• எழுதியவர் Vignesh
  • கடைசியாக மாற்றப்பட்டது 30-08-2022

தமிழ்நாடு வாரியம் சமச்சீர் கல்வி வகுப்பு 8 பாடத்திட்டம் 2023

img-icon

சமச்சீர் கல்வி வகுப்பு 8 பாடத்திட்டம் (2023): தமிழ்நாடு 8 ஆம் வகுப்பு சமச்சீர் (Samacheer Kalvi) பாடத்திட்டத்தை வெளியிடும் பொறுப்பு தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்ககம் வகிக்கிறது. கணிதம், அறிவியல், சமூக அறிவியல் போன்ற பாடங்களுக்கான தமிழ்நாடு வாரிய சமச்சீர் கல்வி 8 ஆம் வகுப்பு பாடத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வகுப்பு 8 சமச்சீர் பாடத்திட்டம் மாணவர்கள் தங்கள் தேர்வுகளுக்கு தயாராவதற்கு சிறந்த ஒரு கருவியாக செயல்படுகிறது. மாணவர்கள் தங்களின் சரியான புரிதலுக்காக, தேர்வுக்குத் தயாராகும் போது முறையான வழிமுறை அல்லது கற்றல் திட்டத்தை பின்பற்றுவது மிகவும் முக்கியம். தேர்வு முறை மற்றும் கேள்வி அமைப்பு என்னவாக இருக்கும் என்ற வடிவமைப்பை பாடத்திட்டம் வகுத்துள்ளதால், மாணவர்கள் கருத்துகளை எளிதில் புரிந்து கொள்ள முடியும்.

தமிழ்நாடு சமச்சீர் கல்வி வகுப்பு 8: மேலோட்டம்

8 ஆம் வகுப்பு மாணவர்கள் தங்கள் தமிழ்நாடு வாரியம் வகுப்பு 8 சமச்சீர் பாடத்திட்டத்தை முக்கியமானதாக கருத வேண்டும். தேர்வில் அதிக மதிப்பெண்களைப் பெறுவதற்கு சமச்சீர் பாடத்திட்டத்தில் உள்ள அடிப்படை கருத்துகளை முழுமையாகப் படிப்பது முக்கியம் ஆகும். எனவே, தமிழ்நாடு வாரியம் சமச்சீர் கல்வி 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் அனைத்து படங்களின் பாடத்திட்டத்தை கவனமாக பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும்.

தமிழ்நாடு வாரியம் சமச்சீர் கல்வி 8 ஆம் வகுப்புக்கான விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இவை மாணவர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும்:

தேர்வின் பெயர் 9 ஆம் வகுப்பு
இயக்ககம் அரசுத் தேர்வுகள் இயக்ககம் (DGE)
காலம் ஒவ்வொரு ஆண்டும்
தேர்வு முறை ஆஃப்லைன்
அதிகாரபூர்வ இணையதளம் http://www.dge.tn.gov.in/

தமிழ்நாடு சமச்சீர் கல்வி வகுப்பு 8: கணித பாடத்திட்டம் 

8 ஆம் வகுப்பு கணிதம் மிக முக்கியமான பாடங்களில் ஒன்றாகும். கணித  பாடத்தில் உள்ள சிக்கலான கணக்குகளே இதற்கு காரணமாகும். மாணவர்கள், தேர்வுக்காக தொடர்ந்து பயிற்சி செய்ய வேண்டிய பாடங்களில் கணிதமும் ஒன்றாகும்.

அர்ப்பணிப்பும் பயிற்சியும் ஒன்றொக்கொன்று சார்ந்தவைகளாகும். இவை, மாணவர்கள் தேர்வில் சிறந்த மதிப்பெண்களைப் பெறுவதை உறுதிசெய்யும்.

அத்தியாயங்களில் என்னென்ன பிரிவுகள் உள்ளன என்பதை மாணவர்கள் நன்கு அறிந்திருக்க வேண்டும். மாணவர்கள் பின்பற்ற வேண்டிய தமிழ்நாடு மாநில வாரியத்தின் 8 ஆம் வகுப்பு கணித பாடத்திட்டம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

