• எழுதியவர் Vignesh
  • கடைசியாக மாற்றப்பட்டது 30-08-2022

தமிழ்நாடு வாரியம் சமச்சீர் கல்வி வகுப்பு 9 பாடத்திட்டம் 2023

img-icon

தமிழ்நாடு வாரியம் சமச்சீர் கல்வி வகுப்பு 9 பாடத்திட்டம் (2023): தமிழ்நாடு 9 ஆம் வகுப்பு சமச்சீர் (Samacheer Kalvi) பாடத்திட்டத்தை வெளியிடும் பொறுப்பு தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்ககம் வகிக்கிறது. கணிதம், அறிவியல், சமூக அறிவியல் போன்ற பாடங்களுக்கான தமிழ்நாடு வாரிய சமச்சீர் கல்வி 9 ஆம் வகுப்பு பாடத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வகுப்பு 9 சமச்சீர் பாடத்திட்டம் மாணவர்கள் தங்கள் தேர்வுகளுக்கு தயாராவதற்கு சிறந்த ஒரு கருவியாக செயல்படுகிறது. மாணவர்கள் தங்களின் சரியான புரிதலுக்காக, தேர்வுக்குத் தயாராகும் போது முறையான வழிமுறை அல்லது கற்றல் திட்டத்தை பின்பற்றுவது மிகவும் முக்கியம். தேர்வு முறை மற்றும் கேள்வி அமைப்பு என்னவாக இருக்கும் என்ற வடிவமைப்பை பாடத்திட்டம் வகுத்துள்ளதால், மாணவர்கள் கருத்துகளை எளிதில் புரிந்து கொள்ள முடியும்.

தமிழ்நாடு சமச்சீர் கல்வி வகுப்பு 9: மேலோட்டம்

9 ஆம் வகுப்பு மாணவர்கள் தங்கள் தமிழ்நாடு வாரியம் வகுப்பு 9 சமச்சீர் பாடத்திட்டத்தை முக்கியமானதாக கருத வேண்டும். தேர்வில் அதிக மதிப்பெண்களைப் பெறுவதற்கு சமச்சீர் பாடத்திட்டத்தில் உள்ள அடிப்படை கருத்துகளை முழுமையாகப் படிப்பது முக்கியம் ஆகும். எனவே, தமிழ்நாடு வாரியம் சமச்சீர் கல்வி 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் அனைத்து படங்களின் பாடத்திட்டத்தை கவனமாக பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும்.

தமிழ்நாடு வாரியம் சமச்சீர் கல்வி 9 ஆம் வகுப்புக்கான விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இவை மாணவர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும்:

தேர்வின் பெயர் 9 ஆம் வகுப்பு
இயக்ககம் அரசுத் தேர்வுகள் இயக்ககம் (DGE)
காலம் ஒவ்வொரு ஆண்டும்
தேர்வு முறை ஆஃப்லைன்
அதிகாரபூர்வ இணையதளம் http://www.dge.tn.gov.in/

தமிழ்நாடு சமச்சீர் கல்வி வகுப்பு 9: கணித பாடத்திட்டம் 

9 ஆம் வகுப்பு கணிதம் மிக முக்கியமான பாடங்களில் ஒன்றாகும். சமச்சீர் கணித  பாடத்தில் உள்ள சிக்கலான கணக்குகளே இதற்கு காரணமாகும். மாணவர்கள்,  தேர்வுக்காக தொடர்ந்து பயிற்சி செய்ய வேண்டிய பாடங்களில் கணிதமும் ஒன்றாகும்.

அர்ப்பணிப்பும் பயிற்சியும் ஒன்றொக்கொன்று சார்ந்தவைகளாகும். இவை, மாணவர்கள் தேர்வில் சிறந்த மதிப்பெண்களைப் பெறுவதை உறுதிசெய்யும்.

