• எழுதியவர் Vignesh
  • கடைசியாக மாற்றப்பட்டது 30-08-2022

தமிழ்நாடு வாரியம் சமச்சீர் கல்வி வகுப்பு 11 பாடத்திட்டம் (2023):

img-icon

தமிழ்நாடு வாரியம் சமச்சீர் கல்வி வகுப்பு 11 பாடத்திட்டம் (2023): தமிழ்நாடு 11 ஆம் வகுப்பு சமச்சீர் (Samacheer Kalvi) பாடத்திட்டத்தை வெளியிடும் பொறுப்பு தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்ககம் வகிக்கிறது. கலை, அறிவியல் மற்றும் வணிகவியல் ஆகிய பல்வேறு பாடப்பிரிவுகளுக்கான தமிழ்நாடு வாரிய சமச்சீர் கல்வி 11 ஆம் வகுப்பு பாடத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வகுப்பு 11 சமச்சீர் பாடத்திட்டம் மாணவர்கள் தங்கள் தேர்வுகளுக்கு தயாராவதற்கு சிறந்த ஒரு கருவியாக செயல்படுகிறது. மாணவர்கள் தங்களின் சரியான புரிதலுக்காக, தேர்வுக்குத் தயாராகும் போது முறையான வழிமுறை அல்லது கற்றல் திட்டத்தை பின்பற்றுவது மிகவும் முக்கியம். தேர்வு முறை மற்றும் கேள்வி அமைப்பு என்னவாக இருக்கும் என்ற வடிவமைப்பை பாடத்திட்டம் வகுத்துள்ளதால், மாணவர்கள் கருத்துகளை எளிதில் புரிந்து கொள்ள முடியும்.

தமிழ்நாடு சமச்சீர் கல்வி வகுப்பு 12: மேலோட்டம்

தமிழ்நாடு சமச்சீர் 11 ஆம் வகுப்பு தேர்வு, மேல்நிலை முதலாம் ஆண்டு தேர்வு என்றும் அழைக்கப்படுகிறது. இந்தத் தேர்வை முடித்த பிறகு அல்லது தேர்ச்சி பெற்ற பிறகு மாணவர்கள் பல்வேறு வேலை வாய்ப்புகளை பெற்று தன் வாழ்க்கை நிலையை மாற்றிக்கொள்ள முடியும். அவர்கள் பொறியியல், மருத்துவம் போன்ற படிப்புகளில் சேரலாம் அல்லது அரசு வேலைக்காக முயற்சி செய்யலாம்.

11 ஆம் வகுப்பு மாணவர்கள், சமச்சீர் பாடத்திட்டத்தை முக்கியமானதாக கருத வேண்டும். தேர்வில் அதிக மதிப்பெண்களைப் பெறுவதற்கு சமச்சீர் பாடத்திட்டத்தில் உள்ள அடிப்படை கருத்துகளை முழுமையாகப் படிப்பது முக்கியம் ஆகும். எனவே, தமிழ்நாடு வாரியம் 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் அனைத்து பாடங்களின் பாடத்திட்டத்தை கவனமாக பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும்.

தமிழ்நாடு வாரியம் சமச்சீர் கல்வி 11 ஆம் வகுப்புக்கான விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இவை மாணவர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும்:

தேர்வின் பெயர் தமிழ்நாடு மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வு
பொதுவாக அறியப்படும் பெயர் தமிழ்நாடு வகுப்பு 11 (Samacheer Kalvi)
இயக்ககம் அரசுத் தேர்வுகள் இயக்ககம் (DGE)
காலம் ஒவ்வொரு ஆண்டும்
தேர்வின் கால நேரம் 3 மணிநேரம்
அதிகாரபூர்வ இணையதளம் http://www.dge.tn.gov.in/

தமிழ்நாடு சமச்சீர் கல்வி வகுப்பு 11 ஆங்கில பாடத்திட்டம்:

தமிழ்நாடு வாரியம் 11 ஆம் வகுப்பு ஆங்கில பாடத்திட்டம் இலக்கணம் மற்றும் இலக்கியம் பகுதிகளைக் கொண்டதாகும். எனவே, மாணவர்கள் இவற்றை சரியாகப் புரிந்து கொண்டால், பாடங்களை எளிதாகப் பயிற்சி செய்யலாம். தமிழ்நாடு வாரியம் சமச்சீர் கல்வி 11 ஆம் வகுப்புக்கான முழுமையான பாடத்திட்டம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Chapter Number Name of the Chapter
1.1 The Portrait of a Lady
1.2 Once Upon a Time
1.3 After Twenty Years
2.1 The Queen of Boxing
2.2 Confessions of a Born Spectator
2.3 A Shot in the Dark
3.1 Forgetting
3.2 Lines Written in the Early Spring
3.3 The First Patient (Play)
4.1 Tight Corners
4.2 Macavity – The Mystery Cat
4.3 With the Photographer
5.1 The Convocation Address
5.2 Everest is Not the Only Peak
5.3 The Singing Lesson
6.1 The Accidental Tourist
6.2 The Hollow Crown
6.3 Never Never Nest (Play)

தமிழ்நாடு சமச்சீர் கல்வி 11 ஆம் வகுப்பு கணித பாடத்திட்டம்:

11 ஆம் வகுப்பு கணிதம் மிக முக்கியமான பாடங்களில் ஒன்றாகும். சமச்சீர் கணித  பாடத்தில் உள்ள சிக்கலான கணக்குகளே இதற்கு காரணமாகும். மாணவர்கள்,  தேர்வுக்காக தொடர்ந்து பயிற்சி செய்ய வேண்டிய பாடங்களில் கணிதமும் ஒன்றாகும்.

அர்ப்பணிப்பும் பயிற்சியும் ஒன்றொக்கொன்று சார்ந்தவைகளாகும். இவை, மாணவர்கள் தேர்வில் சிறந்த மதிப்பெண்களைப் பெறுவதை உறுதிசெய்யும்.

