
தமிழ்நாடு வாரியம் சமச்சீர் கல்வி வகுப்பு 12 விண்ணப்ப படிவம் 2023
August 5, 2022தமிழ்நாடு வாரியம் சமச்சீர் கல்வி வகுப்பு 12 பாடத்திட்டம் (2023): தமிழ்நாடு 12 ஆம் வகுப்பு சமச்சீர்(Samacheer Kalvi) பாடத்திட்டத்தை வெளியிடும் பொறுப்பு தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்ககம் வகிக்கிறது. கலை, அறிவியல் மற்றும் வணிகவியல் ஆகிய பல்வேறு பாடப்பிரிவுகளுக்கான தமிழ்நாடு வாரிய சமச்சீர் கல்வி 12 ஆம் வகுப்பு பாடத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வகுப்பு 12 சமச்சீர் பாடத்திட்டம் மாணவர்கள் தங்கள் தேர்வுகளுக்கு தயாராவதற்கு சிறந்த ஒரு கருவியாக செயல்படுகிறது. மாணவர்கள் தங்களின் சரியான புரிதலுக்காக, தேர்வுக்குத் தயாராகும் போது முறையான வழிமுறை அல்லது கற்றல் திட்டத்தை பின்பற்றுவது மிகவும் முக்கியம். தேர்வு முறை மற்றும் கேள்வி அமைப்பு என்னவாக இருக்கும் என்ற வடிவமைப்பை பாடத்திட்டம் வகுத்துள்ளதால், மாணவர்கள் கருத்துகளை எளிதில் புரிந்து கொள்ள முடியும்.
தமிழ்நாடு சமச்சீர் 12 ஆம் வகுப்பு தேர்வு, தமிழ்நாடு உயர்நிலை சான்றிதழ் தேர்வு என்றும் அழைக்கப்படுகிறது. இந்தத் தேர்வை முடித்த பிறகு அல்லது தேர்ச்சி பெற்ற பிறகு மாணவர்கள் பல்வேறு வேலை வாய்ப்புகளை பெற்று தன் வாழ்க்கை நிலையை மாற்றிக்கொள்ள முடியும். அவர்கள் பொறியியல், மருத்துவம் போன்ற படிப்புகளில் சேரலாம் அல்லது அரசு வேலைக்காக முயற்சி செய்யலாம்.
12 ஆம் வகுப்பு மாணவர்கள் தங்கள் தமிழ்நாடு வாரியம் வகுப்பு 12 சமச்சீர் பாடத்திட்டத்தை முக்கியமானதாக கருத வேண்டும். தேர்வில் அதிக மதிப்பெண்களைப் பெறுவதற்கு சமச்சீர் பாடத்திட்டத்தில் உள்ள அடிப்படை கருத்துகளை முழுமையாகப் படிப்பது முக்கியம் ஆகும். எனவே, தமிழ்நாடு வாரியம் சமச்சீர் கல்வி 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் அனைத்து படங்களின் பாடத்திட்டத்தை கவனமாக பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும்.
தமிழ்நாடு வாரியம் சமச்சீர் கல்வி 12 ஆம் வகுப்புக்கான விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இவை மாணவர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும்:
தேர்வின் பெயர் | தமிழ்நாடு மேல்நிலைப் பொதுத் தேர்வு |
பொதுவாக அறியப்படும் பெயர் | தமிழ்நாடு வகுப்பு 12 (Samacheer Kalvi) |
இயக்ககம் | அரசுத் தேர்வுகள் இயக்ககம் (DGE) |
காலம் | ஒவ்வொரு ஆண்டும் |
தேர்வின் கால நேரம் | 3 மணிநேரம் |
அதிகாரபூர்வ இணையதளம் | http://www.dge.tn.gov.in/ |
தமிழ்நாடு வாரியம் சமச்சீர் கல்வி ஆங்கிலம், மாணவர்களுக்கு மிக முக்கியமான பாடங்களில் ஒன்றாகப் கருதப்படுகிறது. மாணவர்கள் பாடத்தில் சிறந்த மதிப்பெண்களைப் பெறுவதை உறுதிச் செய்ய, சமச்சீர் பாடத்திட்டத்தை நல்ல முறையில் பின்பற்ற வேண்டும்.
தமிழ்நாடு வாரியம் 12 ஆம் வகுப்பு ஆங்கில பாடத்திட்டம் இலக்கணம் மற்றும் இலக்கியம் பகுதிகளைக் கொண்டதாகும். எனவே, மாணவர்கள் இவற்றை சரியாகப் புரிந்து கொண்டால், பாடங்களை எளிதாகப் பயிற்சி செய்யலாம். தமிழ்நாடு வாரியம் சமச்சீர் கல்வி 12 ஆம் வகுப்புக்கான முழுமையான பாடத்திட்டம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
பிரிவுகள் | தலைப்புகள் |
---|---|
Vocabulary Competencies | Meanings, syllabification, spellings, word formation, vocabulary improvement, phrasal verbs and idioms, foreign words and phrases. |
Grammatical Competencies | Sentence patterns, conditional and concessional clauses, modal auxiliaries, reported speech, relative clauses, the transformation of sentences, and passivation. |
Listening Competencies | Comprehension passage containing six-eight lines, short passages, ease of breath, CNN news panel discussion, coherence, |
Speaking Competencies | Introduction to topics through group discussions, greeting, introduction, and giving information, disagreeing peacefully, projecting one’s image, expressing gratitude, welcome address, vote of thanks, and more. |
Reading Competencies | Descriptive, argumentative, factual, and literary texts. |
Writing Competencies | Scientific and factual discourse, interesting texts, reports, relevant situations, non-verbal information, projects, advertisements, et cetera. |
Study Skills | Dictionaries, library facilities, internet, verbal and non-verbal texts, lectures, books and journals, essays of students, and email language. |
Occupational | Report writing, presenting messages, picture composition, presenting facts and figures in a systematic method, advertisements, and more. |
Strategic Competencies | Samples of pupil language, areas of doubt, hesitation, and more. |
Creative Competencies | Essay writing, poem writing, critical appraisal, scriptwriting for interviews, cartoon scripts, travelogues, captions for photographs, translation. |
மேலே உள்ள அட்டவணை இலக்கணம் பற்றிய விவரங்களை கூறியது. இதை போலவே ஆங்கில இலக்கியப் பகுதியும் மிகவும் முக்கியமானது. இது மாணவர்களின் புரிந்துகொள்ளம் திறன் மற்றும் சிந்திக்கும் திறனை மேம்படுத்த உதவுகிறது. ஆங்கில இலக்கியத்திற்கான பாடத்திட்டம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
பிரிவுகள் | தலைப்புகள் |
---|---|
Prose | Two Gentlemen of Verona, In Celebration of Being Alive, The Chair, On the Rule of the Road, |
Poem | Our Casuarina Tree, All the World’s a Stage, Ulysses, A Father to his Son, |
Supplementary | God Sees the Truth but Waits, The Midnight Visitor, All Summer in a Day, |
12 ஆம் வகுப்பு கணிதம் மிக முக்கியமான பாடங்களில் ஒன்றாகும். சமச்சீர் கணித பாடத்தில் உள்ள சிக்கலான கணக்குகளே இதற்க்கு காரணமாகும். மாணவர்கள், தேர்வுக்காக தொடர்ந்து பயிற்சி செய்ய வேண்டிய பாடங்களில் கணிதமும் ஒன்றாகும்.
