• எழுதியவர் Vishanth V
  • கடைசியாக மாற்றப்பட்டது 24-08-2022

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) Group 1: படிப்புத் திட்டம் 2022

img-icon

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப்-1 படிப்புத் திட்டம்:

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC), Group 1 முதன்மை தேர்வுக்கு விண்ணப்ப பதிவு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பரிசீலனை செய்யப்பட்ட பாடத்திட்டத்தையும் அறிவித்துள்ளது. ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-I (Group I) இரண்டு நிலை தேர்வுகளாக நடத்தப்படுகிறது. முதல்நிலைத் தேர்வு கொள்குறி முறையில் நடத்தப்படும் மற்றும் முதன்மைத் தேர்வு விளக்க முறையில் நடத்தப்படும்.  இந்தக் கட்டுரையில் 2022 ஆண்டிற்கான முதல்நிலை மற்றும் முதன்மைத் தேர்வுகளுக்கான படிப்புத் திட்டம் கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) Group 1: மேலோட்டம் 

வயது வரம்பு

குரூப்-1 தேர்வினை எழுத 21 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.

கல்வித்தகுதி 

ஏதாவது ஒரு பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

முதல்நிலைத் தேர்வுக்கான தேர்வுத்திட்டம்

பாடம் கால அளவு அதிகபட்ச மதிப்பெண் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்
SC, SC(A), ST, MBC/DC, BC(OBCM) & BCM ஏனையோர்
பொதுஅறிவு (பட்டப்படிப்பு தரம்) (175 கேள்விகள்)
+
திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் (பத்தாம் வகுப்பு தரம்) – (25 கேள்விகள்)
மொத்தம் வினாக்கள் – 200
3 மணிநேரம் 300 90 120
மொத்தம் 300

முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வுகளுக்கான தேர்வுத்திட்டம்

பாடம் கால அளவு அதிகபட்ச மதிப்பெண் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்
SC, SC(A), ST, MBC/DC, BC(OBCM) & BCM ஏனையோர்
தாள் – 1
கட்டாயத்தமிழ் மொழி தகுதித்தாள் (பத்தாம் வகுப்பு தரம்)
3 மணிநேரம் 100 40 40
பொது அறிவு (பட்டப்படிப்பு தரம்)

தாள் – II
தாள் – III
தாள் – IV
நேர்முகத் தேர்வு மற்றும் ஆவணங்கள்




3 மணிநேரம்
3 மணிநேரம்
3 மணிநேரம்




250
250
250
100




255




340
மொத்தம் 850

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-1 (Group 1) உள்ள பதவிகள்

  • துணை கலெக்டர்
  • காவல்துறை துணை கண்காணிப்பாளர்
  • உதவி வணிகவரி ஆணையர்
  • உதவி இயக்குனர் (பஞ்சாயத்து)
  • துணை சரகப்பதிவாளர் (கூட்டுறவுத்துறை)
  • மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்
  • மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறை அலுவலர் 

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) Group 1: பாடத்திட்டம் 2022

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வெளியிட்டுள்ள பரிசீலனை செய்யப்பட்ட பாடத்திட்டம் கீழே தரப்பட்டுள்ளது.

  1. முதல்நிலைத் தேர்வு:  

தமிழ்நாடு குரூப் 1 முதல்நிலை தேர்வு பாடத்திட்டத்தில் உள்ள தலைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன 

  • பொது அறிவியல் 
  • நடப்பு நிகழ்வுகள் 
  • இந்தியாவின் புவியியல் 
  • இந்தியாவின் வரலாறும் பண்பாடும் 
  • இந்திய ஆட்சியியல் 
  • இந்தியப் பொருளாதாரம் 
  • இந்திய தேசிய இயக்கம் 
  • தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக அரசியல் இயக்கங்கள் 
  • தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம் 
  • திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் 
  1. முதன்மை எழுத்து தேர்வு:

தமிழ்நாடு குரூப் 1 முதன்மை எழுத்து தேர்வு பாடத்திட்டத்தில் உள்ள தலைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன

கட்டாய தமிழ்மொழி தகுதித் தேர்விற்கான பாடத்திட்டம்: 

  • மொழிபெயர்த்தால் 
  • சுருக்கி வரைதல் 
  • பொருள் உணர்திறன் 
  • சுருக்கக் குறிப்பிலிருந்து விரிவாக்கம் செய்தல் 
  • திருக்குறள் தொடர்பான கட்டுரை வரைதல் 
  • கடிதம் வரைதல் 
  • தமிழ் மொழி அறிவு 

தாள் I, II மற்றும் III – பாடத்திட்டம்:

  • தற்கால இந்திய வரலாறு மற்றும் பண்பாடு 
  • இந்தியாவிலும் தமிநாட்டிலுமுள்ள சமூக பிரச்சனைகள் 
  • திறனறிவு மற்றும் அறிவுக்கூர்மைத் தேர்வுகள் 
  • இந்திய அரசியலமைப்பு மற்றும் இந்தியாவை பாதிக்கக்கூடிய வகையில் உலகம் முழுவதும் தோன்றுகின்ற அரசியல் போக்கு.
  • இந்தியாவின் வளர்ச்சியில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பங்கு மற்றும் தாக்கம் 
  • தமிழ் சமூகம் – பண்பாடு மற்றும் பாரம்பரியம் 
  • தமிழ்நாட்டின் முக்கிய சிறப்பம்சங்களுடன் இந்தியாவின் புவியியல் அமைப்பு 
  • சுற்றுச்சூழல், பல்லுயிர் பெருக்கம் மற்றும் பேரிடர் மேலாண்மை 
  • இந்திய பொருளாதாரம் – நடப்பு பொருளாதார போக்குகள் மற்றும் இந்தியாவில் உலக பொருளாதாரத்தின் தாக்கம்.

தமிழ்நாடு ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தேர்வு-I (குரூப் I) பாடத்திட்டம்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) தேர்வுகளுக்கு தயாராகுவதற்கு தேவையான கேள்விகள், மாதிரி தேர்வுகள் என அனைத்தும் EMBIBE-ல் உள்ளன.

EMBIBE செயலி அல்லது தளத்தில் உள்நுழைந்து கற்றலைத் தொடங்கி பயன்பெறுங்கள்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப்-1 படிப்புத் திட்டம் 2022

உங்களுக்கு முழு ஈடுபாடும் கடின உழைப்பும் இருந்தால், ஒரு வருடத்தில்  குரூப் 1 தேர்வுக்கு சிறப்பாக தயாராகலாம். குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான கற்றலைத் தொடங்க, நீங்கள் TNPSC பாடத்திட்டத்துடன் தொடர்புடைய தமிழ்நாடு மாநில சமச்சீர் கல்வி அறிவியல் மற்றும் சமூக அறிவியல் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான புத்தகங்களை படிக்க வேண்டும்.

பின்னர் பின்வரும் வழிமுறைகளை பின்பற்றி குரூப் 1 தேர்வில் வெற்றி பெறுங்கள்.

  • தமிழில் சிறந்த செய்தித்தாள்களை தவறாமல் தினமும் படியுங்கள்.
  • போட்டித் தேர்வுகளுக்கான இதழ்களில் ஏதேனும் ஒன்றைப் படிக்கவும் (தமிழ் அல்லது ஆங்கிலம்)
  • கடந்த ஒரு ஆண்டு நடப்பு நிகழ்வுகளை நன்கு கற்றிடுங்கள் 
  • உங்களுக்கென ஒரு படிப்புத் திட்ட அட்டவணையை உருவாக்கி, அதன் அடிப்படையில் படியுங்கள்.
  • முக்கியமான கருத்துகள், வரலாற்று நிகழ்வுகள், நடப்பு நிகழ்வுகள் மற்றும் இலக்கண குறிப்புக்கள் போன்றவற்றை சிறு குறிப்புகளாக எழுதி, அதை தினமும் ரிவிஸன் செய்யுங்கள்.
  • முந்தய ஆண்டு வினாத் தாள்களை பயிற்சி செய்யுங்கள். தேர்வில் கேட்கப்படும் கேள்விகளின் அமைப்பு பற்றி நீங்கள் புரிந்துகொள்ள இது உதவும்.
  • மாதிரி தேர்வுகள் மற்றும் உங்களுக்கு புரியும் வகையில் உள்ள, பாடத்திட்டத்தின் அடிப்படையில் இருக்கும் வீடியோக்களை கண்டு கற்றலை மேற்கொள்ளுங்கள். Embibe தளத்தில் சமச்சீர் பாடத்திட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட அறிவியல் வீடியோக்கள், மாதிரி தேர்வுகள் மற்றும் பாடக்குறிப்புகள் போன்ற சிறப்பம்சங்கள் உள்ளன. அவற்றை கற்று உங்கள் தேர்வில் வென்றிடுங்கள். Play Store -யில் Embibe செயலி உள்ளது. அதை பதிவிறக்கம் செய்து பயனடையுங்கள்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப்-1 தேர்வு: பரிந்துரைக்கப்படும் புத்தகங்கள்

