக முடிக்க உதவும் முக்கியமான சமன்பாடுகள், பரிந்துரைகள் மற்றும் யோசனைகள் உங்கள் குறிப்புகளில் இடம் பெறலாம்.

5. உங்கள் சிக்கல் தீர்க்கும் திறனை மேம்படுத்தவும்

  • ஒரு கேள்விக்கு சரியாக பதிலளிப்பது முக்கியம்தான், அதே சமயம் அதை சரியான நேரத்தில் முடிப்பதும் மிக முக்கியமான ஒன்றாகும். தேர்வை முடிக்க உங்களுக்கு குறைந்த நேரமே இருப்பதால், சிக்கலைத் தீர்க்கும் திறன் மிக அவசியம். அனைத்து மாணவர்களும் முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் மற்றும் மாதிரி தாள்களை பயிற்சி செய்ய வேண்டும், இது கேள்விகளுக்கு விரைவாக பதிலளிக்கும் பழக்கத்தை மேம்படுத்த அவர்களுக்கு உதவும்.

6. தேவையற்ற பாடங்களை படிக்காதீர்கள்

  • நீங்கள் படிப்பதற்கு தேவையான நேரம் உங்களுக்கு இருக்கிறது, ஆனால் அது தேவையான அளவு மட்டுமே இருக்கிறது. அதனால், தேர்வின் போது முக்கியமான மற்றும் தேவைப்படும் தலைப்புகளில் நீங்கள் முழுமையாக கவனம் செலுத்த பரிந்துரைக்கிறோம். பாடத்திட்டத்தைப் பின்பற்றி, முக்கியமான கருத்துக்கள் அனைத்தையும் பல முறை படிக்கவும். பாடத்திட்டத்தின்படி படித்தால் தேர்வில் வெற்றி பெறுவீர்கள். தேர்வுக்குத் தொடர்பில்லாத அல்லது தேவையற்ற பாடங்களை  படிப்பதில் நேரத்தை வீணாக்காதீர்கள்.

தேர்வு எழுதுவதற்கான உத்திகள்

உங்கள் இலக்குகளை அடைவதற்கான ஒரே வழி தேர்வுக்காக படிப்பது மட்டும் அல்ல. தேர்வு நாளில் வினாத்தாளை எதிர்கொள்ளும் போது அமைதியுடனும் நம்பிக்கையுடனும் இருப்பதும் முக்கியம். தேர்வு எழுதும் போது மனதில் கொள்ள வேண்டிய சில முக்கியமான காரணிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது:

  • ஒரே கேள்விக்கு அதிக நேரம் செலவிடுவது பயனற்றது. அனைத்து கேள்விகளும் சமமாக கருதப்பட வேண்டும். நீங்கள் ஒரு கேள்விக்கு அதிக நேரம் செலவழித்து, நீங்கள் வழங்கும் பதில் தவறாக இருந்தால், உங்கள் முழு முயற்சியும் வீணாகிவிடும்.
  • உங்கள் பதில்களில் நீங்கள் நம்பிக்கையுடன் பதிலளிக்க எளிதான கேள்விகளுடன் தொடங்குவதே சிறந்த உத்தி. பின்னர் மிகவும் கடினமான கேள்விகளுக்கு செல்லுங்கள். இது உங்கள் நேரத்தை மிச்சப்படுத்துவது மட்டுமல்லாமல், கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது உங்கள் நம்பிக்கையையும் அதிகரிக்கும்.
  • அவசரப்பட்டு பதில்களை எழுதாதீர்கள். முதலில், உங்கள் பதில்களைப் பற்றி சிந்தித்து அவற்றை கவனமாக எழுதுங்கள். இப்படி செய்தால், தவறான பதில்களை வழங்குவதன் விளைவுகளிலிருந்து நீங்கள் தப்பித்துக் கொள்ளலாம்.
  • MCQ அதாவது விடைகளை தேர்ந்தெடுக்கும் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது, ​​யூகங்களை நம்ப வேண்டாம். முதலில், கேள்விக்கு பதிலளிக்க முயற்சிக்கவும், உங்களுக்கு சரியான பதில் தெரிந்தால், சரியான பதிலைக் கொடுங்கள். சரியான பதில் எது என்பதில் குழப்பம் இருந்தால், பிழையான பதில்களைக் குறிப்பதற்கு எதிர்மறை மதிப்பெண்கள் இல்லை என்பதால் உங்கள் யூகத்தில் நீங்கள் பதிலளிக்கலாம்.
  • உங்களுக்கு நேரம் இருந்தால், எல்லா கேள்விகளுக்கும் மீண்டும் சென்று உங்கள் பதில்களை இருமுறை சரிபார்க்கவும்.

