• எழுதியவர் Vignesh
  • கடைசியாக மாற்றப்பட்டது 30-08-2022

தமிழ்நாடு வாரியம் சமச்சீர் கல்வி வகுப்பு 10: முக்கியமான தலைப்புகள் (2023)

img-icon

தமிழ்நாடு வாரியம் சமச்சீர் கல்வி வகுப்பு 10 –  முக்கியமான தலைப்புகள் (2023): தமிழ்நாடு வாரியம் வகுப்பு 10 சமச்சீர் பாடத்திட்டம் மற்றும் தலைப்புகளை தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்ககம் (DGE) வெளியிடும். இந்த பாடத்திட்டங்கள், முக்கியமான தலைப்புகள் மற்றும் மதிப்பெண் பங்கீட்டு முறை போன்ற கருத்துகளை உள்ளடக்கியுள்ளது. இந்த கட்டுரையில் தரப்பட்டுள்ள பாடத்திட்டத்தில் உள்ள முக்கியமான தலைப்புகளை மாணவர்கள் காணலாம். இந்த தலைப்புகளை நன்றாக படித்தால் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெறுவதென்பது உறுதியானதொன்றாகும்.

ஒவ்வொரு பாடத்தில் உள்ள முக்கியமான தலைப்புகளை படிப்பதன் மூலம், எல்லா  பாடத்திலும் அதிகபட்ச மதிப்பெண்களைப் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தமிழ்நாடு 10 ஆம் வகுப்பு சமச்சீர் தலைப்புகளை நன்கு ஆராய்ந்து, அவற்றை எப்போது படிக்க வேண்டும் என்பதைத் திட்டமிட மாணவர்கள் தாங்களாகவே ஒரு கற்றல் அட்டவணையைத் தயாரிக்கலாம். இந்த முறையை பின்பற்றுவதன் மூலம் 10ஆம் வகுப்பு தேர்வுகளை சிறந்த முறையில் அணுகலாம். முக்கியமான சமச்சீர் தலைப்புகளை பற்றி மேலும் அறிய இந்த கட்டுரையை படிக்கவும்.

தமிழ்நாடு வாரியம் சமச்சீர் கல்வி வகுப்பு 10: முக்கியமான தலைப்புகள்: மேலோட்டம் 

தமிழ்நாடு மாநில சமச்சீர் கல்வி வாரியத்தால் நடத்தப்படும் TN  வாரியம் 10 ஆம் வகுப்பு தேர்வு தொடர்பான அனைத்து விவரங்களும் அட்டவணையாக கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

தேர்வு தமிழ்நாடு மேல்நிலை பொது தேர்வு(HSC)
வகுப்பு 10ஆம் வகுப்பு
நுழைவுச்சீட்டு தேதி பிப்ரவரி/மார்ச்
வாரியத்தின் பெயர் தமிழ்நாடு மாநில சமச்சீர் வாரியப் பள்ளித் தேர்வுகள் (உயர்நிலை) & மேல்நிலைத் தேர்வுகள் வாரியம்
தேர்வுத் தேதி மார்ச்/ஏப்ரல்
கால அளவு 3 hrs
அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.dge.tn.gov.in/ta/index.html
தேர்வு முடிவுகள் அறிவிக்கும் தேதி மே மாதம், 2023

குறிப்பு: அனைத்து தேதிகளும் தற்காலிகமானது ஆகும்.

பாட வாரியான தமிழ்நாடு வாரியம் சமச்சீர் கல்வி முக்கிய தலைப்புகள் (2023):

தமிழ்நாடு சமச்சீர் கல்வி 10ஆம் வகுப்புப்பிற்கான முக்கியத் தலைப்புகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன. மாணவர்கள் இந்த தலைப்புகள் ஒவ்வொன்றையும் நன்கு ஆராய்ந்து, தேர்வு காலத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

தமிழ்நாடு வாரியம் சமச்சீர் கல்வி 10 ஆம் வகுப்பு – தமிழ் பாடத்திட்டம்:

வ.எண் பொருண்மை/இயல் பாடத்தலைப்புகள்
1. மொழி



அமுதஊற்று
அன்னை மொழியே*
தமிழ்ச்சொல் வளம்
இரட்டுற மொழிதல்
உரைநடையின் அணிநலன்கள்
எழுத்து, சொல்
2. இயற்கை, சுற்றுச்சூழல்




