
தமிழ்நாடு வாரியம் சமச்சீர் கல்வி வகுப்பு 12 விண்ணப்ப படிவம் 2023
August 5, 2022தமிழ்நாடு வாரியம் 10 ஆம் வகுப்புத் தேர்வு மையம்: தமிழ்நாடு அரசு தேர்வு கழக இயக்கம் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வாரிய தேர்வுகளை நடத்தும் ஒரு அமைப்பாகும். தமிழ்நாடு வாரியம் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச்-ஏப்ரல் மாதங்களில் நடத்தப்படும். எனவே தமிழ்நாடு 10 ஆம் வகுப்பு தேர்வு கால அட்டவணை 2023 ஜனவரி மாதத்தில் தமிழ்நாடு வாரியத்தால் வழங்கப்படும். தமிழ்நாடு வாரியம் ஒவ்வொரு ஆண்டும் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான தேர்வு மையப் பட்டியலை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடுகிறது மற்றும் அந்தந்த பள்ளிகளில் ஆசிரியர்கள் மூலம் மாணவர்களுக்குத் தெரிவிக்கப்படும். தமிழ்நாடு வாரியத் தேர்வுகளில் பங்கேற்க, மாணவர்கள் தங்களின் தற்போதைய பொதுத் தேர்வின் அனுமதி அட்டை 2023 உடன் தேர்வு மையத்திற்குச் செல்ல வேண்டும்.
தமிழ்நாடு வாரியம் 10 ஆம் வகுப்பின் மாதிரி தாள்கள் மற்றும் விடையை நன்கு அறிந்திருப்பது மாணவர்களுக்கு தேர்வு முறையை ஆழமாகப் புரிந்துகொள்ள உதவுகிறது. பொதுத் தேர்வுகளில் சிறப்பாகச் செயல்பட, மாணவர்கள் இந்த மாதிரி வினாத்தாள் தேர்வுகளை மேற்கொள்வது அவசியம். தமிழ்நாடு 10 ஆம் வகுப்பு மாதிரித் தாள்களைத் தீர்ப்பது என்பது தேர்வுக் கண்ணோட்டத்தில் பார்க்கும் போது மிகவும் முக்கியமானது, ஏனெனில் இது தேர்வில் கேட்கப்படும் கேள்விகளின் வகைகளைப் புரிந்துகொள்ள மாணவர்களுக்கு உதவுகிறது. பொதுத் தேர்வினை எழுத இருக்கும் 10 ஆம் வகுப்பு மாணவர்கள், பாடப்புத்தகங்களைப் படித்த பிறகு, மாதிரித் தாள்களைப் பயிற்சி செய்து பார்க்க பரிந்துரைக்கப்படுகிறார்கள். கணிதம், அறிவியல், மற்றும் சமூக அறிவியல் போன்ற பாடங்களின் மாதிரி வினாத்தாள்களைப் பயிற்சி செய்து மிகவும் நம்பிக்கையுடன் தேர்வினை எதிர்கொள்ள தயாராகுங்கள். இந்த பயிற்சியானது மாணவர்கள் பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெறுவதற்கு பெரும் உதவியாக இருக்கும். Embibe, தமிழ்நாடு வாரியம் 10 ஆம் வகுப்பு மாதிரித் தாள்களின் நேரடி இணைப்பை மாணவர்களுக்கு வழங்குகிறது. மேலும் விவரங்களுக்குச் செல்வதற்கு முன், தேர்வின் கண்ணோட்டத்தைப் பற்றி அறிவோம்:
தேர்வின் பெயர் | தமிழ்நாடு மேல்நிலை கல்வித் தேர்வு |
தேர்வின் பொது பெயர் | TN SSLC வாரியம் |
தேர்வினை நடத்துபவர் | தமிழ்நாடு அரசு தேர்வு கழக இயக்கம் |
தேர்வு நடக்கும் ஆண்டு | வருடாந்திரம் |
தேர்வு நிலை | இடைநிலை |
தேர்வு நடக்கும் மொழி | தமிழ், ஆங்கிலம் |
விண்ணப்ப முறை | ஆஃப்லைன் |
தேர்வு நடக்கும் முறை | ஆஃப்லைன் |
