• எழுதியவர் Vignesh
  • கடைசியாக மாற்றப்பட்டது 24-08-2022

தமிழ்நாடு சமச்சீர் கல்வி வகுப்பு 12: தேர்வு முடிவுகள் 2023

img-icon

வகுப்பு 12 தேர்வு முடிவுகள் 2023: அரசுத் தேர்வுகள் இயக்ககம், தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் அனைத்து வகைப்பள்ளிகளில் பயின்று வரும் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களது கற்றல் அடைவினைத் துல்லியமாக அளவிடும் வகையில் பொதுத் தேர்வுகளை நடத்தி மிக முக்கிய மற்றும் நிரந்தர ஆவணமான மதிப்பெண் சான்றிதழ்களை மாணவர்களுக்கு வழங்கி உயர்கல்வி தொடர வழிவகுக்கிறது.

இந்த கட்டுரையில், தமிழ்நாடு சமச்சீர் கல்வி வகுப்பு 12 சமீபத்திய செய்திகள், தமிழ்நாடு மாநில வாரிய தேர்வு முடிவுகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய செய்திகள்  போன்ற அனைத்து முக்கிய தகவல்களையும் வழங்கியுள்ளோம். தமிழ்நாடு 12 ஆம் வகுப்பு முடிவுகளுக்காகக் காத்திருக்கும் மாணவர்கள் தேதிகள் மற்றும் பிற தொடர்புடைய தகவல்களை அறிய இந்தக் கட்டுரையைப் படிக்க வேண்டும். இந்தக் கட்டுரையைத் தொடர்ந்து படித்து, தமிழ்நாடு 12ஆம் வகுப்பு முடிவுகளைப் பெறுவதற்கான தற்காலிகத் தேதியைப் பெறுங்கள்.

தமிழ்நாடு சமச்சீர் கல்வி வகுப்பு 12 தேர்வு முடிவுகள் 2023: மேலோட்டம் 

தமிழ்நாடு கல்வி வாரியத்தால் நடத்தப்படும் 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு தேர்வுக்கு தேவையான அனைத்து விவரங்களும் கீழே உள்ள அட்டவணையில் காட்டப்பட்டுள்ளன.

இந்த அட்டவணை தேர்வின் மேலோட்டத்தை வழங்குகிறது, தேர்வு நடக்கும் காலம், பல்வேறு மொழி விருப்பங்கள் மற்றும் தமிழ்நாடு மாநில ஆணையத்தின் முக்கிய தேதிகள் போன்றவற்றை காட்டுகிறது.

விவரங்கள் விவரக்குறிப்புகள்
வாரியம் தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்ககம் (DGE)
தேர்வு 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு
தேர்வு நிலை மாநிலத் தேர்வு
தேர்வு நடத்தப்படும் ஊடகம் ஆப்லைன்
வருடம் 2023-2024
தேர்வு முடிவுகள் இணையதளம் dge.tn.gov.in
tnresults.nic.in
தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் ஊடகம் ஆன்லைன்

தமிழ்நாடு சமச்சீர் கல்வி வகுப்பு 12 தேர்வு முடிவுகள் 2023: தேதிகள் 

கலை, வணிகவியல் மற்றும் அறிவியல் பாடப்பிரிவுகளில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதிய தேர்வர்கள் அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தமிழ்நாடு வாரியம் சமச்சீர் கல்வி +2  முடிவுகளைப் பார்க்கலாம். மாணவர்கள் தமிழ்நாடு வாரியம் +2 தேர்வுகளுக்கான அட்டவணையை கீழே பார்க்கலாம்.

விவரங்கள் தேதி
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 2023 மே (தற்காலிகமானது)
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 2023 ஜூன் (தற்காலிகமானது)
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 2023 (மறுகூட்டலுக்குப் பிறகு) ஜூன் (தற்காலிகமானது)
12ஆம் வகுப்பு துணைத்தேர்வு 2023 ஜூலை (தற்காலிகமானது)
12ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் 2023 ஆகஸ்ட் (தற்காலிகமானது)

தமிழ்நாடு வாரியம் HSC 2023 முடிவை ஆன்லைனில் எவ்வாறு பார்ப்பது?

தமிழ்நாடு வாரியத்தின் சமச்சீர் கல்வி 12 ஆம் வகுப்பு முடிவுகள் தமிழ்நாடு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும். வணிகம், கலை மற்றும் அறிவியல் பாடப்பிரிவுகளில் தேர்வு எழுதும் சமச்சீர் கல்வி தேர்வர்கள் பின்வரும் வழிமுறைகளை பின்பற்றுவன் மூலம் தங்கள் முடிவுகளை பார்க்கலாம்:

படி 1: தமிழ்நாடு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான tnresults.nic.in க்குச்    செல்லவும்.