உயிரின் ஓசை
கேட்கிறதா ஏன்குரல்!
காற்றே வா!
முல்லைப்பாட்டு*
புயலிலே ஒரு தோணி
தொகைநிலைத் தொடர்கள்
3. பண்பாடு



கூட்டாஞ்சோறு
விருந்து போற்றுதும்!
காசிக்காண்டம்
மலைபடுகாடம்
கோபல்லபுரத்து மக்கள்
தொகாநிலைத் தொடர்கள்
திருக்குறள்
4. அறிவியல், தொழிநுட்பம்

நான்காம் தமிழ்
செயற்கை நுண்ணறிவு
பெருமாள் திருமொழி*
பரிபாடல்
விண்ணைத் தாண்டிய தன்னம்பிக்கை
இலக்கணம் – பொது
5. கல்வி

மணற்கேணி
மொழிபெயர்ப்புக் கல்வி
நீதி வெண்பா*
திருவிளையாடற் புராணம்
புதிய நம்பிக்கை
வினா, விடை வகைகள், பொருள்கோள்

(*) இக்குறியிட்ட பாடல்கள் மனப்பாடப்பகுதி.

வ.எண் பொருண்மை/இயல் பாடத்தலைப்புகள்
6. கலை,அழகியல், புதுமைகள்



நிலா முற்றம்
நிகழ்கலை
பூத்தொடுத்தல்
முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்*
கம்பராமாயணம்*
பாய்ச்சல்
அகப்பொருள் இலக்கணம்
திருக்குறள்
7. நாகரிகம், நாடு, சமூகம்




விதைநெல்
சிற்றகல் ஒளி(தன்வரலாறு)
ஏர் புதிதா?
மெய்க்கீர்த்தி
சிலப்பதிகாரம்*
மங்கையராய்ப் பிறப்பதற்கே…
புறப்பொருள் இலக்கணம்
8. அறம், தத்துவம், சிந்தனை



பெருவழி
சங்க இலக்கியத்தில் அறம்
ஞானம்
காலக்கணிதம்*
இராமானுசர்(நாடகம்)
பா – வகை, அலகிடுதல்
9. மனிதம், ஆளுமை


அன்பின் மொழி
ஜெயகாந்தம் (நினைவு இதழ்)
சித்தாளு
தேம்பாவணி*
ஒருவன் இருக்கிறான்
அணி
திருக்குறள்

தமிழ்நாடு வாரியம் சமச்சீர் கல்வி வகுப்பு 12 முக்கிய தலைப்புகள்: ஆங்கிலம் 

இந்த பகுதி sections A, Section B, Section C, Section D, மற்றும் Section E என பிரிக்கப்பட்டுள்ளது.

Section A: Vocabulary, Synonyms, Antonyms, Lexical

Section B: Grammar, Filling in, Transform, Punctuation

Section C: Prose, Textual Comprehension, Paragraph

Section D: Poetry, Memory, Comprehension, Paragraph

Section E: Language. Functions, Normal Comprehension, Error Spot

Unit Number Samacheer kalvi Section and Chapter Name
Unit I Prose: His First Flight
Poem: Life
Supplementary: The Tempest
Unit II Prose: The Night the Ghost Got in
Poem: The Grumble Family
Supplementary: Zigzag
Unit III Prose: Empowered Women Navigating The World
Poem: I am Every Woman
Supplementary: The Story of Mulan
Unit IV Prose: The Attic
Poem: The Ant and the Cricket
Supplementary: The Aged Mother
Unit V Prose: Tech Bloomers
Poem: The Secret of the Machines
Supplementary: A day in 2889 of an American Journalist
Unit VI Prose: The Last Lesson
Poem: No Men Are Foreign
Supplementary: The Little Hero of Holland
Unit VII Prose: The Dying Detective
Poem: The House on Elm Street
Supplementary: A Dilemma

தமிழ்நாடு வாரியம் சமச்சீர் கல்வி வகுப்பு 10 முக்கிய தலைப்புகள்: கணிதம் 

தமிழ்நாடு 10 ஆம் வகுப்பின் அனைத்து முக்கிய தலைப்புகளும் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன. கணிதத்தில் நல்ல மதிப்பெண்களைப் பெற அனைத்து தலைப்புகளையும் விரிவாகப் படிக்கவும்.