அர்ப்பணிப்பும் பயிற்சியும் ஒன்றொக்கொன்று சார்த்தவைகளாகும். இவை, மாணவர்கள் தேர்வில் சிறந்த மதிப்பெண்களைப் பெறுவதை உறுதிசெய்யும்.
அத்தியாயங்களில் என்னென்ன பிரிவுகள் உள்ளன என்பதை மாணவர்கள் நன்கு அறிந்திருக்க வேண்டும். மாணவர்கள் பின்பற்ற வேண்டிய தமிழ்நாடு மாநில வாரியத்தின் 12ஆம் வகுப்பு கணித பாடத்திட்டம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
அத்தியாயங்கள் | தலைப்புகள் |
---|---|
அணிகள் மற்றும் அணிக்கோவைகளின் பயன்பாடுகள் | அறிமுகம், பூச்சியமற்ற கோவை அணியின் நேர்மாறு, ஒரு சதுர அணியின் சேர்ப்பு அணி, ஒரு அணியின் மீதான தொடக்க நிலை உருமாற்றங்கள், நிரை-ஏறுபடி வடிவம், நேர்மாறு அணிகளின் பண்புகள் மற்றும் பல. |
கலப்பு எண்கள் | கலப்பெண்கள் அறிமுகம், கலப்பு எண்கள், கலப்பெண்களின் அடிப்படை இயற்கணிதப் பண்புகள், ஒரு கலப்பெண்ணின் இணைக் கலப்பெண், ஒரு கலப்பெண்ணின் மட்டு மதிப்பு, கலப்பெண்களின் வடிவியல் மற்றும் நியமப்பாதை, கலப்பு எண்களின் துருவ வடிவம் மற்றும் ஆய்லரின் வடிவம், டி மாய்வரின் தேற்றமும் அதன் பயன்பாடுகளும் மற்றும் பல. |
சமன்பாட்டியல் | அறிமுகம், பல்லுறுப்புக் கோவைச் சமன்பாடுகளின் அடிப்படைக் கூறுகள், வியட்டாவின் சூத்திரங்கள் மற்றும் பல்லுறுப்புக் கோவைச் சமன்பாடுகளை உருவாக்குதல், பல்லுறுப்புக் கோவைச் சமன்பாடுகளின் கெழுக்களின் பண்புகள் மற்றும் மூலங்களின் பண்புகள், வடிவியலில் பல்லுறுப்புக் கோவைச் சமன்பாடுகளின் பயன்பாடுகள், உயர்ப்படி பல்லுறுப்புக் கோவைச் சமன்பாடுகளின் பயன்பாடுகள், கூடுதல் விவரங்களுடன் கூடிய பல்லுறுப்புக் கோவைகள், கூடுதல் விவரம் இல்லாத பல்லுறுப்புக் கோவைச் சமன்பாடுகள் மற்றும் பல. |
நேர்மாறு முக்கோணவியல் சார்புகள் | சைன் சார்பு மற்றும் நேர்மாறு சைன் சார்பு, கொசைன் சார்பு மற்றும் நேர்மாறு கொசைன் சார்பு, தொடுக் கோட்டுச் சார்பு மற்றும் நேர்மாறு தொடுக் கோட்டுச் சார்பு, கொசீகண்ட் சார்பு மற்றும் நேர்மாறு கொசீகண்ட் சார்பு, சீகண்ட் சார்பு மற்றும் நேர்மாறு சீகண்ட் சார்பு, கோடேன்ஜண்ட் சார்பு மற்றும் நேர்மாறு கோடேன்ஜண்ட் சார்பு மற்றும் பல. |
இரு பரிமாண பகுமுறை வடிவியல்-II | வட்டம், கூம்பு வளைவுகள், கூம்பு வெட்டு முகங்கள், கூம்பு வடிவின் துணையலகு வடிவம், கூம்பு வளைவரையின் தொடுக கோடுகள் மற்றும் செங்கோடுகள், அன்றாட வாழ்வில் கூம்பு வளைவரைகளின் பயன்பாடுகள் மற்றும் பல. |
வெக்டர் இயற்கணிதத்தின் பயன்பாடுகள் | வெக்டர்களின் வடிவக் கணித அறிமுகம், திசையிலிப் பெருக்கல் மற்றும் வெக்டர் பெருக்கல், திசையிலி, முப்பெருக்கல், வெக்டர் முப்பெருக்கல், ஜக்கோபியின் முற்றொருமை மற்றும் லாக்ராஞ்சியின் முற்றொருமை, முப்பரிமாண வடிவக் கணிதத்தில் வெக்டர்களின் பயன்பாடு, ஒரு தளத்தின் பல்வேறு வகைச் சமன்பாடுகள் மற்றும் பல. |
வகை நுண்கணிதத்தின் பயன்பாடுகள் | வகையிடலின் பொருள், சராசரி மதிப்புத் தேற்றம், தொடரின் விரிவுகள், தேரப்பெறா வடிவங்கள், முதலாம் வகைக்கெழுவின் பயன்பாடுகள், இரண்டாம் வகைக்கெழுவின் பயன்பாடுகள், உகமக் கணக்குகளில் பயன்பாடுகள், சமச்சீர் தன்மை மற்றும் தொலைத் தொடுகோடுகள் வளைவரை வரைதல் மற்றும் பல. |
வகையீடுகள் மற்றும் பகுதி வகைக்கெழுக்கள் | நேரியல் தோராய மதிப்பு மற்றும் வகையீடுகள், பல மாறிகளைக் கொண்ட சார்புகள், இரு மாறிகள் உடைய சார்புகளின் எல்லை மற்றும் தொடர்ச்சித் தன்மை, பகுதி வகைக்கெழுக்கள், பல மாறிகள் கொண்ட சார்பின் நேரியல் தோராய மதிப்பு மற்றும் வகையீடு. |
