Robot

Last few days of free access to Embibe

Click on Get Started to access Learning Outcomes today

  • எழுதியவர் Vignesh
  • கடைசியாக மாற்றப்பட்டது 30-08-2022

தமிழ்நாடு வாரியம் 9 ஆம் வகுப்பு சமச்சீர் கல்வியின் மாதிரி தேர்வு – 2023:

img-icon

தமிழ்நாடு வாரியம் 9 ஆம் வகுப்பு மாதிரி தேர்வுகள்:

தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் கழக இயக்கம் தமிழ்நாடு சமச்சீர் கல்வி 9 ஆம் வகுப்பு தேர்வை ஏப்ரல் 2023-யில் நடத்தும். 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு வாரிய பொதுத் தேர்வுகளில் மதிப்பெண் திட்டங்கள் என்று ஏதும் இல்லை. ஆனால் 10 ஆம் வகுப்பிற்கான அடிப்படைகளை பற்றி புரிந்து கொள்ளுவதர்க்கு 9 ஆம் வகுப்பு பாடத்திட்டத்தினை நன்றாக புரிந்து படிக்க வேண்டியது அவசியம். 

 9ஆம் வகுப்பு தமிழ்நாடு வாரியத் தேர்வுகளை சிறப்பாக மேற்கொள்ள மாதிரி டெஸ்ட்களை முயற்சிக்கலாம். முழு ஆண்டுத் தேர்வுகளுக்கு முன் இந்த மாதிரி தேர்வு தாள்களை முயற்சிப்பது மாணவர்களுக்கு கேள்விகளைப் பற்றிய ஒரு புரிதலை ஏற்படுத்துகிறது. தொடர்ச்சியான பயிற்சியின் மூலம் மாணவர்கள் தங்கள் வேகத்தையும் துல்லியத்தையும் மேம்படுத்த முடியும்.

ஒவ்வொரு மாதிரி தேர்வுத் தாளிலும் அந்தந்த பாடத்தின் மதிப்பெண் திட்டம் பற்றிய புரிதலைப் பெறலாம். இது மாணவர்களுக்கு தலைப்பு வாரியான முக்கிய கேள்விகளை பற்றிய விவரங்களை பெற உதவும். எனவே தமிழ்நாடு 9 ஆம் வகுப்பு மாதிரி தேர்வுகளை முயற்சிப்பது மாணவர்களின் தேர்வுக்கு பெரும் உதவியாக இருக்கும். 

தமிழ்நாடு 9 ஆம் வகுப்பு மாதிரி தேர்வுகள்: தேர்வுக் கண்ணோட்டம்

தமிழ்நாடு சமச்சீர் கல்வி 9 ஆம் வகுப்பு தேர்வு என்பது ஒரு எழுத்து முறை கொண்ட காகிதத் தேர்வாகும். தமிழ்நாடு வாரியம் 9 ஆம் வகுப்பு மாணவர்களின் முழு ஆண்டுத் தேர்விற்கு உதவுவதற்காக Embibe எண்ணிக்கையற்ற மாதிரி டெஸ்ட்களை வழங்குகிறது. மேலும் விவரங்களுக்குச் செல்வதற்கு முன், தேர்வின் கண்ணோட்டத்தைப் பற்றி அறிவோம்.

தமிழ்நாடு வாரியம் 9 ஆம் வகுப்பு மாதிரி தேர்வுகளைப் பற்றி விரிவாக அறிவதற்கு முன்பு தேர்வின் கண்ணோட்டத்தைப் பார்ப்போம்:

வாரியத்தின் பெயர் மாநில வாரிய பள்ளித் தேர்வுகள் (பிரிவு) & மேல்நிலைத் தேர்வு வாரியம், தமிழ்நாடு
நிறுவப்பட்டது 1910
தலைமை செயலக முகவரி மாநில பள்ளி தேர்வுகள் வாரியம் (பிரிவு) & மேல்நிலைத் தேர்வு வாரியம், தமிழ்நாடு கல்லூரி சாலை, சென்னை, தமிழ்நாடு – 600006
மின்னஞ்சல் info@tamilnadustateboard.org
தேர்வு நிலை பள்ளி நிலை
தேர்வு முறை ஆஃப்லைன்
மொழி பாடங்கள் ஆங்கிலம்
தமிழ்
கல்வி பாடங்கள் கணிதம்
அறிவியல்
சமூக அறிவியல்
தேர்வு முறை வருடாந்திரம்
தேர்வு மொழி தமிழ் மற்றும் ஆங்கிலம்
அதிகாரப்பூர்வ இணையதளம் www.tamilnadustateboard.org

Embibe-யிலிருந்து 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு வாரியத் தேர்விற்கான மாதிரி தேர்வுகள்:

பல ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் வழிகாட்டிகள் தமிழ்நாடு 9 ஆம் வகுப்பு தேர்வுகளுக்கான மாதிரி தேர்வுகளை வழங்குகின்றன. இருப்பினும், சிறந்த முடிவுகளைப் பெற மாணவர்கள் மாதிரி தேர்வைத் தேர்ந்தெடுக்கும் போது கவனமாக இருக்க வேண்டும். ​​இவை உங்களின் உண்மையான தேர்வில் உள்ளவை போன்ற கேள்விகளை கொண்டு உள்ளதா என்பதை சரிபாருங்கள். 

Embibe-யில் வழங்கப்படும் மாதிரி டெஸ்ட் தொடர், தேர்விற்கு எவ்வளவு சிறப்பாக நீங்கள் தயாராக இருக்கிறீர்கள் என்பதைப் புரிந்துகொள்ள உதவும். பயிற்சித் தாள்கள் மற்றும் மாதிரித் தாள்களைப் போலவே, மாதிரி தேர்வுகளும் சமீபத்திய பாடத்திட்டம் மற்றும் தமிழ்நாடு வாரியத் தேர்வுகளின் வடிவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒன்றாகும்.

இந்த மாதிரி தேர்வுகளில் கேட்கப்படும் கேள்விகள் பெரும்பாலும் உண்மையான தேர்வில் கேட்கப்படும் கேள்விகளைப் போலவே இருக்கும். தமிழ்நாடு வாரியம் 9 ஆம் வகுப்பு மாதிரி தேர்வுகள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் வடிவங்களில் கிடைக்கின்றன. இந்த மாதிரி தேர்வுகள் உண்மையான தமிழ்நாடு வாரியம் 9 ஆம் வகுப்பு தேர்வுத் தாள்கள் மற்றும் கேள்விகளின் அடிப்படையில் நிபுணர்களால் நிர்வகிக்கப்படுகின்றன. இது உங்களின் தேர்வுக்கு தயாராவதற்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கும்.

மாணவர்கள் Embibe செயலியில் இருந்து பாடம் வாரியாக மாதிரி டெஸ்ட்களை மேற்கொள்ளலாம். அதற்கு, கீழே கொடுக்கப்பட்டுள்ள படிகளைப் பின்பற்றுங்கள்:

படி 1: மாணவர்கள் Emibibe செயலியில் உள்நுழைந்து, பதிவு செய்யப்படவில்லை என்றால், முதலில் பதிவுசெய்து, கணக்கை உருவாக்க வேண்டும்.

படி 2: இப்போது மாணவர்கள் ‘எனது குறிக்கோள்’ என்ற விருப்பத்தைப் பார்ப்பார்கள். 

படி 3: அதிலிருந்து குறிப்பிட்ட கல்வி வாரியத்தைத் தேர்ந்து எடுத்து உங்கள் வகுப்பினை கிளிக் செய்யவும்.

படி 4: அடுத்து என்பதை கிளிக் செய்து உங்கள் மொழியை மாற்றவும். இப்போது ஹோம் பக்கம் தோன்றும்.

படி 5:ஹோம் பக்கத்தில் உள்ள, ” டெஸ்ட்” என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும்.

