• எழுதியவர் Vishanth V
  • கடைசியாக மாற்றப்பட்டது 25-08-2022

தமிழ்நாடு சமச்சீர் கல்வி வகுப்பு 10 (2023): விண்ணப்பித்தல்

img-icon

தமிழ்நாடு சமச்சீர் கல்வி வகுப்பு 10 விண்ணப்பித்தல் (2023):  தமிழ்நாடு SSLC – இடைநிலைப் பள்ளி விடுப்புச் சான்றிதழ் என்பது 10 ஆம் வகுப்பு சமச்சீர் வாரியத் தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாணவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழாகும். இடைநிலைப் பள்ளி ஆண்டுகளின் முடிவில் மாணவர்களின் செயல்திறனை மதிப்பிடுவதற்காக, தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்பு சமச்சீர் கல்வி பொதுத்தேர்வுகள் ஒவ்வொரு ஆண்டும் மார்ச்-ஏப்ரல் மாதங்களில் அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் (DGE) நடத்தப்படுகின்றன. இந்த தேர்வுகள் மாணவர்களின் அறிவு, திறன் மற்றும் அணுகுமுறையை மதிப்பிடுவதற்காக நடத்தப்படுகின்றன. 

TN SSLC தேர்வுகள் மாணவர்களுக்கு மிகவும் முக்கியமானவை, ஏனெனில், இந்தத் தேர்வுகளில் அவர்கள் பெறும் மதிப்பெண்கள், மேல்நிலை அல்லது 11 ஆம் வகுப்பில் மாணவர்கள் சேர வேண்டிய பாடப்பிரிவினை தீர்மானிக்கிறது. TN SSLC தேர்வில் சிறந்த மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு உதவித்தொகை மற்றும் பல சலுகைகள் பெரும்பாலும் வழங்கப்படுகிறது. TN SSLC தேர்வில் சிறப்பாக செயல்படாத மாணவர்கள் உடனடி சிறப்பு துணைத் தேர்வுகளுக்கு பதிவு செய்யலாம்.

ஒவ்வொரு ஆண்டும் சுமார் 9 முதல் 10 லட்சம் மாணவர்கள் தமிழ்நாடு SSLC தேர்வை எழுதுகின்றனர். தமிழ்நாடு சமச்சீர் கல்வி வாரியம் தேர்வுகளை நடத்துவது மட்டுமின்றி, 10ஆம் வகுப்பு சமச்சீர் கல்வி புத்தகங்கள் மற்றும் பாடத்திட்டத்தை பரிந்துரைத்து உருவாக்குவதும் கல்வி வாரியத்தின் கடமையாகும். தமிழ்நாடு கல்வி வாரியத்துடன் இணைந்த ஒவ்வொரு பள்ளியிலும் சமச்சீர் கல்வி 10ஆம் வகுப்பு புத்தகங்கள் பின்பற்றப்படுகின்றன.

தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்ககம் தேர்வை நடத்துகிறது. தமிழ்நாடு வாரியம்  வகுப்பு 10 தேர்வுகளுக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது என்பதை இக்கட்டுரையில் காண்போம்.

தமிழ்நாடு வாரியம் சமச்சீர் கல்வி 10 ஆம் வகுப்பு: மேலோட்டம் 

தமிழ்நாடு கல்வி வாரியத்தால் நடத்தப்படும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தேவையான அனைத்து விவரங்களும் கீழே உள்ள அட்டவணையில் காட்டப்பட்டுள்ளன.

இந்த அட்டவணை தேர்வின் மேலோட்டத்தை வழங்குகிறது, தேர்வு நடக்கும் காலம், பல்வேறு மொழி விருப்பங்கள் மற்றும் தமிழ்நாடு மாநில ஆணையத்தின் முக்கிய தேதிகள் போன்றவற்றை காட்டுகிறது.