அத்தியாய எண் அத்தியாயத்தின் பெயர் தலைப்புகள்
பருவம் I
1. விகிதமுறு எண்கள் அறிமுகம்
விகிதமுறு எண்கள்
விகிதமுறு எண்கள் மீதான அடிப்படைக் கணிதச் செயல்பாடுகள்
அடிப்படைச் செயல்கள் மீதான வார்த்தைக் கணக்குகள்
விகிதமுறு எண்களின் பண்புகள்
2. அளவைகள் அறிமுகம்
வட்டத்தின் பகுதிகள்
கூட்டு வடிவங்கள்
முப்பரிமாண (3-D) வடிவங்கள்
3. இயற்கணிதம் அறிமுகம்
இயற்கணிதக் கோவைகளின் பெருக்கல்
இயற்கணிதக் கோவைகளின் வகுத்தல்
முற்றொருமைகள்
கன முற்றொருமைகள்
காரணிப்படுத்துதல்
4. வடிவியல் அறிமுகம்
சர்வசம மற்றும் வடிவொத்த வடிவங்கள்
பிதாகரஸ் தேற்றம்
பிதாகரஸ் தேற்றத்தின் மறுதலை
நாற்கரங்கள் வரைதல்
சரிவகங்கள் வரைதல்
5. தகவல் செயலாக்கம் அறிமுகம்
எண்ணுதலில் அடிப்படைக் கொள்கைகள்
சேர்ப்பு விளையாட்டு (SET Game)
பருவம் II
1. வாழ்வியல் கணிதம் அறிமுகம்
கணக்குகளில் சதவீதத்தின் பயன்பாடுகள்
இலாபம், நட்டம், தள்ளுபடி, இதரச் செலவுகள்
சரக்கு மற்றும் சேவை வரி ( GST)
கூட்டுவட்டி
கலப்பு மாறல்
நேரம்
2. இயற்கணிதம் முற்றொருமைகள்
கன முற்றொருமைகள்
காரணிப்படுத்துதல்
ஒரு மாறியில் அமைந்த நேரியல் சமன்பாடுகள்
வரைபடங்கள்
3. வடிவியல் ஒருபுள்ளி வழிச் செல்லும் கோடுகள்
முக்கோணத்தின் நடுக்கோடு
முக்கோணத்தின் செங்குத்துக்கோடு
முக்கோணத்தின் மையக்குத்துக்கோடுகள்
முக்கோணத்தின் கோண இருசமவெட்டிகள்
சிறப்பு நாற்கரங்களை வரைதல்
இணைகரம் வரைதல்
சாய்சதுரம் வரைதல்
4. தகவல் செயலாக்கம் அறிமுகம்
பிபனோசி எண்கள்
மீப்பெரு பொதுக்காரணி (மீ.பொ.கா (HCF))
குறியாக்கவியல்
பருவம் III
1. எண்கள் வர்க்க எண்களின் அறிமுகம்
வரக்கமூலம்
கனமும், கன எண்களும்
அடுக்குக்குறிகளும் படிகளும்
2. வாழ்வியல் கணிதம் அறிமுகம்
நேர் விகிதம்
எதிர் விகிதம்
கலப்பு மாறல்
நேரம் மற்றும் வேலை
3. வடிவியல் அறிமுகம்
முக்கோணத்தின் நடுக்கோடு
முக்கோணத்தின் செங்குத்துக்கோடு
மையக்குத்துக்கோடு
கோண இருசமவெட்டி
சிறப்பு நாற்கரங்களை வரைதல்
சாய்சதுரம் வரைதல்
செவ்வகம் வரைதல்
சதுரம் வரைதல்
4. புள்ளியியல் அறிமுகம்
அட்டவணை வடிவில் தரவுகள்
நிகழ்வெண் பரவல் அட்டவணை
தொகுக்கப்படாதத் தரவுகளுக்கு வரைபட விளக்கமுறையில் நிகழ்வெண் பரவலைக் குறித்தல்
வட்ட விளக்கப் படம்
தொகுக்கப்பட்டத் தரவுகளுக்கான நிகழ்வெண் பரவலை வரைபட விளக்கமுறையில் குறித்தல்.
நிகழ்வுச் செவ்வகம்
நிகழ்வுப் பலகோணம்
5. தகவல் செயலாக்கம் அறிமுகம்
பொதித்தல்
பொதித்தல் முறைகள்

தமிழ்நாடு சமச்சீர் கல்வி வகுப்பு 8: அறிவியல் பாடத்திட்டம் 

தமிழ்நாடு 8 ஆம் வகுப்பின் அறிவியல் பாடத்திட்டம் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன. அறிவியலில் நல்ல மதிப்பெண்களைப் பெற அனைத்து தலைப்புகளையும் விரிவாகப் படிக்கவும்.

