• எழுதியவர் Vignesh
  • கடைசியாக மாற்றப்பட்டது 30-08-2022

தமிழ்நாடு வாரிய சமச்சீர் கல்வி 10 ஆம் வகுப்பு தேர்வு கால அட்டவணை விளக்கம் – 2023:

img-icon

தமிழ்நாடு மாநில வாரியம் (அல்லது DGE TN) தமிழ்நாடு 10 ஆம் வகுப்பு தேர்வுகளை நடத்துவதற்கான அமைப்பாகும். இந்த ஆண்டு மார்ச் முதல் ஏப்ரல், 2023 வரை தேர்வுகள் நடத்தப்படும். தமிழ்நாடு அரசுத் தேர்வுத் துறை (TN DGE) 2023 ஆம் ஆண்டுக்கான முடிவுகளை மே அல்லது ஜூன், 2023-யில் ஒரு குறிப்பிட்ட தேதியில் காலை 9.30 மணியளவில் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடும். முதல் முயற்சியிலேயே தேர்வில் தேர்ச்சி பெற முடியாத மாணவர்கள் ஜூன், 2023 -யில் துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழ் (சுய சான்றொப்பம்) மற்றும் மதிப்பெண் அறிக்கை (சான்றளிக்கப்பட்ட நகல்) ஆகியவற்றுடன் அந்தந்த பள்ளிகளுக்குச் செல்ல வேண்டும்.

உயர்நிலைப் பள்ளிக்குப் பிறகு சிறந்த மேல்நிலைப் படிப்புகளைத் தேர்வு செய்வதற்கு 10 ஆம் வகுப்பு அதாவது தமிழ்நாடு மாநில வாரியத் தேர்வில் அவர்கள் பெறும் மதிப்பெண்கள் மிக முக்கியமானதாகும். இதனால் தமிழ்நாடு வாரியம் 10 ஆம் வகுப்பு தேர்வானது ஒரு மாணவரின் எதிர்காலத்திற்கு மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. Embibe, மாணவர்கள் தங்கள் தேர்வுக்கு தயாராவதில் உதவுவதற்காக தமிழ்நாடு வாரியம் 10 ஆம் வகுப்பு தேர்விற்கான பாடங்களின் பட்டியலை உருவாக்கியுள்ளது. தேர்வுப் பாடங்கள், TN SSLC வாரியம் பற்றிய தகவல்கள், பாடத்திட்டம், பாடப்புத்தகங்கள் மற்றும் பலவற்றைப் பற்றி முழுமையாக அறிய தொடர்ந்து படிக்கவும்.

தமிழ்நாடு வாரியம் 10 ஆம் வகுப்பு சுருக்கம்:

தமிழ்நாடு மாநில வாரியத்தால் நடத்தப்படும் தமிழ்நாடு 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வினைப் பற்றிய அனைத்து விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இந்த அட்டவணையில் தேர்வு, தேர்வு நடத்தும் முறை, மொழிகளின் விருப்பங்கள், முக்கிய தேதிகள் மற்றும் பலவற்றைப் பற்றிய சுருக்கத்தினைக் கொண்டுள்ளது.

வாரியத்தின் பெயர் தமிழ்நாடு மாநில வாரியம்
வகுப்பு 10ஆம் வகுப்பு
தேர்வு தேதி மார்ச் முதல் ஏப்ரல் 2023
தேர்வுக்கான நுழைவுச் சீட்டு பிப்ரவரி 2023
முடிவுகள் வெளியிடப்படும் தேதி மே 2023
அதிகாரப்பூர்வ இணையதளம் www.dge.tn.gov.in/

தமிழ்நாடு வாரியம் 10 ஆம் வகுப்பிற்கான தற்போதைய அறிவிப்புகள்:

  • தமிழ்நாடு 10 ஆம் வகுப்பு துணைத் தேர்வுகளுக்கு மாணவர்கள் அந்தந்த பள்ளிகளுக்குச் சென்று மே, 2023 முதல் விண்ணப்பிக்கலாம்.
  • தமிழ்நாடு 10 ஆம் வகுப்பு முடிவுகள் மே, 2023-யில் அறிவிக்கப்படும், மேலும் மாணவர்கள் tnresults.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முடிவுகளைப் பார்க்கலாம்.