பொருளடக்கம் விவரங்கள்
வாரியம் தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்ககம் (DGE)
தேர்வு 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு
தேர்வு நிலை மாநிலத் தேர்வு
தேர்வு நடத்தப்படும் ஊடகம் ஆப்லைன்
வருடம் 2023-2024
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 2023 மார்ச் (தற்காலிகமானது)
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 2023 ஜூன் (தற்காலிகமானது)
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 2023 (மறுகூட்டலுக்குப் பிறகு) ஜூன் (தற்காலிகமானது)
10ஆம் வகுப்பு துணைத்தேர்வு 2023 ஜூலை (தற்காலிகமானது)
10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் 2023 ஆகஸ்ட் (தற்காலிகமானது)
அதிகாரப்பூர்வ இணையதளம் dge.tn.gov.in
tnresults.nic.in
தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் ஊடகம் ஆன்லைன்

தமிழ்நாடு சமச்சீர் கல்வி வகுப்பு 10 (2023) விண்ணப்பித்தல்: வழிமுறை

  • விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் தமிழ்நாடு வராயத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்நுழைய வேண்டும்.
  • தேர்வர்கள் முகப்புப்பக்கத்தின் இடது பக்கத்தில் உள்ள விருப்பங்களில் அமைந்துள்ள ‘தேர்வுகள்’ இணைப்பைக் கிளிக் செய்ய வேண்டும்.
  • தேர்வர்கள் விருப்பங்களின் பட்டியலிலிருந்து “இடைநிலைக் கல்வி விடுப்புச் சான்றிதழ்ப்பொதுத் தேர்வு” என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
  • ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தைக் கிளிக் செய்யவும். மேலே ஒரு பட்டன் தோன்றும்.
  • கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களை கவனமாக நிரப்பவும்.
  • பின்னர் “சமர்ப்பிக்கவும்” என்பதை கிளிக் செய்யவும்.
  • நிரப்பப்பட்ட விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்யுங்கள்.

தமிழ்நாடு சமச்சீர் கல்வி வகுப்பு 10 (2023) விண்ணப்பிக்கும் வழிமுறை (தனித்தேர்வர்கள்)

தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்ககம் ஊடகங்கள் வாயிலாக அறிவிக்கை வெளியிடப்பட்ட பின்னர் ஒவ்வொரு ஆண்டும் தனித்தேர்வர்களுக்கு பொதுத்தேர்வு மார்ச்/ஏப்ரல் பருவத்திலும் மேல்நிலை துணை பொதுத்தேர்வு ஜூன்/ஜூலை 

தேர்வர்கள் தங்கள் அருகிலுள்ள அரசுத் தேர்வுகளின் சேவை மையத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க அறிவுரைகள் வழங்கப்படுகின்றன. சேவை மையத்தின் பட்டியல் அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் இணையத்தளத்தில் http://www.dge.tn.gov.in/ உள்ளன. 

தனித்தேர்வர்கள், ஒவ்வொரு கல்வி மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள அரசு தேர்வுகள் சேவை மையத்திற்கு சென்று, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விண்ணப்பிக்க வேண்டும்.சேவை மைய அதிகாரிகள் கீழே குறிப்பிட்டுள்ள விவரங்களை உங்களிடமிருந்து பெறுவர்.

S.NO விவரங்கள் 1 தேர்வரின் பெயர் 2 பிறந்த தேதி 3 பாலினம் 4 பிறந்த இடம் 5 வங்கி விவரங்கள் 6 மின்னஞ்சல் முகவரி 7 பாஸ்போர்ட் புகைப்படம் 8 கையொப்பம் 9 பெற்றோரின் தொலைபேசி எண் 10 மாணவரின் தொலைபேசி எண்

 மேற்குறிப்பிட்டுள்ள தேர்வர்களின் அனைத்து விவரங்களும் சேவை மைய அதிகாரிகளால் பதிவேற்றம் செய்யப்பட்ட பின், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவம் பதிவிறக்கம் செய்யப்பட்டு அதனுடன் பதிவுச் சீட்டும் இணைத்து வழங்கப்படும். 

உங்களின் விவரங்கள் அனைத்தும் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்து கீழ்குறிப்பிட்டுள்ள அனைத்து ஆவணங்களிலும் கையொப்பமிட்டு அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

  1. கல்வித் தகுதி சான்று:

எட்டாம் வகுப்பு பதிவுத் தாள் / ESLC அசல் மதிப்பெண் சான்றிதழ் / பிற மாநில அசல் மதிப்பெண் சான்றிதழ் மற்றும் தமிழ்நாட்டில் இருப்பிட சான்றிதழ் / மெட்ரிக் அசல் பத்தாம் வகுப்பு சான்றிதழ்.

  1. பிறந்த தேதி சான்று:

பள்ளி ஆவணங்கள் / அசல் மாற்றுச் சான்றிதழ்.