விரிவான கற்றல் திட்டம்

உங்களிடம் சரியான புத்தகங்கள் இருந்தால், சமச்சீர் வாரிய தேர்வுகளில் நீங்கள் வெற்றிபெற முடியும். இந்த தேர்வில் நல்ல முடிவுகளைப் பெறுவதற்கு நீங்கள் தவறாமல் கடினமாக உழைக்க வேண்டும். உங்களுக்கு நன்கு திட்டமிடப்பட்ட படித்தல் முறையும் தேவைப்படும். அதை திறம்பட செய்ய கீழே சில வழிமுறைகள் பட்டியலிடப்பட்டுள்ளது:

  • உங்கள் பாடத்திட்டத்தில் உள்ள அனைத்துப் பாடங்களுக்கும் நேரத்தை உள்ளடக்கிய கால அட்டவணையைத் திட்டமிடுங்கள், அத்துடன் இடையில் தேவையான இடைவெளிகளுடன் சுயமதிப்பீட்டுக்கு ஒரு மணிநேரம் ஒதுக்குங்கள்.
  • காலப்போக்கில் சோர்வடைவதைத் தவிர்க்க, படிக்கும் போது குறுகிய இடைநிறுத்தங்கள் சேர்க்கப்பட வேண்டும்.
  • தமிழ்நாடு வாரிய சமச்சீர் வகுப்பு 11 தேர்வுக்கு ​​ரிவிசன் செய்யும் போது, ரெபர் செய்யவதற்கு உதவியாக சிறிய குறிப்புகளை நீங்கள் வைத்திருக்க வேண்டும். எனவே, நீங்கள் முழு பாடப்புத்தகத்தையும் படிக்க வேண்டிய அவசியம் இருக்காது, இது உங்களின் நேரத்தையும் முயற்சியையும் மிச்சப்படுத்தும்.
  • ஒரு குழுவில் நண்பர்களுடன் படிப்பது மற்றொரு சிறந்த வழி. இது அவர்களின் தேர்வுத் தயார் நிலைகளை ஒப்பிட்டுப் பார்க்க உங்களை அனுமதிக்கிறது.
  • கடைசி மதிப்பாய்விற்கு, உங்கள் பாடப்புத்தகங்கள் அனைத்தையும் மீண்டும் படிக்கவும். மேலும், ஸ்கெட்ச் பென்சில்களைப் பயன்படுத்தி அனைத்து முக்கிய கோட்பாடுகளையும் தனியாக தெரியும்படி கோடிட்டுக் காட்டுங்கள்.
  • உங்களிடம் ஏதேனும் ஒரு பாடத்தில் முழுமையடையாத அத்தியாயங்கள் இருந்தால் எங்களுக்குத் தெரிவிக்கவும். அந்த அத்தியாயம் முழுவதையும் படிக்க முயற்சிக்காதீர்கள். தேர்வில் எழுத தேவையான சில முக்கியமான கேள்விகளை மட்டும் படிக்கவும்.
  • உங்கள் கையெழுத்து வேகத்தை அதிகரிக்க, அதிகம் எழுதி பயிற்சி செய்யுங்கள். தேர்வு நேரத்தில் இது உதவும். தேர்வு அறையில் சிக்கல்களைத் தவிர்க்க, ஏதேனும் மாதிரித் தேர்வுத் தாளை மூன்று மணி நேரத்திற்குள் முடிக்க முயற்சிக்கவும்.
  • சமச்சீர் பாடத்திட்டத்தில் உள்ள கணிதம் மற்றும் வடிவியல் கணக்குகள் நிச்சயம் பயிற்சி செய்து பார்க்க வேண்டியதாகும். மேலும், எண்கணித கணக்குகளை தீர்ப்பதில் சிக்கல் ஏற்படாமல் இருக்க மிக முக்கியமான சூத்திரங்களில் சிலவற்றை தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள்.