படி 6: அதில் “டெஸ்ட்களை மேற்கொள்ளுங்கள்” மற்றும் “தனிப்பயனாக்கப்பட்ட டெஸ்ட்கள் என்ற இரண்டு விருப்பங்களை காண்பீர்கள். 

படி 7: Embibe உருவாக்கிய டெஸ்ட்கள் அதாவது “டெஸ்டை மேற்கொள்ளுங்கள்” என்பதை கிளிக் செய்து குறிப்பிட்ட பாடத்தில் (அறிவியல், கணிதம் போன்ற) ஒரு அத்தியாய டெஸ்டை மேற்கொள்ளலாம். அல்லது உங்களுக்கு விருப்பமுள்ள அத்தியாயத்தை தேர்வு செய்து அந்த அத்தியாயத்திற்கான தனிப்பயனாக்கப்பட்ட டெஸ்டை நீங்களே உருவாக்கி கொள்ளலாம்.  

படி 8: கேள்விகள், டெஸ்ட்டிற்கான கற்றல் அத்தியாயங்கள் போன்ற டெஸ்டினைப் பற்றிய விவரங்கள் தோன்றும்.

படி 9: மாணவர்கள் “டெஸ்டை தொடங்கவும்” என்ற விருப்பத்தை கிளிக் செய்தவுடன், புதிய tab திறக்கப்படும். அங்கு, அவர்கள் டெஸ்டின் வழிமுறைகளை கவனமாகப் படித்து உறுதிப்படுத்தி கிளிக் செய்ய வேண்டும்.

படி 10: உறுதிப்படுத்தலை டிக் செய்த பிறகு டெஸ்ட் தொடங்கும். மாணவர் ஏற்கனவே Embibe இணையதளத்தில் இணைந்திருந்தால், அவர்கள் உடனடியாக டெஸ்டை தொடங்கலாம். மாணவர்கள் உள்நுழையாவிட்டாலும் டெஸ்டை முயற்சிக்கலாம். ஆனால் சிறந்த அனுபவத்திற்கு, உள்நுழைய பரிந்துரைக்கப்படுகிறது.

மாணவர்கள் டெஸ்டினை முயற்சித்த பிறகு டெஸ்ட்டிற்கான பதில்களையும் காணலாம்.

மாதிரி தேர்வுகளை முயற்சிப்பதன் நன்மைகள்:

தமிழ்நாடு வாரியம் மாதிரி தேர்வின் வினாத்தாள்களைத் தீர்ப்பது பல வழிகளில் உதவுகிறது. அவற்றில் சில பின்வருமாறு:

  • கேள்வி முறைகள் மாணவர்களைப் பழக்கப்படுத்துகிறது – மாதிரி தேர்வுகள் பொதுத்தேர்வில் கேட்கப்படும் கேள்விகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே, இந்தத் தாள்களை பயிற்சி செய்வதன் மூலம், கேள்வி முறைகள் மற்றும் தேர்வினை பற்றிய புரிதல் மாணவர்களுக்குத் ஏற்படுகிறது. கூடுதலாக, மாணவர்கள் ஒரு சில மாதிரி தேர்வுகளை முடித்தவுடன், முந்தைய ஆண்டு வினாத் தாள்களைத் தீர்க்கத் தொடங்கலாம். தமிழ்நாடு வாரியம் மாதிரி தேர்வுக்கு தயாராவதற்கு இது ஒரு சிறந்த வழியாகும்.
  • மாணவர்களுக்கு நன்கு தெரியாத பகுதிகளைக் கண்டறிய உதவுகிறது – தமிழ்நாடு வாரியத்தின் மாதிரி தேர்வுத் தாள்களை பயிற்சி செய்வது மாணவர்களுக்கு அவர்களின் வலுவான மற்றும் பலவீனமான பாடப் பகுதிகளைக் கண்டறிய உதவுகிறது. எந்தெந்த தலைப்புகளில் அவர்கள் வலிமையாக இருக்கிறார்கள் மற்றும் எந்தெந்த தலைப்புகளுக்கு அதிக நேரம் தேவை, போன்றவற்றைத் தெளிவாகப் புரிந்துக்கொண்டு, தேர்வுக்கு தயாராகும் போது அவர்களின் முன்னேற்றத்தைக் கண்காணிக்க உதவுகிறது.
  • நம்பிக்கையை அதிகரிக்கிறது – மாதிரி தேர்வுத் தாள்களை பயிற்சி செய்வது மாணவர்களின் நம்பிக்கையை அதிகரிக்கிறது. அவர்கள் எவ்வளவு தாள்களைத் தீர்க்கிறார்களோ, அவ்வளவு அதிகமாக அவர்கள் தேர்வு முறை, கேள்விகளின் வகைகள், நேர மேலாண்மை போன்றவற்றைப் புரிந்துகொள்கிறார்கள். இது அவர்கள் தேர்வுக்கு நன்கு தயாராக உதவும். பெரும்பாலான தமிழ்நாடு வாரிய மாதிரி தேர்வுத் தாள்கள் உண்மையான தமிழ்நாடு வாரியத் தேர்வு வினாத்தாள்களை ஒத்திருப்பதால், அவற்றை பயிற்சி செய்வது, ஒரு கேள்வியை சரியான முறையில் அணுகி மேம்படுத்திக்கொள்ள மாணவர்களுக்கு உதவுகிறது.
  • நேர மேலாண்மை உத்திகளை வகுக்க உதவுகிறது – மாதிரி தேர்வுகளை முயற்சிப்பதன் குறிப்பிடத்தக்க நன்மைகளில் ஒன்று, தேர்வின் போது மாணவர்கள் தங்கள் நேரத்தை திறமையாக நிர்வகிப்பதற்கான உத்திகளைக் கற்றுக்கொள்ள முடியும். சிறந்த மதிப்பெண்கள் பெற, குறிப்பாக தமிழ்நாடு வாரியம் 9 ஆம் வகுப்பு தேர்வுகளில் தேர்ச்சி பெற நேர மேலாண்மை அவசியம். முன்பு குறிப்பிட்டது போல, மாதிரி தேர்வுகள் மாணவர்களுக்கு தேர்வு முறையை அறிமுகப்படுத்தி, ஒவ்வொரு கேள்விக்கும் எவ்வளவு நேரம் செலவிட வேண்டும் என்பதை மாணவர்களுக்கு உணர்த்துகிறது. தேர்வு நாளில் மாணவர்கள் தங்கள் நேரத்தை புத்திசாலித்தனமாக நிர்வகிக்க இது உதவும்.

தேர்வு முறையின் பிரிவுகள்:

தேர்வு முறை இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்ட்டுள்ளன. தொகுத்தறி தேர்வு மற்றும் மதிப்பீடு தேர்வு என வகைப்படுத்தப்பட்டு TermI, Term II மற்றும் Term III என்று மூன்று பருவத் தேர்வுகளாக நடத்தப்படுகின்றன. 

பருவத் தேர்வு முறை விவரங்கள்:

பருவம் தேர்வு தேர்வு முறை
பருவம் 1(ஜூன் முதல் செப்டம்பர் வரை) FA1 (20+20) 6இல் சிறந்த 4 மதிப்பீடு தேர்வு + 6இல் சிறந்த 4 பயிற்சி டெஸ்ட்கள் /கேட்கள்
SA1 (60) தொகுத்தறி தேர்வு
பருவம் 2(அக்டோபர் முதல் டிசம்பர் வரை) FA1 (20+20) 6இல் சிறந்த 4 மதிப்பீடு தேர்வு + 6 யில் சிறந்த 4 பயிற்சி டெஸ்ட்கள் /கேட்கள்
SA1 (60) தொகுத்தறி தேர்வு
பருவம் 3(ஜனவரி முதல் ஏப்ரல் வரை ) FA1 (20+20) 6இல் சிறந்த 4 மதிப்பீடு தேர்வு + 6இல் சிறந்த 4 பயிற்சி டெஸ்ட்கள் /கேட்கள்
SA1 (60). தொகுத்தறி தேர்வு