தமிழ்நாடு வாரியம் சமச்சீர் கல்வி 10 ஆம் வகுப்பு விண்ணப்பித்தல் 2023: முக்கிய விவரங்கள் 

 தேர்வுகளுக்கு பதிவு செய்வதற்கு முன்பு, பின்வரும் படிகளை கவனமாக பின்பற்றுங்கள்:

  • தமிழ்நாடு வாரிய விண்ணப்பப் படிவங்கள் வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் PDF வடிவத்தில் கிடைக்கும்.
  • தமிழ்நாடு மாநில அரசு தேர்வு ஆணையம் அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்பத்தினை சமர்பிப்பதற்கான இறுதி தேதியை அறிவிக்கும்.
  • விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு வாரிய தேர்வு விண்ணப்பக் கட்டணத்தை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் செலுத்த வேண்டும்.

தமிழ்நாடு வாரியம் சமச்சீர் கல்வி 10 ஆம் வகுப்பு விண்ணப்ப படிவம் 2023: கட்டண விவரங்கள் 

செல்லுபடியாகும் ஆவணங்களை சமர்ப்பிக்க சில விதிமுறைகள் உள்ளன. முதற்கட்ட தேர்வு பதிவுக் கட்டணத்தின் பிரிவு கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

பள்ளித்தேர்வர்களுக்கான கட்டணம்:

தேர்வுக் கட்டணம் ரூ. 100.00/-
சான்றிதழ் கட்டணம் ரூ. 10.00/-
சேவைக் கட்டணம் ரூ. 5.00/-
மொத்தம் ரூ. 115.00/-

தனித்தேர்வர்களுக்கான கட்டணம்:

தேர்வுக் கட்டணம் ரூ. 100
மதிப்பெண்ச் சான்றிதழ் கட்டணம் ரூ. 10
பதிவுக் கட்டணம் ரூ. 10
சேவைக் கட்டணம் ரூ. 05
மொத்தம் ரூ. 125

வாரியத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளின் அடிப்படையில் மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து கட்டண அமைப்புகளும் மாற்றத்திற்கு உட்பட்டவை என்பதை நினைவில் கொள்ளவும்.

மறுகூட்டலுக்கான கட்டணம் ரூ. 205/- (சேவை வரி ரூ.5)

தமிழ்நாடு வாரியம் சமச்சீர் கல்வி SSLC பொதுத்தேர்வு: தேர்வுக் கட்டணம் செலுத்தும் முறை 

பள்ளித் தேர்வர்கள்:

மாணவர்கள் பயிலும் கல்வி நிறுவனங்களின் தலைமையாசிரியர்கள் மூலம் மாணவர்களிடமிருந்து தேர்வுக்கட்டணம் பெறப்பட்டு அரசுக் கணக்கில் செலுத்தப்படும்.

நேரடி தனித்தேர்வர்கள்:

அனைத்து நேரடி தனித்தேர்வர்களும் தேர்வுக் கட்டணத்தை அரசுத் தேர்வுகள் சேவை மையத்தில் இணையவழி பதிவின்போது பணமாக செலுத்திட வேண்டும்.

தமிழ்நாடு சமச்சீர் கல்வி SSLC / 12 ஆம் வகுப்பு முடிவுகளை எவ்வாறு பார்ப்பது:

தமிழ்நாடு கல்வி வாரியம் 2023 ஆம் ஆண்டு 10 ஆம் வகுப்பு முடிவுகளை ஜூன் (தாற்காலிகமானது) மாதத்தில் அறிவிக்கும். தமிழ்நாடு வாரியம் SSLC 2023 முடிவுகளைப் பார்க்க, மாணவர்கள் தமிழ்நாடு கல்வி வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்க வேண்டும். தமிழ்நாடு கல்வி வாரியத்தின் முடிவுகளைப் பார்க்க மாணவர்கள் தங்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை வழங்க வேண்டும்.

தமிழ்நாடு சமச்சீர் கல்வி 10 ஆம் வகுப்பு 2023 முடிவுகளை பார்க்க, இந்தப் படிகளைப் பின்பற்றவும்: 

தமிழ்நாடு 10 ஆம் வகுப்பு 2023 முடிவுகளை பார்க்க மாணவர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள படிகளைப் பயன்படுத்தலாம்:

  • படி1: தமிழ்நாடு தேர்வு முடிவுகள் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும் – tnresults.nic.in.
  • படி2: SSLC முடிவுகள் 2023 என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.
  • படி3: அடுத்த பக்கத்தில், மாணவர்கள் தங்கள் ‘பதிவு எண்’ மற்றும் ‘பிறந்த தேதி’ ஆகியவற்றை உள்ளிட வேண்டும்.
  • படி4: விவரங்களை உள்ளிட்ட பிறகு, ‘மதிப்பெண்களைப் பெறு’ என்பதைக் கிளிக் செய்யவும்.
  • படி5: தமிழ்நாடு சமச்சீர் கல்வி 10 ஆம் வகுப்பு 2023 முடிவுகளை நீங்கள் பார்க்கலாம்.
  • படி6: முடிவுகளைப் பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.