தொகை நுண்கணிதத்தின் பயன்பாடுகள் | வரையறுத் தொகையீட்டை ஒரு கூட்டலின் எல்லையாக காணல், தொகை நுண்கணித அடிப்படைத் தேற்றங்கள் மற்றும் அவற்றின் பயன்பாடுகள், பெர்னோலி சூத்திரம், முறையற்ற தொகையீடுகள், குறைப்புச் சூத்திரங்கள், காமா தொகையிடல், வரம்பிற்குட்பட்ட தளத்தின் பரப்பை தொகையிடல், மூலம் காணல் மற்றும் பல. |
சாதாரண வகைக்கெழுச் சமன்பாடுகள் | வகைக்கெழுச் சமன்பாடு, வரிசை மற்றும் படி, வகைக்கெழுச் சமன்பாடுகளை வகைப்படுத்துதல், வகைக்கெழுச் சமன்பாடுகளின் உருவாக்கம், சாதாரண வகைக்கெழுச் சமன்பாடுகளின் தீர்வு, முதல் வரிசை முதற்படி வகைக்கெழுச் சமன்பாடுகளின் தீர்வு, முதல் வரிசை நேரியல் வகைக்கெழுச் சமன்பாடுகள் மற்றும் பல. |
நிகழ்தகவு பரவல்கள் | சமவாய்ப்பு மாறி, சமவாய்ப்பு மாறிகளின் வகைகள், தொடர்ச்சியானப் பரவல்கள், கணித எதிர்பார்ப்பு, அறிமுறை பரவல்கள்: சில சிறப்பு தனி நிலை பரவல்கள் மற்றும் பல. |
தனிநிலைக் கணிதம் | ஈருறுப்புச் செயலிகள், கணித தர்க்கவியல் |
12 ஆம் வகுப்பில் அறிவியலைப் பாடமாகப் படித்த மாணவர்கள் அதன் அனைத்துப் பிரிவுகளிலும் தேர்ச்சிப் பெற வேண்டும். மாணவர்கள் ஒவ்வொரு பிரிவையும் முழுமையாகப் பயிற்சி செய்வது முக்கியம். இயற்பியல் கடினமானது என்பதைக் கருத்தில் கொண்டு, மாணவர்கள் நன்கு தயாராக வேண்டும்.
இயற்பியலுக்குத் தயாராகும் போது, மாணவர்கள் கோட்பாடு பகுதி மட்டுமல்லாமல், செய்முறைத் தேர்வு மற்றும் மூலத்தோன்றல்களையும் நன்கு கற்க வேண்டும்.
12 ஆம் வகுப்பு சமச்சீர் கல்வி இயற்பியலுக்கான பாடத்திட்டம் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்தியாயம் | தலைப்புகள் |
---|---|
நிலை மின்னியல் | கூலூம் விதி, மின்புலம் மற்றும் மின்புலக் கோடுகள், மின் இருமுனையும் அதன் பண்புகளும், நிலை மின்னழுத்தமும், மின்னழுத்த ஆற்றலும் காஸ் விதியும் அதன் பயன்பாடுகளும், கடத்திகள் மற்றும் மின்காப்புகளின் நிலை மின்னியல் பண்புகள், மின்தேக்கிகள் மற்றும் மின்தேக்குத்திறன், மின்கடத்தியில், மின்துகள்களின் பரவலும் கூர்முனைச் செயல்பாடும் மற்றும் பல. |
மின்னோட்டவியல் | மின்னோட்டம், ஓம் விதி, மின் சுற்றுகளில் ஆற்றல் மற்றும் திறன், மின்கலங்களும் மின்கலத் தொகுப்புகளும், கிர்க்காஃப் விதிகள், மின்னோட்டத்தின் வெப்ப விளைவு, வெப்ப மின் விளைவு மற்றும் பல. |
காந்தவியல் மற்றும் மின்னோட்டத்தின் காந்த விளைவுகள் |
காந்தவியல் ஓர் அறிமுகம், காந்தவியலின் கூலூம் எதிர்த்தகவு இருமடிவிதி, சீரான காந்தப்புலத்தில் உள்ள சட்டகாந்தத்தின் மீது செயல்படும் திருப்புவிசை, காந்தப்பண்புகள், காந்தப்பொருட்களின் வகைப்பாடு, காந்தத்தயக்கம் மின்னோட்டத்தின் காந்த விளைவுகள், பயட் – சாவர்ட் விதி, ஆம்பியரின் சுற்று விதி, லாரன்ஸ் விசை, மின்னோட்டச் சுற்றின் மீது செயல்படும் திருப்பு விசை மற்றும் பல. |
மின்காந்தத்தூண்டலும் மாறுதிசை மின்னோட்டமும் |
மின்காந்தத் தூண்டல், சுழல் மின்னோட்டங்கள், தன் மின்தூண்டல், தூண்டப்பட்ட மின்னியக்குவிசையை உருவாக்கும் முறைகள், மாறுதிசை மின்னோட்ட மின்னியற்றி, மின்மாற்றி, மாறுதிசை மின்னோட்டம், மாறுதிசை மின்னோட்டச் சுற்றுகளின் திறன், LC சுற்றுகளில் அலைவு மற்றும் பல. |
மின்காந்த அலைகள் |
மின்காந்த அலைகள், நிறமாலையின் வகைகள் – வெளியிடு மற்றும் உட்கவர் நிறமாலை – ஃபிரனாஃபர் வரிகள் மற்றும் பல. |
ஒளியியல் | கோளக ஆடிகள், ஒளியின் வேகம், ஒளிவிலகல் ஒற்றை கோளகப்பரப்பில் ஏற்படும் ஒளிவிலகல், மெல்லிய லென்ஸ்கள், முப்பட்டகம், ஒளியைப்பற்றிய கொள்கைகள், ஒளியின் அலைப்பண்பு, குறுக்கீட்டு விளைவு, விளிம்பு விளைவு, ஒளியின் தளவிளைவு, ஒளியியல் கருவிகள் |