தேர்வின் கால நேரம் | 2.30 மணி நேரம் |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://dge.tn.gov.in/ |
2023 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு வாரியம் 10 ஆம் வகுப்பு தேர்வு தேதிகளை அறிய கீழே உள்ள அட்டவணையைப் பார்க்கவும்:
தேர்வு தேதி (குறிப்பிட்ட தேதிகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை) | பாடங்கள் | மதிப்பெண்கள் |
---|---|---|
மார்ச் | தமிழ் | 100 |
மார்ச் | ஆங்கிலம் | 100 |
மார்ச் | கணிதம் | 100 |
மார்ச் | அறிவியல் | 100 |
மார்ச் | சமூக அறிவியல் | 100 |
மார்ச் | விருப்ப மொழி பாடம் (தெலுங்கு, மலையாளம், கன்னடம், உருது, அரபிக், குஜராத்தி, சமஸ்கிருதம் மற்றும் பிரேஞ்சு) | 100 |
தமிழ்நாடு வாரியம் முதன்முதலில் 1975 ஆம் ஆண்டில் ஒரு தனி நிறுவனமாக அரசுத் தேர்வு இயக்கம் என்ற பெயரில் நிறு.வப்பட்டது. தமிழ்நாடு மாநில வாரியத் தேர்வுகள் தொடர்பான அனைத்து செயல்பாடுகளையும் கையாள்வதும், 1ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தை வடிவமைப்பதும் இந்த நிறுவனத்தின் பொறுப்பாகும். SSLC தேர்வு அந்தந்த பள்ளிகளில் நடைபெறும். பின்பு அதற்கான தேர்ச்சி சான்றிதழை மாணவர்களுக்கு தமிழ்நாடு தேர்வு இயக்கம் வழங்கும். தேர்வில் பங்கேற்கும் மாணவர்கள் அவர்களுக்கான நுழைவுச்சீட்டு இல்லாமல் தேர்வு அறைக்குள் நுழைய முடியாது. மாணவர்களுக்கான நுழைவுச்சீட்டு 2023 அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தமிழ்நாடு அரசால் நிர்வகிக்கப்படும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் (DGE) தமிழ்நாடு சமச்சீர் கல்வி 10 ஆம் வகுப்பு நுழைவுச் சீட்டுகளை வெளியிடும். மாணவர்கள் 10 ஆம் வகுப்புக்கான நுழைவுச்சீட்டை (Hall Ticket) பதிவிறக்கம் செய்ய தமிழ்நாடு உயர்நிலைக் கல்வி வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பயன்படுத்தலாம். TN வாரியம்
10 ஆம் வகுப்ப்பு நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்ய பின்வரும் வழிமுறையை பயன்படுத்தவும்.
படி 1: முதலில் தமிழக அரசால் நிர்வகிக்கப்படும் அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் (DGE) அதிகாரப்பூர்வ இணையத்தளத்தினுள் செல்லவும்.
படி 2: தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு (Hall Ticket) என்னும் விருப்பத்தை கிளிக் செய்யவும்.
படி 3: Download Hall Ticket என்பதை கிளிக் செய்யுங்கள்.
படி 4: பதிவிறக்க இணைப்பைக் கிளிக் செய்தவுடன், தமிழ்நாடு HSE நுழைவுச்சீட்டின் அதிகாரப்பூர்வ இணையத்தளம் தோன்றும். தேவையான அனைத்து தகவல்களையும் பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும்.
