
தமிழ்நாடு வாரியம் சமச்சீர் கல்வி வகுப்பு 12 விண்ணப்ப படிவம் 2023
August 5, 2022தமிழ்நாடு வாரியம் 10 ஆம் வகுப்பு மாதிரி தேர்வுகள்: 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு வாரியத் தேர்வுகளில் சிறந்த மதிப்பெண்களைப் பெறுவது அனைத்து மாணவர்களுக்கும் மிகப் பெரிய சாதனையாக உள்ளது. அவர்கள் விரும்பும் மேல்நிலைப் படிப்பில் சேருவதற்கு இந்த மதிப்பெண்கள் முக்கியமான காரணிகளில் ஒன்றாகும். சிறந்த மதிப்பெண்களுடன் தேர்வில் வெற்றி பெறுவதற்கான உத்திகளில் ஒன்று தமிழ்நாடு வாரியம் 10 ஆம் வகுப்பு மாதிரி தேர்வுத் தாள்களை முயற்சிப்பதாகும். பொதுத் தேர்வுகளுக்கு முன் இந்த மாதிரி தேர்வு தாள்களை முயற்சிப்பது மாணவர்களுக்கு கேள்விகளைப் பற்றிய ஒரு புரிதலை ஏற்படுத்துகிறது. தொடர்ச்சியான பயிற்சியின் மூலம் மாணவர்கள் தங்கள் வேகத்தையும் துல்லியத்தையும் மேம்படுத்த முடியும்.
ஒவ்வொரு மாதிரி தேர்வுத் தாளிலும் அந்தந்த பாடத்தின் மதிப்பெண் திட்டம் பற்றிய புரிதலைப் பெறலாம். இது மாணவர்களுக்கு தலைப்பு வாரியான முக்கிய கேள்விகளை பற்றிய விவரங்களை பெற உதவும். எனவே தமிழ்நாடு 10 ஆம் வகுப்பு மாதிரி தேர்வுகளை முயற்சிப்பது மாணவர்களின் தேர்வுக்கு பெரும் உதவியாக இருக்கும். இந்த மாதிரி தேர்வுகள் எவ்வாறு சிறந்த முடிவுகளை அடைய உதவுகின்றன என்று யோசிப்பவர்களுக்கு, தமிழ்நாடு வாரிய மாதிரி தேர்வு விடைகள் பற்றிய தகவல்களையும் தேர்வின் முடிவில் தொகுத்துள்ளோம்.
தமிழ்நாடு 10 ஆம் வகுப்பு மாதிரி தேர்வுகள்: தேர்வுக் கண்ணோட்டம்
தமிழ்நாடு அரசு பொதுத் தேர்வு இயக்கம் (DGE) 2023 ஆம் ஆண்டு தமிழ்நாடு வாரியம் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்குப் பொறுப்பாக உள்ளது. தமிழ்நாட்டில் SSLC தேர்வு என்பது ஒரு எழுத்து முறை கொண்ட காகிதத் தேர்வாகும். தமிழ்நாடு வாரியம் 10 ஆம் வகுப்பு மாணவர்களின் பொதுத் தேர்விற்கு உதவுவதற்காக தமிழ்நாடு அரசு பொதுத் தேர்வு இயக்கம் மாதிரி தேர்வு தாள்களை வழங்குகிறது. மேலும் விவரங்களுக்குச் செல்வதற்கு முன், தேர்வின் கண்ணோட்டத்தைப் பற்றி அறிவோம்:
தேர்வின் பெயர் | தமிழ்நாடு இடைநிலைத் தேர்வு |
தேர்வின் பொது பெயர் | TN SSLC தேர்வு |
தேர்வினை நடத்துபவர் | தமிழ்நாடு அரசு தேர்வு கழக இயக்கம் |
தேர்வு நடக்கும் ஆண்டு | வருடத்திற்கு ஒரு முறை |
தேர்வு நிலை | இடைநிலை |
தேர்வு நடக்கும் மொழி | தமிழ், ஆங்கிலம் |
விண்ணப்ப முறை | ஆஃப்லைன் |
தேர்வு நடக்கும் முறை | ஆஃப்லைன் |
தேர்வின் கால நேரம் | 2.30 மணி நேரம் |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://dge.tn.gov.in/ |
தமிழ்நாடு வாரியம் 10 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் குறிக்கும் திட்டம் 2023
தமிழ்நாடு வாரியம் 10 ஆம் வகுப்பிற்கு மதிப்பெண்கள் நிர்ணய முறையைப் பின்பற்றுகிறது. இந்த முறையின்படி, அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் முதல் குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள் என வகைப்படுத்தி வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்படுகிறது.