கதிர்வீச்சு மற்றும் பருப்பொருளின் இருமைப்பண்பு | ஒளிமின் விளைவு, பருப்பொருள் அலைகள், X-கதிர்கள் மற்றும் பல. |
அணு மற்றும் அணுக்கரு இயற்பியல் | வாயுக்களின் வழியே மின்னிறக்கம், அணு மாதிரிகள், அணுக்கருக்கள், அணுக்கரு விசை கதிரியக்கம், அணுக்கரு பிளவு, அணுககரு இணைவு மற்றும் பல. |
குறைகடத்தி எலக்ட்ரானியல் | குறை கடத்திகளின் வகைகள்,டையோடுகள் இரு முனை சந்தி டிரான்சிஸ்டர்,இலக்கமுறை எலக்ட்ரானியல், பூலியன் இயற்கணிதம், டீ மார்கனின் தேற்றங்கள் மற்றும் பல. |
தகவல் தொடர்பு அமைப்புகள் |
பண்பேற்றம், எலக்ட்ரானிய தகவல் தொடர்பு அமைப்பின் உறுப்புகள், விண்ணலைக்கம்பியின் அளவு, மின்காந்த அலைகளின் பரவல், செயற்கைக்கோள் தகவல்தொடர்பு, ஒளி இழைத் தகவல்தொடர்பு,ரேடார் மற்றும் அதன் பயன்பாடுகள், செல்பேசி தகவல்தொடர்பு இணையம், உலகளாவிய நிலையறியும் அமைப்பு, விவசாயம், மீன்வளம் மற்றும் சுரங்கம் ஆகிய துறைகளில் தகவல்தொடர்புத் தொழில்நுட்பத்தின் பயன்பாடு மற்றும் பல. |
இயற்பியலின் அண்மைக்கால வளர்ச்சிகள் | நானோ அறிவியல் மற்றும் நானோ தொழில்நுட்பம், எந்திரனியல், மருத்துவ நோயறிதல் மற்றும் சிகிச்சையில் இயற்பியல் மற்றும் பல. |
12 ஆம் வகுப்பில் வேதியியல் மிகவும் முக்கியமான பாடமாகும். தனிமங்களின் வேதி சூத்திரங்களை மாணவர்கள் நன்கு அறிந்திருப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும், வேதியியல் சமன்பாடுகளை எவ்வாறு தீர்ப்பது என்பது தெரிந்திருக்க வேண்டும்.
12 ஆம் வகுப்பு வேதியியல் பாடத்திட்டத்திற்கான விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
அத்தியாயம் | தலைப்புகள் |
---|---|
உலோகவியல் | உலோகங்கள் கிடைக்க பெறுதல், தாதுக்களை அடர்பித்தல், பண்படா உலோகத்தை பிரித்தெடுத்தல், உலோகவியலின் வெப்ப இயக்கவியல் தத்துவங்கள், உலோகவியலின் மின்வேதித் தத்துவங்கள், தூய்மையாக்கும் செயல்முறைகள், உலோகங்களின் பயன்பாடுகள் மற்றும் பல. |
P- தொகுதி தனிமங்கள்-I |
P-தொகுதி தனிமங்களின் பண்புகளில் காணப்படும் பொதுவான போக்கு, தொகுதி 13 (போரான் தொகுதி) தனிமங்கள், தொகுதி 14 (கார்பன் தொகுதி) தனிமங்கள் மற்றும் பல. |
P- தொகுதி தனிமங்கள் – II | தொகுதி 15 (நைட்ரஜன் தொகுதி) தனிமங்கள், ஆக்சிஜன், தொகுதி 17 (ஹேலஜன் தொகுதி), பதினெட்டாவது தொகுதி தனிமங்கள் (மந்த வாயுக்கள்) மற்றும் பல. |
இடைநிலை மற்றும் உள்இடைநிலைத் தனிமங்கள் |
தனிம வரிசை அட்டவணையில் d தொகுதி தனிமங்களின் இடம், எலக்ட்ரான் அமைப்பு, இடைநிலை தனிமங்களின் பண்புகளில் காணப்படும் பொதுவான போக்கு, d வரிசை இடைநிலைத் தனிமங்களின் முக்கியமானச் சேர்மங்கள் மற்றும் பல. |
அணைவு வேதியியல் |
அணைவுச் சேர்மங்கள் மற்றும் இரட்டை உப்புகள், அணைவுச் சேர்மங்களுக்கான வெர்னரின் கொள்கை, அணைவுச் சேர்மங்களோடு தொடர்புடைய சில முக்கியமான கலைச்சொற்களின் வரையறைகள், அணைவுச் சேர்மங்களுக்குப் பெயரிடுதல், அணைவுச் சேர்மங்களில் காணப்படும் மாற்றியம், அணைவுச் சேர்மங்களுக்கான கொள்கைகள் மற்றும் பல. |
திட நிலைமை |
திடப் பொருட்களின் பொதுப் பண்புகள், திடப்பொருட்களை வகைப்படுத்துதல், படிக வடிவமுடைய திடப்பொருட்களை வகைப்படுத்துதல், படிக அணிக்கோவைத்தளம் மறறும் அலகுக்கூடு, முதல்நிலை மற்றும் முதல்நிலை அற்ற அலகுக்கூடுகள், படிகங்களில் பொதிவு, படிக குறைபாடுகள் மற்றும் பல. |
வேதிவினை வேகவியல் | ஒரு வேதிவினையின் வினை வேகம், வேக விதி மற்றும் வினைவேக மாறிலி, மூலக்கூறு எண், தொகைப்படுத்தப்பட்ட வினைவேகச் சமன்பாடுகள், ஒரு வினையின் அரைவாழ்காலம், மோதல் கொள்கை, அர்ஹீனியஸ் சமன்பாடு –வினைவேகத்தின் மீது வெப்பநிலையின் விளைவு, வினைவேகத்தை பாதிக்கும் காரணிகள் மற்றும் பல. |
