
தமிழ்நாடு வாரியம் சமச்சீர் கல்வி வகுப்பு 12 விண்ணப்ப படிவம் 2023
August 5, 2022தமிழ்நாடு வாரியம் சமச்சீர் கல்வி 10ஆம் வகுப்பு தேர்வுத்திட்டம் 2023: தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்ககம் (DGE) 10 ஆம் வகுப்பு சமச்சீர் பாடத்திட்டத்தையும், அனைத்து கல்வி அமர்வுகளுக்கான தேர்வுத்திட்டத்தையும் அறிவித்துள்ளது. தேர்வுத்திட்டம், பாடத்தின் பெயர், பாடத் தொகுப்பு எண் மற்றும் ஒவ்வொரு தேர்வின் கால அளவு ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.
தமிழ்நாடு கல்வி வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தமிழ்நாடு 10 ஆம் வகுப்பு சமச்சீர் கல்வி பாடத்திட்டம் மற்றும் பாட வாரியான தேர்வுத்திட்டம் வெளியிடப்படும்.
இந்த கட்டுரையில், தமிழ்நாடு சமச்சீர் கல்வி 10 ஆம் வகுப்பின் முக்கியமான பாடங்களுக்கான தேர்வுத்திட்டம் மற்றும் விவரங்களை வழங்கியுள்ளோம்.
தமிழ்நாடு கல்வி வாரியத்தால் நடத்தப்படும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தேவையான அனைத்து விவரங்களும் கீழே உள்ள அட்டவணையில் காட்டப்பட்டுள்ளன.
இந்த அட்டவணை தேர்வின் மேலோட்டத்தை வழங்குகிறது, தேர்வு நடக்கும் காலம், பல்வேறு மொழி விருப்பங்கள் மற்றும் தமிழ்நாடு மாநில ஆணையத்தின் முக்கிய தேதிகள் போன்றவற்றை காட்டுகிறது.
விவரங்கள் | விவரக்குறிப்புகள் |
---|---|
வாரியம் | தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்ககம் (DGE) |
தேர்வு | 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு |
தேர்வு நிலை | மாநிலத் தேர்வு |
தேர்வு நடத்தப்படும் ஊடகம் | ஆப்லைன் |
வருடம் | 2023-2024 |
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 2023 | மார்ச் (தற்காலிகமானது) |
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 2023 | ஜூன் (தற்காலிகமானது) |
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 2023 (மறுகூட்டலுக்குப் பிறகு) | ஜூன் (தற்காலிகமானது) |
10 ஆம் வகுப்பு துணைத்தேர்வு 2023 | ஜூலை (தற்காலிகமானது) |
10 ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் 2023 | ஆகஸ்ட் (தற்காலிகமானது) |
அதிகாரப்பூர்வ இணையதளம் | dge.tn.gov.in tnresults.nic.in |
தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் ஊடகம் | ஆன்லைன் |
மார்ச்/ஏப்ரலில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மற்றும் ஜூன்/ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத்தேர்வு என அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் கல்வியாண்டிற்கு இரண்டு முறை SSLC பொதுத்தேர்வுகள் நடத்தப்படுகின்றது.
மார்ச்/ஏப்ரல் பொதுத்தேர்வு: கல்வியாண்டு முடிந்த பிறகு நடைபெறும் முக்கிய அமர்வு இதுவாகும். இத்தேர்வுகள் மாணவர்களிடையே கற்றல், புரிதல் மற்றும் கருத்துக் கட்டமைப்பை சோதிக்கும் வகையில் உள்ளது. அரசு தேர்வுகள் இயக்குநரகத்தால் அமைக்கப்பட்டுள்ள அனைத்து கல்வி மாவட்டங்களிலும் உள்ள சேவை மையங்களில் ஆன்லைன் முறையில் தாங்களாகவே பதிவு செய்ய தனியார் தேர்வர்களுக்கு வழிகாட்டுகிறது. பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு அவர்களின் பள்ளி நிர்வாகமே பதிவு செய்யும் செயல்முறையை மேற்கொள்கிறது. தேர்வர்களின் விவரங்கள் மற்றும் புகைப்படங்கள் அந்தந்த சேவை மையங்களில் உள்ள அதிகாரிகளால் கணினியில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. நிறுவனங்களின் தலைவர் சம்பந்தப்பட்ட மாணவர் சார்பாக பதிவு செய்வார். அவர்களின் பரிந்துரை பட்டியல் தயாரிக்கப்பட்டு அவர்களால் DGE இணையதளத்தில் ஆன்லைனில் பதிவேற்றப்படும்.