அத்தியாயங்களில் என்னென்ன பிரிவுகள் உள்ளன என்பதை மாணவர்கள் நன்கு அறிந்திருக்க வேண்டும். மாணவர்கள் பின்பற்ற வேண்டிய தமிழ்நாடு மாநில வாரியத்தின் 12ஆம் வகுப்பு கணித பாடத்திட்டம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

அத்தியாய எண் அத்தியாயத்தின் பெயர் தலைப்புகள்




1



கணங்கள், தொடர்புகள் மற்றும் சார்புகள்
அறிமுகம்
கணங்கள்
கார்டீசியன் பெருக்கல்
மாறிலிகள், மாறிகள், இடைவெளிகள் மற்றும் அண்மைப்பகுதிகள்
தொடர்புகள்
சார்புகள்
உருமாற்றத்தை பயன்படுத்தி சார்புகளை வரைபடமாக்குதல்
2 அடிப்படை இயற்கணிதம் அறிமுகம்
மெய் எண்களின் அமைப்பு
மட்டு மதிப்பு
நேரிய அசமன்பாடுகள்
இருபடி சார்புகள்
பல்லுறுப்பு சார்புகள்
விகிதமுறு சார்புகள்
அடுக்குகளும் படி மூலங்களும்
மடக்கை
வாழ்க்கை சூழலில் இயற்கணிதத்தின் பயன்பாடுகள்
3 முக்கோணவியல் அறிமுகம்
அடிப்படை முடிவுகளின் மீள் பார்வை
ஆரையன் அளவு
முக்கோணவியல் சார்புகளும் அதன் பண்புகளும்
முக்கோணங்களின் முற்றொருமைகள்
முக்கோணவியல் சமன்பாடுகள்
முக்கோணத்தின் பண்புகள்
முக்கோணத்தின் பயன்பாடுகள்
நேர்மாறு முக்கோணவியல் சார்புகள்
4 சேர்ப்பியல் மற்றும் கணித தொகுத்தறிதல் அறிமுகம்
எண்ணுதலின் அடிப்படை கொள்கைகள்
காரணீயப் பெருக்கம்
வரிசை மாற்றங்கள்
சேர்வுகள்
கணித தொகுத்தறிதல்
5 ஈருறுப்பு தேற்றம், தொடர்முறைகள் மற்றும் தொடர்கள் அறிமுகம்
ஈருறுப்புத் தேற்றம்
ஈருறுப்புத் தேற்றத்தின் குறிப்பிட்ட வகைகள்
முடிவுறு தொடர்முறைகள்
முடிவுறு தொடர்கள்
முடிவுறாத் தொடர் முறைகள் மற்றும் தொடர்கள்
6 இருபரிமாண பகுமுறை வடிவியல் அறிமுகம்
ஒரு புள்ளியின் நியமப்பாதை
நேர்க்கோடுகள்
இரு நேர்க்கோடுகளுக்கு இடைப்பட்ட கோணம்
இரட்டை நேர்க்கோடுகள்
7 அணிகளும் அணிக்கோவைகளும் அறிமுகம்
அணிகள்
அணிக்கோவைகள்
8 வெக்டர் இயற்கணிதம் அறிமுகம்
திசையிலிகள் மற்றும் வெக்டர்கள்
வெக்டரைக் குறிப்பிடும் முறை மற்றும் வெக்டர்களின் வகைகள்
வெக்டர்களின் மீதான இயற்கணிதம்
நிலை வெக்டர்கள்
வெக்டரை கூறுகளாகப் பிரித்தல்
திசை கொசைன்கள் மற்றும் திசை விகிதங்கள்
வெக்டர்களின் பெருக்கம்
9 வகை நுண்கணிதம்எல்லைகள் மற்றும் தொடர்ச்சித் தன்மை அறிமுகம்
எல்லைகள்
தொடர்ச்சித் தன்மை
10 வகை நுண்கணிதம்வகைமை மற்றும் வகையிடல் முறைகள் அறிமுகம்
வகையிடுதலின் கருத்தாக்கம்
வகைமை மற்றும் தொடர்ச்சி
வகையிடல் விதிகள்
11 தொகை நுண்கணிதம் அறிமுகம்
நியூட்டன் – லிபினிட்ஸ் தொகையிடல்
தொகையிடலின் அடிப்படை விதிகள்
f(ax + b) (நேரிய வடிவிலுள்ள தொகைச் சார்பு) வடிவம்
தொகையிடலின் பண்புகள்
எளிய பயன்பாடுகள்
தொகை காண வழிமுறைகள்
12 நிகழ்தகவு கோட்பாடு-ஓர் அறிமுகம் அறிமுகம்
அடிப்படை வரையறைகள்
முடிவுறு கூறுவெளி
நிகழ்தகவு
நிகழ்தகவின் சில அடிப்படைத் தேற்றங்கள்
சார்புநிலை நிகழ்தகவு
ஒரு நிகழ்ச்சியின் கூட்டு நிகழ்தகவு
பேயீஸ்-ன் தேற்றம்

தமிழ்நாடு சமச்சீர் கல்வி 11 ஆம் வகுப்பு இயற்பியல் பாடத்திட்டம்:

11 ஆம் வகுப்பில் அறிவியலைப் பாடமாகப் படித்த மாணவர்கள் அதன் அனைத்துப் பிரிவுகளிலும் தேர்ச்சிப் பெற வேண்டும். மாணவர்கள் ஒவ்வொரு பிரிவையும் முழுமையாகப் பயிற்சி செய்வது முக்கியம். இயற்பியல் கடினமானது என்பதைக் கருத்தில் கொண்டு, மாணவர்கள் நன்கு தயாராக வேண்டும். 

இயற்பியலுக்குத் தயாராகும் போது, ​​மாணவர்கள் கோட்பாடு பகுதி மட்டுமல்லாமல், செய்முறைத் தேர்வு மற்றும் மூலத்தோன்றல்களையும் நன்கு கற்க வேண்டும்.