அத்தியாய எண் அத்தியாயத்தின் பெயர் தலைப்புகள்
பருவம் I
1. அளவீட்டியல் அலகீட்டு முறைகள்
வெப்பநிலை
மின்னோட்டம் ( I )
பொருளின் அளவு
ஒளிச்செறிவு
தளக்கோணம்
திண்மக்கோணம்
கடிகாரங்கள்
அளவிடுதலில் துல்லியத்தன்மை
தோரயமாக்கல் (Approximation)
முழுமையாக்கல்
தீர்க்கப்பட்ட கணக்குகள்
2. விசையும் அழுத்தமும் விசை
காற்றினால் செயல்படுத்தப்படும்அழுத்தம் – வளிமண்டல அழுத்தம்
திரவங்களில் விசை
பரப்பு இழுவிசை
பாகியல் விசை அல்லது பாகுநிலை
உராய்வு
3. ஒளியியல் ஆடிகளின் வகைகள்
கோளக ஆடிகள் தொடர்பான பதங்கள்
கோளக ஆடிகளில் தோன்றும்பிம்பங்கள்
வளைந்த பரப்புடைய ஆடியின் பயன்கள்
எதிரொளிப்பின் வகைகள்/எதிரொளித்தலின் வகைகள்
பன்முக எதிரொளிப்பு
ஒளிவிலகல்
நிறப்பிரிகை
4. பருப்பொருள்கள் குறியீடுகள் ஏன்?
உலோகங்களும் அலோகங்களும்
சேர்மம்
5. நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள் இயல் நிலையில் சேர்தல்
வினைபடுபொருள்கள் கரைசல் நிலையில் உள்ளபோது நிகழும்வேதிவினைகள்
மின்சாரம் மூலம் நிகழும்வேதிவினைகள்
வெப்பம் மூலம் நிகழும் வேதி வினைகள்
ஒளியைக்கொண்டு நிகழும் வேதி வினைகள்
வினைவேகமாற்றி மூலமாக நிகழும் வேதிவினைகள்
வேதிவினைகளின் விளைவுகள்
6. நுண்ணுயிரிகள் வைரஸ்
பாக்டீரியா
பூஞ்சை
ஆல்கா (பாசி)
புரோட்டோசோவா
பிரியான்கள்
விரியான்கள்
நுண்ணுயிரிகளின் பயன்பாடுகள்
தீங்கு தரும் நுண்ணுயிரிகள்
உணவு தயாரிப்பில் நுண்ணுயிரிகள்
பிரியான்கள்
விரியான்கள்
7. தாவர உலகம் வகைப்பாட்டியல் (Taxonomy)
பெந்தம் மற்றும் ஹுக்கர்
இயற்கை வகைப்பாட்டு முறை
இருசொற் பெயரிடுதல்
பாசிகளின் பண்புகள்
பூஞ்சைகள்
பிரையோஃபைட்டா
டெரிடோஃபைட்டுகள்
பிரையோஃபைட்டா மற்றும் டெரிடோஃபைட்டா இடையே உள்ள வேறுபாடுகள்
ஜிம்னோஸ்பெர்ம்கள் (திறந்த விதைத் தாவரங்கள்)
ஆஞ்சியோஸ்பெர்ம்கள் (மூடிய விதைத் தாவரங்கள்)
மருத்துவத் தாவரங்களின் பயன்கள்
8. உயிரினங்களின் அமைப்பு நிலைகள் செல்கள் மற்றும் திசுக்களின் ஒருங்கமைப்பு
சீரான உடல் நிலை (தன்னிலை காத்தல்)
பரவல் (விரவல்)
சவ்வூடு பரவல்
ஊடுபரவல் ஒழுங்குபாடு (osmoregulation)
செல் சுவாசம்
வளர்சிதை மாற்றம்
9. தகவல் தொழில்நுட்பம் ஓர் அறிமுகம்
பருவம் II
1. வெப்பம் வெப்ப ஆற்றலினால் ஏற்படும் விளைவுகள்
வெப்பப் பரிமாற்றம்
வெப்ப அளவியல்
கலோரிமீட்டர்
வெப்பக் கட்டுப்படுத்தி
வெப்பக் குடுவை (வெற்றிடக் குடுவை)
2. மின்னியல் அணு
மின்துகள்கள் (Charges)
மின்துகள்களின் இடமாற்றம்
மின்துகள்களின் ஓட்டம்
நிலைமின்காட்டி
மின்னல் மற்றும் இடி
மின் சுற்றுகள்
மின்னோட்டத்தின் விளைவுகள்
3. காற்று ஆக்சிஜன்