ஜூன்/ஜூலை துணைத் தேர்வு: இந்தத் தேர்வுகள் வெவ்வேறு அமர்வுகளில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்த மாணவர்களுக்கானது. ஒரு வருடத்தை வீணடிப்பதைத் தடுக்க இது அவர்களுக்கு உதவும். அறிவியல் செய்முறை பயிற்சியை முடித்த பிறகு, அனைத்து நேரடித் தேர்வர்களும் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
சமச்சீர் கல்வி 10 ஆம் வகுப்பு தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் சமீபத்திய தேர்வு முறை பற்றி அறிந்திருக்க வேண்டும். தேர்வின் முறைகளில் ஏதேனும் புதிய மாற்றங்கள் இருப்பின் அதனை பின்பற்றி தயாராகி சிறந்த மதிப்பெண்களைப் பெற அவர்களுக்கு உதவும்.
அனைத்து மாணவர்களும் தேர்வில் தேர்ச்சி பெற ஒவ்வொரு பாடத்திலும் குறைந்தபட்சம் 35 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெறுவதற்கு இது பொருந்தும் இருப்பினும், இறுதிக் கணக்கீட்டின் போது விருப்பப் பாடத்தில் பெற்ற மதிப்பெண்கள் கருத்தில் கொள்ளப்படுவதில்லை.
பகுதி | பாடங்கள் | அதிகட்ப்பட்ச மதிப்பெண்கள் | குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் |
---|---|---|---|
பகுதி I | தமிழ் | 100 | 35 |
பகுதி II | ஆங்கிலம் | 100 | 35 |
பகுதி III | கணிதம் | 100 | 35 |
அறிவியல் | 100 | 35 | |
சமூக அறிவியல் | 100 | 35 | |
பகுதி IV | விருப்ப மொழி பாடம் ( தெலுங்கு, மலையாளம், கன்னடம், உருது, அரபிக், குஜராத்தி, சமஸ்கிருதம் மற்றும் பிரேஞ்சு) | 100 | மதிப்பெண் தேர்ச்சிக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது |
தேர்ச்சி மதிப்பெண்கள் : ஒரு சமச்சீர் பாடத்தில் தேர்ச்சி பெற, ஒரு மாணவர் ஒவ்வொரு பாடத்திலும் 100 க்கு 35 மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். எழுத்து மற்றும் செய்முறை தேர்வைக் கொண்ட அறிவியல் போன்ற பாடங்களை எடுக்கும் மாணவர்களுக்கு, குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்கள் எழுத்து தேர்வில் 75 க்கு 20 மற்றும் செய்முறையில் 25 க்கு 15 மதிப்பெண்கள் ஆகும். இது பகுதி முறை தேர்ச்சிக்கு பொருந்தும். அறிவியல் செய்முறை தேர்வு அல்லது கருத்தியலில் தேர்ச்சி பெறும் மதிப்பெண் அடுத்த பருவத் தேர்வுகளுக்கும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
விருப்ப மொழிக்கான மதிப்பெண்கள் : TN SSLC தேர்வில் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க எந்த ஒரு விருப்ப பாட மதிப்பெண்களும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது.
கிரேடு | மொழிப்பாடம் அல்லாத பாடங்களின் மதிப்பெண்கள் | மொழிப்பாடம் மதிப்பெண்கள் | கிரேடு புள்ளி |
---|---|---|---|
A1 | 91-100 | 90-100 | 10 |
A2 | 81-90 | 79-89 | 9 |
B1 | 71-80 | 68-78 | 8 |
B2 | 61-70 | 57-67 | 7 |
C1 | 51-60 | 46-56 | 6 |
C2 | 41-50 | 35-45 | 5 |
D | 35-40 | 20-34 | 4 |
E | 0-34 | 00-19 | – |
தேதி | பாடம் |
---|---|
மார்ச்/ஏப்ரல் | தமிழ் |
மார்ச்/ஏப்ரல் | விருப்ப மொழிப் பாடம் |
மார்ச்/ஏப்ரல் | ஆங்கிலம் |
மார்ச்/ஏப்ரல் | தொழிற் கல்வி பாடங்கள் |
மார்ச்/ஏப்ரல் | கணிதம் |
மார்ச்/ஏப்ரல் | அறிவியல் |
மார்ச்/ஏப்ரல் | சமூக அறிவியல் |
குறிப்பு: அனைத்து தேதிகளும் தற்காலிகமானதாகும்.
பள்ளித் தேர்வர்கள்:
தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட உயர்நிலை பள்ளி அல்லது மேல்நிலை பள்ளிகளில் பயிலும் பத்தாம் வகுப்பு தேர்வர்கள் ஒவ்வொரு வருடமும் மார்ச்/ஏப்ரல் அரசுத் தேர்வுத் துறையால் நடத்தப்படும் பொதுத் தேர்வினை எழுத தகுதியானவர்களாக கருதப்படுவர்.
