• எழுதியவர் Vignesh
  • கடைசியாக மாற்றப்பட்டது 30-08-2022

தமிழ்நாடு வாரியம் 10ஆம் வகுப்பு சமச்சீர் கல்வி பொதுத் தேர்விற்கான தகுதி வரம்பு 2023: முக்கிய விவரங்களைச் சரிபார்த்தல்

img-icon

தமிழ்நாடு வாரியம் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்விற்கான தகுதி வரம்புகள்:

10 ஆம் வகுப்பு மாநில வாரியத் தேர்வுகள் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து பள்ளி 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் தமிழ்நாடு அரசுத் தேர்வு கழக இயக்கத்தின் மூலம் ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றன. தமிழ்நாடு வாரிய 10 ஆம் வகுப்புத் தேர்வுகள் மாணவர்களுக்கு மிகவும் முக்கியமானது, ஏனெனில் பொதுத் தேர்வில் அவர்கள் பெறும் மதிப்பெண் செயல்திறன் எதிர்காலத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கக்கூடிய கல்வி நிறுவனங்களை தீர்மானிக்கிறது. ஆனால் மாணவர்கள் தேர்வில் பங்குபெறுவதற்கு, தமிழ்நாடு அரசுத் தேர்வு கழகம் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்காக சில  தகுதி வரம்புகளை நிர்ணயித்துள்ளது. அவற்றை மாணவர்கள் பூர்த்தி செய்ய வேண்டும்.

இந்த கட்டுரையில், தமிழ்நாடு வாரியம் வெளியிட்டுள்ள 10 ஆம் வகுப்பு தகுதி வரம்புகள் பற்றிய முக்கியமான தகவல்களை வழங்கியுள்ளோம். 10 ஆம் வகுப்புக்கான தமிழ்நாடு வாரியம் வழங்கிய வயது வரம்புகள் மற்றும் பிற தேவைகள் இந்தப் பக்கத்தில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளன. இந்த வரம்புகள் என்ன என்பதைப் புரிந்துகொள்ள மாணவர்கள் இவற்றை முழுமையாக படிக்க வேண்டும். தமிழ்நாடு வாரிய 10 ஆம் வகுப்புக்கான தகுதி வரம்புகள் மற்றும் பிற முக்கியமான தகவல்களைப் பெற கட்டுரையைத் தொடர்ந்து படிக்கவும்.

தமிழ்நாடு வாரிய 10 ஆம் வகுப்பு தகுதி வரம்பு: விரிவாக்கம்

முதலில் தமிழ்நாடு வாரிய 10 ஆம் வகுப்பிற்கான தேர்வின் மேலோட்டப் பார்வையை கீழே வழங்கியுள்ளோம், அதில் மாணவர்களுக்கான முக்கியமான தகவல்கள் உள்ளன:

தேர்வின் பெயர் தமிழ்நாடு உயர்நிலை சான்றிதழ் தேர்வு
தேர்வின் பொது பெயர் TN SSLC
தேர்வினை நடத்துபவர் தமிழ்நாடு அரசு தேர்வு கழக இயக்கம்
தேர்வு நடக்கும் ஆண்டு வருடத்திற்கு ஒரு முறை
தேர்வு நிலை இடைநிலை
தேர்வு நடக்கும் மொழி தமிழ், ஆங்கிலம்
விண்ணப்ப முறை ஆஃப்லைன்
தேர்வு நடக்கும் முறை ஆஃப்லைன்
தேர்வின் கால நேரம் 3 மணி நேரம்
அதிகாரப்பூர்வ இணையதளம் https://dge.tn.gov.in/
மொழி பாடங்கள் தமிழ், ஆங்கிலம்

தேர்விற்கான தகுதி வரம்பு:

தமிழ்நாடு வாரியம் ஒவ்வொரு ஆண்டும் 10 ஆம் வகுப்புத் தகுதி வரம்புகளை வெளியிடுகிறது, இது தமிழ்நாடு வாரியம் 10 ஆம் வகுப்பு வாரியத் தேர்வுகளுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கும் முன்பு கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளில் ஒன்றாகும். இந்த அறிவிப்பு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும். இதனை அனைத்து மாணவர்களும் எளிதாக அணுகி பார்க்கலாம்.

தமிழ்நாடு வாரியம் 10 ஆம் வகுப்புக்கான தகுதித் வரம்புகளானது வயது, கல்வி நிலை, வருகை பதிவு, கல்வி வாரியம், வகுப்பு, மாற்றுத்திறனாளி போன்றவற்றை உள்ளடக்கிய ஒன்றாகும். தமிழ்நாடு வாரியம் 10 ஆம் வகுப்புக்கான தகுதி வரம்புகள் கீழே வரிசைப்படுத்தப்பட்டுள்ளன:

பொது விண்ணப்பதாரர்களுக்கு

  • தமிழ்நாடு வாரியம் 10 ஆம் வகுப்புத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு வாரியம் அல்லது தமிழ்நாடு வாரியத்தினால் அங்கீகரிக்கப்பட்ட வேறு ஏதேனும் கல்வி வாரியத்தில் 9 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் தற்போது தமிழ்நாடு வாரியம் அல்லது தமிழ்நாடு வாரியத்தினால் அங்கீகரிக்கப்பட்ட வேறு ஏதேனும் கல்வி வாரியத்தில் 10 ஆம் வகுப்பில் படித்துக் கொண்டிருக்க வேண்டும் அல்லது 10 ஆம் வகுப்பில் குறைந்தபட்சம் ஒரு கல்வியாண்டு முடித்திருக்க வேண்டும்.
  • அவர்கள் தமிழ்நாடு வாரியம் நிர்ணயித்த குறைந்தபட்ச வருகைப் பதிவு தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
  • தமிழ்நாடு வாரியம் 10 ஆம் வகுப்பு தேர்வில் கலந்துகொள்வதற்கு குறிப்பிட்ட வயது வரம்புகள் எதுவும் இல்லை என்றாலும், குறைந்தபட்ச வயது 14 ஆகக் கருதப்படுகிறது. 

தனியார் மற்றும் பிற விண்ணப்பதாரர்களுக்கு

  • தமிழ்நாடு வாரியம் 10 ஆம் வகுப்பில் தோல்வியுற்ற எந்தவொரு விண்ணப்பதாரரும் அடுத்த ஆண்டு திட்டமிடப்பட்ட 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தனிப்பட்ட வேட்பாளராக மீண்டும் பங்கு பெற தகுதியுடையவர்.
  • தனியார் விண்ணப்பதாரர்கள் தாங்கள் மீண்டும் பங்கு பெற இருக்கும் ஆண்டின் பாடத்திட்டம் மற்றும் பாடப்புத்தகங்களைப் பின்பற்ற வேண்டும்.
  • குறைந்தது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 9 ஆம் வகுப்பு அல்லது அதற்கு கீழ் உள்ள வகுப்பில் தேர்ச்சி பெற்ற உடல் ஊனமுற்ற விண்ணப்பதாரர்களும் 10 ஆம் வகுப்பு தேர்வில் கலந்துகொள்ள தகுதியுடையவர்கள். அவர்கள் தங்கள் இயலாமைக் காரணமாக வழக்கமான வகுப்புகள்/பள்ளிக்குச் செல்ல முடியவில்லை என்பதற்கான சட்டப்பூர்வ ஆவணத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
  • முந்தைய பிரிவில் ( ஊனமுற்ற பிரிவு), விண்ணப்பதாரர்கள் போதுமான வழிகாட்டுதலின் கீழ் பரிந்துரைக்கப்பட்ட பாடத்திட்டத்தை தனிப்பட்ட முறையில் முடிக்க வேண்டும். அவர்கள் ஏன் வழக்கமான தமிழ்நாடு வாரியம் 10 ஆம் வகுப்புகளைத் தொடர முடியவில்லை என்பதற்கான கட்டாயக் காரணங்களையும் (தேவைப்பட்டால் தேவையான ஆவணங்களுடன்) குறிப்பிட வேண்டும்.

பொது விண்ணப்பதாரர்களுக்கு

  • பொதுவாக மாணவர்களுக்கான விண்ணப்ப செயல்முறை அந்தந்த பள்ளிகளில் மேற்கொள்ளப்படுகிறது.
  • தேர்விற்கான விண்ணப்பங்கள் வாரியத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்பு மாணவர்கள் தங்களின் தனிப்பட்ட விவரங்களைச் சரிபார்க்க தாங்கள் பள்ளி அதிகாரிகளை அணுகலாம்.

தனியார் விண்ணப்பதாரர்களுக்கு

  • தனியார் விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு வாரியம் 10 ஆம் வகுப்பு தேர்வுகளில் பங்கேற்க ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
  • விண்ணப்பப் படிவங்களை தமிழ்நாடு வாரியம் அதிகாரப்பூர்வ இணையதளமான https://dge.tn.gov.in/  இலிருந்து பெறலாம். விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய விண்ணப்பதாரர்கள் அனைத்து விவரங்களையும் உள்ளீட்டு தேவையான கட்டணத்தை செலுத்தி சமர்ப்பிக்க வேண்டும்.
  • விண்ணப்பம் பூர்த்தி செய்யப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டதும், விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து எதிர்கால குறிப்புக்காக பிரிண்ட்-அவுட் எடுத்து வைத்துக் கொள்ளலாம். 