11 ஆம் வகுப்பு சமச்சீர் கல்வி இயற்பியலுக்கான பாடத்திட்டம் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.

அலகு அத்தியாய பெயர் முக்கிய தலைப்புகள்
1 இயல் உலகத்தின் தன்மையும் அளவீட்டியலும் அறிமுகம்
சமூகம் மற்றும் தொழில்நுட்பத்துடன் இயற்பியலின் தொடர்பு
அளவீட்டியல்
அடிப்படை அளவுகளை அளவிடுதல்
பிழைகளின் தேற்றம்
முக்கிய எண்ணுருக்கள்
பரிமாணங்களின் பகுப்பாய்வு
2 இயக்கவியல் அறிமுகம்
நிலைமம் மற்றும் இயக்கத்தின் கருத்து
வெக்டார் இயற்கணிதத்தின் அடிப்படை கருத்து
வெக்டாரின் கூறுகள்
ஸ்கேலார் மதிப்புடன் வெக்டாரை பெருக்குதல்
நிலை வெக்டார்
தொலைவு மற்றும் இடப்பெயர்ச்சி
வகைக்கெழு நுண்கணிதம்
தொகையிடல் நுண்கணிதம்
ஒரு திசையில் இயக்கம்
எறிபொருளின் இயக்கம்
3 இயக்க விதிகள் அறிமுகம்
நியூட்டன் விதிகள்
நியூட்டன் விதிகளின் பயன்பாடுகள்
லாமியின் தேற்றம்
மொத்த நேர்கோட்டு உந்த மாறா விதி
உராய்வு
வட்ட இயக்கத்தின் இயக்க விசையியல்
4 வேலை, ஆற்றல் மற்றும் திறன் அறிமுகம்
ஆற்றல்
திறன்
மோதல்கள்
5 துகள்களாலான அமைப்பு மற்றும்திண்மப் பொருட்களின் இயக்கம் அறிமுகம்
திருப்பு விசை மற்றும் கோண உந்தம்
திண்மப்பொருட்களின் சமநிலை
நிலைமத் திருப்புத்திறன்
சுழல் இயக்கவியல்
உருளும் இயக்கம்
6 ஈர்ப்பியல் அறிமுகம்
ஈர்ப்பு புலமும், ஈர்ப்பு தன்னிலை ஆற்றலும்
புவியின் ஈர்ப்பு முடுக்கம்
விடுபடு வேகம் மற்றும் சுற்றியக்க வேகம்
வானியல் பற்றிய அடிப்படைக் கருத்துகள்
7 பருப் பொருளின் பண்புகள் அறிமுகம்
பருப்பொருளின் பல்வேறு நிலைகளின் நுண்ணிய புரிதல்
பாய்மங்கள்
பாகுநிலை
பரப்பு இழுவிசை
பெர்னௌலியின் தேற்றம்
8 வெப்பமும் வெப்ப இயக்கவியலும் வெப்பம் மற்றும் வெப்பநிலை
பருப்பொருளின் வெப்பப்பண்புகள்
வெப்ப மாற்றத்தின் விதிகள்
வெப்ப இயக்கவியல்
வெப்ப இயக்கவியலின் சுழி விதி
அக ஆற்றல்
வாயுவின் தன்வெப்ப ஏற்புத்திறன்
வெப்ப இயக்கவியல் செயல்பாடுகள்
வெப்ப இயந்திரம்
குளிர்சாதனப்பெட்டி
9 வாயுக்களின் இயக்கவியற் கொள்கை இயக்கவியற் கொள்கை
வாயு ஒன்றினால் ஏற்படும் அழுத்தம்
சுதந்திர இயக்கக் கூறுகள்
ஆற்றல் சமபங்கீட்டு விதி
சராசரி மோதலிடைத் தூரம்
பிரெளனியன் இயக்கம்
10 அலைவுகள் அறிமுகம்
தனிச்சீரிசை இயக்கம்
கோண சீரிசை இயக்கம்
நேர்போக்கு சீரிசை அலையியற்றி
தனிச்சீரிசை இயக்கத்தின் ஆற்றல்
அலைவுகளின் வகைகள்
11 அலைகள் அறிமுகம்
அலை இயக்கத்தில் பயன்படும் பதங்கள் மற்றும் வரையறைகள்
வெவ்வேறு ஊடகங்களில் அலையின் திசைவேகம்
ஒலி அலையின் பரவல்
ஒலி அலைகளின் எதிரொலிப்பு
முன்னேறும் அல்லது பயணிக்கும் அலைகள்
மேற்பொருந்துதல் தத்துவம்
நிலையான அலைகள்
செறிவு மற்றும் உரப்பு
காற்று தம்பத்தின் அதிர்வு
டாப்ளர் விளைவு

தமிழ்நாடு சமச்சீர் கல்வி 11 ஆம் வகுப்பு வேதியியல் பாடத்திட்டம்:

11 ஆம் வகுப்பில் வேதியியல் மிகவும் முக்கியமான பாடமாகும். தனிமங்களின் வேதி சூத்திரங்களை மாணவர்கள் நன்கு அறிந்திருப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும், வேதியியல் சமன்பாடுகளை எவ்வாறு தீர்ப்பது என்பது தெரிந்திருக்க வேண்டும். 