தேர்வுக்கான கலந்தாய்வு

Exam counselling

மாணவர்களுக்கான கலந்தாய்வு

மாணவர் கலந்தாய்வு சேவை குறிப்பாக 11-ம் வகுப்பு மாணவர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றும் பாடத் தேர்வுகள் மற்றும் விண்ணப்ப நடைமுறைகள் பற்றிய ஆழமான தகவல்களை வழங்குகிறது. 11 ஆம் வகுப்பில் படிக்கும் ஒரு மாணவருக்கு பலவிதமான விருப்பங்கள் உள்ளன, அவற்றுள் ஒன்றைத் தேர்ந்தெடுப்பது கடினமாகிறது. ஒரு மாணவர் செய்ய விரும்பும் தொழிலுக்கு ஒரு கல்லூரியைத் தேர்ந்தெடுக்கும் போது, ஒரு கல்லூரி/பல்கலைக்கழகத்தில் படிப்பதன் மதிப்பு வேலை வாய்ப்புகளை வழங்கும் என்பதால், மாணவர்கள் நன்கு அறியப்பட்ட நிறுவனத்தைத் தேர்வுசெய்யுமாறு தொழில் வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர்.

விண்ணப்ப செயல்முறை, கண்காணிப்புத் தகவல் மற்றும் கலந்தாய்வு நிபுணர்களிடமிருந்து சேர்க்கைக்கான முக்கியமான தேதிகள் குறித்த படிப்படியான வழிகாட்டுதலை பள்ளிகள் பெறுகின்றன.

  • மாணவர்கள் எப்போதும் ஒரு இலக்கு திட்டத்தை வைத்திருக்க வேண்டும். ஒரு இலக்கு என்பது எப்போதும் ஸ்மார்ட்டாக (SMART) இருக்க வேண்டும். அதாவது  S-Specific(குறிப்பாக), M-Measurable(அளவிடக்கூடியது), A-Achievable(அடையக்கூடியது), R-Realistic(நடைமுறைக்குரியது) அல்லது Relevant(சம்பந்தப்பட்டது), மற்றும் T-Timebound(நேரத்திற்கு உட்பட்டது).
  • மாணவர்கள் மோசமான மதிப்பெண்களைப் பெற்றாலும் ஒருபோதும் நம்பிக்கை இழக்கக்கூடாது.
  • சில பாடங்கள் எளிமையாக இருக்கும், மற்றவை சவாலானதாக இருக்கும். எளிமையான மற்றும் கடினமான தலைப்புகளை உள்ளடக்கிய ஒரு சுவாரஸ்யமான அட்டவணையைத் திட்டமிடுங்கள்.
  • தியானம், யோகா மற்றும் உடல் செயல்பாடுகளுடன் உங்கள் நாளைத் தொடங்குங்கள். இது நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடனும் சுறுசுறுப்பாகவும் இருக்க உதவும்.
  • சிறந்த கற்றல் பழக்கத்தின் முதல் வழிகாட்டுதல் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைக் கொண்டிருப்பதாகும்.
  • உங்கள் தவறுகளுக்கான பொறுப்பை ஏற்கவும், அவைகளிடமிருந்து கற்றுக்கொள்ளவும், அதே தவறுகளை மீண்டும் செய்யாமல் இருக்கவும் கற்றுக்கொள்ளுங்கள்.
  • உங்கள் கவலைகளைப் பற்றி உங்கள் பயிற்றுனர்கள் மற்றும் பெற்றோரிடம் பேசுங்கள்.
  • உங்களை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டிய நிலையில் உங்களை ஒருபோதும் வைக்காதீர்கள். ஒவ்வொருவரும் தனித்துவமானவர் ஆவர்.
  • உங்கள் வாழ்நாள் முழுவதும், தொடர்ந்து புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்ளுங்கள் மற்றும் உங்கள் எல்லைகளை விரிவுபடுத்துங்கள்.
  • பள்ளிக்குப் பிறகு சில பிறதுறை செயற்பாடுகளில் கலந்துகொள்ளுங்கள்.
  • “கடினமான காலம் நீடிக்காது, ஆனால் கடினமான மனிதர்கள் நீடித்து வாழ்கிறார்கள்” என்பது பழமொழி. உறுதியான முடிவை எடுங்கள்.

பெற்றோர்/பாதுகாவலருக்கான கலந்தாய்வு

பெற்றோர்கள் தங்கள் கனவுகளை குழந்தைகள் மூலம் நனவாக்கும் போக்கால் பல தொழில்கள் பாதிக்கப்படுகின்றன. குழந்தைகள் தங்கள் சொந்த இலக்குகளைப் பின்பற்ற அனுமதிப்பதற்குப் பதிலாக, பெற்றோர்கள் அவர்கள் மீது தங்கள் எண்ணங்களை திணிப்பது தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் கல்வி, பொழுதுபோக்குகள், குறிக்கோள்கள் மற்றும் ஆர்வங்கள் பற்றி சிந்திக்க வேண்டும். குழந்தைகள் விரும்பும் ஒன்றைச் செய்ய ஊக்குவிக்கப்படும்போது, அவர்கள் மகிழ்ச்சி அடைகின்றனர் மற்றும் இதனால் அவர்களால் சிறப்பாக செயல்பட முடிகிறது. ஒரு தொழில்துறை பாதையை தீர்மானிப்பதில் உயர்நிலைப் பள்ளி ஒரு முக்கியமான கட்டமாகும். மாணவர்கள் தங்கள் தவறுகளின் விளைவாக நீண்டகால விளைவுகளை சந்திக்க நேரிடும்.