படி 2: தமிழ்நாடு 12 ஆம் வகுப்பு சமச்சீர் வாரியத் தேர்வு முடிவுகள் 2023 க்காக வழங்கப்பட்ட இணைப்பைக் கிளிக் செய்யவும்.

படி 3: தேர்வு முடிவு என்னும்  இணைப்பைக் கிளிக் செய்து உங்கள் தமிழ்நாடு வாரிய  12ஆம் வகுப்பு பதிவு எண்ணை உள்ளிடவும்.

படி 4: தமிழ்நாடு வாரியம் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளைப் பதிவிறக்கவும்.

தமிழ்நாடு சமச்சீர் கல்வி வகுப்பு 12 தேர்வு முடிவுகள் 2023-ஐ எங்கு பார்ப்பது?

தமிழ்நாடு சமச்சீர் கல்வி வகுப்பு 12 கலை, வணிகம் மற்றும் அறிவியல் பிரிவுகளுக்கான தேர்வு முடிவுகள் அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும். TN HSC தேர்வு முடிவுகள் 2023ஐப் பார்க்க, தேர்வர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளங்களில் சென்று பார்த்துக்  கொள்ளலாம்.

தமிழ்நாடு வகுப்பு 12  விண்ணப்பப் படிவம்: சமச்சீர் பள்ளிகளின் பட்டியல் 

தமிழ்நாடு மாநில வாரியத்தின் கீழ் வரும் சமச்சீர் கல்வி நிறுவனங்களின் பட்டியலை கீழே வழங்கியுள்ளோம்: 

S.NO பள்ளி வாரியம் பள்ளியின் பெயர்
1 மாநில வாரியம் சிந்தாதிரிப்பேட்டை ஆண்கள் மேல்நிலைப் பள்ளி
2 மாநில வாரியம் குருநானக் மெட்ரிக் சீனியர் மேல்நிலைப் பள்ளி
3 மாநில வாரியம் கே.சி. சங்கரலிங்க நாடார் மேல்நிலைப் பள்ளி
4 மாநில வாரியம் முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி
5 மாநில வாரியம் பி.எஸ். மேல்நிலைப் பள்ளி
6 மாநில வாரியம் இந்து மேல்நிலைப் பள்ளி
7 மாநில வாரியம் வெள்ளையன் செட்டியார் மேல்நிலைப் பள்ளி
8 மாநில வாரியம் வெஸ்லி மேல்நிலைப் பள்ளி
9 மாநில வாரியம் MCC பப்ளிக் பள்ளி

தமிழ்நாடு 12 ஆம் வகுப்பு  HSC முடிவு 2023 – தேர்ச்சி மதிப்பெண்கள்

தமிழ்நாடு வாரியம் சமச்சீர் கல்வி 2023யில் தேர்ச்சி பெற, மாணவர்கள் குறைந்தபட்ச மதிப்பெண்களைப் பெற வேண்டும். 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு எழுத்துமுறை மற்றும் செய்முறைத் தேர்வுகளுக்கான தேர்ச்சி மதிப்பெண்கள் பின்வருமாறு:

தேர்வு குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்
எழுத்துமுறை தேர்வு 35 மதிப்பெண்கள் (ஒரு பாடத்திற்கு)
எழுத்துமுறை – 70 மதிப்பெண்கள்
செய்முறை – 20 மதிப்பெண்கள்
அகமதிப்பீடு – 10 மதிப்பெண்கள்
இந்த அமைப்பை கொண்ட பாடங்கள்
மொத்தம் 35 (15 மதிப்பெண்கள் எழுத்துமுறை தேர்வில் பெற வேண்டும்).
செய்முறைத் தேர்வுகளுக்கு குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்கள் எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. ஆனால் ஒரு தேர்வர் செய்முறைத் தேர்வில் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும்.