Embibe-யிலிருந்து 2023 ஆம் ஆண்டு 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு வாரியத் தேர்விற்கான மாதிரி தேர்வுகள்:
பல ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் வழிகாட்டிகள் தமிழ்நாடு 10 ஆம் வகுப்பு வாரியத் தேர்வுகளுக்கான மாதிரி தேர்வுகளை வழங்குகின்றன. இருப்பினும், சிறந்த முடிவுகளைப் பெற மாணவர்கள் மாதிரி தேர்வைத் தேர்ந்தெடுக்கும்போது கவனமாக இருக்க வேண்டும். மாதிரி தேர்வைத் தேர்ந்தெடுக்கும்போது, இவை உங்களின் உண்மையான தேர்வில் உள்ள மாதிரியான கேள்விகளை கொண்டு உள்ளதா என்பதை சரிபாருங்கள்.
Embibe-யில் வழங்கப்படும் மாதிரி டெஸ்ட் தொடர், தேர்விற்கு எவ்வளவு சிறப்பாகத் நீங்கள் தயாராக இருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள உதவும். பயிற்சித் தாள்கள் மற்றும் மாதிரித் தாள்களைப் போலவே, மாதிரி தேர்வுகளும் சமீபத்திய பாடத்திட்டம் மற்றும் தமிழ்நாடு வாரியத் தேர்வுகளின் வடிவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒன்றாகும்..
இந்த மாதிரி தேர்வுகளில் கேட்கப்படும் கேள்விகள் பெரும்பாலும் உண்மையான தேர்வில் கேட்கப்படும் கேள்விகளைப் போலவே இருக்கும். தமிழ்நாடு வாரியம் 10ஆம் வகுப்பு மாதிரி தேர்வுகள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் வடிவங்களில் கிடைக்கின்றன. இந்த மாதிரி தேர்வுகள் உண்மையான தமிழ்நாடு வாரியம் 10 ஆம் வகுப்பு தேர்வுத் தாள்கள் மற்றும் கேள்விகளின் அடிப்படையில் நிபுணர்களால் நிர்வகிக்கப்படுகின்றன, இது உங்களின் தேர்வு தயாராவதற்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கும்.
படி 1: மாணவர்கள் Emibibe செயலியில் உள்நுழைந்து, பதிவு செய்யப்படவில்லை என்றால், முதலில் பதிவுசெய்து, கணக்கை உருவாக்க வேண்டும்.
படி 2: இப்போது மாணவர்கள் ‘எனது குறிக்கோள்’ என்ற விருப்பத்தைப் பார்ப்பார்கள்.
படி 3: அதிலிருந்து குறிப்பிட்ட கல்வி வாரியத்தைத் தேர்ந்து எடுத்து உங்கள் வகுப்பினை கிளிக் செய்யவும்.
படி 4: அடுத்து என்பதை கிளிக் செய்து உங்கள் மொழியை மாற்றவும். இப்போது ஹோம் பக்கம் தோன்றும்.
படி 5:ஹோம் பக்கத்தில் உள்ள, ” டெஸ்ட்” என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும்.
படி 6:அதில் “டெஸ்ட்களை மேற்கொள்ளுங்கள்” மற்றும் “தனிப்பயனாக்கப்பட்ட டெஸ்ட்கள் என்ற இரண்டு விருப்பங்களை காண்பீர்கள்.
படி 7: Embibe உருவாக்கிய டெஸ்ட்கள் அதாவது “டெஸ்டை மேற்கொள்ளுங்கள்” என்பதை கிளிக் செய்து குறிப்பிட்ட பாடத்தில் (அறிவியல், கணிதம் போன்ற) ஒரு அத்தியாய டெஸ்டை மேற்கொள்ளலாம். அல்லது உங்களுக்கு விருப்பமுள்ள அத்தியாயத்தை தேர்வு செய்து அந்த அத்தியாயத்திற்கான தனிப்பயனாக்கப்பட்ட டெஸ்டை நீங்களே உருவாக்கி கொள்ளலாம்.
படி 8: கேள்விகள், டெஸ்ட்டிற்கான கற்றல் அத்தியாயங்கள் போன்ற டெஸ்டினைப் பற்றிய விவரங்கள் தோன்றும்.
படி 9: மாணவர்கள் “டெஸ்டை தொடங்கவும்” என்ற விருப்பத்தை கிளிக் செய்தவுடன், புதிய tab திறக்கப்படும். அங்கு, அவர்கள் டெஸ்டின் வழிமுறைகளை கவனமாகப் படித்து உறுதிப்படுத்தி கிளிக் செய்ய வேண்டும்.