அயனிச் சமநிலை | அமிலங்கள் மற்றும் காரங்கள், அமிலங்கள் மற்றும் காரங்களின் வலிமை, நீரின் சுய அயனியாக்கம், pH அளவீடு, வலிமை குறைந்த அமிலங்களின் அயனியாதல், பொது அயனி விளைவு, தாங்கல் கரைசல், உப்பு நீராற்பகுத்தல், கரைதிறன் பெருக்கம் மற்றும் பல. |
மின் வேதியியல் | மின்பகுளிக் கரைசலின் கடத்துத்திறன், செறிவுவைப் பொறுத்து மோலார் கடத்துத்திறனில் ஏற்படும் மாற்றம், மின்வேதிக் கலன், கலவினைகளின் வெப்ப இயக்கவியல் |
தமிழ்நாடு 12 ஆம் வகுப்பின் தாவரவியல் பாடத்திட்டம் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன. தாவரவியலில் நல்ல மதிப்பெண்களைப் பெற அனைத்து தலைப்புகளையும் விரிவாகப் படிக்கவும்.
அத்தியாயம் | தலைப்புகள் |
---|---|
தாவரங்களில் பாலிலா இனப்பெருக்கம் மற்றும் பாலினப்பெருக்கம | பாலிலா இனப்பெருக்கம், தழைவழி பெருக்கம், பாலினப் பெருக்கம், கருவுறுதலுக்கு முந்தைய அமைப்புகள் மற்றும் நிகழ்வுகள், கருவுறுதல், கருவுறுதலுக்குப் பின்னுள்ள அமைப்புகள் மற்றும் நிகழ்வுகள், கருவுறா இனப்பெருக்கம், பல்கருநிலை கருவுறாக்கனிகள். |
பாரம்பரிய மரபியல் | பாரம்பரியமும் வேறுபாடுகளும், மெண்டலியம் ஒரு பண்புக் கலப்பு மரபணுக்குள்ளே நிகழும் இடைச்செயல்கள், மரபணுக்களுக்கிடையே நிகழும் இடைச்செயல்கள், பல்காரணியப் பாரம்பரியம் – கோதுமையில் பல்மரபணு பாரம்பரியம் (விதையுறை நிறம்), குரோமோசோம் தவிர்த்த பாரம்பரியம் (Extra Chromosomal Inheritance) அல்லது உட்கரு தவிர்த்த பாரம்பரியம் (Extra Nuclear Inheritance), (சைட்டோபிளாசம் சார்ந்த பாரம்பரியம் – Cytoplasmic Inheritance) |
குரோமோசோம் அடிப்படையிலான பாரம்பரியம் | பாரம்பரியத்திற்கான குரோமோசோம் கோட்பாடு, பிணைப்பு, குறுக்கேற்றம், பல்கூட்டு அல்லீல்கள், சடுதிமாற்றம். |
உயிரிதொழில்நுட்பவியல் நெறிமுறைகளும் செயல்முறைகளும் | உயிர்தொழில்நுட்பவியலின் வளர்ச்சி, பாரம்பரிய உயிரிதொழில்நுட்பவியலின் முறைகள், நவீன உயிரிதொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள், மரபணுப் பொறியியலுக்கான கருவிகள், மரபணு மாற்ற முறைகள், மறுகூட்டிணைவு செல்களுக்கான சலிக்கை செய்தல், மரபணு மாற்றப்பட்டத் தாவரங்கள், உயிரி தொழில்நுட்பவியலின் பயன்பாடுகள். |
தாவரத் திசு வளர்ப்பு | திசு வளர்ப்பின் அடிப்படைக்கொள்கைகள், தாவரத் திசு வளர்ப்பு, தாவரங்களின் மீளுருவாக்க வழித்தடம், தாவரத் திசு வளர்ப்பின் பயன்பாடுகள், தாவர மரபணுசார் வளங்களைப் பாதுகாத்தல், அறிவுசார் சொத்துரிமை, உயிரி தொழில்நுட்பவியலின் எதிர்காலம். |
சூழ்நிலையியல் கோட்பாடுகள் | சூழ்நிலையியல், சூழ்நிலையியல் காரணிகள், சூழ்நிலையியல் தக அமைவுகள், கனிகள் மற்றும் விதை பரவுதல். |
சூழல்மண்டலம் | சூழல்மண்டலத்தின் அமைப்பு, சூழல்மண்டலத்தின் செயல்பாடுகள், தாவர வழிமுறை வளர்ச்சி. |
சுற்றுச்சூழல் பிரச்சினைகள் | பசுமை இல்ல விளைவும் புவி வெப்பமடைதலும், வனவியல், காடழிப்பு, புதிய காடு வளர்ப்பு, ஆக்கிரமிப்பு செய்துள்ள அயல்நாட்டு தாவரங்கள், பாதுகாப்பு, கார்பன் கவரப்படுதல் மற்றும் சேமிப்பு, மழைநீர் சேகரிப்பு, சுற்றுச்சூழல் தாக்கமதிப்பீடு, புவியியல்சார் தகவல் அமைப்புகள். |
பயிர் பெருக்கம் | மனிதர்களுக்கும் தாவரங்களுக்கும் இடையேயுள்ள தொடர்பு, தாவரங்களை வளர்ப்புச்சூழலுக்கு உட்படுத்துதல், வேளாண்மையின் தோற்றம், இயற்கை வேளாண்மை, பயிர் பெருக்கம், பாரம்பரியப் பயிர் பெருக்க முறைகள், நவீன தாவரப் பயிர்ப்பெருக்க தொழில்நுட்பம். |