தமிழ்நாடு வாரியம் 10 ஆம் வகுப்பிற்கான தேர்வு முறை:

தமிழ்நாடு வாரியம் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் பங்கேற்கும் மாணவர்கள் அனைவரும், தேர்வு முறையைப் பற்றி அறிந்து இருக்க வேண்டியது அவசியம்.

தேர்வு முறை விவரங்கள் – மொத்த நேரம்

10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு 3 மணி நேரம், அதாவது ஒவ்வொரு பாடத்திற்கும் 180 நிமிடங்கள் வழங்கப்படும். மாணவர்கள் தேர்வு தொடங்குவதற்கு முன்பு  வினாத்தாளைப் பார்க்க 15 நிமிடங்கள் கொடுக்கப்படும். எடுத்துக்காட்டு: தேர்வு காலை 10:15 மணிக்குத் தொடங்கினால், மாணவர்கள் காலை 10:00 மணிக்கு வினாத்தாளைப் பெறுவார்கள், காலை 10:15 மணிக்கு கேள்விகளுக்கு பதிலளிக்கத் தொடங்க வேண்டும்.

தமிழ்நாடு வாரியம் 10 ஆம் வகுப்பின் தேர்வு தேதிகள் 2023 :

கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் மாணவர்கள் தேர்வு தேதிகளை விரிவாக பார்க்கலாம்:

தேர்வு தேதி (குறிப்பிட்ட தேதிகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை) பாடங்கள் அதிகட்ப்பட்ச மதிப்பெண்கள் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்
மார்ச் தமிழ் 100 35
மார்ச் ஆங்கிலம் 100 35
மார்ச் கணிதம் 100 35
மார்ச் அறிவியல் 100 35
மார்ச் சமூக அறிவியல் 100 35
மார்ச் விருப்ப மொழி பாடம் (தெலுங்கு, மலையாளம், கன்னடம், உருது, அரபிக், குஜராத்தி, சமஸ்கிருதம் மற்றும் பிரேஞ்சு) 100 மதிப்பெண் தேர்ச்சிக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது

தமிழ்நாடு வாரியம் 10 ஆம் வகுப்பு முக்கிய தேதிகள்

தமிழ்நாடு வாரியம் 10 ஆம் வகுப்பு தேர்வு 2023 தொடர்பான முக்கியமான தேதிகளை கீழே உள்ள அட்டவணையில் பார்க்கவும்:

நிகழ்வுகள் தமிழ்நாடு வாரியம் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் தேதி
தமிழ்நாடு வாரியம் 12 ஆம் வகுப்பு தேர்வு தேதி மார்ச் முதல் ஏப்ரல் 2023
தேர்வு முடிவு தேதி மே 2023
தனியார் தேர்வு ஏப்ரல் 2023
துணைத்தேர்வு ஜூன் 2023

தமிழ்நாடு வாரியம் 10 ஆம் வகுப்புத் தேர்வில் மதிப்பெண்களை அதிகப்படுத்துவதற்கான கற்றல் திட்டம்:

தமிழ்நாடு வாரியம் 10 ஆம் வகுப்புக்கான முழுப் பாடத்திட்டத்தையும் உள்ளடக்கும் வகையில் மாணவர்கள் திறமையான கற்றல் திட்டத்தை உருவாக்க வேண்டும், இதன் மூலம் மாணவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண்களைப் பெற முடியும். இந்தக் கட்டுரையில் பகிரப்பட்ட உதவிக்குறிப்புகளைப் பின்பற்றி, மாணவர்கள் தங்கள் முயற்சிகளை அதிகரிப்பதன் மூலம், தேர்வில் சிறந்த முடிவுகளை அடையலாம்.

தமிழ்நாடு வாரியம் 10 ஆம் வகுப்பு தேர்வுக்குத் தயாராவதற்கான உதவிக் குறிப்புகள்

10 ஆம் வகுப்புத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்களைப் பெற உதவும் மிகவும் பயனுள்ள மற்றும் முக்கியமான சில உதவிக் குறிப்புகள் கீழே வரிசைப்படுத்தப்பட்டுள்ளன:

  • முழு பாடத்திட்டத்தையும் மனப்பாடம் செய்ய முயற்சிப்பது நல்ல யோசனையல்ல, ஏனெனில் இது தேர்வின் போது குழப்பமடைந்து பாடங்களை மறக்க வழிவகுக்கும். மாறாக, டாபிக்குகளை சரியாகப் புரிந்து கொண்டால், தேர்வை திறம்பட எழுத முடியும். எல்லாவற்றையும் நினைவில் வைத்துக் கொள்ளாமல், பாடங்களை ஆழமாக ஆராய்ந்து கற்றுக்கொள்ள முயற்சி செய்யுங்கள்.
  • 2023 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு 10 ஆம் வகுப்பு பாடத்திட்டம் 30% குறைக்கப்பட்டு இந்த ஆண்டு இரண்டு பருவங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பருவத்தின் பாடத்திட்டமும் மொத்தத்தில் 50% ஆகும். திருப்புதல் பாடத்திட்டத்தை மாணவர்கள் படிக்க வேண்டும்.நேரத்தை புத்திசாலித்தனமாகப் பிரித்து, வெவ்வேறு டாபிக்குகளின் முக்கியத்துவத்தினை அறிந்திருந்தால், திருப்புதலுக்கு அதிக நேரம் கிடைக்கும்.
  • குறிப்பு உரைகளைத் தவிர, அனைத்து வாரியத் தேர்வுகளுக்கும் மாணவர்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட பாடப்புத்தகங்கள் உள்ளன. இருப்பினும், ஒரே நேரத்தில் பல புத்தகங்களைக் குறிப்பிடுவது சற்று சிரமமாக இருக்கலாம். படிக்கும் போது, ​​மாணவர்கள் தேர்வுக்குரிய பாடத்திட்டத்தை மனதில் வைத்து பாடப்புத்தகங்களுக்கு அதிக நேரம் ஒதுக்க வேண்டும், ஏனெனில் தமிழ்நாடு மாநில வாரியம் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் பெரும்பாலான கேள்விகள் புத்தகங்களில் இருந்து கேட்கப்படுகின்றன.
  • கடினமான பகுதிகளை கண்டறிந்து, ஒட்டுமொத்த மதிப்பெண் சதவீதம் குறையாமல் இருக்க அவற்றை மேம்படுத்தத் தொடங்குங்கள். எனவே அவற்றைப் புறக்கணிப்பதற்குப் பதிலாக, அதிக நேரம் ஒதுக்கி கற்றலை மேம்படுத்த தொடங்குங்கள். தமிழ்நாடு வாரியம் 10 ஆம் வகுப்பு பாடத்திட்டம் மிகவும் விரிவானது மற்றும் அதிக நேரம் தேவைப்படும் ஒன்றாகும்.

தமிழ்நாடு வாரியம் 10 ஆம் வகுப்பு தேர்வு எழுத பயன்படுத்தும் உத்தி:

தேர்வுக்கு தயாராகும் போதும், தேர்வு எழுதும் போதும் மாணவர்கள் கவனிக்க வேண்டிய சில முக்கியமான வழிமுறைகள் உள்ளன. தமிழ்நாடு வாரியம் 10 ஆம் வகுப்பு தேர்வு 2023  இந்த அம்சத்தில் கீழ் உள்ள பிரிவுகள் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவை. 

  • தேர்வு தயாரிப்பின் போது மற்றும் குறிப்பாக தேர்வு நாட்களில் அமைதியாக இருங்கள்.
  • தேர்வுக்கு இன்னும் சில நாட்களே உள்ள என்ற நிலையில் புதிய தலைப்புகளைக் கற்கத் தொடங்காதீர்கள், இது உங்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும். மற்றும், வினாத்தாளுக்கு பதிலளிக்கத் தொடங்கும் முன்பு ஒவ்வொரு கேள்வியையும் கவனமாகப் படிக்கவும்.
  • பதிலளிக்கும் வரிசையை முடிவு செய்து முதலில் இருந்து இறுதி வரை சரியாக பின்பற்றவும். நீங்கள் நம்பிக்கையுடன் உள்ள கேள்விகளை முயற்சிக்கவும்.
  • சமர்ப்பிப்பதற்கு முன் முழு விடைத்தாளையும் சரிபார்க்கவும். டிஜிட்டல் கவனச்சிதறல்களைத் தவிர்க்கவும், ஏனெனில் அவை உங்கள் கவனத்தை பாதிக்கலாம். 
  • வினாத் தாள்களை சமர்ப்பிக்கும் முன்பு அந்தந்த கேள்விக்கான எண்ணை சரியாக குறிப்பிட்டு உள்ளீர்களா என்பதை மதிப்பிடுங்கள். 