நைட்ரஜன்
கார்பன் டை ஆக்சைடு
அமில மழை
4. அணு அமைப்பு டால்டனின் அணுக் கொள்கை
அடிப்படைத் துகள்கள்
தாம்சனின் அணு மாதிரி
இணைதிறன்
அயனிகள்
வேதியியல் வாய்பாடு அல்லது மூலக்கூறு வாய்பாடு
வேதிச் சேர்மங்களுக்குப் பெயரிடும் முறை
வேதிச் சமன்பாடு
வேதிச் சேர்க்கை விதிகள்
இயக்கம் இயக்கம் மற்றும் இடம்பெயர்தல்
பல்வேறு விலங்குகளில் இயக்கம்
இயக்கங்களின் வகைகள்
மூட்டுகள்
எலும்பு மண்டலம்
தசைகள்
வளரிளம் பருவமடைதல் வளரிளம் பருவம் மற்றும் பருவமடைதல்
இரண்டாம்நிலை பால் பண்புகள்
இனப்பெருக்கத்தில் ஹார்மோன்களின் பங்கு
மனித வாழ்க்கையின் இனப்பெருக்க நிலைகள்
மாதவிடாய் சுழற்சி
இனப்பெருக்க ஆரோக்கியம்
வளரிளம் பருவத்தினரின் ஊட்டச்சத்துத் தேவைகள்
வளரிளம் பருவத்தினருக்கான தனிப்பட்ட சுகாதாரம்
கணினி வரைகலை வெப்ப அளவியல்
Tux Math
பருவம் III
1. ஒலி ஒலி உருவாதல்
ஒலி பரவுதல்
ஒலி அலைகள்
ஒலியின் பண்புகள்
இசை கருவிகள்
மனிதர்களில் ஒலி உருவாதல்
மனித காதுகள் செயல்படும் விதம்
ஒலி மாசுபாடு
2. காந்தவியல் காந்தங்களின் வகைகள்
காந்தப் பண்புகள்
காந்தப் புலம்
காந்தப் பொருள்கள்
செயற்கைக் காந்தங்கள்
புவிக் காந்தம்
காந்தத்தின் பயன்கள்
3. அண்டமும் விண்வெளி அறிவியலும் ராக்கெட்டுகள்
இந்திய விண்வெளித் திட்டங்கள்
நாசா (NASA National Aeronautics and Space Administration)
4. நீர் நீரின் இயைபு
நீரின் பண்புகள்
நீர் – உலகளாவிய கரைப்பான்
குடிக்க உகந்த நீர்
நீர் மாசுபடுதல்
நீர் மாசுபாட்டைக் கட்டுப்படுத்துதல்
5. அமிலங்கள் மற்றும் காரங்கள் அமிலங்கள்
காரங்கள்
நடுநிலையாக்கல் வினை
நிறங்காட்டி
6. அன்றாட வாழ்வில் வேதியியல் ஹைட்ரோகார்பன்கள்
இயற்கை வாயு
எரிபொருள் வாயுக்கள்
நிலக்கரி மற்றும் அதன் வகைகள்
பெட்ரோலியம்
எரிபொருள்
மாற்று எரிபொருட்கள்
சூரிய ஆற்றல்
7. பயிர்ப் பெருக்கம் மற்றும் மேலாண்மை வேளாண் செயல்முறைகள்
பயிர்ப் பெருக்கத்தின் அடிப்படைச் செயல்பாடுகள்
பயிர்ச் சுழற்சி
விதை வங்கி
உயிரி – சுட்டிக்காட்டிகள்
வேளாண் ஆராய்ச்சி நிறுவனங்கள்
இலையில் தெளிப்பு
உயிரி – கட்டுப்பாட்டு முறைகள்
8. தாவரங்கள் மற்றும் விலங்குகளின் பாதுகாப்பு காடு அழிப்பு
காடு வளர்ப்பு
காடாக்குதல்
ஆபத்தான நிலையில் உள்ள உயிரினங்கள்
சிவப்பு தரவு புத்தகம்
ஒருங்கிணைப்பு
மக்களின் பல்லுயிர் பன்முகத்தன்மை பதிவேடு (PBR)
உயிர்வழிப்பெருக்கம்
விலங்குகளின் நல்வாழ்வு
நிறுவனங்கள்
9. காட்சித் தொடர்பியல் லிப்ரெ ஆபிஸ்
உரை ஆவணம்
உரையை தேர்ந்தெடுத்தல்
வடிவமைத்தல் விருப்பங்கள்
பத்தி ஒழுங்குபடுத்தல்
(Paragraph Alignment)
பக்கத்தின் அமைவுகள்