படி 10: உறுதிப்படுத்தலை டிக் செய்த பிறகு டெஸ்ட் தொடங்கும். மாணவர் ஏற்கனவே Embibe இணையதளத்தில் இணைந்திருந்தால், அவர்கள் உடனடியாக டெஸ்டை தொடங்கலாம். மாணவர்கள் உள்நுழையாவிட்டாலும் டெஸ்டை முயற்சிக்கலாம். ஆனால் சிறந்த அனுபவத்திற்கு, உள்நுழைய பரிந்துரைக்கப்படுகிறது.
மாணவர்கள் டெஸ்டினை முயற்சித்த பிறகு டெஸ்ட்டிற்கான பதில்களையும் காணலாம்.
தமிழ்நாடு வாரியம் மாதிரி தேர்வின் வினாத்தாள்களைத் தீர்ப்பது பல வழிகளில் உதவுகிறது. அவற்றில் சில பின்வருமாறு:
தமிழ்நாடு வாரியம் மாதிரி டெஸ்ட் புத்தகம் அல்லது ஆன்லைனில் பயிற்சி டெஸ்ட்களை முயற்சிப்பது, கருத்துகளை நன்கு புரிந்துகொள்ள மாணவர்களுக்கு உதவும். இருப்பினும், தேர்வில் சிறப்பாக செயல்பட இதனுடன் வேறு சில குறிப்புகளையும் அவர்கள் பின்பற்ற வேண்டும். அவர்கள் பின்பற்றக்கூடிய சில குறிப்புகள் இங்கே:
தமிழ்நாடு வாரியம் 10 ஆம் வகுப்பு மாதிரி தேர்வுகள் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன:
கே.1: தமிழ்நாடு வாரியம் மாதிரி தேர்வுகள் அறிவியல் பாடத்திற்கும் பொதுத் தேர்வின் அதே மதிப்பெண் முறையைப் பின்பற்றுகிறதா?
பதில்: ஆம். மாதிரி தேர்வு வினாத் தாள்கள் பொதுத் தேர்விற்கும் மாதிரி தேர்வின் அதே மதிப்பெண் முறையைப் பின்பற்றுகின்றன. எனவே, மாதிரி தேர்வை முயற்சிப்பது உங்கள் இறுதித் தேர்வில் நீங்கள் பெறக்கூடிய மதிப்பெண்ணைக் கணக்கிடுகிறது.
கே.2: 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு வாரியத் தேர்வுகளில் நான் எப்படி சிறந்த மதிப்பெண்களைப் பெறுவது?
பதில்: மாதிரி வினாத்தாள்களைத் தீர்ப்பது மற்றும் மாதிரி தேர்வுகளை முயற்சிப்பது போன்ற சரியான உத்திகளைப் பின்பற்றுவதன் மூலம் மாணவர்கள் தங்கள் மதிப்பெண்களை மேம்படுத்தலாம். மாணவர்கள் Embibe-யில் தேர்விற்கு தேவையான இந்த அனைத்து அம்சங்களையும் இலவசமாக பதிவிறக்கம் செய்து பயன்பெறலாம்.
கே.3: தேர்வில் அதிக மதிப்பெண் பெற மாதிரி தேர்வுகளை முயற்சிப்பது சிறந்ததா?
பதில்: மாதிரி தேர்வுகளை முயற்சிப்பது மாணவர்கள் தங்கள் தேர்வுகளுக்குத் தயாராவதற்கு ஒரு சிறந்த வழியாகும். தேர்வில் உள்ள பாடங்களை எவ்வாறு அணுகுவது என்பது குறித்த யோசனையை மாணவர்களுக்கு வழங்குவதோடு, பொதுவாகக் கேட்கப்படும் கேள்விகளை தெரிந்துகொள்ளவும் உதவும்.
கே.4: தமிழ்நாடு வாரிய 10 ஆம் வகுப்புத் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் எடுப்பது எளிதானதா?
பதில்: வெற்றிக்கு குறுக்குவழிகள் இல்லை. எனவே தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற விரும்பினால் கடினமாக உழைக்க வேண்டியது அவசியம். தமிழ்நாடு வாரிய மாதிரி தேர்வினை பதில்களுடன் பயிற்சி செய்வது அதிக மதிப்பெண்களைப் பெற, நீங்கள் தேர்வு செய்யும் சிறந்த வழிகளில் ஒன்றாகும்.
தமிழ்நாடு வாரியம் 10 ஆம் வகுப்பு மாதிரி தேர்வுகளின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள இந்தக் கட்டுரை உங்களுக்கு உதவியது என்று நம்புகிறோம். தமிழ்நாடு வாரியம் வகுப்பு 10 ஆம் வகுப்பு தொடர்பான மேலும் தகவல்களுக்கு Embibe-உடன் இணைந்திருங்கள்.