அலகு பரிந்துரைக்கப்படும் புத்தகங்கள்
I பொது அறிவியல்
6 ஆம் வகுப்பு -12 வகுப்பு சமச்சீர் கல்வி புத்தகங்கள் (6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வரையிலான பழைய மற்றும் புதிய புத்தகங்களிலிருந்து அனைத்து அறிவியல் தலைப்புகளையும் படிக்கவும்.
II நடப்பு நிகழ்வுகள்
செய்தித்தாள்கள் ( ஆங்கிலம் அல்லது தமிழ்)
III இந்தியாவின் புவியியல்
6 ஆம் வகுப்பு -12 வகுப்பு சமச்சீர் கல்வி புத்தகங்கள் (புவியியல்)
IV இந்தியாவின் வரலாறும் பண்பாடும்
பழைய மற்றும் புதிய 6 ஆம் வகுப்பு – 12 ஆம் வகுப்பு சமச்சீர் கல்வி சமூக அறிவியல் மற்றும் வரலாறு புத்தகங்கள்.
V இந்திய ஆட்சியியல்
6 ஆம் வகுப்பு – 10ஆம் வகுப்பு சமூக அறிவியல் சமச்சீர் புத்தகங்கள் மற்றும் 11 ஆம் – 12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் புத்தகங்கள்.
இந்திய ஆட்சியியல் – எம். லஷ்மிகாந்த்
VI இந்திய பொருளாதாரம்
6 ஆம் வகுப்பு – 10ஆம் வகுப்பு சமூக அறிவியல் சமச்சீர் புத்தகங்கள் மற்றும் 11 ஆம் – 12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் புத்தகங்கள்.
VII இந்திய தேசிய இயக்கம்
6 ஆம் வகுப்பு – 10ஆம் வகுப்பு சமூக அறிவியல் சமச்சீர் புத்தகங்கள்.
நவீன இந்தியாவின் வரலாறு – பிபன் சந்திரா

VIII தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக அரசியல் இயக்கங்கள்
தமிழ் இலக்கிய வரலாறு :
6-12 வரையிலான புதிய மற்றும் பழைய தமிழ் புத்தகங்களிலிருந்து (இலக்கணம் தவிர்த்து) அனைத்து இலக்கிய பகுதிகளும் மற்றும் தமிழ் இலக்கியத் தகவல் களஞ்சியம் – தேவிரா அல்லது ஏதேனும் ஒரு தமிழ் இலக்கிய வரலாறு புத்தகம்.
தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக – அரசியல் இயக்கங்கள்
6 ஆம் வகுப்பு – 12 ஆம் வகுப்பு சமூக அறிவியல் சமச்சீர் புத்தகங்கள்
முற்கால தமிழ்நாட்டு வரலாறு – டாக்டர் க. வெங்கடேசன்
தற்கால தமிழ்நாட்டு வரலாறு – டாக்டர் க. வெங்கடேசன்
IX தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்
தமிழ்நாடு சமச்சீர் கல்வி புத்தகங்கள், அரசு வலைத்தளங்கள் மற்றும் செய்தித்தாள்கள் போன்றவற்றில் இந்த தலைப்புக்கான விவரங்களை பெறலாம்.
X திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் (Aptitude and Mental Ability)
6 ஆம் வகுப்பு – 12 ஆம் வகுப்பு கணிதம் சமச்சீர் புத்தகங்கள்
Quantitative Aptitude – ஆர்.எஸ்.அகர்வால்

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs)

கே 1: TNPSC தேர்வுகளுக்கு நான் எவ்வாறு தயாராவது?

ப: தமிழில் சிறந்த செய்தித்தாள்களை தவறாமல் படியுங்கள். கடந்த ஒரு வருட நடப்பு நிகழ்வுகளை நன்றாக படியுங்கள். தமிழ்நாடு தொடர்பான பொது அறிவு தலைப்புகளில்  அதிக கவனம் செலுத்துங்கள்.

கே 2: TNPSC குரூப் 1 தேர்வுக்கான பாடத்திட்டம் என்ன?

ப: TNPSC குரூப் I தேர்வுக்கான பாடத்திட்டங்களை இக்கட்டுரையில் வழங்கியுள்ளோம். அதை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

கே 3: TNPSC குரூப் 1 தேர்வு கடினமாக இருக்குமா?

ப: நீங்கள் ஒரு கற்றல் திட்டத்தை வகுத்து, கவனத்துடன் படித்தால், கடுமையான போட்டியை எளிதில் முறியடிப்பீர்கள். TNPSC தேர்வுகளில் தேர்ச்சி பெறாத பெரும்பாலான தேர்வர்கள், நேர மேலாண்மையை கருத்தில் கொள்வதில்லை. எனவே நேர மேலாண்மையை வகுப்பது மிக முக்கியமானதாகும்.

கே 4: TNPSC குரூப் 1 தேர்வுக்கான பாடத்திட்டத்தை நான் எங்கு பெறுவது?

ப: TNPSC-யின் அத்ரிகாரப்பூர்வ இணையத்தளத்தில் பாடத்திட்டத்தை பதிவிறக்கம் செய்யலாம்.
TNPSC குரூப் 1 தேர்வுக்கான பாடத்திட்டம்  பற்றிய இந்தக் கட்டுரை உங்களுக்கு உதவியது என்று நம்புகிறோம். மேலும் புதிய அறிவிப்புகளுக்கு Embibe-உடன் இணைந்திருங்கள்.

Embibe-யில் 3D கற்றல், புத்தகப் பயிற்சி, டெஸ்ட்கள் மற்றும் சந்தேகத் தீர்ப்பான்கள் மூலம் உங்கள் சிறந்ததை அடையுங்கள்