தமிழ்நாடு சமச்சீர் கல்வி வகுப்பு 8: சமூக அறிவியல் பாடத்திட்டம் 

தமிழ்நாடு 8 ஆம் வகுப்பின் சமூக அறிவியல் பாடத்திட்டம் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன. சமூக அறிவியலில் நல்ல மதிப்பெண்களைப் பெற அனைத்து தலைப்புகளையும் விரிவாகப் படிக்கவும்.

அத்தியாய எண். பகுதி அத்தியாயம்
பருவம் I
1. வரலாறு ஐரோப்பியர்களின் வருகை
2. வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை
3. கிராம சமூகமும் வாழ்க்கை முறையும்
4. மக்களின் புரட்சி
5. புவியியல் பாறை மற்றும் மண்
6. வானிலை மற்றும் காலநிலை
7. நீரியல் சுழற்சி
8. குடிமையியல் மாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது?
9. குடிமக்களும் குடியுரிமையும்
10. பொருளாதாரம் பணம், சேமிப்பு மற்றும் முதலீடுகள்
பருவம் II
1. வரலாறு இந்தியாவில் கல்வி வளர்ச்சி
2. இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி
3. புவியியல் இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல்
4. இடர்கள்
5. குடிமையியல் சமயச்சார்பின்மையைப் புரிந்துகொள்ளுதல்
6. மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும்
7. சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் நெறிமுறைகள்
பருவம் III
1. வரலாறு ஆங்கிலேயர் ஆட்சியில் நகர்ப்புற மாற்றங்கள்
2. காலங்கள்தோறும் இந்தியப் பெண்களின் நிலை
3. புவியியல் தொழிலகங்கள்
4. கண்டங்களை ஆராய்தல்
(ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்டிகா)
5. புவிப்படங்களைக் கற்றறிதல்
6. குடிமையியல் பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை
7. நீதித்துறை
8. பொருளாதாரம் பொது மற்றும் தனியார் நிறுவனங்கள்

தமிழ்நாடு சமச்சீர் கல்வி வகுப்பு 8: ஆங்கில பாடத்திட்டம் 

தமிழ்நாடு 8 ஆம் வகுப்பின் ஆங்கில பாடத்திட்டம் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன. ஆங்கிலத்தில் நல்ல மதிப்பெண்களைப் பெற அனைத்து தலைப்புகளையும் விரிவாகப் படிக்கவும்.

அலகு எண் பிரிவு அத்தியாயத்தின் பெயர்
பருவம் I
1. Prose Hobby Turns into a Successful Career
Poem My Hobby: Reading
Supplementary Jim Corbett, a Hunter Turned Naturalist


2.
Prose Friendship
Poem Lessons in Life
Supplementary Homeless Man and his Friends: A True Story
3. Prose Being Safe
Poem Firework Night
Supplementary When Instinct Works
பருவம் II
1. Prose Sir Isaac Newton – The Ingenious Scientist
Poem Making Life Worthwhile
Supplementary The Three Questions
2. Prose My Reminiscence
Poem A Thing of Beauty
Supplementary Crossing the River
பருவம் III
1. Prose The Nose-Jewel
Poem Special Hero
Supplementary The Woman on Platform 8
2. Prose Cyber Safety
Poem My Computer Needs a Break
Supplementary The Mystery of the Cyber Friend
3. Play Jack and the Beanstalk

தமிழ்நாடு வாரியம் சமச்சீர் கல்வி 8 ஆம் வகுப்பு – தமிழ் பாடத்திட்டம்:

பருவம் I 

வ.எண் பொருண்மை/இயல் பாடத்தலைப்புகள்
1. மொழி



தமிழ் இன்பம்
தமிழ்மொழி வாழ்த்து*
தமிழ்மொழி மரபு
தமிழ் வரிவடிவ வளர்ச்சி
சொற்பூங்கா
எழுத்துகளின் பிறப்பு
2. இயற்கை




ஈடில்லா இயற்கை
ஓடை*
கோணக்காத்துப் பாட்டு
நிலம் பொது
வெட்டுக்கிளியும் சருகுமானும்
வினைமுற்று
திருக்குறள்*
3. அறிவியல், தொழில்நுட்பம்



உடலை ஓம்புமின்
நோயும் மருந்தும்*
வருமுன் காப்போம்*
தமிழர் மருத்துவம்
தலைக்குள் ஓர் உலகம்
எச்சம்

(*) இக்குறியிட்ட பாடல்கள் மனப்பாடப்பகுதி.