11 ஆம் வகுப்பு வேதியியல் பாடத்திட்டத்திற்கான விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

அத்தியாய எண் அத்தியாய பெயர் தலைப்புகள்
1 வேதியியலின் அடிப்படைக் கருத்துக்கள் மற்றும் வேதிக் கணக்கீடுகள் வேதியியல்-வாழ்வின் மையம்
பருப்பொருட்களின் வகைகள்
ஆக்சிஜனேற்ற – ஒடுக்க வினை
2 அணுவின் குவாண்டம் இயக்கவியல் மாதிரி அணு மாதிரி – அறிமுகம்
ஹெய்சன்பர்க்கின் நிச்சயமற்றத் தன்மை கோட்பாடு
ஷ்ரோடிங்கர் சமன்பாடு
குவாண்டம் எண்கள்
ஆஃபா தத்துவம்
3 தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு தனிமங்களின் வகைகள்
ஆவர்த்தன பண்புகளில் காணப்படும் ஆவர்த்தனத் தொடர்பு
செயலுறு அணுக்கரு மின்சுமை
இணைதிறன் அல்லது ஆக்சிஜனேற்ற நிலை
4 ஹைட்ரஜன் அறிமுகம்
ஹைட்ரஜன் தயாரித்தல்
ஹைட்ரஜனின் பண்புகள்
கடின நீர்
5 கார மற்றும் காரமண் உலோகங்கள் S-தொகுதி தனிமங்கள்
கார உலோகங்கள்
எலக்ட்ரான் அமைப்பு
அணு மற்றும் அயனி ஆரம்
டிஜிட்டல் தொடர்பு
ஹாலைடுகள்
சோடியம் ஹைடிராக்சைடு
காரமண் உலோகங்கள்
6 வாயு நிலைமை அறிமுகம்
வாயு விதிகள்
நல்லியல்பு வாயு சமன்பாடு
டால்டன் விதியின் பயன்பாடுகள்
வாயுக்களை திரவமாக்கல்
7 வெப்ப இயக்கவியல் அறிமுகம்
அமைப்பு மற்றும் சூழல்
வெப்பம்மாறாச் செயல்முறை
வேலை
வெப்ப வேதிச்சமன்பாடுகள்
மோலார் வெப்ப ஏற்புத் திறன்கள்
8 இயற் மற்றும் வேதிச்சமநிலை அறிமுகம்
இயற் மற்றும் வேதிச்சமநிலை
ஒருபடித்தான மற்றும் பலபடித்தான சமநிலைகள்
நிறைதாக்க விதி
லே-சாட்டெய்லர் தத்துவம்
வாண்ட்-ஹாப் சமன்பாடு
9 கரைசல்கள் அறிமுகம்
கரைசல்களின் வகைகள்
கரைபொருட்களின் கரைத்திறன்
நீர்மத்தின் நீராவி அழுத்தம்
நீர்ம கரைசல்களின் நீராவி அழுத்தம்
நல்லியல்பு மற்றும் இயல்புக் கரைசல்கள்
தொகை சார் பண்புகள்
சவ்வூடு பரவல் மற்றும் சவ்வூடுபரவல் அழுத்தம்
10 வேதிப்பிணைப்புகள் சவ்வூடு பரவல் மற்றும் சவ்வூடுபரவல் அழுத்தம்
வேதிப்பிணைப்புகளின் வகைகள்
அயனி பிணைப்பு
ஈதல் சகப்பிணைப்பு
பிணைப்பு அளவீட்டுக் காரணிகள்
இணைதிற பிணைப்புக் கொள்கை
ஆர்பிட்டால் இனக்கலப்பு
இனக்கலப்பாதல்
11 கரிம வேதியியலின் அடிப்படைகள் அறிமுகம்
கரிம சேர்மங்களை வகைப்படுத்துதல்
அரோமேட்டிக் சேர்மங்களுக்குப் பெயரிடுதல்
புறவெளி மாற்றியம்
கரிம சேர்மங்களிலுள்ள தனிமங்களை கண்டறிதல்
கரிம சேர்மங்களை தூய்மைப்படுத்துதல்
12 கரிம வேதி வினைகளின் அடிப்படை கருத்துக்கள் அறிமுகம்
தூண்டல் விளைவு
அதி
உள்ளடங்காதன்மை
வினைச்செயல் தொகுதிகளை மாற்றியமைத்தல்
13 ஹைட்ரோகார்பன்கள் அறிமுகம்
ஆல்கேன்கள்
வேதியியல் பண்புகள்
ஆல்கைன்
அரோமேட்டிக் ஹைட்ரோகார்பன்
14 ஹேலோ ஆல்கேன்கள் மற்றும் ஹேலோ அரீன்கள் அறிமுகம்
கரிம ஹாலஜன் சேர்மங்களை வகைப்படுத்துதல்
ஹேலோ ஆல்கேன்கள்
கரிம உலோகச் சேர்மம்
15 சுற்றுசூழல் வேதியியல் அறிமுகம்
சுற்றுச்சூழல் மாசுபாடு
நீர் மாசுபாட்டின் காரணிகள்

தமிழ்நாடு வாரியம் சமச்சீர் கல்வி வகுப்பு 11 தாவரவியல் பாடத்திட்டம்

தமிழ்நாடு 11 ஆம் வகுப்பின் தாவரவியல் பாடத்திட்டம் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன. தாவரவியலில் நல்ல மதிப்பெண்களைப் பெற அனைத்து தலைப்புகளையும் விரிவாகப் படிக்கவும்.