அத்தியாயங்களில் என்னென்ன பிரிவுகள் உள்ளன என்பதை மாணவர்கள் நன்கு அறிந்திருக்க வேண்டும். மாணவர்கள் பின்பற்ற வேண்டிய தமிழ்நாடு மாநில வாரியத்தின் 9 ஆம் வகுப்பு கணித பாடத்திட்டம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

அலகு எண் அலகு சமச்சீர் அத்தியாயங்கள்
பருவம் I
1 கண மொழி அறிமுகம்
கணங்களின் விளக்கம்
கணங்களின் வகை
கணச் செயல்பாடுகள்
வென் வரைபடத்தைப் பயன்படுத்தி கண செயல்பாடுகளின் பிரதிநிதித்துவம்
2 மெய்யெண்கள் அறிமுகம்
விகிதமுறு எண்களின் தசம பிரதிநிதித்துவம்
விகிதமுறா எண்கள்
மெய்யெண்கள்
3 இயற்கணிதம் அறிமுகம்
இயற்கணித கோவைகள்
பல்லுறுப்புக் கோவைகள்
மீதித் தேற்றம்
காரணித் தேற்றம்
4 வடிவியல் அறிமுகம்
வடிவியல் அடிப்படைகள்
நாற்கரங்கள்
இணைகரம்
5 ஆயத்தொலை வடிவியல் அறிமுகம்
கார்டீசியன் அச்சுத் தொகுப்பு
இரு புள்ளிகளுக்கு இடைப்பட்ட தொலைவு
பருவம் II
1 கண மொழி அறிமுகம்
கணச் செயல்களின் பண்புகள்
டி மார்கன் விதிகள்
கணங்களின் ஆதி எண்ணிண் பயன்பாட்டுக் கணக்குகள்
2 மெய்யெண்கள் அறிமுகம்
மூலக்குறியீடு
முறுடுகள்
முறுடுகளை விகிதப்படுத்துதல்
அறிவியல் குறியீடு
3 இயற்கணிதம் அறிமுகம்
இயற்கணித முற்றொருமைகள்
பல்லுறுப்புக்கோவைகளின் காரணியாக்கம்
நேரியல் சமன்பாடுகள்
ஒரு மாறியில் நேரியல் சமன்பாடுகள்
4 புள்ளியியல் அறிமுகம்
நிகழ்வெண் விநியோகத்தின் வரைகலை பிரதிநிதித்துவம்
சராசரி
இடைநிலை அளவு
முகடு
5 செய்முறை வடிவியல் அறிமுகம்
வட்டத்தின் பகுதிகள்
ஒரு வட்டத்தின் நாண்களின் பண்புகள்
வட்ட நாற்கரங்கள்
செய்முறை வடிவியல்
பருவம் III
1 இயற்கணிதம் அறிமுகம்
ஒரு மாறியில் அமைந்த நேரிய சமன்பாடு
இரு மாறிகளில் அமைந்த நேரிய சமன்பாடு
ஒரு கோட்டின் சாய்வு
ஒரு கோட்டின் வெட்டுத்துண்டு
ஒருங்கமைந்த நேரிய சமன்பாடுகள்
இரு மாறிகளாலான நேரிய சமன்பாடுகளின் ஒருங்கமைவு மற்றும் ஒருங்கமைவற்ற தன்மை
அறிமுகம்
முறுடுகள்
முறுடுகளில் நான்கு அடிப்படை செயல்பாடுகள்
முறுடுகளை விகிதப்படுத்துதல்
வகுத்தல் அல்காரிதம்
2 ஆயத்தொலை வடிவியல் அறிமுகம்
ஒரு கோட்டுத்துண்டின் நடுப்புள்ளி
ஒரு கோட்டுத் துண்டை மூன்று சமக் கூறிடும் புள்ளிகள்
பிரிவுச் சூத்திரம்
நடுக்கோட்டு மையத்தின் ஆயத்தொலைவுகள்
3 முக்கோணவியல் அறிமுகம்
சில சிறப்புக் கோணங்களின் முக்கோணவியல் விகிதங்கள்
நிரப்புக் கோணங்களுக்கான முக்கோணவியல் விகிதங்கள்
முக்கோணவியல் அட்டவணையைப் பயன்படுத்தும் முறை
4 அளவியல் அறிமுகம்
ஹெரான் சூத்திரம்
நாற்கரங்களின் பரப்புகளைக் காண்பதில் ஹெரான் சூத்திரத்தின் பயன்பாடு
கனச்செவ்வகம் மற்றும் கனச்சதுரத்தின் புறப்பரப்பு
கனச்செவ்வகம் மற்றும் கனச்சதுரத்தின் கனஅளவு
5 நிகழ்தகவு அறிமுகம்
அடிப்படைக் கருத்துகள்
தொன்மை அணுகுமுறை
பட்டறி அணுகுமுறை
நிகழ்ச்சிகளின் வகைகள்