தமிழ்நாடு வாரியம் சமச்சீர் கல்வி 10 ஆம் வகுப்பு நுழைவுச்சீட்டு 2023:
10ஆம் வகுப்பிற்கான நுழைவுச்சீட்டை (Hall Ticket) தமிழ்நாடு சமச்சீர் கல்வி வாரியம் தனது அதிகாரபூர்வமான இணையதளத்தில் வெளியிடும். 2023ஆம் ஆண்டிற்கான 10ஆம் வகுப்பு நுழைவுச்சீட்டை தமிழ்நாடு அரசு தேர்வுகள் இயக்ககம் (DGE) தேர்வுகள் நடைபெறுவதற்கு ஒரு மாதம் முன்பு வெளியிடும். 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச்/ஏப்ரல் மாதத்தில் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வாரியம் 12 ஆம் வகுப்பு தேர்வு விண்ணப்பத்தினை சமர்ப்பித்தல்: 2023-யில் தமிழ்நாடு வாரியத் தேர்வுகளில் பங்கு பெற விரும்பும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தமிழ்நாடு வாரியம் குறிப்பிட்ட தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணத்துடன், குறிப்பிட்ட நேரத்திற்குள் விண்ணப்ப செயல்முறையை முடிக்காத விண்ணப்பதாரர்கள் தாமதமாக சமர்ப்பிக்கும் போது அதற்கான பதிவுக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.

தமிழ்நாடு வாரியம் 10 ஆம் வகுப்புத் தகுதிகள் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்:

தமிழ்நாடு வாரியம் 10 ஆம் வகுப்பு தகுதி வரம்புகள் பற்றி அடிக்கடி கேட்கப்படும் சில கேள்விகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன:

கே.1: தமிழ்நாடு வாரியம் 10 ஆம் வகுப்பில் சேர்க்கை பெற முடியுமா?

பதில்: இல்லை, மாணவர்கள் தமிழ்நாடு வாரியம் 9 ஆம் வகுப்பில் மட்டுமே சேர்க்கை பெற முடியும் மற்றும் தமிழ்நாடு வாரியம் 10 ஆம் வகுப்பில் சேர 9 ஆம் வகுப்பை வெற்றிகரமாக முடித்து இருக்க வேண்டும்.

கே.2: நான் தமிழ்நாடு வாரியம் 10 ஆம் வகுப்பு பொது மற்றும் தனியார் தேர்வுகளில் தோல்வியடைந்தால் என்ன நடக்கும்?

பதில்: தனியார் தேர்வுகளில் தேர்ச்சி பெறத் தவறிய மாணவர்கள், அடுத்த ஆண்டு தமிழ்நாடு வாரியம் 10 ஆம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி பெற மற்றொரு வாய்ப்பைப் பெற தனி வேட்பாளராக விண்ணப்பிக்கலாம். தனியார் விண்ணப்பதாரர்கள் தாங்கள் மீண்டும் பங்கு பெற போகும் ஆண்டின் பாடத்திட்டம் மற்றும் பாடப்புத்தகங்களைப் பின்பற்ற வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

கே.3: தமிழ்நாடு வாரியம் 10 ஆம் வகுப்பு தேர்வுகளில் கலந்துகொள்வதற்கு வயது வரம்பு உள்ளதா?

பதில்: இல்லை, தமிழ்நாடு வாரியம் 10 ஆம் வகுப்பு தேர்வுகளில் கலந்துகொள்வதற்கான குறைந்தபட்ச வயது வரம்பு எதையும் தமிழ்நாடு வாரியம் குறிப்பிடவில்லை. ஆனால் சில பள்ளிகள் குறைந்தபட்ச வயதை 14 ஆகக் கருதுகின்றன, இருப்பினும் அது கண்டிப்பாக அமல்படுத்தப்படவில்லை.

கே.4: தமிழ்நாடு வாரியத்தால் அங்கீகரிக்கப்படாத தனியார் வாரியத்தில் 8 மற்றும் 9 ஆம் வகுப்புகளை முடித்திருந்தால் தமிழ்நாடு வாரியம் 10 ஆம் வகுப்பு தேர்வில் கலந்துகொள்ள முடியுமா?

பதில்: இல்லை, தமிழ்நாடு வாரியம் அல்லது தமிழ்நாடு வாரியத்தினால் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தில் 9 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் 10 ஆம் வகுப்பில் குறைந்தபட்சம் ஒரு கல்வியாண்டு படித்து தோல்வி அடைந்தவர்கள் மட்டுமே தேர்வில் கலந்து கொள்ள முடியும்.

கே.5: தமிழ்நாடு வாரியம் 10 ஆம் வகுப்பு தேர்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏதேனும் சிறப்புப் பிரிவு உள்ளதா?

பதில்: ஆம், குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 8 ஆம் பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு தேர்வில் கலந்துகொள்ள தகுதியுடையவர்கள், தங்கள் இயலாமைக் காரணமாக வழக்கமான வகுப்புகள்/பள்ளிகளுக்குச் செல்ல முடியவில்லை என்ற சட்டப்பூர்வ ஆவணத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

தமிழ்நாடு வாரியம் 10 ஆம் வகுப்பு தகுதி வரம்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்தக் கட்டுரை உங்களுக்கு உதவியது என்று நம்புகிறோம். தமிழ்நாடு வாரியம் 10 ஆம் வகுப்பு  தொடர்பான மேலும் தகவல்களுக்கு Embibe-உடன் இணைந்திருங்கள்.

Embibe-யில் 3D கற்றல், புத்தகப் பயிற்சி, டெஸ்ட்கள் மற்றும் சந்தேகத் தீர்ப்பான்கள் மூலம் உங்கள் சிறந்ததை அடையுங்கள்