அத்தியாய எண் அத்தியாய தலைப்பு அத்தியாய பெயர் தலைப்புகள்







1






உயிரி உலகின் பன்முகத்தன்மை



உயிரி உலகம்
உயிரினங்களின் பொதுப் பண்புகள்
வைரஸ்கள்
உயிரி உலகத்தின் வகைப்பாடு
பாக்டீரியாக்கள்
பூஞ்சைகள்
2 தாவர உலகம் தாவரங்களின் வகைப்பாடு
தாவரங்களின் வாழ்க்கைச் சுழற்சி வகைகள்
பாசிகள்
பிரையோஃபைட்கள்
டெரிடோஃபைட்கள்
ஜிம்னோஸ்பெர்ம்கள்
ஆஞ்சியோஸ்பெர்ம்கள்
3


தாவரப் புற அமைப்பியல் மற்றும் மூடுவிதைத்தாவர களின் வகைப்பாடு

உடலப் புறஅமைப்பியல்
வளரியல்பு
வாழிடம்
பூக்கும் தாவரத்தின் பாகங்கள்
வாழ் காலம்
வேரமைவு
தண்டமைவு
இலை
4 இனப்பெருக்கப் புறஅமைப்பியல் மஞ்சரி
மலர்
துணை பாகங்கள்
சூலகவட்டம்
பூச்சூத்திரம், மலர் வரைபடம் உருவாக்குதல்
கனி
விதை
5 வகைப்பாட்டியல் மற்றும் குழுமப் பரிணாமவகைப்பாட்டியல் வகைப்பாட்டியலும் குழுமப்பரிணாம வகைப்பாட்டியலும்
வகைப்பாட்டுப் படிநிலைகள்
சிற்றினக் கோட்பாடுகள் – புறத்தோற்றவழி, உயிரியவழி, இனப்பரிணாமவழி
பன்னாட்டுத் தாவரவியல் பெயர் சூட்டுச்சட்டம் (ICBN)
வகைப்பாட்டுத் துணைக்கருவிகள்
தாவரவியல் பூங்காக்கள்
உலர்தாவர வகை மாதிரி – தயாரிப்பும், பயன்களும்
தாவரங்களின் வகைப்பாடு
வகைப்பாட்டின் அவசியம்
வகைப்பாட்டின் வகைகள்
வகைப்பாட்டின் நவீன அணுகுமுறைகள்
கிளையியல் வகைப்பாடு
தேர்ந்தெடுத்த மூடுவிதைத்தாவரக் குடும்பங்கள்
6 செல் உயிரியல் மற்றும் உயிரி மூலக்கூறுகள் செல்: ஒரு வாழ்வியல் அலகு நுண்ணோக்கியல்
செல் கொள்கை
செல் வகைகள்
தாவரச் செல் மற்றும் விலங்கு செல்
செல் நுண்ணுறுப்புகள்
உட்கரு
கசையிழைகள்
7 செல் சுழற்சி உட்கருவின் பகுப்பு
செல் சுழற்சி
செல் பகுப்பு
8 உயிரி மூலக்கூறுகள் நீர்
முதன்மை மற்றும் இரண்டாம் நிலை வளர்சிதை மாற்றப்பொருட்கள்
கார்போஹைட்ரேட்டுகள்
லிப்பிடுகள்
புரதங்கள், வகைப்பாடு மற்றும் அமைப்பு
நொதிகள்
நியூக்ளிக் அமிலங்கள்
9 தாவர உள்ளமைப்பியல் திசு மற்றும் திசுத்தொகுப்பு ஆக்குத்திசுக்கள்
நிலைத்திசுக்கள்
திசுத் தொகுப்பின் அறிமுகம்.
திசுத் தொகுப்பின் அறிமுகம்.
அடிப்படை திசுத் தொகுப்பு
வாஸ்குலத் திசுத் தொகுப்பு
முதன் நிலை அமைப்பு ஒப்பீடு
10 இரண்டாம் நிலை வளர்ச்சி இருவிதையிலை தாவரத் தண்டில் இரண்டாம் நிலை வளர்ச்சி
இருவிதை யிலை தாவர வேரில் இரண்டாம் நிலை வளர்ச்சி
11 தாவர செயலியல் தாவரங்களில் கடத்து முறைகள் கடத்து முறைகளின் வகைகள்
செல்களுக்கு இடையே நடைபெறும் கடத்துமுறைகள்
தாவர – நீர் தொடர்புகள்
நீரின் உள்ளெடுப்பு
சாறேற்றம்
நீராவிப்போக்கு
கரிம கரைபொருட்களின் இடப்பெயர்ச்சி
கனிமங்களின் உள்ளெடுப்பு
12 கனிம ஊட்ட ம் கனிமங்களின் வகைப்பாடு.
பெருமூலங்களின் செயல்பாடுகள், உள்ளெடுக்கப்பபடும் முறைகள் மற்றும் பற்றாக்குறை அறிகுறிகள்
நுண் ஊட்டமூலங்களின் செயல்பாடுகள், உள்ளெடுக்கப்படும் முறைகள், பற்றாக்குறை அறிகுறிகள்
பற்றாக்குறை நோய்கள் மற்றும் அறிகுறிகள்
தனிமங்களின் தீர்வுக்கட்ட செறிவு மற்றும் நச்சுத்தன்மை .
நீர்ஊடக வளர்ப்பு மற்றும் காற்றூடக வளர்ப்பு
நைட்ரஜன் நிலைநிறுத்தம்.
நைட்ரஜன் சுழற்சி மற்றும் நைட்ரஜன் வளர்சிதை மாற்றம்
சிறப்பு வகை உணவூட்டம்
13 ஒளிச்சேர்க்கை வரையறை,முக்கியத்துவம் மற்றும் ஒளிச்சேர்க்கை நடைபெறும் இடம்
ஒளிச்சேர்க்கை நிறமிகள்
மின் காந்த கதிர் வீச்சு நிறமாலை
ஒளிச்சேர்க்கை அலகு
ஒளி ஈர்ப்பு நிறமாலை மற்றும் ஒளிசெயல் திறன் நிறமாலை
எமர்சன் ஆய்வுகள் மற்றும் ஹில்வினை
ஒளிச்சேர்க்கையின் நவீன கோட்பாடுகள்
ஒளிவினையின் ஆக்ஸிஜனேற்ற நிலை
ஒளிவினையின் ஒளிவேதி நிலை
ஒளி பாஸ்பரிகரணம்
இருள் வினை (அ) C3 சுழற்சி
ஹாட்ச் மற்றும் ஸ்லாக் (அ) C4 சுழற்சி
CAM சுழற்சி (அ) கிராசுலேசியன் அமில வளர் சிதை மாற்றம்
ஒளிச் சுவாசம் (அ) C2 சுழற்சி
ஒளிச்சேர்க்கையைப் பாதிக்கும் காரணிகள்
பாக்டீரியங்களின் ஒளிச்சேர்க்கை
14 சுவாசித்தல் வாயு பரிமாற்றம்
ATP அமைப்பு
ஒடுக்க ஆக்ஸிஜனேற்ற வினைகள்
சுவாசித்தலின் வகைகள்
சுவாசித்தலின் படிநிலைகள்
சுவாச ஈவு
காற்றில்லா சுவாசித்தல்
பென்டோஸ் ஃபாஸ்பேட் வழித்தடம்.
15 தாவர வளர்ச்சியும் படிம வளர்ச்சியும் தாவர வளர்ச்சியின் பண்புகள்
தாவர வளர்ச்சி ஒழுங்குபடுத்திகள்
ஒளிக்காலத்துவம்
தட்பப்பதனம்
விதை முளைத்தல் மற்றும் விதை உறக்கம்
மூப்படைதல்