தமிழ்நாடு சமச்சீர் கல்வி வகுப்பு 12 தேர்வு முடிவுகள் 2023: கிரேடு முறை

கிரேடு மதிப்பெண்கள் கிரேடு புள்ளி
A1 91-100 10
A2 81-90 9
B1 71-80 8
B2 61-70 7
C1 51-60 6
C2 41-50 5
D 33-40 4
E1 21-32
E2 20 மற்றும் அதற்கு குறைவு
  • தமிழ்நாடு வாரியம் 12ஆம் வகுப்பு 2023 தேர்வு முடிவுக்கு பிறகு, மாணவர்கள் இளங்கலை மற்றும் டிப்ளமோ படிப்புகளில் ஒன்றைத் தேர்வு செய்யலாம்.
  • பொறியியல், மருத்துவம் மற்றும் தொழில்முறை படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் அதற்கான நுழைவுத் தேர்வுகளை எழுத வேண்டும்.
  • TN HSC 2023 முடிவுக்குப் பிறகு கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கான சேர்க்கை தொடங்கும்.

தமிழ்நாடு சமச்சீர் கல்வி வகுப்பு 12 தேர்வு முடிவுகள் 2023: புள்ளிவிவரங்கள் 

தேர்வு முடிவுகளுடன், தமிழ்நாடு வாரியம் புள்ளிவிவரங்களை வெளியிடும். முந்தைய தேர்வான தமிழ்நாடு வாரியம் சமச்சீர் கல்வி 12 ஆம் வகுப்பு 2022ன் பகுப்பாய்வை நாம் பார்ப்போம்.

பாடப்பிரிவு மாணவர்கள் மாணவிகள் மொத்தம்
அறிவியல் 93.72 97.02 95.51
வணிகவியல் 89.14 95.71 92.51
கலை 77.83 91.93 85.13
தொழிற்கல்வி 80.06 91.57 84.26
மொத்தம் 90.96 96.32 93.76

தமிழ்நாடு சமச்சீர் கல்வி வகுப்பு 12 தேர்வு முடிவுகள் 2022: மாவட்ட வாரியான பகுப்பாய்வு

மாவட்டம் தேர்வெழுதியவர்கள் தேர்ச்சிப்பெற்றவர்கள்
கன்னியாகுமரி 22875 21879
திருநெல்வேலி 20090 19301
தென்காசி 16705 15916
தூத்துக்குடி 19373 18683
ராமநாதபுரம் 14309 13882
இதர மாவட்டங்கள் 712925 666337

தமிழ்நாடு 12 ஆம் வகுப்பு இடப்பெயர்வு சான்றிதழுக்கு விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள்.

இடப்பெயர்வுச் சான்றிதழுக்கு விண்ணப்பிப்பதற்குப் பின்பற்ற வேண்டிய படிகளை கீழே வழங்கியுள்ளோம்:

  1. தமிழ்நாடு 12 ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் இந்தியாவின் பிற மாநிலங்கள் அல்லது வெளிநாடுகளில் படிக்க இடப்பெயர்வு சான்றிதழுக்கு விண்ணப்பிக்கலாம்.
  2. மாணவர்கள் இடப்பெயர்வு சான்றிதழ் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து மாநில தேர்வுகள் துணை இயக்குனரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
  3. விண்ணப்ப படிவத்துடன் தேவையான ஆவணங்கள் இணைக்கப்பட வேண்டும்.
  4. இடப்பெயர்வுச் சான்றிதழ் பெறக் கட்டணமாக ரூ.505/-ஐ அரசு தேர்வுகள் இயக்குநர் என்ற பெயரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி வரைவோலை / தமிழ்நாடு அரசு கருவூலக் கிளைகளில் செலுத்திச் சீட்டின் மூலம் செலுத்த வேண்டும்.

தமிழ்நாடு 12 ஆம் வகுப்புக்குப் பிறகு எழுதக்கூடிய போட்டித் தேர்வுகள்:

அறிவியல், வணிகம், கலை போன்ற பல்வேறு பாடங்களில் படிக்கும் மாணவர்களுக்கு 12ஆம் வகுப்பு தேர்வுகளுக்கு பிறகு பல போட்டித் தேர்வுகள் உள்ளன. மாணவர்கள் தங்கள் ஆர்வத்தின் அடிப்படையில் தேர்வு செய்யக்கூடிய எதிர்கால நுழைவுத் தேர்வுகளின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.