அவர்களின் தொழில் வாழ்க்கையில் கூட, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். பெற்றோரும் மாணவர்களும் தங்களுக்கு ஏற்ற வாழ்க்கைப் பாதையைத் தேர்வுசெய்ய அவர்கள் செய்ய வேண்டிய விஷயங்களின் பட்டியல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது:

  • உங்கள் குழந்தைக்கு ஆர்வமுள்ள மற்றும் அவர்கள் தொழில்களில் வளர உதவும் வகுப்புகளின் பட்டியலை உருவாக்கவும்.
  • பட்டியலிடப்பட்ட படிப்புகளில் எந்தப் படிப்பைத் தொழிலாகத் தொடர விரும்புகிறார்கள் என்பதைத் தேர்ந்தெடுப்பதில் அவர்களுக்கு உதவுங்கள்.
  • அவர்கள் படிக்க விரும்பும் ஒவ்வொரு பாடத்திற்கும் சிறந்த கல்லூரிகளின் பட்டியலை உருவாக்கவும்.
  • இந்த படிப்புகளில் சேர்வதற்கான தேவைகள் மற்றும் தகுதிக்கான அளவுகோல்கள் பற்றிய தகவல்களை சேகரிக்கவும்.
  • பாடத்திற்கான, ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் படிப்பு உள்ளடக்கங்களை சேகரிக்கவும்.

FAQ-கள்

Freaquently Asked Questions

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

கே1. TN வாரிய மாணவர்கள் 11 ஆம் வகுப்புத் தேர்வுகளில் கலந்துகொள்வதற்கான தகுதி என்ன?
ப​​​​​​​. 10 ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்று பிளஸ் ஒன் வகுப்பிற்கு அனுமதிக்கப்பட்ட மாணவர்கள் 11 ஆம் வகுப்பு தேர்வில் கலந்துகொள்ள தகுதியுடையவர்கள். மேலும், அவர்கள் வகுப்பில் தேவையான வருகை பதிவேட்டினை கொண்டிருக்க வேண்டும்.

கே2​​​​​​​. தமிழகத்தில் 11ஆம் வகுப்பு தேர்வுகள் எப்போது நடைபெறும்?
ப​​​​​​​. தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்ககம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 11ஆம் வகுப்புத் தேர்வுகளை நடத்தும்.

கே3​​​​​​​. 2022-ஆம் ஆண்டிற்கான TN 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு கால அட்டவணையின் நகலை எவ்வாறு பெறுவது?
ப​​​​​​​. தமிழ்நாட்டில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கால அட்டவணையை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் காணலாம், அதே கால அட்டவணை வெளியிடப்பட்டதும் இந்தக் கட்டுரையில் புதுப்பிக்கப்படும்.

கே4​​​​​​​. சமச்சீர்  வகுப்பு 11 மிகவும் முக்கியமா?
ப​​​​​​​. உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு, 11-ஆம் வகுப்பு மிகவும் முக்கியமானது, ஏனெனில், அவர்கள் தங்கள் 12ஆம் வகுப்பு தேர்வுகளில் படிக்கும் அனைத்து முக்கிய தலைப்புகளுக்கும் அடிப்படை இதுவாகும். மாணவர்கள் தங்கள் தேர்வுகளை முடிக்கும்போது 11ஆம் வகுப்பு முக்கிய கேள்விகளை அறிந்திருப்பது மிகவும் முக்கியமானது, இதனால் அவர்கள் தங்கள் இறுதித் தேர்வுகளுக்கு சிறப்பாகத் தயாராகலாம்.