தமிழ்நாடு சமச்சீர் கல்வி வகுப்பு 9: அறிவியல் பாடத்திட்டம் 

தமிழ்நாடு 9 ஆம் வகுப்பின் அறிவியல் பாடத்திட்டம் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன. அறிவியலில் நல்ல மதிப்பெண்களைப் பெற அனைத்து தலைப்புகளையும் விரிவாகப் படிக்கவும்.

அத்தியாயம் எண் சமச்சீர் அத்தியாயம் பிரிவு
பருவம் I
1 அளவீடு இயற்பியல்
2 இயக்கம்
3 பாய்மங்கள்
1 நம்மைச் சுற்றியுள்ள பொருட்கள் வேதியியல்
2 அணு அமைப்பு
3 தனிமங்களின் வகைப்பாட் டு அட்டவணை
1 விலங்குலகம் உயிரியல்
2 திசுக்களின் அமைப்பு
3 தாவர உலகம் – தாவர செயலியல்
பருவம் II
1 மின்னூட்டமும் மின்னோட்டமும் இயற்பியல்
2 காந்தவியல் மற்றும் மின்காந்தவியல்
3 ஒளி
1 வேதிப்பிணைப்பு வேதியியல்
2 அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள்
1 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் உயிரியல்
2 ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம்
3 நுண்ணுயிரிகளின் உலகம்
பருவம் III
1 வெப்பம் இயற்பியல்
2 ஒலி
3 அண்டம்
1 கார்பனும் அவற்றின் சேர்மங்களும் வேதியியல்
2 பயன்பாட்டு வேதியியல்
1 பொருளாதார உயிரியல் உயிரியல்
2 சூழ்நிலை அறிவியல்
3 லிப்ரே ஆபீஸ் இம்ப்ரஸ்

தமிழ்நாடு சமச்சீர் கல்வி வகுப்பு 9: சமூக அறிவியல் பாடத்திட்டம் 

தமிழ்நாடு 9 ஆம் வகுப்பின் சமூக அறிவியல் பாடத்திட்டம் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன. சமூக அறிவியலில் நல்ல மதிப்பெண்களைப் பெற அனைத்து தலைப்புகளையும் விரிவாகப் படிக்கவும்.

அத்தியாய எண் சமச்சீர் அத்தியாயம் பிரிவு
பருவம் I
1 மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும்: வரலாற்றுக்கு
முந்தைய காலம்
2 பண்டைய நாகரிகங்கள் வரலாறு
3 தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும்
4 அறிவு மலர்ச்சியும், சமூக-அரசியல் மாற்றங்களும்
1 நிலக்கோளம் – I புவி அகச்செயல்பாடுகள் புவியியல்
2 நிலக்கோளம் – II புவி புறச்செயல்பாடுகள்
3 வளிமண்டலம்
1 அரசாங்க அமைப்புகள் மற்றும் மக்களாட்சி குடியியல்
2 தேர்தல், அரசியல் கட்சிகள் மற்றும் அழுத்தக் குழுக்கள் குடியியல்
1 மேம்பாட்டை அறிவோம்: தொலைநோக்கு, அளவீடு மற்றும் நிலைத் தன்மை பொருளியல்
2 இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு பொருளியல்
பருவம் II
1 செவ்வியல் உலகம் வரலாறு
2 இடைக்காலம்
3 இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும் வரலாறு
4 நவீன யுகத்தின் தொடக்கம் வரலாறு
1 நீர்க்கோளம் புவியியல்
2 உயிர்க்கோளம்
1 மனித உரிமைகள் குடியியல்
1 பணம் மற்றும் கடன் பொருளியல்
பருவம் III
1 புரட்சிகளின் காலம் வரலாறு
2 தொழிற்புரட்சி
3 ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் காலனியாதிக்கம் வரலாறு
1 மனிதனும் சுற்றுச் சூழலும் புவியியல்
2 நிலவரைபடத் திறன்கள்
3 பேரிடர் மேலாண்மை – பேரிடரை எதிர்கொள்ளுதல்
1 அரசாங்கங்களின் வகைகள் குடியியல்
2 உள்ளாட்சி அமைப்புகள் குடியியல்
3 சாலை பாதுகாப்பு குடியியல்
1 தமிழகத்தில் வேளாண்மை பொருளியல்
2 இடம்பெயர்தல் பொருளியல்

