• எழுதியவர் Vishanth V
  • கடைசியாக மாற்றப்பட்டது 25-08-2022

தமிழ்நாடு சமச்சீர் கல்வி வகுப்பு 10: தேர்வு முடிவு பகுப்பாய்வு 2023

img-icon

சமச்சீர் கல்வி வகுப்பு 10 தேர்வு முடிவு பகுப்பாய்வு (2023): தமிழ்நாடு மாநில வாரியப் பள்ளித் தேர்வுகள் உயர்நிலை & மேல்நிலைத் தேர்வுகள் வாரியம் என்பது பெரும்பாலும் தமிழ்நாடு மாநில பள்ளி தேர்வு வாரியம் என்று அழைக்கப்படுகிறது. இந்த வாரியம் தமிழ்நாடு சமச்சீர் கல்வி வகுப்பு 10 பொதுத்தேர்வுகளை நடத்தும் பெரும் பொறுப்பைக் கொண்டுள்ளது. இந்த வாரியம் வழங்கும் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், உயர்கல்வி மற்றும் தொழில் வாய்ப்புகளைத் தொடர முக்கியமான மற்றும் மதிப்புமிக்க ஆவணமாகக் கருதப்படுகிறது.

2023ஆம் ஆண்டிற்கான வகுப்பு 10 பொதுத்தேர்வுகள் மார்ச்/ஏப்ரல் மாதத்தில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட பிறகு பகுப்பாய்வும் வெளியிடப்படும். தற்போது 2022 ஆம் ஆண்டிற்கான பகுப்பாய்வை காண்போம்.

தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்ககம் (TNDGE) 10 ஆம் வகுப்பு ரிவிஷன் தேர்வு I மற்றும் II-ஐ பிப்ரவரி 9, 2022 முதல் பிப்ரவரி 16, 2022 வரை மற்றும் மார்ச் 28, 2022 முதல் ஏப்ரல் 5, 2022 வரை நடத்தியது.

கடந்த 2021 ஆம் ஆண்டு, 10 ஆம் வகுப்புக்கான எந்தத் தேர்வையும் தமிழ்நாடு வாரியம் நடத்தவில்லை. 2022 ஆம் ஆண்டு 10 ஆம் வகுப்பு வாரியத் தேர்வுகள் மே 5, 2022 முதல் மே 28, 2022 வரை நடத்தப்பட்டன. முடிவுகள் ஜூன். 20, 2022 அன்று அறிவிக்கப்பட்டது. மாணவர்கள் தமிழ்நாடு சமச்சீர் கல்வி 10 ஆம் வகுப்பு முடிவுகளின் பகுப்பாய்வு மற்றும் அதன் பதிவிறக்கம் மற்றும் பலவற்றைப் பற்றி மேலும் அறிய இந்த கட்டுரையை தொடர்ந்து படிக்கவும்.

தமிழ்நாடு சமச்சீர் கல்வி வகுப்பு 10 தேர்வு முடிவு பகுப்பாய்வு (2022): ஓர் கண்ணோட்டம் 

தமிழ்நாடு சமச்சீர் கல்வி வகுப்பு 10 தேர்வு முடிவுகளின் பகுப்பாய்வு:

தேர்வெழுதிய மொத்த மாணவர்களின் எண்ணிக்கை: 9,12,620

மாணவிகளின் எண்ணிக்கை:  4,52,499 

மாணவர்களின் எண்ணிக்கை: 4,60,120

தேர்ச்சி விவரங்கள்:

  • தேர்ச்சிப் பெற்றவர்கள்: 8,21,994 (90.07 %)
  • தேர்ச்சிப் பெற்ற மாணவிகளின் எண்ணிக்கை : 4,27,073 (94.38 %)
  • தேர்ச்சிப் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை : 3,94,920 (85.83 %) 

கீழே உள்ள அட்டவணை 10 ஆம் வகுப்பு முடிவுகளின் அனைத்து விவரங்களையும்  வழங்குகிறது.