அத்தியாய பெயர் தலைப்புகள்
உறவுகளும் சார்புகளும் 1.1 அறிமுகம்
1.2 வரிசைச் சோடி
1.3 கார்டீசியன் பெருக்கல்
1.4 உறவுகள்
1.5 சார்புகள்
1.6 சார்புகளைக் குறிக்கும் முறை
1.7 சார்புகளின் வகைகள்
1.8 சார்புகளின் சிறப்பு வகைகள்
1.9 சார்புகளின் சேர்ப்பு
1.10 நேரிய, இருபடி, முப்படி மற்றும் தலை கீழ்ச் சார்புகளுக்கான வரைபடங்களை அடை யாளம் காணுதல்
எண்களும் தொடர்வரிசைகளும் 2.1 அறிமுகம்
2.2 யூக்ளிடின் வகுத்தல் துணைத் தேற்றம்
2.3 யூக்ளிடின் வகுத்தல் வழிமுறை
2.4 அடிப்படை எண்ணியல் தேற்றம்
2.5 மட்டு எண்கணிதம்
2.6 தொடர்வரிசை
2.7 கூட்டுத்தொடர் வரிசை
2.8 தொடர்கள்
2.9 பெருக்குத்தொடர் வரிசை
2.10 பெருக்குத்தொடர் வரிசையின் முதல் n உறுப்புகளின் கூடுதல்
2.11 சிறப்புத் தொடர்கள்
இயற்கணிதம் 3.1 அறிமுகம்
3.2 மூன்று மாறிகளில் அமைந்த நேரிய ஒருங்கமை சமன்பாடுகள்
3.3 பல்லுறுப்புக் கோவைகளின் மீ.பொ.வ மற்றும் மீ.பொ.ம
3.4 விகிதமுறு கோவைகள்
3.5 பல்லுறுப்புக் கோவையின் வர்க்க மூலம்
3.6 இருபடிச் சமன்பாடுகள்
3.7 மாறுபாடுகளின் வரைபடங்கள்
3.8 இருபடிச் சமன்பாடுகளின் வரைபடங்கள்
3.9 அணிகள்
வடிவியல் 4.1 அறிமுகம் 4.2 வடிவொத்தவை 4.3 தேல்ஸ் தேற்றமும், கோண இருசமவெட்டித் தேற்றமும் 4.4 பிதாகரஸ் தேற்றம்
4.5 வட்டங்கள் மற்றும் தொடுகோடுகள்
4.6 ஒருங்கிசைவுத் தேற்றம்
ஆயத்தொலை வடிவியல் 5.1 அறிமுகம்
5.2 முக்கோணத்தின் பரப்பு
5.3 நாற்கரத்தின் பரப்பு
5.4 கோட்டின் சாய்வு
5.5 நேர்க்கோடு
5.6 நேர்க்கோட்டு சமன்பாட்டின் பொது வடிவம்
முக்கோணவியல் 6.1 அறிமுகம் 6.2 முக்கோணவியல் முற்றொருமைகள்
6.3 உயரங்களும் தொலைவுகளும்
அளவியல் 7.1 அறிமுகம் 7.2 புறப்பரப்பு
7.3 கன அளவு
7.4 இணைந்த உருவங்களின் கன அளவு மற்றும் புறப்பரப்பு
7.5 திண்மங்களை கனஅளவுகள் மாறாமல் மற்றொரு உருவத்திற்கு மாற்றி அமைத்தல்
புள்ளியியலும் நிகழ்தகவும் 8.1 அறிமுகம் 8.2 பரவல் அளவைகள்
8.3 மாறுபாட்டுக் கெழு
8.4 நிகழ்தகவு 8.5 நிகழ்ச்சிகளின் செயல்பாடுகள்
8.6 நிகழ்தகவின் கூட்டல் தேற்றம்

தமிழ்நாடு வாரியம் சமச்சீர் கல்வி வகுப்பு 10 முக்கிய தலைப்புகள்: அறிவியல்

தமிழ்நாடு 10 ஆம் வகுப்பின் அனைத்து முக்கிய தலைப்புகளும் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன. அறிவியலில் நல்ல மதிப்பெண்களைப் பெற அனைத்து தலைப்புகளையும் விரிவாகப் படிக்கவும்.