தமிழ்நாடு வாரியம் சமச்சீர் கல்வி வகுப்பு 11 விலங்கியல் பாடத்திட்டம்:

தமிழ்நாடு 11 ஆம் வகுப்பின் விலங்கியல் பாடத்திட்டம் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன. விலங்கியலில் நல்ல மதிப்பெண்களைப் பெற அனைத்து தலைப்புகளையும் விரிவாகப் படிக்கவும்.

அத்தியாய எண் அத்தியாய பெயர் தலைப்புகள்
1 உயிருலகம் உயிரின உலகின் பல்வகை தன்மை
வகைப்பாட்டின் தேவை
வகைப்பாட்டியல் மற்றும் தொகுப்பமைவியல்
வகைப்பாட்டு படிநிலைகள்
சிற்றின கோட்பாடு
வகைப்பாட்டு கல்விக்கான கருவிகள்
2 விலங்குலகம் வகைப்பாட்டின் அடிப்படைகள்
விலங்குலக வகைப்பாடு
முதுகுநாணற்றவை
முதுகுநாணுடையவை
3 திசு அளவிலான கட்டமைப்பு விலங்கு திசுக்கள்
எபிதீலியத் திசு
இணைப்புத்திசு
தசைத்திசு
நரம்புத்திசு
4 விலங்குகளின் உறுப்பு மற்றும் உறுப்பு மண்டலங்கள் மண்புழு -லாம்பிட்டோ மாரிட்டீ
கரப்பான் பூச்சி – பெரிப்பிளனெட்டா அமெரிக்கானா
தவளை – ரானா ஹெக்ஸாடேக்டைலா
5 செரித்தல் மற்றும் உட்கிரகித்தல் செரிமான மண்டலம்
உணவு செரித்தல் மற்றும் செரிமான
நொதிகளின் பங்கு
புரதம், கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புகள் ஆகியவை உட்கிரகித்தல் மற்றும் தன்மயமாதல்
கழிவு வெளியேற்றம்
கார்போஹைட்ரேட்கள், புரதங்கள் மற்றும் கொழுப்புகளின் கலோரி மதிப்பு
உணவூட்ட மற்றும் செரிமானக் குறைபாடுகள்
6 சுவாசம் சுவாசத்தின் பணிகள்
பல்வேறு உயிரிகளில் காணப்படும் சுவாச உறுப்புகள்
சுவாசம் நடைபெறும் முறை
வாயு பரிமாற்றம்
வாயுக்கள் கடத்தப்படுதல்
சுவாசத்தை நெறிப்படுத்துதல்
ஆக்ஸிஜன் கடத்துதலில் உள்ள சிக்கல்கள்
புகை பிடித்தலின் தீய விளைவுகள்
7 உடல் திரவங்கள் மற்றும் சுற்றோட்டம் உடல் திரவங்கள்
இரத்தக்குழாய்கள் – தமனிகள், சிரைகள் மற்றும் இரத்த நுண்நாளங்கள்
சுற்றோட்டப் பாதைகள்
மனிதச் சுற்றோட்ட மண்டலம்
இரட்டை சுற்றோட்டம்
இதயச்செயல்களை நெறிப்படுத்துதல்
சுற்றோட்ட மண்டலக் கோளாறுகள்
இதய நுரையீரல் உயிர்ப்பித்தல்
8 கழிவு நீக்கம் கழிவு நீக்க முறைகள்
மனிதனின் கழிவு நீக்க மண்டலம்
மனிதனில் சிறுநீர் உருவாகும் முறை
சிறுநீரகத்தின் பணிகளை நெறிப்படுத்துதல்
சிறுநீர் வெளியேற்றம்
கழிவு நீக்கத்தில் பிற உறுப்புகளின் பங்கு
கழிவு நீக்க மண்டலக் குறைபாடுகள்
இரத்த ஊடுபகுப்பு
9 இடப்பெயர்ச்சி மற்றும் இயக்கம் இயக்கங்களின் வகைகள்
தசைகளின் வகைகள்
எலும்புத்தசை
தசை சுருக்கப் புரதங்களின் அமைப்பு
தசை சுருங்கும் விதம்
எலும்புத் தசை சுருக்க வகைகள்
சட்டக மண்டலம் மற்றும் அதன் பணிகள்
அச்சுச்சட்டகம்
இணையுறுப்புச் சட்டகம்
மூட்டுகளின் வகைகள்
தசை மண்டல மற்றும் எலும்பு மண்டலக்குறைபாடுகள்
தொடர் உடற்பயிற்சியின் நன்மைகள்
10 நரம்பு கட்டுப்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு நரம்பு மண்டலம்
மனித நரம்பு மண்டலம்
நியூரான் – நரம்பு மண்டலத்தின் அமைப்பு மற்றும் செயல் அலகு
மைய நரம்பு மண்டலம்
அனிச்சை செயல் மற்றும் அனிச்சை வில்
உணர்வைப் பெறுதல் மற்றும் செயல் முறையாக்கம்
11 வேதிய ஒருங்கிணைப்பு நாளமில்லாச் சுரப்பிகள் மற்றும் ஹார்மோன்கள்
மனித நாளமில்லாச்சுரப்பி மண்டலம்
நாளமில்லாச் சுரப்பிகளின் மிகை மற்றும் குறை செயல்பாடுகள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய கோளாறுகள்
ஹார்மோன்கள் செயல்படும் விதம்
12 வணிக விலங்கியலின் போக்குகள் விலங்கியலின் எதிர்கால வாய்ப்புகள்
மண்புழு வளர்ப்பு
பட்டுப்புழு வளர்ப்பு
தேனீ வளர்ப்பு
அரக்குப் பூச்சி வளர்ப்பு
நீர்உயிரி – பயிர் வளர்ப்பு
நீர்வாழ் உயிரி வளர்ப்பு
விலங்கு வளர்ப்பு மற்றும் மேலாண்மை