தமிழ்நாடு சமச்சீர் கல்வி வகுப்பு 9: ஆங்கில பாடத்திட்டம் 

தமிழ்நாடு 9 ஆம் வகுப்பின் ஆங்கில பாடத்திட்டம் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன. ஆங்கிலத்தில் நல்ல மதிப்பெண்களைப் பெற அனைத்து தலைப்புகளையும் விரிவாகப் படிக்கவும்.

அத்தியாயம் எண் பிரிவு சமச்சீர் அத்தியாயம்
பருவம் 1
1 Prose Learning the Game
Poem Stopping by Woods on a Snowy Evening
Supplementary The Envious Neighbour
2 Prose I Can’t Climb Trees Anymore
Poem A Poison Tree
Supplementary The Fun They Had
3 Prose Old Man River
Poem On Killing a Tree
Supplementary Earthquake
பருவம் 2
4 Prose Seventeen Oranges
Poem The Spider and the Fly
Supplementary The Cat and the Pain-killer
5 Prose Water – the Elixir of Life
Poem The River
Supplementary Little Cyclone: The Story of a Grizzly Cub
பருவம் 3
6 Prose From Zero to Infinity
Poem The Comet
Supplementary Mother’s Voice
7 Prose A Birthday Letter
Poem The Stick-together Families
Supplementary The Christmas Truce

தமிழ்நாடு வாரியம் சமச்சீர் கல்வி 9 ஆம் வகுப்பு – தமிழ் பாடத்திட்டம்:

பருவம் I 

வ.எண் பொருண்மை/இயல் பாடத்தலைப்புகள்
1. மொழி



அமுதென்று பேர்
திராவிட மொழிக்குடும்பம்
தமிழோவியம்
தமிழ்விடு தூது*
வளரும் செல்வம்
தொடர் இலக்கணம்
2. இயற்கை, சுற்றுச்சூழல்




உயிருக்கு வேர்
நீரின்றி அமையாது உலகு
பட்டமரம்
பெரியபுராணம்*
புறநானுறு*
தண்ணீர்
துணைவினைகள்
3. பண்பாடு



உள்ளத்தின் சீர்
ஏறுதழுவுதல்
மணிமேகலை
அகழாய்வுகள்
வல்லினம் மிகும் இடங்கள்
திருக்குறள்*
4. அறிவியல், தொழிநுட்பம்
எட்டுத்திக்கும் சென்றிடுவீர்
இயந்திரங்களும் இணையவழிப் பயன்படும்
ஓ என் சமகாலத் தோழர்களே!*
உயிர்வகை*
விண்ணையும் சாடுவோம்
வல்லினம் மிகா இடங்கள்

(*) இக்குறியிட்ட பாடல்கள் மனப்பாடப்பகுதி.

பருவம் II

வ.எண் பொருண்மை/இயல் பாடத்தலைப்புகள்
1. கல்வி



கசடற மொழிதல்
கல்வியிற் சிறந்த பெண்கள்
குடும்ப விளக்கு
சிறுபஞ்சமூலம்*
வீட்டிற்கோர் புத்தகசாலை
இடைச்சொல்-உரிச்சொல்
2.