அத்தியாய பெயர் தலைப்புகள்
இயக்க விதிகள் விசை மற்றும் இயக்கம்
நிலைமம்
நேர்கோட்டு உந்தம்
நியூட்டனின் இயக்க விதிகள்
ராக்கெட் ஏவுதல் நிகழ்வு
நிறை மற்றும் எடை
ஒளியியல் ஒளியின் பண்புகள்
ஒளிவிலகல்
கூட்டொளியில் ஏற்படும் ஒளிவிலகல்
லென்சுகள்
குவிலென்சு மற்றும் குழிலென்சில் நடைபெறும்ஒளிவிலகலால் பிம்பங்கள் தோன்றுதல்
குவிலென்சின் வழியாகஒளிவிலகல்
குவிலென்சின் பயன்பாடுகள்
லென்சு சமன்பாடு
குறியீட்டு மரபு
மனிதக்கண்
கண்ணின் குறைபாடுகள்
வெப்ப இயற்பியல் வெப்பநிலை
வெப்ப ஆற்றல்
வாயுக்களின் அடிப்படை விதிகள்
பாயில் விதி
சார்லஸ் விதி
அவகேட்ரோ விதி
மின்னோட்டவியல் மின்னோட்டம்
மின்சுற்று
மின்னழுத்தம் மற்றும் மின்னழுத்த வேறுபாடு
ஓம் விதி
ஒரு பொருளின் மின்தடை
மின்தடை எண் மற்றும் மின்கடத்து எண்
மின்னோட்டத்தின் வெப்ப விளைவு
மின்திறன்
ஒலியியல் ஒலி அலைகள்
ஒலியின் எதிரொலிப்பு
எதிரொலிகள்
அணுக்கரு இயற்பியல் கதிரியக்கம்
ஆல்பா, பீட்டா மற்றும் காமாக் கதிர்கள்
கதிரியக்கத்தின் பயன்கள்
பாதுகாப்பு வழிமுறைகள்
அணுக்களும் மூலக்கூறுகளும் அணு மற்றும் அணு நிறை
மூலக்கூறு மற்றும் மூலக்கூறு நிறை
அணுக்கள் மற்றும் மூலக்கூறுகளுக்கிடையேயான வேறுபாடு
அவகாட்ரோ கருதுகோள்கள்
அவகாட்ரோ விதியின் பயன்பாடுகள்
தீர்க்கப்பட்ட கணக்குகள்
தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு நவீன ஆவர்த்தன விதி
நவீன ஆவர்த்தன அட்டவணை
உலோகத்தின் பண்புகள்
உலோகக் கலவைகள்
உலோக அரிமானம்
கரைசல்கள் கரைசலில் உள்ள கூறுகள்
கரைசல்களின் வகைகள்
ஈரம் உறிஞ்சுதல்
ஈரம் உறிஞ்சிக் கரைதல்
வேதிவினைகளின் வகைகள் வேதிவினைகளின் வகைகள்
நீரின் அயனிப்பெருக்கம்
pH அளவுகோல்
pH கணக்கீடுகள்
கார்பனும் அதன் சேர்மங்களும் கரிமச் சேர்மங்களின் பொது பண்புகள்
கரிம சேர்மங்களின் வகைகள்
படிவரிசைச் சேர்மங்கள்
கரிமச் சேர்மங்களுக்கு பெயரிடுதல்
எத்தனால்
அன்றாட வாழ்வில் கரிமச்சேர்மங்கள்
தாவர உள்ளமைப்பியல் மற்றும் தாவர செயலியல் திசுக்கள்
திசுத்தொகுப்புகள்
இருவிதையிலைத் தாவரவேரின் உள்ளமைப்பு (அவரை)