பொருளாதாரப் பயனுள்ள தாவரங்களும் தொழில்முனைவுத் தாவரவியலும் | உணவுத் தாவரங்கள், நறுமணப்பொருட்கள் மற்றும் சுவையூட்டிகள், நார்கள், மரக்கட்டை, மரப்பால் மரக்கூழ், சாயங்கள், ஒப்பனைப் பொருட்கள், பாரம்பரிய மருத்துவ முறைகள், மூலிகைத் தாவரங்கள், தொழில் முனைவுத் தாவரவியல். |
தமிழ்நாடு 12 ஆம் வகுப்பின் விலங்கியல் பாடத்திட்டம் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன. விலங்கியலில் நல்ல மதிப்பெண்களைப் பெற அனைத்து தலைப்புகளையும் விரிவாகப் படிக்கவும்.
அத்தியாயம் | தலைப்புகள் |
---|---|
உயிரிகளின் இனப்பெருக்கம் | இனப்பெருக்க முறைகள், பாலிலி இனப்பெருக்கம், பாலினப்பெருக்கம். |
மனித இனப்பெருக்கம் | மனித இனப்பெருக்க மண்டலம், இனச்செல் உருவாக்கம், மாதவிடாய் சுழற்சி, கருவுறுதல் மற்றும் கரு பதித்தல், கர்ப்ப பராமரிப்பு மற்றும் கரு வளர்ச்சி, மகப்பேறு மற்றும் பாலூட்டுதல். |
இனப்பெருக்க நலன் | இனப்பெருக்க நலனின் தேவை, பிரச்சனைகள் மற்றும் உத்திகள், பனிக்குடத் துளைப்பு (ஆம்னியோசென்டெசிஸ்) மற்றும் அதன் சட்டபூர்வமான தடை, பாலின விகிதம், பெண் கருக்கொலை மற்றும் சிசுக் கொலை ஆகியவை சமுதாயத்தின் மீது ஏற்படுத்தும் தாக்கம், மக்கள் தொகைப் பெருக்கம் மற்றும் பிறப்புக் கட்டுப்பாடு, மருத்துவ ரீதியான கருக்கலைப்பு, பால்வினை நோய்கள், மலட்டுத்தன்மை, இனப்பெருக்க துணை தொழில்நுட்பங்கள், கருவின் குறைபாடுகளை கர்ப்பகாலத் தொடக்கத்திலேயே கண்டறிதல். |
மரபுக் கடத்தல் கொள்கைகள் மற்றும் மாறுபாடுகள் | பல்கூட்டு அல்லீல்கள், மனித இரத்த வகைகள், Rh காரணியின் மரபுவழிக் கட்டுப்பாடு, பால் நிர்ணயம், பால் சார்ந்த மரபுக்கடத்தல், குரோமோசோம் தொகுப்பு வரைபடம், மரபுக்கால் வழித்தொடர் பகுப்பாய்வு, மென்டலியன் குறைபாடுகள், குரோமோசோம் பிறழ்ச்சிகள். |
மூலக்கூறு மரபியல் | மரபு கடத்தலின் செயல் அலகாக மரபணு, மரபணு பொருளுக்கான தேடல், மரபணுப் பொருளாக டி.என்.ஏ, நியுக்ளிக் அமிலங்களின் வேதியியல், ஆர்.என்.ஏ உலகம், மரபணுப் பொருட்களின் பண்புகள், டி.என்.ஏ திருகுச் சுழலின் பொதிவு, டி.என்.ஏ இரட்டிப்பாதல், படியெடுத்தல், மரபணுக் குறியீடுகள், கடத்து ஆர்.என்.ஏ (tRNA) இணைப்பு மூலக்கூறு, மொழிபெயர்த்தல், மரபணு வெளிப்பாட்டை நெறிப்படுத்துதல், மனித மரபணுத் திட்டம், டி.என்.ஏ ரேகை அச்சிடல் தொழில் நுட்பம். |
பரிணாமம் | உயிரினத் தோற்றம் – உயிரின வகைகளின் பரிணாமம், புவியியற் கால அட்டவணை, உயிரியப் பரிணாமம், உயிரியப் பரிணாமத்திற்கான சான்றுகள், உயிரியப் பரிணாமக் கோட்பாடுகள், பரிணாமம் நடைபெறும் முறை, ஹார்டி வீன்பெர்க் கொள்கை, மனிதனின் தோற்றம் மற்றும் பரிணாமம். |
மனித நலன் மற்றும் நோய்கள் | பொதுவான மனித நோய்கள், தனிப்பட்ட மற்றும் பொதுச் சுகாதார பராமரிப்பு, நோய்த்தடைகாப்பியலின் அடிப்படை கோட்பாடுகள், தடைக்காப்பு குறைவு நோய்கள், சுயதடைகாப்பு நோய்கள், விடலைப்பருவம்- தவறான போதை மருந்து மற்றும் மதுப்பழக்கம், மன நலன்- மன அழுத்தம். |
மனித நலனில் நுண்ணுயிரிகள் | வீட்டு பயன்பாட்டுப் பொருட்களில் நுண்ணுயிரிகள், தொழிற்கூடங்களின் உற்பத்திப் பொருட்களில் நுண்ணுயிரிகள், கழிவு நீர் சுத்திகரிப்பு மற்றும் ஆற்றல் உற்பத்தியில் நுண்ணுயிரிகள், உயிர் வாயு (சாண எரிவாயு) உற்பத்தியில் நுண்ணுயிரிகள், உயிரியத்தீர்வு. |