தமிழ்நாடு வாரியம் 10 ஆம் வகுப்பு விரிவான ஆய்வுத் திட்டம்

10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மிகவும் கடினமான ஒன்றாக தான் இருக்கும். எனவே விரைவில் தேர்வுக்கு தயாராவதற்கு தொடங்குங்கள்.

  • தேர்வுக்கு தயாராவதற்கு மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று சரியான நேர மேலாண்மைத் திறன்களை பின்பற்றுவதாகும். அட்டவணையை உருவாக்கி, கிடைக்கும் சிறிது நேரத்தையும் படிப்பிற்கு பயன்படுத்துங்கள், ஏனெனில் இது தேர்வில் மதிப்பெண்களை அதிகரிக்க உதவும். ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 8 மணிநேரம் படிப்பிற்காக ஒதுக்குங்கள். கடினமான தலைப்புகளைக் கற்றுக்கொள்ளுவதற்கு உங்களின் காலை நேரத்தை செலவிடுங்கள். சிறந்த தேர்வு முடிவுகளுக்கு ஒவ்வொரு பாடத்திற்கும் சமமான நேரத்தை ஒதுக்க பரிந்துரைக்கப்படுகிறது.
  • தமிழ்நாடு வாரியம் 10 ஆம் வகுப்பு தேர்வுகளுக்கு தயாராகும் போது முந்தைய ஆண்டு வினாத்தாள்களை முயற்சிப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது கடின நிலை மற்றும் டாபிக்குகள் வாரியாக கேள்விகள் பற்றிய உங்கள் கற்றலை மேம்படுத்துகிறது மற்றும் உங்கள் நேர மேலாண்மை திறன்களையும் மேம்படுத்துகிறது. பொதுத் தேர்வுக்கு முன்பு குறைந்தது 10 வருட முந்தைய ஆண்டு வினாத்தாள்களைத் தீர்ப்பது சிறந்தது
  • இறுதித் தேர்வில், தெளிவாக எழுதவும், விடைத்தாள் முழுவதும் நல்ல கையெழுத்தை பின்பற்றுங்கள். தெளிவான மற்றும் சுருக்கமான பதில்கள் அதிக மதிப்பெண்களைப் பெற்றுத் தர உதவும்.
  • தேர்வு நேரங்கள் மிகவும் அழுத்தமானவை என்பதைக் குறிப்பிடத் தேவையில்லை. எனவே, உங்கள் ஆரோக்கியத்தை சரியாக கவனித்துக்கொள்வது மிக முக்கியம். ஒரு சத்தான உணவு மற்றும் போதுமான ஓய்வு தேர்வில் சற்று உற்சாகத்துடன் பங்கு பெற உதவுகிறது.

முக்கியத் தேதிகள் 

10 ஆம் வகுப்புக்கான தமிழ்நாடு விண்ணப்ப செயல்முறை 2023

மாணவர்கள் தமிழ்நாடு 2023 தேர்வுக்கு ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு வாரியம் 10 ஆம் வகுப்பு விண்ணப்ப செயல்முறைக்கான வழிமுறைகள் இங்கே:

  • பொதுவாக மாணவர்கள் தங்கள் தனிப்பட்ட பள்ளிகளில் ஆஃப்லைன் வடிவத்தில் விண்ணப்பப் படிவத்தை நிரப்பலாம்.
  • 2023-யில் தமிழ்நாடு வாரியம் சமச்சீர் கல்வி தேர்வுகளில் பங்கு பெற விரும்பும் தனியார் மாணவர்கள் தங்களுக்கு அருகிலுள்ள அரசு தேர்வு மையத்தில் ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை நிரப்ப வேண்டும்.
  • தேர்வு மையத்தில் உள்ள வாரிய அதிகாரிகளிடமிருந்தும் ஆவணங்களைப் பெற்று அதனை ஆஃப்லைனில் நிரப்பலாம்.
  • பொதுவான மற்றும் தனியார் மாணவர்கள் என அனைவரும் விண்ணப்ப கட்டணத்தை பணமாக மட்டுமே செலுத்தப்பட வேண்டும். வேறு எந்த கட்டண முறையிலும் செலுத்த முடியாது. 