ஒருவிதையிலைத் தாவரவேரின் உள்ளமைப்பு (சோளம்)
இருவிதையிலைத் தாவர இலையின் உள்ளமைப்பு (மேல்கீழ் வேறுபாடு கொண்ட இலை – மா)
தாவரச்செயலியல்
சுவாசித்தலின் வகைகள்
உயிரினங்களின் அமைப்பு நிலைகள்
தாவரங்களின் கடத்துதல் மற்றும் விலங்குகளின் சுற்றோட்டம் தாவரங்களில் கடத்தும்முறைகள்
வேர்த்தூவி
உறிஞ்சப்பட்ட நீர் வேரில்செல்லும் பாதை
செல்களில் நீர் செல்லும்வழிமுறைகள்
நீராவிப் போக்கு
வேர் அழுத்தம்
இரத்தம்
மனித இதயத்தின் அமைப்பு
இதய துடிப்பு
இரத்த வகைகள்
நரம்பு மண்டலம்
தாவர மற்றும் விலங்கு ஹார்மோன்கள் தாவர ஹார்மோன்கள்
மனித நாளமில்லா சுரப்பிகள்
தாவரங்கள் மற்றும் விலங்குகளில் இனப்பெருக்கம் தாவரங்களில் பால் இனப்பெருக்கம்
மகரந்த சேர்க்கை
தாவரங்களில் கருவுருவாக்கம்
மனிதர்களில் பால் இனப்பெருக்கம்
கருவுருவாக்கம்
மாதவிடாய் சுழற்சி-அண்டம் விடுபடுதல்
தனிமனித சுகாதாரம்
மரபியல் கிரிகர் ஜோகன் மெண்டல் மரபியலின் தந்தை
ஒரு பண்புக் கலப்பு – ஒரு ஜீன் பாரம்பரியம்
இரு பண்புக் கலப்பு சோதனை
மெண்டலின் விதிகள்
குரோசோமோம்கள், டி.என்.ஏ. மற்றும் ஜீன்கள்
DNA அமைப்பு
பாலின நிர்ணயம்
உயிரின் தோற்றமும் பரிணாமமும் உயிரினங்களின் தோற்றம் பற்றிய கோட்பாடுகள்
பரிணாமக் கோட்பாடுகள்
தொல் தாவரவியல்
இனக்கலப்பு மற்றும் உயிரித் தொழில்நுட்பவியல் பசுமைப்புரட்சி
பயிர் மேம்பாட்டிற்கான பயிர்ப்பெருக்க முறைகள்
மருத்துவத்தில் உயிர்த்தொழில்நுட்பவியல்
உடல் நலம் மற்றும் நோய்கள் தவறான பயன்பாடு மற்றும் வகைகள்
மருந்து, ஆல்கஹால் மற்றும் புகையிலையின் தவறான பயன்பாடு
ஆல்கஹாலின் தவறான பயன்பாடு
மது அருந்துபவர்களின் மறுவாழ்விற்கான நடவடிக்கைகள்
உடல்பருமன்
புற்றுநோய்
எய்ட்ஸ்
சுற்றுச்சூழல் மேலாண்மை இயற்கை வளங்களை முறையாக பயன்படுத்துதலும், பாதுகாப்பும்
புதுப்பிக்கத்தக்க மற்றும் புதுப்பிக்க இயலாத ஆற்றல் வளங்கள்
மரபுசாரா (மாற்று ஆற்றல்)
மூலங்கள்
மழை நீர் சேகரிப்பு
மின்னாற்றல் மேலாண்மை
மின்னணுக் கழிவுகள் மற்றும் அதன் மேலாண்மை
காட்சித் தொடர்பு நிரல்
ஸ்கிராட்ச்