உயிரி தொழில் நுட்பவியலின் பயன்பாடுகள் | மருத்துவத்தில் உயிரி தொழில் நுட்பவியலின் பயன்பாடுகள், மரபணு சிகிச்சை, தண்டு செல் சிகிச்சை, மூலக்கூறு அளவில் நோய் கண்டறிதல், மரபணு மாற்றப்பட்ட விலங்குகள், உயிரிய விளைபொருட்கள் மற்றும் அவற்றின் பயன்கள், விலங்கு நகலாக்கம் அறம் சார்ந்த பிரச்சனைகள். |
உயிரினங்கள் மற்றும் இனக்கூட்டம் | உயிரினங்கள் மற்றும் அவற்றின் சுற்றுச்சூழல் வாழிடம், முக்கிய உயிரற்ற ஆக்கக்கூறுகள் அல்லது காரணிகள், உயிர்த் தொகை மற்றும் அவற்றின் பரவல் குறித்த கோட்பாடுகள், உயிரற்ற காரணிகளுக்கான துலங்கல்கள், தகவமைப்புகள், இனக்கூட்டம், இனக்கூட்டத்தின் இயல்புகள், இனக்கூட்டம் – வயது பரவல், வளர்ச்சி மாதிரிகள் / வளைவுகள், இனக்கூட்டம், நெறிப்படுத்தப்படுதல், இனக்கூட்டச் சார்பு. |
உயிரிய பல்வகைத்தன்மை மற்றும் அதன் பாதுகாப்பு | உயிரிய பல்வகைத்தன்மை, உலக மற்றும் இந்திய அளவில் உயிரிய பல்வகைத்தன்மையின் முக்கியத்துவம், உயிரிய பல்வகைத்தன்மையின் அச்சுறுத்தல்கள், உயிரிய பல்வகைத்தன்மை, இழப்பிற்கான காரணங்கள், சர்வதேச இயற்கை பாதுகாப்பு கூட்டமைப்பு (IUCN), உயிரிய பல்வகைத்தன்மை மற்றும் அதன் பாதுகாப்பு. |
சுற்றுச்சூழல் இடர்பாடுகள் | மாசுபாடு, காற்று மாசுபாடு, நீர் மாசுபாடு, ஒலி மாசுபாடு, வேளாண் வேதிப்பொருட்கள், உயிரிய உருப்பெருக்கம், மிகை உணவூட்டம், இயற்கை வேளாண்மை மற்றும் அதனை நடைமுறைபடுத்துதல், திடக்கழிவு மேலாண்மை, சூழல் சுகாதாரக் கழிவறைகள். |
தமிழ்நாடு 12 ஆம் வகுப்பின் கணினி அறிவியல் பாடத்திட்டம் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன. கணினி அறிவியலில் நல்ல மதிப்பெண்களைப் பெற அனைத்து தலைப்புகளையும் விரிவாகப் படிக்கவும்.
அத்தியாயம் | தலைப்புகள் |
---|---|
சிக்கலைத் தீர்க்கும் யுக்திகள் | செயற்கூறு, தரவு அருவமாக்கம், வரையெல்லை, நெறிமுறையின் யுக்திகள். |
பைத்தான் மையக் கருத்துருக்கள் | பைத்தான் அறிமுகம்-மாறிகள் மற்றும் செயற்குறிகள், கட்டுப்பாட்டுக் கட்டமைப்புகள், பைத்தான் செயற்கூறுகள், சரங்கள் மற்றும் சரங்களைக் கையாளுதல். |
கூறுநிலை மற்றும் பொருள்நோக்கு நிரலாக்கம் |
List, Tuples, Set மற்றும் Dictionary தொகுப்பு தரவினங்கள், பைத்தான் இனக்குழுக்கள் மற்றும் பொருள்கள். |
தரவுத்தள கருத்துருக்கள் மற்றும் MySQL | தரவுதள கருத்துருக்கள், வினவல் அமைப்பு மொழி, பைத்தான் மற்றும் CSV கோப்புகள், பைத்தானை MySQL மற்றும் C++ உடன் ஒருங்கிணைத்தல். |
வ.எண் | பாடத் தலைப்பு |
---|---|
அலகு 1 | முழுமை பெறா பதிவேடுகளிலிருந்து கணக்குகள் |
அலகு 2 | இலாப நோக்கற்ற அமைப்புகளின் கணக்குகள் |
அலகு 3 | கூட்டாண்மை நிறுவனக் கணக்குகள் – அடிப்படைகள் |
அலகு 4 | கூட்டாண்மை கணக்குகள் – நற்பெயர் |
அலகு 5 | கூட்டாளி சேர்ப்பு |
அலகு 6 | கூட்டாளி விலகல் மற்றும் கூட்டாளி இறப்பு |
அலகு 7 | நிறுமக் கணக்குகள் |
அலகு 8 | நிதிநிலை அறிக்கை பகுப்பாய்வு |
அலகு 9 | விகிதப் பகுப்பாய்வு |
அலகு10 | கணினி கணக்கியல் முறை |
அத்தியாயம் | பாடப்பொருள் |
---|---|
அத்தியாயம் 1 | பேரியல் பொருளாதாரம் |
அத்தியாயம் 2 | தேசிய வருவாய் |
அத்தியாயம் 3 | வேலைவாய்ப்பு மற்றும் வருமான கோட்பாடுகள் |
அத்தியாயம் 4 | நுகர்வு மற்றும் முதலீடு சார்புகள் |
அத்தியாயம் 5 | பணவியல் பொருளியல் |
அத்தியாயம் 6 | வங்கியியல் |
அத்தியாயம் 7 | பன்னாட்டுப் பொருளியல் |
அத்தியாயம் 8 | பன்னாட்டுப் பொருளாதார அமைப்புகள் |
அத்தியாயம் 9 | நிதிப் பொருளியல் |
அத்தியாயம் 10 | சுற்றுச்சூழல் பொருளியல் |
அத்தியாயம் 11 | பொருளாதார மேம்பாடு மற்றும் திட்டமிடல் |
அத்தியாயம் 12 | புள்ளியியல் முறைகள் மற்றும் பொருளாதார அளவையில் ஓர் அறிமுகம் |