S.NO DESCRIPTION 2018 2019 2020 2021 2022
1 No. of Candidates appeared 9,50,397 9,37,859
9,39,829 9,60,216 9,12,620
2 Composition of School Candidates
a) Boys 4,74,340 4,69,289 4,71,759 4,91,332 4,60,120
b) Girls 4,76,057 4,68,570 4,68,070 4,68,883 4,52,499
c) Trans Gender 1
3 Overall Percentage of Pass Among School Candidates 94.5% (8,97,945) 95.2% (8,92,521) (100 %) 9,39,829 (100 %) 9,60,216 90.1% (821994)
4 Percentage of Pass among School Candidates
a) Boys 92.5% (4,38,993) 93.3% (4,37,956)
(100 %) 4,71,759 (100 %) 4,91,332 85.8% (3,94,920)
b) Girls 96.4% (4,58,952) 97.0% (4,54,565) (100 %) 4,68,070 (100 %) 4,68,883 94.4% (4,27,073)
c) Trans Gender 1

கடந்த 4 ஆண்டுகளின் செயல்திறன்: 2018 – 2022

கடந்த நான்கு ஆண்டுகளை விட 10 ஆம் வகுப்பு மாணவர்களின் சிறந்த தேர்ச்சி விகிதத்தை தமிழ்நாடு கண்டுள்ளது. தேர்ச்சி சதவீதம் 90% க்கு மேல் உள்ளது, இது பாராட்டத்தக்கதாகும்.

தேர்வு முடிவு பகுப்பாய்வு: பள்ளிகளின் வகைப்பாடு வாரியான தேர்ச்சி விகிதம்

1 அரசுப் பள்ளிகள் 85.25 %
2 அரசு உதவிப் பெறும் பள்ளிகள் 89.01 %
3 தனியார் சுயநிதிப் பள்ளிகள் 98.31 %
4 இருபாலர் பள்ளிகளில் பயின்றோர் 90.37 %
5 பெண்கள் பள்ளிகள் 93.80 %
6 ஆண்கள் பள்ளிகள் 79.33 %

தேர்வு முடிவு பகுப்பாய்வு: பாட வாரியான தேர்ச்சி விகிதம்

1 தமிழ் 1
2 ஆங்கிலம் 45
3 கணிதம் 2186
4 அறிவியல் 3841
5 சமூக அறிவியல் 1009

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs):

கே 1: TN 10 ஆம் வகுப்புத் தேர்வு முடிவு பகுப்பாய்வு 2023 எப்போது வெளியிடப்படும்?

ப: தேர்வின் முடிவுகள் வெளியிடப்பட்டதும் பகுப்பாய்வு வெளியிடப்படும்.

கே 2: TN 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் எத்தனை மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்?

ப: அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, 2022 ஆம் ஆண்டு TN 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 90.07 % மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கே 3: TN வகுப்பு 12 அறிவியல் பாடத்தில் தேர்ச்சி சதவீதம் என்ன?

ப: மாணவர்கள் அறிவியல் பாடப்பிரிவில் சிறப்பாக செயல்பட்டு 93.67 % சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கே 4: TN வகுப்பு 10 கணிதத்தில் பாடத்தில் தேர்ச்சி சதவீதம் என்ன?

ப: வணிகவியல் மாணவர்கள் 90.89 % தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கே 5: TN வகுப்பு 10 சமூக அறிவியல் பாடத்தில் தேர்ச்சி சதவீதம் என்ன?

ப: கலை பாடப்பிரிவு மாணவர்கள் 91.86 % தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Embibe-யில் 3D கற்றல், புத்தகப் பயிற்சி, டெஸ்ட்கள் மற்றும் சந்தேகத் தீர்ப்பான்கள் மூலம் உங்கள் சிறந்ததை அடையுங்கள்