கே5​​​​​​​. TN வாரிய 11ஆம் வகுப்புக்கான சில சிறந்த கல்வி குறிப்புகள் யாவை?
ப​​​​​​​. பாடத்திட்டம் மற்றும் தேர்வு வடிவம் அனைத்திற்கும் அடித்தளமாகும். TN சமச்சீர் வாரியம் வகுப்பு 11-இல் உள்ள மாணவர்கள் Embibe-யிலிருந்து புதிய சுருக்கப்பட்ட பாடத்திட்டத்தைப் பெறலாம் மற்றும் அவர்கள் கேட்கப்படும் கேள்விகளின் வகைகள், மதிப்பெண் திட்டம் மற்றும் கேட்கப்படும் கேள்விகளின் எண்ணிக்கை உட்பட தேர்வைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தையும் கண்டறியலாம். தேர்வில் தேர்ச்சி பெற உதவும் விரிவான கல்வி உள்ளடக்கங்களையும் கல்வி முறைகளையும் நாங்கள் வழங்குகிறோம்.

செய்யக்கூடியவைகள் மற்றும் செய்யக்கூடாதவைகள்

கே1. TN வாரிய மாணவர்கள் 11 ஆம் வகுப்புத் தேர்வுகளில் கலந்துகொள்வதற்கான தகுதி என்ன?
ப​​​​​​​. 10 ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்று பிளஸ் ஒன் வகுப்பிற்கு அனுமதிக்கப்பட்ட மாணவர்கள் 11 ஆம் வகுப்பு தேர்வில் கலந்துகொள்ள தகுதியுடையவர்கள். மேலும், அவர்கள் வகுப்பில் தேவையான வருகை பதிவேட்டினை கொண்டிருக்க வேண்டும்.

கே2​​​​​​​. தமிழகத்தில் 11ஆம் வகுப்பு தேர்வுகள் எப்போது நடைபெறும்?
ப​​​​​​​. தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்ககம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 11ஆம் வகுப்புத் தேர்வுகளை நடத்தும்.

கே3​​​​​​​. 2022-ஆம் ஆண்டிற்கான TN 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு கால அட்டவணையின் நகலை எவ்வாறு பெறுவது?
ப​​​​​​​. தமிழ்நாட்டில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கால அட்டவணையை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் காணலாம், அதே கால அட்டவணை வெளியிடப்பட்டதும் இந்தக் கட்டுரையில் புதுப்பிக்கப்படும்.

கே4​​​​​​​. சமச்சீர்  வகுப்பு 11 மிகவும் முக்கியமா?
ப​​​​​​​. உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு, 11-ஆம் வகுப்பு மிகவும் முக்கியமானது, ஏனெனில், அவர்கள் தங்கள் 12ஆம் வகுப்பு தேர்வுகளில் படிக்கும் அனைத்து முக்கிய தலைப்புகளுக்கும் அடிப்படை இதுவாகும். மாணவர்கள் தங்கள் தேர்வுகளை முடிக்கும்போது 11ஆம் வகுப்பு முக்கிய கேள்விகளை அறிந்திருப்பது மிகவும் முக்கியமானது, இதனால் அவர்கள் தங்கள் இறுதித் தேர்வுகளுக்கு சிறப்பாகத் தயாராகலாம்.

கே5​​​​​​​. TN வாரிய 11ஆம் வகுப்புக்கான சில சிறந்த கல்வி குறிப்புகள் யாவை?
ப​​​​​​​. பாடத்திட்டம் மற்றும் தேர்வு வடிவம் அனைத்திற்கும் அடித்தளமாகும். TN சமச்சீர் வாரியம் வகுப்பு 11-இல் உள்ள மாணவர்கள் Embibe-யிலிருந்து புதிய சுருக்கப்பட்ட பாடத்திட்டத்தைப் பெறலாம் மற்றும் அவர்கள் கேட்கப்படும் கேள்விகளின் வகைகள், மதிப்பெண் திட்டம் மற்றும் கேட்கப்படும் கேள்விகளின் எண்ணிக்கை உட்பட தேர்வைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தையும் கண்டறியலாம். தேர்வில் தேர்ச்சி பெற உதவும் விரிவான கல்வி உள்ளடக்கங்களையும் கல்வி முறைகளையும் நாங்கள் வழங்குகிறோம்.

கல்வி நிறுவனங்களின் பட்டியல்

About Exam

பள்ளிகள்/கல்லூரிகளின் பட்டியல்

பள்ளி பட்டியல்

வ.எண்.