அலகு | பொருளடக்கம் |
---|---|
1 | இந்தியாவில் தேசியத்தின் எழுச்சி |
2 | தீவிர தேசியவாதத்தின் எழுச்சியும் சூதேசி இயக்கமும் |
3 | இந்திய விடுதலைப்போரில் முதல் உலகப்போரின் தாக்கம் |
4 | காந்தியடிகள் தேசியத் தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல் |
5 | ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டங்களில் புரட்சிகர தேசியவாதத்தின் காலம் |
6 | தேசியவாத அரசியலில் வகுப்புவாதம் |
7 | இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம் |
8 | காலனியத்துக்குப் பிந்தைய இந்தியாவின் மறுகட்டமைப்பு |
9 | ஓர் புதிய சமூக – பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல் |
10 | நவீன உலகம்: பகுத்தறிவின் காலம் |
11 | புரட்சிகளின் காலம் |
12 | ஐரோப்பாவில் அமைதியின்மை |
13 | ஏகாதிபத்தியமும் அதன் தாக்கமும் |
14 | இரண்டாம் உலகப்போரும் காலனிய நாடுகளில் அதன் தாக்கமும் |
15 | இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் |
காலக்கோடு |
வ.எண் | பொருண்மை/இயல் | பாடத்தலைப்புகள் | |
---|---|---|---|
1. | மொழி உயிரினும் ஓம்பப்படும் |
செய்யுள் | இளந்தமிழே ! |
உரைநடை | தமிழ்மொழியின் நடை அழகியல் | ||
செய்யுள் | தன்னேர் இலாத தமிழ் | ||
துணைப்பாடம் | தம்பி நெல்லையப்பருக்கு | ||
இலக்கணம் | தமிழாய் எழுதுவோம் | ||
2. | இயற்கை, வேளாண்மை, சுற்றுச்சூழல் பெய்யெனப் பெய்யும் மழை |
உரைநடை | பெருமழைக்காலம் |
செய்யுள் | பிறகொரு நாள் கோடை | ||
நெடுநல்வாடை* | |||
துணைப்பாடம் | முதல்கல் | ||
இலக்கணம் | நால்வகைப் பொருத்தங்கள் | ||
3. | பண்பாடு சுற்றத்தார் கண்ணே உள |
உரைநடை | தமிழர் குடும்ப முறை |
செய்யுள் | விருந்தினர் இல்லம் | ||
கம்பராமாயணம்* | |||
துணைப்பாடம் | உரிமைத்தாகம் | ||
இலக்கணம் | பொருள் மயக்கம் | ||
வாழ்வியல் | திருக்குறள்* | ||
4. | கல்வி செல்வத்துள் எல்லாம் தலை |
உரைநடை | பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள் |
செய்யுள் | இதில் வெற்றி பெற* | ||
இடையீடு | |||
புறநானூறு* | |||
துணைப்பாடம் | பாதுகாப்பாய் ஒரு பயணம் | ||
இலக்கணம் | பா இயற்றப் பழகலாம் | ||
5. | நாகரிகம், தொழில், வணிகம் நாடென்ப நாட்டின் தலை |
உரைநடை | மதராசப்பட்டினம் |
செய்யுள் | தெய்வமணிமாலை* | ||
தேவாரம் | |||
அகநானூறு | |||
துணைப்பாடம் | தலைக்குளம் | ||
இலக்கணம் | படிமம் |
கே 1: தமிழ்நாடு வாரியம் வகுப்பு 12 பாடத்திட்டத்தை மாணவர்கள் எங்கு பதிவிறக்கம் செய்யலாம்?
ப : மாணவர்கள் வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து தமிழ்நாடு 12 ஆம் வகுப்பு பாடத்திட்டத்தை பதிவிறக்கம் செய்யலாம்.
கே 2: தமிழ்நாடு 12 ஆம் வகுப்பு பாடத்திட்டம் இலவசமாக கிடைக்குமா?
ப: ஆம். தமிழ்நாடு வாரியத்தின் 12 ஆம் வகுப்பு பாடத்திட்டத்தின் பதிவிறக்க இணைப்புகள் EMBIBE மற்றும் வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இலவசமாகக் கிடைக்கின்றன.
கே 3: தமிழ்நாடு வாரியத் சமச்சீர் கல்வி தேர்வுகளை எந்த அமைப்பு நடத்துகிறது?
ப: தமிழ்நாடு வாரியத் தேர்வுகளை அரசுத் தேர்வுகள் இயக்ககம்(DGE) நடத்துகிறது.
கே.4: தமிழ்நாடு வாரியம் சமச்சீர் கல்வி 12 ஆம் வகுப்பில் உள்ள அத்தியாயங்கள் எளிதானதா?
ப: தமிழ்நாடு மாநில வாரியத்தின் 12 ஆம் வகுப்பு பாடத்திட்டம், மாணவர்கள் தலைப்புகளைப் பற்றிய கருத்தியல் புரிதலைப் பெற்று, அனைத்து தலைப்புகளையும் நன்கு புரிந்து, இறுதித் தேர்வுக்கு முன் பயிற்சித் தாள்களைத் தீர்த்தால் எளிதாகிறது.