படி 5: உங்கள் பிறந்த தேதியுடன் “விண்ணப்ப எண்” அல்லது “நிரந்தர பதிவு எண்” ஆகியவற்றைச் சமர்ப்பிக்கவும்
படி 5: நுழைவுச்சீட்டில், தேர்வு தேதி மற்றும் மையம் தொடர்பான அனைத்து விவரங்களும் இருக்கும். இதை PDF வடிவத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.
தமிழ்நாடு வாரியம் சமச்சீர் கல்வி 10 ஆம் வகுப்பு நுழைவுச்சீட்டு: முக்கிய வழிமுறைகள்
தேர்வு மையத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எந்தவொரு பொருட்களையும் எடுத்துச் செல்வதைத் தவிர்க்கவும், இல்லையெனில் எதிர்கால தேர்வுகளிலிருந்து நிரந்தரமாக தடைசெய்யப்படலாம்.
கே1: தமிழ்நாடு வாரியம் சமச்சீர் கல்வி 10 ஆம் வகுப்பு நுழைவுச்சீட்டை எவ்வாறு பதிவிறக்கம் செய்வது?
பதில்: தமிழ்நாடு கல்வி வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலிருந்து 10 ஆம் வகுப்பு நுழைவுச்சீட்டை மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
கே2: தமிழ்நாடு வாரியம் சமச்சீர் கல்வி 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது நடக்கும்?
பதில்: 2023ஆம் ஆண்டிற்கான 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச்/ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் என்று தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்ககம் (DGE) தெரிவித்துள்ளது.
கே3: தமிழ்நாடு சமச்சீர் கல்வி வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் எது?
பதில்: தமிழ்நாடு சமச்சீர் கல்வி வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.dge.tn.gov.in/index.html என்பதாகும். தமிழ்நாடு கல்வி வாரியத்தின் அனைத்து விவரங்களும் இந்த இணையதளத்தில் காணலாம்.
கே4: HSC மற்றும் SSLC-க்கும் உள்ள வேறுபாடு என்ன?
பதில்: HSC என்பது மேல்நிலை பள்ளிச் சான்றிதழ் அதாவது 12ஆம் வகுப்பு முடித்தவுடன் கல்வி வாரியங்களால் வழங்கப்படும் சான்றிதழ். SSLC என்பது 10 ஆம் வகுப்பு முடித்த பிறகு வழங்கப்படும் உயர்நிலைக் கல்விச் சான்றிதழாகும்.
கே5: தமிழ்நாடு வாரிய சமச்சீர் கல்வி தேர்வுகளை எந்த அமைப்பு நடத்துகிறது?
பதில்: தமிழ்நாடு வாரியத் தேர்வுகளை அரசுத் தேர்வுகள் இயக்ககம் (DGE) நடத்துகிறது.
கே6: பொதுத் தேர்வு கால நேரம் என்னவாக இருக்கும்?
பதில்: தமிழ்நாடு பொதுத்தேர்வுக்கான அரசுத் தேர்வுகள் இயக்ககம் அளித்துள்ள அறிவுறுத்தலின்படி, தேர்வு கால நேரம் காலை 10.15 மணி முதல் மதியம் 1:00 மணி வரை நடைபெறும்.
கே7: தமிழ்நாடு வாரிய சமச்சீர் கல்வி தேர்வு மையங்களை எப்படி அறிவது?
பதில்: தமிழ்நாடு வாரியத் தேர்வுகளின் மையத்தினை அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் வெளியிடுகிறது.(https://www.dge.tn.gov.in/index.html)
தமிழ்நாடு வாரியம் 10 ஆம் வகுப்பு தேர்வு மையம் பற்றிய இந்தக் கட்டுரை உங்களுக்கு உதவியது என்று நம்புகிறோம். தமிழ்நாடு வாரியம் 10 ஆம் வகுப்பு தொடர்பான சமீபத்திய புதுப்பிப்புகளுக்கு Embibe-உடன் இணைந்திருங்கள்.