தமிழ்நாடு சமச்சீர் கல்வி 11 ஆம் வகுப்பு பொருளியல் பாடத்திட்டம்:

அத்தியாயம் பாடப்பொருள்
அத்தியாயம் 1 நுண்ணினப் பொருளியல்: ஓர் அறிமுகம்
அத்தியாயம் 2 நுகர்வுப் பகுப்பாய்வு
அத்தியாயம் 3 உற்பத்தி பகுப்பாய்வு
அத்தியாயம் 4 செலவு மற்றும் வருவாய் பற்றிய ஆய்வு
அத்தியாயம் 5 அங்காடி அமைப்பும் விலை நிர்ணயமும்
அத்தியாயம் 6 பகிர்வு பற்றிய ஆய்வு
அத்தியாயம் 7 இந்தியப் பொருளாதாரம்
அத்தியாயம் 8 இந்தியப் பொருளாதாரம் சுதந்திரத்திற்கு முன்னரும் பின்னரும்
அத்தியாயம் 9 இந்தியாவின் மேம்பாடு அனுபவங்கள்
அத்தியாயம் 10 ஊரக பொருளாதாரம்
அத்தியாயம் 11 தமிழ்நாட்டுப் பொருளாதாரம்
அத்தியாயம் 12 பொருளியலுக்கான கணித முறைகள்

தமிழ்நாடு சமச்சீர் கல்வி 11 ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் பாடத்திட்டம்:

அலகு தலைப்பு
1 கணக்கியல் அறிமுகம்
2 கணக்கியலின் கருத்துக் கட்டமைப்பு
3 முதன்மைப் பதிவேடுகள்
4 பேரேடு
5 இருப்பாய்வு
6 துணை ஏடுகள் – I
7 துணை ஏடுகள் – II
8 வங்கிச் சரிகட்டும் பட்டியல்
9 பிழைத் திருத்தம்
10 தேய்மானக் கணக்கியல்
11 முதலின மற்றும் வருவாயின நடவடிக்கைகைள்
12 தனியார் வணிகரின் இறுதிக் கணக்குகள் – I
13 தனியார் வணிகரின் இறுதிக் கணக்குகள் – I I
14 கணினிமயக் கணக்கியல்

தமிழ்நாடு சமச்சீர் கல்வி 11 ஆம் வகுப்பு வரலாறு பாடத்திட்டம்:

அலகு பொருளடக்கம்
1 பண்டைய இந்தியா: தொடக்கம் முதல் சிந்து நாகரிகம் வரை
2 பண்டைய இந்தியா:செம்புக்கால, பெருங்கற்கால, இரும்புக்கால, வேதகாலப் பண்பாடுகள்
3 பிரதேச முடியரசுகளின் தோற்றமும் புதிய மதப்பிரிவுகள் உருவாக்கமும்
4 அரசு மற்றும் பேரரசு உருவாக்கம்
5 தென்னிந்தியாவில் சமுதாய உருவாக்கம்
6 மெளரியருக்குப் பிந்தைய அரசியல் அமைப்பும் சமூகமும்
7 குப்தர்
8 ஹர்ஷர் மற்றும் பிரதேச முடியரசுகளின் எழுச்சி
9 தென்னிந்தியாவில் பண்பாட்டு வளர்ச்சி
10 அரபியர், துருக்கியரின் வருகை
11 பிற்கால சோழர்கள், பாண்டியர்கள்
12 பாமினி மற்றும் விஜயநகர அரசுகள்
13 பண்பாட்டு ஒருமைப்பாடு : இந்தியாவில் பக்தி இயக்கம்
14 முகலாயப் பேரரசு
15 மராத்தியர்
16 ஐரோப்பியர் வருகை
17 ஆங்கிலேயர் ஆட்சியின் விளைவுகள்
18 ஆங்கிலேய ஆட்சிக்குத் தொடக்ககால எதிர்ப்புகள்
19 நவீனத்தை நோக்கி
காலக்கோடு
கலைக்களஞ்சியம்

தமிழ்நாடு வாரியம் சமச்சீர் கல்வி 11 ஆம் வகுப்பு – தமிழ் பாடத்திட்டம்:

பருவம் I

வ.எண் பொருண்மை/இயல் பாடத்தலைப்புகள்
1. மொழி



என்னுயிர் என்பேன்
உரைநடை பேச்சு மொழியும் கவிதை மொழியும்
செய்யுள் யுகத்தின் பாடல்*
நன்னூல் பாயிரம்
துணைப்பாடம் ஆறாம் திணை
இலக்கணம் மொழி முதல் இறுதி எழுத்துகள்
2. இயற்கை, வேளாண்மை,
சுற்றுச்சூழல்





மாமழை போற்றுதும்
உரைநடை இயற்கை வேளாண்மை
செய்யுள் ஏதிலிக்குருவிகள்
திருமலை முருகன் பள்ளு
ஐங்குறுநூறு
துணைப்பாடம் யானை டாக்டர்
இலக்கணம் மெய்ம்மயக்கம்
3. பண்பாடு