தமிழ்நாடு வாரியம் 9 ஆம் வகுப்பு மாதிரி தேர்வுகள் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்:

தமிழ்நாடு வாரியம் 9 ஆம் வகுப்பு மாதிரி தேர்வுகள் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன:

கே.1: தமிழ்நாடு வாரியம் மாதிரி தேர்வுகள் அறிவியல் பாடத்திற்கும் பொதுத் தேர்வின் அதே மதிப்பெண் முறையைப் பின்பற்றுகிறதா?

பதில்: ஆம். மாதிரி தேர்வு வினாத் தாள்கள் பொதுத் தேர்விற்கும் மாதிரி தேர்வின் அதே மதிப்பெண் முறையைப் பின்பற்றுகின்றன. எனவே, மாதிரி தேர்வை முயற்சிப்பது உங்கள் இறுதித் தேர்வில் நீங்கள் பெறக்கூடிய மதிப்பெண்ணைக் கணக்கிடுகிறது. 

கே.2: 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு வாரியத் தேர்வுகளில் நான் எப்படி சிறந்த முறையில் படித்து வெற்றி பெறுவது?

பதில்: மாதிரி வினாத்தாள்களைத் தீர்ப்பது மற்றும் மாதிரி தேர்வுகளை முயற்சிப்பது போன்ற சரியான உத்திகளைப் பின்பற்றுவதன் மூலம் மாணவர்கள் தங்கள் தேர்வினை மேம்படுத்தலாம். Embibe-யில் தேர்விற்கு தேவையான அனைத்து அம்சங்களையும் இலவசமாக பதிவிறக்கம் செய்து பயன்பெறலாம்.

கே.3: தேர்வில் சிறந்த முறையில் வெற்றி பெற மாதிரி தேர்வுகளை முயற்சிக்க வேண்டுமா? 

பதில்: மாதிரி தேர்வுகளை முயற்சிப்பது மாணவர்கள் தங்கள் தேர்வுகளுக்குத் தயாராவதற்கு ஒரு சிறந்த வழியாகும். தேர்வில் உள்ள பாடங்களை எவ்வாறு அணுகுவது என்பது குறித்த யோசனையை மாணவர்களுக்கு வழங்குவதோடு, பொதுவாகக் கேட்கப்படும் கேள்விகளை தெரிந்துகொள்ளவும் உதவும்.

கே.4:  தமிழ்நாடு வாரியம் 9 ஆம் வகுப்பு சமச்சீர் கல்வி தேர்வுகளுக்கு மாதிரி தேர்வு அவசியமா?

பதில்: வெற்றிக்கு குறுக்குவழிகள் இல்லை. எனவே தேர்வுகளில் வெற்றி காண விரும்பினால் கடினமாக உழைக்க வேண்டியது அவசியம். தமிழ்நாடு வாரியம் 9 ஆம் வகுப்பு மாதிரி தேர்வினை பதில்களுடன் பயிற்சி செய்வதால் பாடங்களை சரியான புரிதலுடன் கற்றுக் கொள்ள முடியும். 

தமிழ்நாடு வாரியம் 9 ஆம் வகுப்பு மாதிரி தேர்வுகளின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள இந்தக் கட்டுரை உங்களுக்கு உதவியது என்று நம்புகிறோம். தமிழ்நாடு வாரியம் சமச்சீர் கல்வி 9 ஆம் வகுப்பு தொடர்பான மேலும் தகவல்களுக்கு Embibe-உடன் இணைந்திருங்கள்.

Embibe-யில் 3D கற்றல், புத்தகப் பயிற்சி, டெஸ்ட்கள் மற்றும் சந்தேகத் தீர்ப்பான்கள் மூலம் உங்கள் சிறந்ததை அடையுங்கள்