நாகரிகம், தொழில்,வணிகம்



தொழில் பல முனைதல்
வணிக வாயில்
நான்மாடக்கூடல்
மதுரைக்காஞ்சி
சந்தை
ஆகுபெயர்
திருக்குறள்*
3. கலை, அழகியல்,புதுமைகள்


கலை பல வளர்த்தல்
சிற்பக்கலை
இராவண காவியம்*
நாச்சியார் திருமொழி
செய்தி
புணர்ச்சி

(*) இக்குறியிட்ட பாடல்கள் மனப்பாடப்பகுதி.

பருவம் III:

வ.எண் பொருண்மை/இயல் பாடத்தலைப்புகள்
1. நாடு, சமூகம்,அரசு,நிருவாகம்


வாழிய நிலனே
பழந்தமிழர் சமூக வாழ்க்கை
சீவக சிந்தாமணி*
முத்தொள்ளாயிரம்
இந்திய தேசிய இராணுவத்தில் தமிழர் பங்கு
பொருளிலக்கணம்
2. அறம், தத்துவம், சிந்தனை



என்தலைக் கடனே
பெரியாரின் சிந்தனைகள்
ஒளியின் அழைப்பு
தாவோ தே ஜிங்
யசோதர காவியம்*
மகனுக்கு எழுதிய கடிதம்
யாப்பிலக்கணம்
3. மனிதம், ஆளுமை




அன்பென்னும் அறனே
விரிவாகும் ஆளுமை
அக்கறை
குறுந்தொகை
தாய்மைக்கு வறட்சி இல்லை
அணியிலக்கணம்
திருக்குறள்

(*) இக்குறியிட்ட பாடல்கள் மனப்பாடப்பகுதி.

தமிழ்நாடு 9 ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்:

கே 1:  தமிழ்நாடு வாரியம் வகுப்பு 9 பாடத்திட்டத்தை மாணவர்கள் எங்கு பதிவிறக்கம் செய்யலாம்?

ப : மாணவர்கள் வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலிருந்து தமிழ்நாடு 9 ஆம் வகுப்பு பாடத்திட்டத்தை பதிவிறக்கம் செய்யலாம். 

கே 2: தமிழ்நாடு 9 ஆம் வகுப்பு பாடத்திட்டம் இலவசமாக கிடைக்குமா?

ப: ஆம். தமிழ்நாடு வாரியத்தின் 9 ஆம் வகுப்பு பாடத்திட்டத்தின் பதிவிறக்க இணைப்புகள் EMBIBE மற்றும் வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இலவசமாகக் கிடைக்கின்றன.

கே 3: தமிழ்நாடு வாரியத் சமச்சீர் கல்வி தேர்வுகளை எந்த அமைப்பு நடத்துகிறது?

ப: தமிழ்நாடு வாரியத் தேர்வுகளை அரசுத் தேர்வுகள் இயக்ககம்(DGE) நடத்துகிறது.

கே.4: தமிழ்நாடு வாரியம் சமச்சீர் கல்வி 9 ஆம் வகுப்பில் உள்ள அத்தியாயங்கள் எளிதானதா?

ப: தமிழ்நாடு மாநில வாரியத்தின் 9 ஆம் வகுப்பு பாடத்திட்டம், மாணவர்கள் தலைப்புகளைப் பற்றிய கருத்தியல் புரிதலைப் பெற்று, அனைத்து தலைப்புகளையும் நன்கு புரிந்து, இறுதித் தேர்வுக்கு முன் பயிற்சித் தாள்களைத் தீர்த்தால் எளிதாகிறது.

தமிழ்நாடு வாரியம் 9 ஆம் வகுப்பு பாடத்திட்டங்களைப் பற்றி தெரிந்து கொள்ள இந்தக் கட்டுரை உங்களுக்கு உதவியது என்று நம்புகிறோம். தமிழ்நாடு வாரியம் 9 ஆம் வகுப்பு தொடர்பான மேலும் தகவல்களுக்கு  Embibe-உடன் இணைந்திருங்கள்.

Embibe-யில் 3D கற்றல், புத்தகப் பயிற்சி, டெஸ்ட்கள் மற்றும் சந்தேகத் தீர்ப்பான்கள் மூலம் உங்கள் சிறந்ததை அடையுங்கள்