பருவம் II

வ.எண் பொருண்மை/இயல் பாடத்தலைப்புகள்
1. கல்வி



கல்வி கரையில
கல்வி அழகே அழகு*
புத்தியைத் தீட்டு
பல்துறைக் கல்வி
ஆன்ற குடிப்பிறத்தல்
வேற்றுமை
2.


கலை, அழகியல், பண்பாடு



குழலினிது யாழினிது
திருக்கேதாரம்
பாடறிந்து ஒழுகுதல்*
நாட்டுப்புறக் கைவினைக்கலைகள்
தமிழர் இசைக்கருவிகள்
தொகைநிலை, தொகாநிலைத் தொடர்கள்
திருக்குறள்*
3. நாகரிகம், தொழில், வணிகம்



வையம்புகழ் வணிகம்
வளம் பெருகுக
மழைச்சோறு
கொங்குநாட்டு வணிகம்
காலம் உடன் வரும்
புணர்ச்சி
திருக்குறள்

(*) இக்குறியிட்ட பாடல்கள் மனப்பாடப்பகுதி.

பருவம் III:

வ.எண் பொருண்மை/இயல் பாடத்தலைப்புகள்
1. நாடு, சமூகம்


பாருக்குள்ளே நல்ல நாடு
படை வேழம்*
விடுதலைத் திருநாள்
பாரத ரத்னா எம்.ஜி.ராமச்சந்திரன்
அறிவுசால் ஒளவையார்
வல்லினம் மிகும் இடங்களும் மிகா இடங்களும்
2. அறம், தத்துவம், சிந்தனை



அறத்தால் வருவதே இன்பம்
ஒன்றே குலம்*
மெய்ஞ்ஞான ஒளி
அயோத்திதாசர் சிந்தனைகள்
மனித யந்திரம்
யாப்பு இலக்கணம்
திருக்குறள்*
3. மனிதம், ஆளுமை





குன்றென நிமிர்ந்துநில்
உயிர்க்குணங்கள்
இளைய தோழனுக்கு
சட்டமேதை அம்பேத்கர்
பால் மனம்
அணி இலக்கணம்
திருக்குறள்

(*) இக்குறியிட்ட பாடல்கள் மனப்பாடப்பகுதி.

தமிழ்நாடு 8 ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்:

கே 1:  தமிழ்நாடு வாரியம் வகுப்பு 8 பாடத்திட்டத்தை மாணவர்கள் எங்கு பதிவிறக்கம் செய்யலாம்?

ப : மாணவர்கள் வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலிருந்து தமிழ்நாடு 8 ஆம் வகுப்பு பாடத்திட்டத்தை பதிவிறக்கம் செய்யலாம். 

கே 2: தமிழ்நாடு 8 ஆம் வகுப்பு பாடத்திட்டம் இலவசமாக கிடைக்குமா?

ப: ஆம். தமிழ்நாடு வாரியத்தின் 8 ஆம் வகுப்பு பாடத்திட்டத்தின் பதிவிறக்க இணைப்புகள் EMBIBE மற்றும் வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இலவசமாகக் கிடைக்கின்றன.

கே 3: தமிழ்நாடு வாரிய சமச்சீர் கல்வி தேர்வுகளை எந்த அமைப்பு நடத்துகிறது?

ப: தமிழ்நாடு வாரியத் தேர்வுகளை அரசுத் தேர்வுகள் இயக்ககம்(DGE) நடத்துகிறது.

கே 4: தமிழ்நாடு வாரியம் சமச்சீர் கல்வி 8 ஆம் வகுப்பில் உள்ள அத்தியாயங்கள் எளிதானதா?

ப: தமிழ்நாடு மாநில வாரியத்தின் 8 ஆம் வகுப்பு பாடத்திட்டம், மாணவர்கள் தலைப்புகளைப் பற்றிய கருத்தியல் புரிதலைப் பெற்று, அனைத்து தலைப்புகளையும் நன்கு புரிந்து, இறுதித் தேர்வுக்கு முன் பயிற்சித் தாள்களைத் தீர்த்தால் எளிதாகிறது.

Embibe-யில் 3D கற்றல், புத்தகப் பயிற்சி, டெஸ்ட்கள் மற்றும் சந்தேகத் தீர்ப்பான்கள் மூலம் உங்கள் சிறந்ததை அடையுங்கள்