தமிழ்நாடு வாரியம் சமச்சீர் கல்வி வகுப்பு 10 முக்கிய தலைப்புகள்: சமூக அறிவியல் 

இந்த பாடம் மேலும் 4 துணை பாடங்களாக பிரிக்கப்பட்டுள்ளது : 

வரலாறு 

புவியியல் 

குடிமையியல் 

பொருளியல் 

இதன் விரிவான கண்ணோட்டம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது :

பகுதி அலகு எண் மற்றும் பெயர்
வரலாறு அலகு 1: முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும்
அலகு 2: இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம்
அலகு 3: இரண்டாம் உலகப்போர்
அலகு 4: இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்
அலகு 5: 19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள்
அலகு 6:ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள்
அலகு 7:காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும்
அலகு 8:தேசியம்: காந்திய காலகட்டம்
அலகு 9:தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம்
அலகு 10:தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள்
புவியியல் அலகு 1:இந்தியா – அமைவிடம், நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு
அலகு 2: இந்தியா – காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள்
அலகு 3: இந்தியா – வேளாண்மை
அலகு 4: இந்தியா – வளங்கள் மற்றும் தொழிலகங்கள்
அலகு 5: இந்தியா – மக்கள் தொகை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் வணிகம்
அலகு 6: தமிழ்நாடு – இயற்கைப் பிரிவுகள்
அலகு 7: தமிழ்நாடு – மானுடப் புவியியல்
குடிமையியல் அலகு 1: இந்திய அரசியலமைப்பு
அலகு 2: நடுவண் அரசு
அலகு 3: மாநில அரசு
அலகு 4:இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை
அலகு 5:இந்தியாவின் சர்வதேச உறவுகள்
பொருளியல் அலகு 1: மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி: ஓர் அறிமுகம்
அலகு 2: உலகமயமாதல் மற்றும் வர்த்தகம்
அலகு 3:அரசாங்கமும் வரிகளும்
அலகு 4:தமிழ்நாட்டில் தொழில்துறை தொகுப்புகள்

தமிழ்நாடு 10 ஆம் வகுப்பு முக்கிய தலைப்புகள் பற்றிய அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs)

கே.1: தமிழ்நாடு வகுப்பு 10 தொடர்பான அனைத்து முக்கிய சமச்சீர் தலைப்புகளை எங்கே பார்க்கலாம்?

ப: மாணவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்திலிருந்து பாட வாரியான தலைப்புகளை பதிவிறக்கம் செய்த்துக்கொள்ளலாம்.

கே.2: தமிழ்நாடு வாரியம் சமச்சீர் கல்வி வகுப்பு 10 தேர்வை நடத்தும் இயக்ககம் எது?

ப: தமிழ்நாடு வாரியம் சமச்சீர் கல்வி வகுப்பு 10 தேர்வை தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்ககம் நடத்துகிறது.

கே.3: தமிழ்நாடு வாரியம் சமச்சீர் கல்வி வகுப்பு 10 தேர்வின் கால நேரம் என்ன? 

ப:  தமிழ்நாடு வாரியம் சமச்சீர் கல்வி வகுப்பு 10 தேர்வின் கால நேரம் 3 மணிநேரம் ஆகும்.

கே.4: தமிழ்நாடு 12 ஆம் வகுப்பு தேர்வுகள் தொடர்பான அனைத்து விவரங்களையும் எங்கே பார்ப்பது? 

ப:  தமிழ்நாடு வாரியம் சமச்சீர் கல்வி வகுப்பு 10 தேர்வுகள் தொடர்பான அனைத்து விவரங்களையும் EMBIBE தளத்தில் காணலாம்.

கே.5: தமிழ்நாடு வாரியம் சமச்சீர் கல்வி 10 ஆம் வகுப்பில் உள்ள அத்தியாயங்கள் எளிதானதா?

ப: தமிழ்நாடு மாநில வாரியத்தின் 10 ஆம் வகுப்பு பாடத்திட்டம், மாணவர்கள் தலைப்புகளைப் பற்றிய கருத்தியல் புரிதலைப் பெற்று, அனைத்து தலைப்புகளையும் நன்கு புரிந்து, இறுதித் தேர்வுக்கு முன் பயிற்சித் தாள்களைத் தீர்த்தால் எளிதாகிறது.

தமிழ்நாடு வாரியம் 10 ஆம் வகுப்பு முக்கிய தலைப்புகளைப் பற்றி தெரிந்து கொள்ள இந்தக் கட்டுரை உங்களுக்கு உதவியது என்று நம்புகிறோம். தமிழ்நாடு வாரியம் 10 ஆம் வகுப்பு தொடர்பான மேலும் தகவல்களுக்கு Embibe-உடன் இணைந்திருங்கள்.

Embibe-யில் 3D கற்றல், புத்தகப் பயிற்சி, டெஸ்ட்கள் மற்றும் சந்தேகத் தீர்ப்பான்கள் மூலம் உங்கள் சிறந்ததை அடையுங்கள்