பீடு பெற நில்
உரைநடை மலை இடப்பெயர்கள்: ஓர் ஆய்வு
செய்யுள் காவடிச் சிந்து
குறுந்தொகை*
புறநானூறு
துணைப்பாடம் வாடிவாசல்
இலக்கணம் பகுபத உறுப்புக்கள்
வாழ்வியல் திருக்குறள்*
4. அறிவியல்/ தொழில்நுட்பம்

இனியொரு விதி செய்வோம்
உரைநடை தலைமைச் செயலகம்
செய்யுள் விஞ்ஞானி
நீலகேசி*
புறநானூறு*
துணைப்பாடம் இனிக்கும் இன்சுலின்
இலக்கணம் புணர்ச்சி விதிகள்
5. கல்வி

கேடில் விழுச்செல்வம்
உரைநடை தமிழகக் கல்வி வரலாறு
செய்யுள் பிள்ளைக்கூடம்
நற்றிணை
தொல்காப்பியம் – சிறப்பு பாயிர உரை விளக்கப்பாடல்
துணைப்பாடம் இதழாளர் பாரதி
இலக்கணம் படைப்பாக்க உத்திகள்
வ.எண் பொருண்மை/இயல் பாடத்தலைப்புகள்
6. நாகரிகம்/தொழில்/வணிகம்



நாளெல்லாம் வினைசெய்
உரைநடை ஆனந்தரங்கர் நாட்குறிப்பு
செய்யுள் சீறாப்புராணம்
அகநானூறு
துணைப்பாடம் பிம்பம்
இலக்கணம் பா இயற்றப் பழகலாம்
வாழ்வியல் திருக்குறள்*
7. கலை/ அழகியல்/ புதுமைகள்




பல்கலை நிறுவு
உரைநடை காலத்தை வென்ற கலை
செய்யுள் ஆத்மாநாம் கவிதைகள்
குற்றாலக் குறவஞ்சி
திருச்சாழல்
துணைப்பாடம் இசைத்தமிழர் இருவர்
இலக்கணம் கலைச்சொல்லாக்கம்
8. நாடு/ சமூகம் / நிருவாகம்



வையத் தலைமை கொள்
உரைநடை காற்றில் கலந்த பேராசை
செய்யுள் புரட்சிக்கவி
பதிற்றுப்பத்து
துணைப்பாடம் சிந்தனைப் பட்டிமன்றம்
இலக்கணம் ஆக்கப்பெயர்கள்
9. அறம்/ தத்துவம் / சிந்தனை
மெய்ப்பொருள் காண்பது அறிவு
உரைநடை சித்தர் உலகம்
செய்யுள் ஜப்பானிய ஹைக்கூ
காவியம்
தொலைந்து போனவர்கள்
வில்லிபாரதம்
துணைப்பாடம் காஞ்சனை – முன்னுரை
இலக்கணம் நிறுத்தக்குறிகள்
10. மனிதம்/ ஆளுமை

யாரையும் மதித்து வாழ்
உரைநடை தாகூரின் கடிதங்கள்
செய்யுள் ஒவ்வொரு புல்லையும்
மனோன்மணீயம்
துணைப்பாடம் செல்வி
இலக்கணம் மெய்ப்புத் திருத்தக் குறியீடுகள்
வாழ்வியல் திருக்குறள்

தமிழ்நாடு 12 ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்:

கே 1:  தமிழ்நாடு வாரியம் வகுப்பு 12 பாடத்திட்டத்தை மாணவர்கள் எங்கு பதிவிறக்கம் செய்யலாம்?

ப : மாணவர்கள் வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து தமிழ்நாடு 11 ஆம் வகுப்பு பாடத்திட்டத்தை பதிவிறக்கம் செய்யலாம். 

கே 2: தமிழ்நாடு 12 ஆம் வகுப்பு பாடத்திட்டம் இலவசமாக கிடைக்குமா?

ப: ஆம். தமிழ்நாடு வாரியத்தின் 12 ஆம் வகுப்பு பாடத்திட்டத்தின் பதிவிறக்க இணைப்புகள் EMBIBE மற்றும் வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இலவசமாகக் கிடைக்கின்றன.

கே 3: தமிழ்நாடு வாரியத் சமச்சீர் கல்வி தேர்வுகளை எந்த அமைப்பு நடத்துகிறது?

ப: தமிழ்நாடு வாரியத் தேர்வுகளை அரசுத் தேர்வுகள் இயக்ககம்(DGE) நடத்துகிறது.

கே.4: தமிழ்நாடு வாரியம் சமச்சீர் கல்வி 12 ஆம் வகுப்பில் உள்ள அத்தியாயங்கள் எளிதானதா?

ப: தமிழ்நாடு மாநில வாரியத்தின் 12 ஆம் வகுப்பு பாடத்திட்டம், மாணவர்கள் தலைப்புகளைப் பற்றிய கருத்தியல் புரிதலைப் பெற்று, அனைத்து தலைப்புகளையும் நன்கு புரிந்து, இறுதித் தேர்வுக்கு முன் பயிற்சித் தாள்களைத் தீர்த்தால் எளிதாகிறது.

தமிழ்நாடு வாரியம் 11 ஆம் வகுப்பு பாடத்திட்டம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்தக் கட்டுரை உங்களுக்கு உதவியது என்று நம்புகிறோம். தமிழ்நாடு வாரியம் 11 ஆம் வகுப்பு தொடர்பான மேலும் தகவல்களுக்கு  Embibe-உடன் இணைந்திருங்கள்.

Embibe-யில் 3D கற்றல், புத்தகப் பயிற்சி, டெஸ்ட்கள் மற்றும் சந்தேகத் தீர்ப்பான்கள் மூலம் உங்கள் சிறந்ததை அடையுங்கள்