தமிழ்நாடு வாரியம் 10 ஆம் வகுப்பு தேர்வு கால அட்டவணை மற்றும் தேர்வுக்கு தயாராவதற்கான சில குறிப்புகள் பற்றிய ஆழமான புரிதல் இருந்தபோதிலும், மாணவர்கள் மனதில் சில கேள்விகள் அடிக்கடி இருக்கும். 

தமிழ்நாடு வாரியம் 10 ஆம் வகுப்பு தேர்வு கால அட்டவணை மற்றும் தேர்வுக்கு தயாராவதற்கான சில குறிப்புகள் பற்றி அடிக்கடி கேட்கப்படும் சில கேள்விகள் மற்றும் அவற்றின் பதில்களின் பட்டியல் இங்கே.

கே.1: தமிழ்நாடு வாரியம் 10 ஆம் வகுப்பு முடிவுகள் 2023 எப்போது அறிவிக்கப்படும்?

பதில்: தமிழ்நாடு வாரியத்தின் 10 ஆம் வகுப்பு முடிவுகள் மே மாதம் (தேதிகள் இன்னும் குறிப்பிட படவில்லை), 2023-யில் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும். மாணவர்கள் தங்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீட்டு தேர்வு முடிவுகளை சரிபார்க்கலாம்.

கே.2: சமச்சீர் கல்வி என்பதும், தமிழ்நாடு 10 ஆம் வகுப்பு பாடத்திட்டமும் ஒன்றா?

பதில்: சமச்சீர் கல்வி என்பது தமிழ்நாடு வாரியம் 10 ஆம் வகுப்பு பாடத்திட்டத்திற்கான மற்றொரு சொல்லாகும். தமிழ்நாட்டின் பள்ளிகளில் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்ட ஒரே மாதிரியான கல்வி முறையும், பாடத்திட்டமும் பின்பற்றப்படுகிறது.

கே.3: தமிழ்நாடு வாரியம் 10 ஆம் வகுப்பு தேர்வுகள் எப்போது நடைபெறும்?

பதில்: தமிழ்நாடு வாரியம் 10 ஆம் வகுப்பு தேர்வுகள் மார்ச் முதல் ஏப்ரல் 2023 வரை நடைபெறும்.

கே.4: தமிழ்நாடு வாரியம் 10 ஆம் வகுப்புத் தேர்வுகளை நடத்துவதற்கு யார் பொறுப்பு?

பதில்: தமிழ்நாடு அரசுத் தேர்வு இயக்கம் (DGE) ஒவ்வொரு ஆண்டும் தேர்வுகளை நடத்துவதற்கான பொறுப்பாகும்.

கே.5: தமிழ்நாடு வாரியம் 10 ஆம் வகுப்பு தேர்வுகளுக்கான தேர்ச்சி மதிப்பெண்கள் என்ன?

பதில்: மாணவர்கள் ஒவ்வொரு பாடத்திலும் தேர்ச்சி பெற குறைந்தபட்சம் 100க்கு 35 மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். சரியான படிப்புத் திட்டம் மற்றும் வழிகாட்டுதல் இருந்தால், தேர்வில் அதிக மதிப்பெண்களைப் பெறுவது எளிது.

கே.6: 2023 ஆம் ஆண்டு 10 ஆம் வகுப்பு துணைத் தேர்வுகளுக்கான விண்ணப்பம் எப்போது தொடங்கும்?

பதில்: தமிழ்நாடு வாரியம் 10 ஆம் வகுப்பு துணைத் தேர்வுகளுக்கான விண்ணப்ப செயல்முறை 2023 ஆம் ஆண்டு மே மாதம் தொடங்கும். 

தமிழ்நாடு வாரியம் சமச்சீர் கல்வியின் 10 ஆம் வகுப்பு தேர்வு கால அட்டவணை பற்றிய விவரங்கள் அனைத்தும் தெரிந்து கொள்ள இந்தக் கட்டுரை உங்களுக்கு உதவியது என்று நம்புகிறோம். தமிழ்நாடு வாரியம் வகுப்பு 10 ஆம் வகுப்பு சமச்சீர் கல்வி தொடர்பான மேலும் தகவல்களுக்கு  Embibe-உடன் இணைந்திருங்கள்.

Embibe-யில் 3D கற்றல், புத்தகப் பயிற்சி, டெஸ்ட்கள் மற்றும் சந்தேகத் தீர்ப்பான்கள் மூலம் உங்கள் சிறந்ததை அடையுங்கள்