தமிழ்நாடு வாரியம் சமச்சீர் கல்வி வகுப்பு 10 விண்ணப்பித்தல் 2023 பற்றிய FAQகள் 

தமிழ்நாடு சமச்சீர் கல்வி 10 ஆம் வகுப்பு விண்ணப்பித்தல் பற்றி அடிக்கடி கேட்கப்படும் சில கேள்விகளை இங்கு வழங்கியுள்ளோம்.

கே 1: தமிழ்நாடு வாரியம் சமச்சீர் கல்வி வகுப்பு 10 தேர்வுக்கு நான் எவ்வாறு விண்ணப்பிப்பது?

ப: தேர்வர்கள் தமிழ்நாடு மாநில ஆணையத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தினுள்  செல்ல வேண்டும். தேர்வர்கள் முகப்புப் பக்கத்தின் இடது பக்கத்தில் உள்ள விருப்பங்களில் உள்ள ‘தேர்வுகள்’ லிங்கைக் கிளிக் செய்ய வேண்டும். இங்கே, தேர்வர்கள் விருப்பங்களின் பட்டியலிலிருந்து ‘இடைநிலைக் கல்வி விடுப்புச் சான்றிதழ்ப்பொதுத் தேர்வு’ என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும். 10ஆம் வகுப்பு ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தைக் கிளிக் செய்யவும்.

கே 2: தமிழ்நாடு சமச்சீர் வாரிய 10 ஆம் வகுப்புக்கான மொத்த மதிப்பெண்கள் என்ன?

ப: புதிய முறையின்படி, 2023 ஆம் ஆண்டில் 10 ஆம் வகுப்பின் மொத்த மதிப்பெண்கள் 500ஆகும். தேர்வில் வெற்றி பெற மாணவர்கள் 500க்கு தேர்ச்சி மதிப்பெண்களில் குறைந்தபட்சம் 175 மதிப்பெண்களைப் பெற வேண்டும்.

கே 3: :தமிழ்நாடு வாரியம் சமச்சீர் கல்வி 10 ஆம் வகுப்பு விண்ணப்ப படிவம் நிரப்புவதற்கான கடைசி தேதி என்ன?

ப: தமிழ்நாடு வாரியம் சமச்சீர் கல்வி 10 ஆம் வகுப்பு விண்ணப்ப படிவம் நிரப்புவதற்கான கடைசி ஜனவரி (தற்காலிகமானது) 2023 ஆகும்.

கே 4: தமிழ்நாடு வாரிய சமச்சீர் கல்வி 10ஆம் வகுப்பு தேர்வுக்கு பதிவு பெறுவதற்கான வழிமுறைகள் என்ன?

ப: TN SSLC பதிவு படிவம் 2023  பூர்த்தி செய்ய இந்த படிகளைப் பின்பற்றவும்:

படி 1: TN  கல்வி வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தினுள் உள்நுழையவும் – dge.tn.gov.in

படி 2: முகப்புப் பக்கத்தின் இடது பக்கத்தில் உள்ள தேர்வு இணைப்பைக் கிளிக் செய்யவும்.

படி 3: ஒரு புதிய பக்கம் தோன்றும். ‘SSLC’ இணைப்பைக் கிளிக் செய்யவும்.

படி 4: அறிவிப்பில் உள்ள வழிகாட்டுதல்களைப் படித்து அதன்படி உங்கள் பதிவை முடிக்கவும்.

தமிழ்நாடு வாரியம் 10 ஆம் வகுப்பு தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை பற்றி தெரிந்து கொள்ள இந்தக் கட்டுரை உங்களுக்கு உதவியது என்று நம்புகிறோம். தமிழ்நாடு வாரியம் வகுப்பு 10 தொடர்பான மேலும் தகவல்களுக்கு Embibe-உடன் இணைந்திருங்கள்.

Embibe-யில் 3D கற்றல், புத்தகப் பயிற்சி, டெஸ்ட்கள் மற்றும் சந்தேகத் தீர்ப்பான்கள் மூலம் உங்கள் சிறந்ததை அடையுங்கள்