பள்ளி வாரியம் 

பள்ளியின் பெயர் 

1

மாநில கல்வி வாரியம் 

சிந்தாரிப்பேட்டை ஆண்கள் மேல்நிலைப்  பள்ளி

2

மாநில கல்வி வாரியம் 

குரு நானக் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி

3

மாநில கல்வி வாரியம் 

K.C. சங்கரலிங்க நாடார் மேல்நிலைப் பள்ளி

4

மாநில கல்வி வாரியம் 

முஸ்லீம் மேல்நிலைப் பள்ளி

5

மாநில கல்வி வாரியம் 

P.S.  மேல்நிலைப் பள்ளி

6

மாநில கல்வி வாரியம் 

இந்து மேல்நிலைப் பள்ளி

7

மாநில கல்வி வாரியம் 

வெள்ளையன் செட்டியார் மேல்நிலைப் பள்ளி

8

மாநில கல்வி வாரியம் 

வெஸ்லி மேல்நிலைப் பள்ளி 

9

மாநில கல்வி வாரியம் 

MCC அரசு பள்ளி 

தமிழ்நாட்டில் உள்ள மாநில கல்வி வாரியத்தின் பள்ளி பட்டியலை பார்க்க மற்றும் பதிவிறக்க, இங்கு கிளிக் செய்யவும்  தமிழ்நாடு வாரிய பள்ளி பட்டியல் .

எதிர்கால தேர்வுகள்

Similar

எதிர்கால தேர்வுகளின் பட்டியல்

எதிர்கால தேர்வுகளின் பட்டியல் 

11 ஆம் வகுப்புக்குப் பிறகு, ஒருவர் 12 ஆம் வகுப்பிற்குள் நுழைகிறார், இது ஒரு தனிநபரின் வாழ்க்கையில் ஒரு முக்கியமான திருப்புமுனையாகும். ஒருவர் தங்கள் நோக்கங்களில் கவனம் செலுத்தி அந்தந்த துறைகளில் உயர் தரங்களை அடைய வேண்டும்.

எனவே, நீங்கள் ஒரு டாக்டராகவோ அல்லது பொறியியலாளராகவோ ஆக விரும்பினாலும், 12 ஆம் வகுப்புக்குப் பிறகு நீங்கள் எழுதும் போட்டித் தேர்வுகளுக்கு நாங்கள் முழுமையான பயிற்சிகளை அளிக்கிறோம்.

ஒவ்வொரு ஆண்டும் தேசிய அளவில், அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம்-AIIMS, MBBS தேர்வை நடத்துகிறது, இது பொதுவாக 12 ஆம் வகுப்பு மாணவர்களால் AIIMS தேர்வு என்று குறிப்பிடப்படுகிறது. இந்தியாவில், MBBS இளங்கலைப் படிப்பை வழங்கும் ஒன்பது AIIMS கல்வி நிறுவனங்கள் உள்ளன.

உயர்நிலைப் பள்ளியில் பட்டம் பெற்ற பிறகு மாணவர்கள் எடுக்க வேண்டிய முக்கிய போட்டித் தேர்வுகள் பின்வருமாறு:

  • தேசிய தகுதி நுழைவுத் தேர்வு (NEET)
    தேசிய தகுதி நுழைவுத் தேர்வு (NEET) என்பது உண்மையில் அகில இந்திய மருத்துவத்திற்கான முன்-தேர்வு (AIPMT) என்ற பெயரில், இந்திய மருத்துவ மற்றும் பல் மருத்துவ நிறுவனங்களினால் நடத்தப்படும் MBBS மற்றும் BDS படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வாகும். தேசிய தேர்வு முகமை (NTA)என்னும் ஆணையம் NEET தேர்வை நடத்துகிறது.
  • கேரள பொறியியல் கட்டிடக்கலை மருத்துவம் (KEAM)
    கேரளா பொறியியல் கட்டிடக்கலை மருத்துவம் என்பது கேரளாவில் உள்ள பல்வேறு தொழில்முறை பட்டப்படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத் தேர்வுகளின் தொடராகும். இது கேரள அரசின் நுழைவுத் தேர்வு ஆணையர் அலுவலகத்தால் நடத்தப்படுகிறது.
  • இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ICAR)
    ICAR AIEEA ஆனது வேளாண்மை மற்றும் அதனுடன் தொடர்புடைய அறிவியலில் இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்டப் படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பதாரர்களைத் தேர்ந்தெடுக்கிறது.
  • ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம் (UPSC)
    அரசுப்பணியாளர் தேர்வு என்பது, இந்திய நிர்வாகப் பணி, இந்திய வெளியுறவுப் பணி, மற்றும் இந்தியக் காவல் பணி ஆகியவற்றுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்காக ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம் (UPSC) மூலம் இந்தியாவில் நடத்தப்படும் தேசிய அளவிலான போட்டித் தேர்வாகும்.
  • தேசிய பாதுகாப்புப் படை  அகாடமி மற்றும் கடற்படை அகாடமி(NDA & NA) தேர்வு
    UPSC ஆனது NDA தேர்வை நிர்வகிக்கிறது, இது NDA-வின் இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை பிரிவுகளில் ஆள் சேர்ப்பதற்காக தேவைப்படுகிறது. இராணுவம், கடற்படை அல்லது விமானப்படையில் சேர ஆர்வமுள்ள மாணவர்களுக்கு இந்த தேர்வு ஒரு படியாக செயல்படுகிறது.
    NDA மற்றும் NA ஆகியவை ஆண்டுக்கு இருமுறை நாடு முழுவதும் நடைபெறும் நுழைவுத் தேர்வுகளாகும்.