பிரிவு தேர்வுகள்
பொறியியல் கூட்டு நுழைவுத் தேர்வு (JEE) முதன்மை
JEE அட்வான்ஸ்டு
பிர்லா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ் அட்மிஷன் டெஸ்ட் (BITSAT) நுழைவுத் தேர்வு
COMED-K
IPU-CET (B. Tech)
மணிப்பால்(B. Tech)
VITEEE
AMU (B. Tech)
PCM உடன் NDA நுழைவுத் தேர்வு (MPC)
மருத்துவம் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு(NEET)
AIIMS
JIPMER
பாதுகாப்பு சேவைகள் இந்திய கடல்சார் பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வு
இந்திய கடற்படை B.Tech நுழைவுத் திட்டம்
இந்திய ராணுவத்தின் தொழில்நுட்ப நுழைவுத் திட்டம் (TES) ·
தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் கடற்படை அகாடமி தேர்வு(I)
ஃபேஷன் மற்றும் வடிவமைப்பு நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜி (NIFT) நுழைவுத் தேர்வு
வடிவமைப்பு சேர்க்கைக்கான தேசிய நிறுவனம்
வடிவமைப்பிற்கான அகில இந்திய நுழைவுத் தேர்வு(AIEED)
சிம்பியோசிஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டிசைன் தேர்வு
காலணி வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனம்
மயீரின் MIT இன்ஸ்டிடியூட் ஆஃப் டிசைன்
தேசிய ஆடை வடிவமைப்பு நிறுவனம்
கட்டிடக்கலையில் தேசிய திறன் தேர்வு
சுற்றுச்சூழல் திட்டமிடல் மற்றும் தொழில்நுட்ப மையம்(CEPT)
சமூக அறிவியல் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம்
IIT மெட்ராஸ் மனிதநேயம் மற்றும் சமூக அறிவியல் நுழைவுத் தேர்வு(HSEE)
TISS இளங்கலை சேர்க்கை தேர்வு(TISS-BAT)
சட்டம் பொது-சட்ட சேர்க்கை தேர்வு அகில இந்திய சட்ட நுழைவுத் தேர்வு (AILET)
அறிவியல் கிஷோர் வைக்யானிக் ப்ரோட்சஹன் யோஜனா(KVPY)
தேசிய ஆய்தல் நுழைவுத் தேர்வு(NEST)
கணிதம் இந்திய புள்ளியியல் நிறுவனம் சேர்க்கை
பல்கலைக்கழகங்களில் சேர்க்கை
பல்வேறு B.Sc திட்டங்கள்
பனஸ்தலி வித்யாபீட சேர்க்கை

தமிழ்நாடு வாரியம் 12 ஆம் வகுப்பு முடிவுகள் பற்றிய அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்(FAQs)

கே 1: தமிழ்நாடு வகுப்பு 12 சமீபத்திய அறிவிப்புகள் மற்றும் செய்திகள் தொடர்பான அனைத்து தகவல்களையும் எங்கிருந்து பெறலாம்?

ப: Embibe  தளத்தில் நீங்கள் எல்லா விவரங்களையும் பெறலாம்.

கே 2: தமிழ்நாடு வாரியம் 12 ஆம் வகுப்பு முடிவுகளுக்கான தற்காலிக தேதி என்ன?

ப: 2023 ஆண்டு தமிழ்நாடு வாரியத்தின் 12 ஆம் வகுப்பு முடிவுகள் ஜூன் மாதத்தில்  வெளியிடப்படும் என்று நம்பப்படுகிறது.

கே 3: தமிழ்நாடு வாரியம் சமச்சீர் கல்வி 12 ஆம் வகுப்பு முடிவுகளை நான் எங்கே பார்க்கலாம்?

ப: tnresults.nic.in மற்றும் dge.tn.gov.in ஆகியவை தமிழ்நாடு வாரிய வகுப்பு 12 முடிவுகளை மாணவர்கள் சரிபார்க்கும் அதிகாரப்பூர்வ இணையதளமாகும்.

கே 4: தமிழ்நாடு 12 ஆம் வகுப்பு விண்ணப்பப் படிவத்திற்கான கட்டணம் என்ன?

ப: 2023 ஆண்டிற்கான TN HSE பதிவு கட்டண விவரங்கள் கீழே தரப்பட்டுள்ளது.

H வகை தேர்வர்கள் ஒவ்வொரு பாடத்திற்கும் 50+35+50
HP வகை தேர்வர்கள் ஒவ்வொரு பாடத்திற்கும் 150+35+2+50
கட்டண தொகை ரூ. 35 / -; பதிவுக் கட்டணம் = ரூ. 10 / -; மதிப்பெண் சான்றிதழ் கட்டணம் = ரூ. 20 / –

Embibe-யில் 3D கற்றல், புத்தகப் பயிற்சி, டெஸ்ட்கள் மற்றும் சந்தேகத் தீர்ப்பான்கள் மூலம் உங்கள் சிறந்ததை அடையுங்கள்