நேரடி தனித்தேர்வர்கள்:
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வினை எழுத தகுதியுடைய தனித்தேர்வர்களின் விவரம் பின் வருமாறு:
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் பள்ளி மற்றும் தனித்தேர்வர்கள் SSLC பொதுத் தேர்வு நடைபெறும் மாதத்தின் முதல் நாளில் 14 வயதினை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
பள்ளித்தேர்வர்களுக்கான கட்டணம்:
தேர்வுக் கட்டணம் | ரூ. 100 |
மதிப்பெண் சான்றிதழ் கட்டணம் | ரூ. 10 |
சேவைக் கட்டணம் | ரூ. 05 |
மொத்தம் | ரூ. 115 |
தனித்தேர்வர்களுக்கான கட்டணம்:
தேர்வுக் கட்டணம் | ரூ. 100 |
மதிப்பெண்ச் சான்றிதழ் கட்டணம் | ரூ. 10 |
பதிவுக் கட்டணம் | ரூ. 10 |
சேவைக் கட்டணம் | ரூ. 05 |
மொத்தம் | ரூ. 125 |
பள்ளித் தேர்வர்கள்:
மாணவர்கள் பயிலும் கல்வி நிறுவனங்களின் தலைமையாசிரியர்கள் மூலம் மாணவர்களிடமிருந்து தேர்வுக்கட்டணம் பெறப்பட்டு அரசுக் கணக்கில் செலுத்தப்படும்.
நேரடி தனித்தேர்வர்கள்:
அனைத்து நேரடி தனித்தேர்வர்களும் தேர்வுக் கட்டணத்தை அரசுத் தேர்வுகள் சேவை மையத்தில் இணையவழி பதிவின்போது பணமாக செலுத்திட வேண்டும்.
கே.1: 2023 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு கல்வி வாரிய சமச்சீர் கல்வி 10 ஆம் வகுப்பு தேர்வுத்திட்டம் என்ன?
ப: தமிழ்நாடு சமச்சீர் கல்வி வகுப்பு 10 தேர்வுகளின் முக்கியமான விவரங்களுடன், இந்த கட்டுரையிலிருந்து தமிழ்நாடு மாநில சமச்சீர் கல்வி தேர்வுத்திட்டத்தை மாணவர்கள் பார்க்கலாம்.
கே.2: தமிழ்நாடு வகுப்பு 10 தேர்வுத்திட்டத்தை நான் எங்கு பதிவிறக்கம் செய்வது?
ப: மாணவர்கள் இந்தப் பக்கத்திலிருந்து அல்லது தமிழ்நாடு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலிருந்து தமிழ்நாடு வகுப்பு 10 சமச்சீர் தேர்வுத்திட்டத்தைப் பதிவிறக்கம் செய்யலாம்.
கே.3: தமிழ்நாடு வகுப்பு 10 சமச்சீர் கல்வி தேர்வில் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் என்ன?
ப: தமிழ்நாடு SSLC பொதுத்தேர்வில் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் 35% ஆகும்.
கே.4: தமிழ்நாடு மாநில வாரியம் 10 ஆம் வகுப்பு தேர்வுக்கான பயிற்று மொழிகள் யாவை?
ப: அனைத்து தமிழ்நாடு வகுப்பு 10 பாடங்களுக்கான பயிற்று மொழி ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகும். மொழிப்பாடங்களைத் தவிர.
கே.5: தமிழ்நாடு வாரியம் சமச்சீர் கல்வி 10 ஆம் வகுப்பில் உள்ள அத்தியாயங்கள் எளிதானதா?
ப: தமிழ்நாடு மாநில வாரியத்தின் 10 ஆம் வகுப்பு பாடத்திட்டம், மாணவர்கள் தலைப்புகளைப் பற்றிய கருத்தியல் புரிதலைப் பெற்று, அனைத்து தலைப்புகளையும் நன்கு புரிந்து, இறுதித் தேர்வுக்கு முன் பயிற்சித் தாள்களைத் தீர்த்தால் எளிதாகிறது.
கே.6: தமிழ்நாடு வாரியத் சமச்சீர் கல்வி தேர்வுகளை எந்த அமைப்பு நடத்துகிறது?
ப: தமிழ்நாடு வாரியத் தேர்வுகளை அரசுத் தேர்வுகள் இயக்ககம்(DGE) நடத்துகிறது.
தமிழ்நாடு வாரியம் 10 ஆம் வகுப்பு தேர்வுத்திட்டம் பற்றிய விவரங்களைத் தெரிந்து கொள்ள இந்தக் கட்டுரை உங்களுக்கு உதவியது என்று நம்புகிறோம். தமிழ்நாடு வாரியம் வகுப்பு 10 தொடர்பான மேலும் தகவல்களுக்கு Embibe-உடன் இணைந்திருங்கள்.