நடைமுறை அறிவு/தொழில்துறை இலக்குகள்

Prediction

நிஜ உலகிலிருந்து கற்றல்

மாணவர்கள் நிஜ உலகத்திலிருந்து கற்றுக் கொள்ளும்போது, ​​அவர்களால் பல்வேறு கற்றல் செயல்முறைகளில் பங்கேற்க முடியும். அவர்கள் வகுப்பில் கற்றுக்கொண்டதை வகுப்பறைக்குள் மட்டுமல்லாமல் வெளியுலக  சூழ்நிலைகளுக்கும் பயன்படுத்த முடியும். மாணவர்கள் கருத்துக்கள் மற்றும் பாடத்தில் அனுபவத்தை  பெறும்போது, ​​அவர்களுக்கு அது நன்கு புரிவதால் படிப்பது மிகவும் சுவாரஸ்யமாகிறது. பயிற்சிகள், சோதனைகள், கள அனுபவங்கள், குழு அல்லது சமூகம் சார்ந்த செயல்பாடுகள் மற்றும் பிற வகையான கற்றல் அனுபவங்கள் நம் மாணவர்களுக்குத் தேவை. பல்வேறு வடிவமைப்பு அணுகுமுறைகள், நிஜ-உலக அமைப்பையும் கற்றலையும் இணைப்பதை மையமாகக் கொண்டுள்ளன. சமீபத்திய ஆராய்ச்சியின் படி, பணியிடத்தில் கல்லூரி பட்டதாரிகளின் செயல்திறன் எதிர்பார்ப்புகள், எப்போதுமே அதிகமாக  இருக்க வாய்ப்பிருக்கிறது. பணியமர்த்தும் நிறுவனங்கள்,  ஒவ்வொரு உறுப்பினரும் பணியிடத்திற்கு வரும்போது அந்த சூழலில் இயங்குவதற்குத் தேவையான அனைத்து தொழில்நுட்ப திறன்கள் மற்றும் அடிப்படை திறன்களுடன் வருவார்கள் என்று நம்புகிறார்கள். இதன் காரணமாக, மாணவர்கள் தங்கள் பட்டப்படிப்பை முடிக்க பல்வேறு கற்றல் அனுபவங்கள் தேவை. எனவே, வழக்கமான கல்விச் சூழல்களுக்கு வெளியே பிற மனிதர்களை சந்திப்பதன் மூலம் மாணவர்கள் தகவல், திறன்கள் மற்றும் மதிப்புகளைப் பெறும் அனுபவக்கல்வி  அவர்களுக்கு மிகவும் அவசியம்.

எதிர்கால திறன்கள்

ஒருவர் தனது சொந்த காலில் நிற்க தேவைப்படும் சிறந்த திறன்களை தாங்களே கொண்டிருக்கலாம். கீழே குறிப்பிடப்பட்டுள்ள அறிவைப் ஒருவர் பெற்றிருந்தால், இந்த தானியக்க அல்லது தொழில்நுட்ப உலகில் அவரால் வெற்றிபெற முடியும். 2025 ஆம் ஆண்டில், இணைக்கப்பட்ட சாதனங்களின் மொத்த எண்ணிக்கை 75 பில்லியனை எட்டும் என்று புள்ளிவிவரங்கள் கணித்துள்ளன. இதன் விளைவாக, பொறியாளர்கள், தொழில்நுட்ப  மற்றும் பிற IoT வல்லுநர்கள் அதிக தேவையில் உள்ளனர். தொழில்நுட்ப அடுக்கின் ஒவ்வொரு மட்டத்திலும் IoT உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் பராமரிக்கவும் இந்த நிபுணர்களுக்கு பல்வேறு திறன்கள் தேவைப்படும்.

  • செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல்
  • Node.js உருவாக்கம் 
  • APP  உருவாக்கம்  
  •  API-ஐ தானியக்கமாக்குதல் மற்றும் சோதனை செய்தல்
  •  தகவல் பாதுகாப்பு
  • UI/UX வடிவமைப்பு
  • கிளவுட் கம்ப்யூட்டிங்

தொழில்துறைத் திறன்கள்

முன்பு கூறியது போல், 11 மற்றும் 12 ஆம் வகுப்புகள் ஒருவரின் வாழ்க்கையின் மிக முக்கியமான ஆண்டுகள் மற்றும் வாழ்க்கையை மாற்றும் அனுபவமாகும். எனவே, தலைப்புகளைப் படிக்கும் போது, உங்கள் விண்ணப்பத்தை மேம்படுத்த கீழே பட்டியலிடப்பட்டுள்ள திறன்களை நீங்கள் தேர்ச்சி பெற வேண்டும், அதை நீங்கள் எதிர்காலத்தில் உங்கள் சிறந்த முதலாளியிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

  • படைப்பாற்றல்
  • தனிப்பட்ட திறன்கள்
  • திறனாய்வுச் சிந்தனை
  • சிக்கல்களை தீர்த்தல்
  • மேடைப்பேச்சு
  • குழுவாக வேலை செய்யும் திறன்கள்
  • தகவல் தொடர்பு

தொழில்துறை வாய்ப்புகள்/எந்த துறையை தேர்வு செய்வது?

படிப்புகள்:

11 ஆம் வகுப்பில் அதிகாரபூர்வ வேலை வாய்ப்புகள் எதுவும் செய்யப்படுவதில்லை என்ற போதிலும், குழந்தைகள் அவர்களுக்கு விருப்பமான தொழிலை தேர்ந்தெடுக்க, மாற்று தொழில் வாய்ப்புகள் பற்றி அவர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். மாணவர்கள் 11 ஆம் வகுப்புக்கு பின், அறிவியல், வணிகம், கலைகள், நுண்கலைகள் மற்றும் பிற துறைகளில் தங்கள் ஆர்வத்தைத் தொடரலாம்.

1. அறிவியல்

PCMB, PCMC அல்லது PCME முடிக்கும் மாணவர்களுக்கு, பின்வருபவை சாத்தியமான தொழிற் தேர்வுகள்:

  • BTech/BE(பொறியியல்)
  • இளங்கலை மருத்துவம் & அறுவை சிகிச்சை இளங்கலை( MBBS)
  • மருந்தியல் இளங்கலை
  • மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப இளங்கலை  (BSc MLT) 
  • BSc மனையியல்/தடய அறிவியல் 
  • செவிலியம்
  • அறிவியல் இளங்கலை 
  • ஒருங்கிணைந்த முதுகலை தொழில்நுட்பம் (MTech)
  • பல் மருத்துவம் (BDS)

2. வணிகம்

அறிவியலுக்கு அடுத்தபடியாக வணிகம் இரண்டாவது மிகவும் பிரபலமான கல்வி படிப்பாகும். நீங்கள் புள்ளியியல் மற்றும் பொருளாதாரத்தில் ஆர்வமாக இருந்தால், வணிகம் உங்களுக்கான சிறந்த தொழிற் தேர்வாகும்.

வணிகவியல் மாணவர்களுக்கு பின்வரும் தொழில் வாய்ப்புகள் உள்ளன:

  • பட்டய கணக்காளர்
  • தொழில் மேலாண்மை
  • டிஜிட்டல் சந்தைப்படுத்துதல் 
  • மனித வள மேலாண்மை 
  • வணிக நிர்வாகத்தில் இளங்கலை(BBA)
  • B.Com கணக்கியல் மற்றும் வர்த்தகம்
  • வணிக நிர்வாகத்தில் இளங்கலை & சட்டமன்ற சட்ட இளங்கலை(BBA LLB)

3. கலை

கல்வியியல் சார்ந்த கல்வியினை தொடர விரும்புவோருக்கு கலை சார்ந்த படிப்புகள் உதவுகிறது.

  • நிகழ்ச்சி மேலாளர் 
  • கிராபிக் வடிவமைப்பாளர் 
  • SEO பகுப்பாய்வாளர் 
  • உள் கட்டமைப்பு வடிவமைப்பு
  • ஊட்டச்சத்து நிபுணர்
  • இதழியல் மற்றும் மக்கள்செய்தித் தொடர்பியல்

Embibe-யில் 3D கற்றல், புத்தகப் பயிற்சி, டெஸ்ட்கள் மற்றும் சந்தேகத் தீர்ப்பான்கள் மூலம் உங்கள் சிறந்ததை அடையுங்கள்